அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/30/13

SIMMATH VAJAYA DEMAGI THANOO SOWDI PRASODAYATHகல்லஞ்சிரா மகா கும்பாபிஷேகம் 2012

மகா கும்பாபிஷேகம் 2012 :

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பு ஊராட்சி கல்லன்சேரி அருள்மிகு இராமலிங்க சவுடேஸ்வரியம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 2012  ஜுன் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பல்லாண்டுகளாக தேவாங்க பெருமக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் கல்லன்சேரி கிராமத்தில் மிகப் பழமையான ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.  இத்திருக்கோவிலின் திருப்பணிகள் செய்து ஒவ்வொரு 12 வருருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து வருகின்றனர்.  இக்கோயிலின் ஜீர்ணோத்தராண திருப்பணி மற்றும் மிகச் சிறப்பான முறையில் செய்து சேலம் பிரதிஷ்டா ரத்னம் சிவஸ்ரீ எஸ்.பி.சிவமணிகண்ட சாஸ்திரிகள் சர்வசாதகத்தில் ஸ்ரீ ஹம்பி ஹேம கூட ஸ்ரீ காயத்திரி பீடம் தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகத்திற்கு அனைத்திந்திய தேவாங்க ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி  மன்றத்தின் தலைவர் திரு எஸ்.எஸ்.எம்.பி இளங்கோ மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர். மேலும் பக்கத்து ஊர்களான குத்தாம்புள்ளி, கரும்புழா, சிற்றூர் , நென்மாறா, கொல்லன்கோடு வண்ணமடை ஆகிய ஊர்களிலிருந்து செட்டுமை மற்றும் எஜமானர்கள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர்.
மஹா கும்பாபஷேகத்திற்கு நற்பணி மன்றத்தின் பாலக்காடு வட்டார நிர்வாகிகளும் மகளிர் அணியும் மிகச்சிறப்பான முறையில் சேவைகள் செய்தும் பொருளாதார உதவிகளும் செய்தும் விழாவை சிற்ப்பித்தனர்.  மகளிர் அணியின் சார்பில் நடத்தப்பட்ட அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், நூற்றுக்கணக்கான பெண்மக்கள் பங்குபெற்று குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் பிரசாதம் வழங்குதல் ஆகியவை மிகச் சிறப்பாக நடத்தினர்.
கும்பாபிஷேக ஹோமம் மற்றும் பூஜா நிகழ்ச்சிகள் அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரல் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.  தீர்த்தம் கொண்டு வருதல்(27.6.2012) ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் பாலத்துள்ளி சிவன் கோவிலுக்கு அருகே உள்ள ஆற்றிலிருந்து ஊர்வலமாக , தேவாங்கர் கொடிகளையும் ஏந்தி, கல்லன்சேரி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர்.  ஹோமங்களும், பூஜைகளும் முறையாக செய்ததற்குப் பன்பு, வெள்ளிக்கிழமை 9.30 முதல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  அதன்பின் அபிஷேக அலங்கார பூஜைகளும் மகா தீபாராதணையும் நடைபெற்றது.  மகளிர் அணியின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.  மதியம் 2 மணியளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.  மாலை 4 மணி முதல் 6 மணி வரை அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு பூஜை சமர்ப்பித்தனர்.  இரவு அலங்கார பூஜையுடன் கும்பாபிஷேக நிழ்ச்சிகள் மங்களகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட்டு 15ஆம் தேதி புதன் கிழமை 48 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.நன்றி : ஆர்.வெள்ளியங்கிரி 
ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா

ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா:

அருப்புக்கோட்டை மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மன் அவதாரத்திருநாள் ஜுலை 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவிலில் இருந்து மகளிர் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், காலை ஸ்ரீ சவுடேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நன்றி : devanga.org


தேவலர்94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி புலஸ்திய மகரிஷியின் மாணாக்கர். இவர் பாஞ்சால மன்னனிடம் ஒரு முறை பசுக்களைத் தானம் கேட்டார். மன்னன் இறந்த பசுக்களைக் கொண்டுபோங்கள் எனக்கூறக் கோபம் கொண்டார். அவாகீர்ண சேத்திரத்தில் முனிவர் யாகம் தொடங்கினார். அதனால் மன்னன் ராஜ்யம் வளங்களை இழந்தது. மன்னன் முனிவரைப் பிழைபொறுக்க வேண்டினான். கருணை கொண்ட முனிவர் யாகத்தை நிறுத்தி நாட்டிற்கு நலம் பல புரிந்தார். இம்முனிவருக்குப் பகர் என்று ஒரு பெயரும் உண்டு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குண்டக்கல்லதவரு ;- குண்டக்கல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர். 
சொபகினதவரு :-