அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/5/13

"ஆஷாடநாயகி சௌடேஸ்வரி"

ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை
"ஆஷாடநாயகி சௌடேஸ்வரி"
நீல வண்ண பட்டுடித்தி 
நித்திலமாய் நீலகண்டன் இடப்பாகம் கொலுவிருக்கும் 
எங்கள் குல தேவியம்மா !!

மக்களோட துன்பம் தீர - உன் 
மல்லிகை அடிஎடுத்து குண்டத்தில் நடந்துவந்தாய் !!

தன் குழந்தை குரல் கேட்டு மனம் 
தாளாது ஓடோடி வந்து குலம் காத்தாய் !!

வெள்ளியிலே விண்ணுயர கோவில்கட்டி 
தங்கத்திலே கோபுரம் வைத்தாலும் 
தித்திக்கும் வெல்லத்து கோட்டையிலே தான் நீ அமர்வாய்...!!! 
மாணிக்க பந்தலிட்டு மனமுருகி நின்றாலும் 
தேன்கரும்பு பந்தலில்தான் நீ கொலுவிருப்பாய் !!

ஆஷாட அமாவாசை இரவிலே 
கோடி சூரியபிரகாசமாய் தோன்றிய சந்திரமதி நீ !
உன்னை வணங்க உன் மக்கள் எல்லாம் - நீ 
நிலைகொள்ளும் தரிக்குழியை தான் விடுத்து 
தலையிலே தீர்த்தம் ஏந்தி உன் வாசல் வருகிறோம் !!
சொன்ன சொல் தவறாமல் எங்களை காப்பாயே 
எங்கள் குல தெய்வமே !!!

தேவலரை எங்களுக்கு காப்பாற்றி கொடுத்து எல்லோர் 
மானம் காக்கும் கடமையை செய்யவைத்து கெச்சாள நாயகியானாய்!!

அமாவாசை நாயகியே!!! ஐந்திரண்டு ஏழு பேருடன் 
விளையாடிய படியே ஈரேழுலோகமதில் புகழுடன் 
எங்கள் குலம் வாழ அருள்புரிவாயே 
ஆஷாடநாயகி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரியே !!!

-ர.பார்த்திபன்
பொள்ளாச்சி






ஆடி அமாவாசை

 

சௌபாக்கியததை தரும் நமது அன்னையவளை ஆடி அமாவாசை அன்று இம் மஹா மந்திரத்தை உச்சரித்து அன்னையின் அவதார திருநாளை கொண்டாடுவோம் 

"ஓம் ஈச பத்தினிச வித்மஹே

சிம்மத்வஜய திமஹி தன்னோ

சௌடி ப்ரசோதயாத்!!"

சினிமா மெட்டில் நம் குல பாடல்





ஆடி அமாவாசை




ஆடி அமாவாசையன்று அவதரித்த அன்னையே
அகிலமெல்லாம் வாழும் மக்களுக்கு ஆடை நெய்ய சொன்னியே
சகல சௌபாக்கியங்களை நல்கும் சௌடேஸ்வரியே
தேவாங்க மக்களின் குலத்தெய்வம் நீயே

கத்தியிட்டு நாங்கள் அழைத்தோம்
கருணையோடு பேச வருவாய்
கரும்பு பந்தலில் கொலுவிருந்து
கண்கொள்ளா காட்சி அளித்தாய்

வீரத்துடன் வீரகுமாரர்கள் தண்டகங்கள் முழங்க
வீரமுட்டியும் காவலுக்குத் துணை நிற்க
வீதி வீதி எல்லாம் நீ பவனி வர
விரதங்கள் நிறைவேறுமே நீ அருள் புரிய

- நித்தீஷ் செந்தூர்

100 .துவைபாயன மகரிஷி கோத்ரம்

பராசர மகரிஷிக்கும் சத்யவதிக்கும் த்வீபத்தில் - தீவில் பிறந்த வேதவியாசரே துவைபயனர் என்று அழைகப்ப்டுகின்றார். த்வீபத்தில் பிறந்தவர் த்வை பாயனா் எனப்படுகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

புட்டொட்டயதவரு :- பெரிய வயிறு உடையவர்கள். 
பட்டயதவரு :- கலைகள் முதலான அரிய திறமைகளுக்காக மன்னரிடம் பட்டயங்கள் பெற்றவர்கள். 
குறிப்பு : த்வைபாயனர், கிருஷ்ணத்துவைபாயனர், வியாசர் ஆகிய பெயர்கள் வேத வியாசரையே குறிக்கின்றன. 
பட்டகாரதவரு, ஹேமாத்ரிதவரு.