சுதந்திரப் போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட சமூக மாத இதழ்:-
இந்திய சுதந்திரப் போராட்ட காலமான கி.பி.1925ஆம் ஆண்டு தேவாங்க மகாஜோதி என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்டு, தேவாங்க சமூகத்தினருக்காக நடத்தப்பட்டுள்ளது.

கி.பி.1928 ம் ஆண்டின்
ஏப்ரல் மாத இதழ் (மூன்றாமாண்டின் முதல் இதழ்) சவுடாம்பிகா செய்தி மாத இதழ்
அலுவலகத்திற்கு கிடைத்தது. அதனை வழங்கியவர் அருப்புக்கோட்டை தேவாங்கர்
கலைக் கல்லூரியில் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற
பேராசிரியர் மல்லிகார்ஜுனன் ஆவார்.
அந்த இதழில் பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன. அன்றைய கால கட்டத்தில் சமூகம் குறித்த பல்வேறு தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.
இதழின் முதல் பக்கத்தில், தேவாங்க மஹாஜோதி, தேவல மரபினரின் நலத்தைப் பொறுத்து வெளிவரும் ஓர் உயர்தர மாதத் தமிழ்ப் பத்திரிக்கை என்றும் எப்பொருள் எத்ததன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு திருவள்ளுவர் என்று அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப் பேட்டையிலிருந்து டி.வி.கோபாலையா என்பவர் இந்த இதழினை நடத்தியுள்ளார். தமிழ் மொழியில், 250 பக்கங்களைக் கொண்டு, பல்வேறுபட்ட கட்டுரைகளைத் தாங்கி இதழ் வெளிவந்துள்ளது. தொடர்கதை, அறிவியல், அரசியல், சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளும் உள்ளடக்கம்.
தெலுங்கு தேவாங்கர், கன்னட தேவாங்கர் இருவருக்குமே பொதுவான இதழாக வெளிவந்துள்ளது. அன்றைய காலத்தில் மொழிவாரியான பிரிவினையின்றி தேவாங்கர்கள் செயல்பட்டு வந்துள்ளதை இந்த இதழின் மூலம் அறிய முடிகின்றது.
இதழுக்கு வருட சந்தா வசூலிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். போஷகர்கள் வருட சந்தாவாக 25 ரூபாயும், அபிமானிகளுக்கு வருட சந்தாவாக 10 ரூபாயும், இதர மரபினர்களுக்கு வருட சந்தா 2 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. வருட சந்தா அளித்த போஷகர்கள் மற்றும் அபிமானிகளின் பட்டியல் இதழில் இடம் பெற்றுள்ளது.
இதழ் போஷகர்களாக 8 பேரின் பெயர்களும், இதழ் அபிமானிகளின் பெயர்கள் நூற்றுக் கணக்கானவையும் இதழில் இடம் பெற்றுள்ளது.
இதழ் போஷகர்களின் பெயர் விபரம்:
திரு.கே.பி.வெங்கட்ராம செட்டியார்(சத்திய மங்கலம்),
திரு.வெ.வெரிவாட செட்டியார்(கோவை),
திரு.செ.நாகி செட்டியார்(கோவை),
திரு.ஸஜ்ஜா முனுசாமி செட்டியார்(சென்னை),
திரு.கே.ஸி.முத்துசாமி செட்டியார்(சென்னை)
செட்டுமை திரு.வி.என்.எஸ்.ராமலிங்கம் செட்டியார் (கூடலூர், மதுரை ஜில்லா),
திரு.சி.ராமலிங்கம் செட்டியார்(தேவாரம் மதுரை ஜில்லா)
மெஸ்ஸர்ஸ் திரு.கீ.கா.பு.காமாட்சி செட்டியார் அண்ட் பிரதர்ஸ்(அருப்புக்கோட்டை,தேவாங்கர் குல முன்னேற்ற சபையார்).
முதன் முதலாக ஆந்திராவில் தேவாங்க ஜோதி என்ற இதழே தேவாங்கர்களுக்காக முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இதழ் என்ற தகவல் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் தேவாங்கர்களுக்காக நான்கு மாதப் பத்திரிக்கைகள் தோன்றியுள்ளன என்ற தகவல் இந்த இதழின் மூலம் அறிய முடிகின்றது.
முதல் இதழ் தேவாங்க ஜோதி (தெலுங்கு மொழி), இரண்டாம் இதழ் தேவாங்க ஸேவா (தெலுங்கு மொழி), மூன்றாம் இதழ் தேவாங்கப் பத்திரிக்கா (தமிழ் மொழி), நான்காவது இதழ் தேவாங்க மஹா ஜோதி (தமிழ் மொழி) ஆகும்.
முதல் மூன்று இதழ்களும் மக்களின் போதிய ஆதரவின்றி நின்று விட்டன என்ற தகவல் தேவாங்க மகா ஜோதி இதழில் இடம் பெற்றுள்ளது.
தேவாங்க மகாஜோதி இதழின் தலையங்கத்தில் தேவாங்க மகாஜோதி பத்திரிக்கையும் எண்ணிறந்த இன்னல்களுக்கிடையில், பன்முறைத் தத்தளிக்க நேர்ந்ததாயினும், நமது பெருமை பொருந்திய அபிமான போஷகசந்தா நேயர்களின் ஆதரவாலும், கௌரவ பிரசாரகர்களின் முயற்சியாலும் இரவி முன் பனியென்ன தனக்குள்ள இடுக்கண்களினின்றும் வெளிப்போந்துலவ முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய தேவாங்க மஹாஜன சங்கம் என்ற இயக்கம் அன்றைய காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு, அதன் முதல் மகாநாடு சென்னையில் நடைபெற்றுள்ளதையும், அவ்வமைப்பிற்காக, நிர்வாகக் கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் தேவாங்க மகாஜோதி இதழ் மூலம் அறிய முடிகிறது. இவ்வியக்கத்தின் இரண்டாம் மஹாநாடு ஹம்பியில் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்யும் படி இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரை ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் குறித்த கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில்,சட்ட சபையில் தேவாங்க சமூகத்தினைச் சார்ந்தவர் உறுப்பினராக இடம்பெற்றிருந்ததையும், அவர் சமூகத்திற்காக செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி இடித்துரைத்தும் கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்த இதழ் அன்றைய
காலகட்டத்தில் சமூகம் இருந்த நிலையினை தெள்ளத் தெளிவாக எடுத்துக்
காட்டியுள்ளது. சமூக வரலாற்றுச் சிந்தனையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக
அமைந்துள்ளது.
No comments:
Post a Comment