அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/13/14

குருபூர்ணிமா விழா

குருபூர்ணிமா  விழா
பெங்களுரு நெலமங்கலா தேவாங்க மடத்தில்... ஸ்ரீ ஹம்பி ஹேம கூட மகாசமஸ்தான டிரஸ்ட் சார்பில் குரு பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு , கர்நாடக , ஆந்திரா , மகாராஷ்டிரா , சட்டிஸ்கர் மாநில முக்கிய மந்திரி திரு. மோத்திலால் தேவாங்கன்., பிஜப்பூர். ஆகிய மாநிலங்களில் இருந்து தேவாங்க சங்க உறுபினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பெரும் கூடத்திற்கு முன்பு குரு பூஜை  நடைபெற்றது அப்போது நான்கு வேதங்களும் தொகுக்கப்பட்ட ஒரு மெகா சைஸ் புத்தகம் பூஜையில் வைக்கப்பட்டு பின் அதனை திருப்பூர் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி தலைவர் அவர்கள் அதனை பிரதக்ஷணமாக தலையில் வைத்து மடத்தை சுற்றி வந்து பின் அந்த வேதம் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பெங்களுரு  DIG அவர்கள் அருமையான உரை நிகழ்த்தினார். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வளவு அருமையாக பேசினார் என்று நல்லி. சுப்ரமணிய செட்டியார் அவர்கள் மனம் நெகிழ்ந்து கூறினார். பின்  தேவாங்க நற்பணி மன்ற தலைவர் திரு இளங்கோ அவர்கள் உரையாற்றினர். அதில் தமிழ்நாடு கர்நாடக தேவாங்க இணக்கம் மற்றும் . தமிழ்நாட்டில் தெலுகு , கன்னடம் பேசும் தேவன்கர்களின் ஒட்ற்றுமை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு நம் சமுதாயத்தை மற்றும் செயல்கள் எந்த அளவில் உள்ளது என்பது பற்றி கூறினார்.
அடுத்தாக சட்டிஸ்கர் மாநில முக்கிய மந்திரி திரு. மோத்திலால் தேவாங்கன் அவர்கள் உரை நிகழ்த்தினார். தென் இந்தியா வில் தேவாங்கர் ஒற்றுமை பற்றி பேசி மகிழ்ந்தார்.
பின் நம் குல ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகளின் அருளுரை நடந்தது . அதில் விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தேவாங்கர்களை இணைக்கும் வகையில் "ALL INDIA DEVANGA FEDERATION" துவங்க உள்ளதை தெரிவித்தார்.

இறுதியாக "தேவாங்க குல தேவதா " என்னும் இசைவட்டு  கர்நாடகாவில் வெளியிட்ட செல்வன் சுரேஷ் அவரின் "தேவாங்க குலத தேவதையாகி .... " என்னும் சௌடேஸ்வரி அம்மனின் படலை அவர் உருக்கமாக பாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ...

பின் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது

இந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பு