அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
Showing posts with label தேவாங்க புராணம். Show all posts
Showing posts with label தேவாங்க புராணம். Show all posts
7/9/15
6/10/13
படவேடு சிம்மாசனம்
சோணாசலமடம் முன்னர் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது இது படவேடு என்னும்
ஊரில் இருக்கின்றது. இது கலியுகாதி 4609 பிரபவ ஆண்டில்
பண்டிதாராத்ய சுவாமிகள் வழி வந்த ருத்ரமூர்த்தி சுவாமிகளால் நிறுவப்பட்டது.
இப்பரம்பரையினர் இப்போது படவேட்டுக்குப் பக்கத்திலிருக்கும்
ஒண்ணுபுரத்தில் வசிக்கின்றனர். இவர்கள் வரதந்து மகரிஷி கோத்திரத்தைச்
சேர்ந்தவர்கள்.
பண்டிதாராத்யரின் தாயார் பொப்பாதேவி பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர். அங்கு நிகழ்ந்த போரின் காரணமாய் கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு வந்தடைந்தார். உரியகாலத்தில் மகவை ஈன்றார். இக்குழந்தையே பண்டிதாராத்ய சுவாமிகள் ஆவார். இவர் வேதாகம சாத்திரங்களைக்கற்று குருநாதராய்த் திகழ்ந்தார். பலர்க்கும் பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து பெரும்புகழோடு இருந்தார். இவருடைய பெருமையை அறிந்த அந்நாட்டு மன்னர் வள்ளாள மகாராஜன் இவரை அடைந்து இவரிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார் என்றால் இவர் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமா?
இவரிடம் வாதுக்குவந்த சமயவாதிகள் பலர் வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராயினர்.
ஒருசமயம் சில மறையவர்கள் இவரிடம் வந்து ' தீட்சை அளிக்கும் பேறு உமக்கேது? ' என்று வாது செய்தனர். அப்போது சுவாமிகள், தேவலரின் மரபில் வந்த எமக்கன்றி மற்றையோர்க்கு இயல்பன்று என்றார். அதற்கு அம்மறையவர்கள் ' நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள். நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள். மற்றவர்களுக்கு அத்தகுதி இல்லை; என்றனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இருக்கவில்லையே! நாங்களோ, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவல முனிவரின் நேர்வழி வந்தவர்களாயுள்ளோம். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம். எங்கள் மூதாதை தேவலமுனிவர்தான் முதல் முதல் பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார். அவர் தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் வழி வந்த நானும் செய்கிறேன். ஆகையால் உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை உண்டு. என்று கூறி அவர்களைத் தெருட்டினார். அவர்களும் தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர்.
சுவாமிகளுக்குப் பின் அவருடைய பரம்பரையினர் குருபீடம் வகித்துச் சைவநெறியைப் போற்றி வந்தனர்.
அந்நாட்களில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் போர் நடந்தது. அப்போர் திருவண்ணாமலையிலும் நிகழ்ந்தது. போர் வீரர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
தேவாங்க புராணம் முற்றிற்று.
பண்டிதாராத்யரின் தாயார் பொப்பாதேவி பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர். அங்கு நிகழ்ந்த போரின் காரணமாய் கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு வந்தடைந்தார். உரியகாலத்தில் மகவை ஈன்றார். இக்குழந்தையே பண்டிதாராத்ய சுவாமிகள் ஆவார். இவர் வேதாகம சாத்திரங்களைக்கற்று குருநாதராய்த் திகழ்ந்தார். பலர்க்கும் பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து பெரும்புகழோடு இருந்தார். இவருடைய பெருமையை அறிந்த அந்நாட்டு மன்னர் வள்ளாள மகாராஜன் இவரை அடைந்து இவரிடம் லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் பெற்றுக்கொண்டார் என்றால் இவர் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமா?
இவரிடம் வாதுக்குவந்த சமயவாதிகள் பலர் வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராயினர்.
ஒருசமயம் சில மறையவர்கள் இவரிடம் வந்து ' தீட்சை அளிக்கும் பேறு உமக்கேது? ' என்று வாது செய்தனர். அப்போது சுவாமிகள், தேவலரின் மரபில் வந்த எமக்கன்றி மற்றையோர்க்கு இயல்பன்று என்றார். அதற்கு அம்மறையவர்கள் ' நாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள். நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள். மற்றவர்களுக்கு அத்தகுதி இல்லை; என்றனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இருக்கவில்லையே! நாங்களோ, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய தேவல முனிவரின் நேர்வழி வந்தவர்களாயுள்ளோம். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம். எங்கள் மூதாதை தேவலமுனிவர்தான் முதல் முதல் பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார். அவர் தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கிறது. இவர்கள் வழி வந்த நானும் செய்கிறேன். ஆகையால் உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை உண்டு. என்று கூறி அவர்களைத் தெருட்டினார். அவர்களும் தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர்.
சுவாமிகளுக்குப் பின் அவருடைய பரம்பரையினர் குருபீடம் வகித்துச் சைவநெறியைப் போற்றி வந்தனர்.
அந்நாட்களில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் போர் நடந்தது. அப்போர் திருவண்ணாமலையிலும் நிகழ்ந்தது. போர் வீரர்களின் அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடுக்குக் குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
தேவாங்க புராணம் முற்றிற்று.
6/9/13
சிம்மாசனங்கள் குருபீடங்கள்
தேவாங்கக்குலத்தில் சமயத்துறைக்கும் சில அமைப்புக்கள் உள்ளன. அவை சிம்மாசனங்கள் குருபீடங்கள் மடங்கள் முதலியனவாகும்.
சிம்மாசனாபதிகள் பட்டங்கள் செட்டிமைகள் வழங்குவார்கள்.
குருபீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள். மடத்து குருக்கள் இளைஞர்களுக்குத் தீட்சை செய்து பூணூல் அணிவித்து உபதேசம் செய்வார்கள். இவ்வாறுள்ள அமைப்புக்களில் சிம்மாசனங்கள் நான்காகும்.
இவை
1. சகரை
2. முதுநூரு
3. பெனுகொண்டா
4. படவேடு
என்னும் ஊர்களில் உள்ளன.
சகரை காசிக்கு அருகிலும் முதுநூரு கோதாவரிக்கு அருகிலும், பெனுகொண்டா அனந்தப்பூர் வட்டத்திலும், படவேடு வடாற்காடு வட்டத்திலும் இருக்கின்றன. இப்போது இச்சிம்மாசனபீடங்கள் அழிந்து போயின.
குருபீடங்கள்
1. காசி
2. ஸ்ரீ சைலம்
3. ஹேமகூடம்
4. சோணசலம்
5. சம்புசைலம்
என்னும் ஐந்து இடங்களில் இருந்தன. இவையும் சிதைந்து போயின. இதன் உரிமையாளர்கள் பல ஊர்களுக்குப் போய்விட்டனர்.
காசிமடம் : உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. இதை நிறுவியவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ரேவணாராத்யர் ஆவார். இம்மடம் இப்போது இல்லை.
ஸ்ரீசைலம்: ஸ்ரீசைலமடம் மல்லிகார்ச்சுன சுவாமி தேவஸ்தானத்துக்கு வடபால் உள்ளது. இம்மடத்தின் குருமார் மேற்கு கோதாவரி மேரி தாலூக்காவில் ஜக்கன்னா பேட்டையில் உள்ளனர். தேவாங்க மக்கள் சிவராத்திரியின் போது மல்லிகார்ச்சுன சுவாமி கோயிலில் கோபுரங்களுக்கு ஆடையை இணைத்துக் கொடி கட்டுகின்றனர்.
ஹேமகூடம்: இது பல்லாரி ஹொசப்பேட்டைக்கு 7 கல் தொலைவிலுள்ள பம்பா நதிக்கரையில் விருபாட்சசுவாமி கோயிலுக்குத் தெற்கே இருக்கின்றது. இம்மடத்தின் ருகுசந்ததியார் ஹொசப்பேட்டையில் உள்ளனர்.
சோணாசலமடம்: இது முன் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது படவேட்டில் இருக்கின்றது. இம்மடத்தைச் சார்ந்த குருவம்சத்தார் ஒண்ணுபுரத்தில் இருக்கின்றார்கள்.
சம்புசைலமடம்: இது கொள்ளேகாலத்துக்கு அருகில் உள்ள சம்புலிங்கன் பேட்டாவில் இருக்கின்றது. இதை நிறுவியவர் கஹனாராத்யர்.
சிம்மாசனாபதிகள் பட்டங்கள் செட்டிமைகள் வழங்குவார்கள்.
குருபீடங்கள் புரோகிதர்களை நியமிப்பார்கள். மடத்து குருக்கள் இளைஞர்களுக்குத் தீட்சை செய்து பூணூல் அணிவித்து உபதேசம் செய்வார்கள். இவ்வாறுள்ள அமைப்புக்களில் சிம்மாசனங்கள் நான்காகும்.
இவை
1. சகரை
2. முதுநூரு
3. பெனுகொண்டா
4. படவேடு
என்னும் ஊர்களில் உள்ளன.
சகரை காசிக்கு அருகிலும் முதுநூரு கோதாவரிக்கு அருகிலும், பெனுகொண்டா அனந்தப்பூர் வட்டத்திலும், படவேடு வடாற்காடு வட்டத்திலும் இருக்கின்றன. இப்போது இச்சிம்மாசனபீடங்கள் அழிந்து போயின.
குருபீடங்கள்
1. காசி
2. ஸ்ரீ சைலம்
3. ஹேமகூடம்
4. சோணசலம்
5. சம்புசைலம்
என்னும் ஐந்து இடங்களில் இருந்தன. இவையும் சிதைந்து போயின. இதன் உரிமையாளர்கள் பல ஊர்களுக்குப் போய்விட்டனர்.
காசிமடம் : உத்திரப்பிரதேசத்தில் இருந்தது. இதை நிறுவியவர் கௌசிக கோத்திரத்தைச் சேர்ந்த ரேவணாராத்யர் ஆவார். இம்மடம் இப்போது இல்லை.
ஸ்ரீசைலம்: ஸ்ரீசைலமடம் மல்லிகார்ச்சுன சுவாமி தேவஸ்தானத்துக்கு வடபால் உள்ளது. இம்மடத்தின் குருமார் மேற்கு கோதாவரி மேரி தாலூக்காவில் ஜக்கன்னா பேட்டையில் உள்ளனர். தேவாங்க மக்கள் சிவராத்திரியின் போது மல்லிகார்ச்சுன சுவாமி கோயிலில் கோபுரங்களுக்கு ஆடையை இணைத்துக் கொடி கட்டுகின்றனர்.
ஹேமகூடம்: இது பல்லாரி ஹொசப்பேட்டைக்கு 7 கல் தொலைவிலுள்ள பம்பா நதிக்கரையில் விருபாட்சசுவாமி கோயிலுக்குத் தெற்கே இருக்கின்றது. இம்மடத்தின் ருகுசந்ததியார் ஹொசப்பேட்டையில் உள்ளனர்.
சோணாசலமடம்: இது முன் திருவண்ணாமலையில் இருந்தது. இப்போது படவேட்டில் இருக்கின்றது. இம்மடத்தைச் சார்ந்த குருவம்சத்தார் ஒண்ணுபுரத்தில் இருக்கின்றார்கள்.
சம்புசைலமடம்: இது கொள்ளேகாலத்துக்கு அருகில் உள்ள சம்புலிங்கன் பேட்டாவில் இருக்கின்றது. இதை நிறுவியவர் கஹனாராத்யர்.
6/8/13
குலம்
தேவாங்கர்களுக்குள் குல விஷயங்கள் நடத்துவதற்காகப் பரம்பரையாகச்
சிலருக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை
1. பட்டக்காரன்
2. நாட்டுஎஜமானன்
3. செட்டிமைக்காரன்
4. எஜமானன்
5. குடிகள்
என்பனவாகும். இம்முறைப்படியே தாம்பூலம் மரியாதைகள் நடைபெறுகின்றன.
திருமணம் ஈமச்சடங்குகள் மற்றுமுள்ள நலம் பொலம்காரியங்களை நடத்தச்
சமூகத்திலேயே புரோகிதர்களும் கூட்டங்களில் தாம்பூலம் முதலியன
வழங்கச் சேசராஜூ என்பவர்களும் உள்ளனர். முன்னைய நாட்களில் கோயிற் பணிகள்
செய்யச் சில பெண்களும் கோயிலுக்கு விடப்பட்டனர்.
அவர்கள் மாணிக்கம் பங்காரு என்று அழைக்கப்பட்டனர். அப்பழக்கம் இப்போது
இல்லை.
இனிக் குலமக்கள் கோத்திரங்களாகப் பிரிந்துள்ளனர். ஒத்த கோத்திரங்களில்
திருமண சம்பந்தம் செய்வதில்லை. வீட்டுப் பெயர்களும் தனித்தனியாக
உள்ளன. கோத்திரங்களுக்கு மூலபுருடன் ஒரு ரிஷியாக இருப்பார்.
6/7/13
குல தேவதை
ஸ்ரீ சவுடாம்பிகை அம்மன் தேவாங்கர்களின் குல தெய்வம் ஆகும். தேவாங்க மக்கள்
உள்ள எல்லா இடங்களிலும் அம்மனுக்குக்கோயில் இருக்கும். ஆந்திரம்
கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், கலிங்கம், வங்கம் முதலான நாடுகளில்
கோயில்கள் உள்ளன. இங்கெல்லாம் அம்மன் சௌடாம்பகை என்றே
அழைக்கப்படுகின்றார். ஆனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் 'வனசங்கரி' என்ற
பெயரில் அம்மை கோயில் கொண்டுள்ளார். அங்கு அம்மனுக்கு ' சாகம்பரி '
என்ற மற்றொரு பெயரும் உண்டு. இகோயில் பாதாமிக்கு அருகில் இருக்கின்றது.
இதைச்சுற்றி தேவாங்கர்கள் வசிக்கின்றார்கள்.
இனிக் கல்வெட்டுச் சாசனங்களோடு கூடிய பழங்கோயில்களும் பல ஊர்களில் உள்ளன.
இராயலசீமை கதிரி தாலூக்காவில் லேபாட்சி போகும் வழியில் சோளசமுத்திரம்
என்னும் ஊரில் சௌடேஸ்வரியம்மன், வீற்றிருக்கும் கோலத்தில்
பெரிய வடிவில் உள்ளார்.
அனந்தப்பூர் ஜில்லா குத்தி தாலூக்கா உபர்சலா கிராமத்தில் ஓர் கோயில்
உள்ளது.
கர்னூல் நந்தியால் தாலூக்கா ஆத்மகூரில் ஒரு கோயிலும் நந்தவரத்தில் ஒரு
கோயிலும், மதனபள்ளி சனபாளையத்தில் ஒரு கோயிலும் உள்ளது.
நந்தவரம் கோயிலில் உள்ள அம்மனின் திருவுருவம் காசியிலிருந்து
கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இந்த தேவியின் பெயரால்தான்
தண்டகங்கள்
கூறப்படுகின்றன. ' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற தண்டகம்
அம்மையைப் புகழ்கின்றது.
தஞ்சையில் பாபநாசம் தாலூக்கா கபிஸ்தலத்தில் தேவாங்கர் மடம் ஒன்று
இருக்கின்றது. இதில் உள்ள கல்வெட்டின்படி 400 ஆண்டுகளுக்கு முன்னமேயே
தேவாங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறினர் என்பதாக அறிகிறோம்.
6/6/13
தேவாங்கர் குலம்
ரூபசேனனுக்குப் பின் தேவாங்க குலம் பெருகி நாடெங்கும் பரவி மக்களுக்கு ஆடைகளை நெய்து அளித்துச் செழித்து ஓங்கியது.
தேவாங்க மக்கள் யாவரும் தங்கள் ஆசாரத்தை இழக்காமல் சீருடன் வாழவேண்டும் என்னும் கருத்தால் ஏகோராமன் என்னும் விருபாட்சன்
சமூகக்கட்டுப்பாடுகளையும் ஒழுக்கநியதிகளையும் வகுத்தான்.
சமூகக்கட்டுப்பாட்டுக்காக சிம்மாசனபதிகளையும், ஆசார சீலம், தெய்வவழிபாடு முதலியன ஒழுங்காக நடைப்பெறப் பீடாதிபதிகளையும் நியமித்தான்.
இவ்வாறு அமைத்த அமைப்புக்களில் இப்போது இருப்பவை சிம்மாசனங்கள் 4 பீடங்கள் 5 ஆம். இந்த அமைப்புகளின் வழி, விருபாட்சன் வகுத்த
நெறிமுறைகளைத் தேவாங்கக்குலமக்கள் இன்றும் பின்பற்றி நடந்துவருகின்றனர்.
இனி, தேவாங்கக் குலமக்கள் இன்று தெலுங்கு கன்னடம் மராட்டி முதலிய பழமொழிகள் பேசுகின்றவர்களாய் நாடு முழுவதும் பரவி உள்ளனர்.
நாட்டின் சார்பால் வேறு வேறு மொழி பேசினாலும் இவர்களுக்குள் தொழில், குலஆசாரம், சமயஆசாரம் ஒன்றாகவே உள்ளன. இந்த ஒருமைப்பாட்டுக்கு
காரணமாயிருப்பது இவர்கள் வழிபடும் குலதெய்வம் சவுடாம்பிகையாகவே இருப்பதாலாகும்.
தேவல முனிவர் சிவபெருமானின் இதயத்திலிருந்து தோன்றியதால், தேவ+அங்கம் தேவாங்கம் என்று பெயர். அவர்வழி வந்த குலமக்களுக்கு ஏற்பட்டது.
தேவர்களுக்கு ஆடைகளை அளித்து அங்கங்களை அழகு படுத்தியதாலும் இப்பெயர் வந்தது என்றும் கொள்வர்.
இவர்கள் யாவரும் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்கள். சில சிவாச்சாரிய குடும்பங்களில் மட்டும் ஆண்கள் சிவலிங்கம் கட்டிக்கொள்கின்றனர்.
தேவாங்கர்கள் பெரும்பாலும் சைவர்களே.
6/5/13
தேவாங்க வம்ச வரலாறு
தேவதாசமய்யனுக்குப் பின் அவன் மகன் விருபாட்சன் ஆமோதநகரை ஆட்சி செய்தான்.
இவனைத் தொடர்ந்து இவன் மகன் உருத்திரனும் இவனுடைய காளசேனனும் ஆட்சிக்கு
வந்தனர்.
காளசேனன் மக்கட்பேறு இன்றி பலநாட்டு மன்னர்களின் புதல்விகள் 10 ஆயிரம் பேரை
மணந்தான். அவ்வாறு மணந்தும் மக்கட்பேறு கிட்டவில்லை. அதனால் சிவபெருமானை
நோக்கித்
தவஞ் செய்தான். அந்நிலையில் ஆமோதநகருக்குக் கவுதம முனிவர் வந்தார். இவர்
வரவை அறிந்த காளசேன மன்னன் அவரை வரவழைத்து உபசரித்துக் குழந்தையில்லாக்
குறையைக்
கூறினான். அதுகேட்டு முனிவர் புத்திரகாமேட்டி யாகம் செய்தால் குழந்தைப்பேறு
உண்டாகும் என்று சொல்லி யாகத்தையும் செய்து முடித்தார். அதில் அமிர்தம்
வந்தது. அதைப்பெற்று
மன்னன் தன் மனைவியர் 10000 பேருக்கும் பகிர்ந்து அளித்தான். அமிர்தம்
அருந்திய அரசிகள் யாவரும் கருவுற்று உரியகாலத்தில் 10000 மக்களை ஈன்றனர்.
இவர்கள் யாவரும் சிங்கக்
குட்டிகளென வளர்ந்தனர். உரியபருவத்தில் சகல சடங்குகளும் செய்யப்பெற்று 700
முனிவர்கள் பால் சிவதீட்சை பெற்றனர். தீட்சை அளித்த முனிவர்களின் வழி 700
கோத்திரங்கள்
ஏற்பட்டன. 10000 பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று
குலங்களைப் பெருக்கினர்.
இனி, காளசேன மன்னன் தனதுமக்களில் சிறந்தவனும் மூத்தவனுமாயிருந்த ரூபசேனன்
என்பவனுக்கு முடிசூட்டி ஆட்சியை அளித்துவிட்டுத் தவமேற்கொண்டு மனைவியுடன்
கானகம்
சென்றான்.
ரூபசேனன் ஆட்சிபீடமேறி செங்கோன் முறைப்படி ஆட்சி நடத்திவரும் காலத்தில்
பரிட்டாணம் என்னும் நகரை சக்திராஜன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.அப்போது
அந்நகரில்
வசித்து வந்த சோமசர்மா என்னும் வேதியன் குழந்தைப் பேறு இல்லாததால்
நகரிலிருந்த சந்திரமௌளீஸ்வரர் கோயிலுக்கு போய் குழந்தை வேண்டி இறைவனைப்
பூசித்து
வந்தான். இரவு பகல் அங்கேயே இருந்து வழிபட்டு வந்தான்.
இவன் இவ்வாறு இருக்க, ஒருநாள் இரவு தனபாலன் என்னும் வணிகன்
திருக்கோயிலுக்கு வந்து பிள்ளைவரம் வேண்டி இரத்தினக்கற்களால் அர்ச்சனை
செய்து வழிபட்டான்.
வணிகனின் பக்தி பூர்வமான வழிபாட்டுக்கு மகிழ்ந்து இறைவன், ' வைசியனே!
உனக்கு மகப்பேறு அளித்தனன். நீ உன் வீட்டுக்குப் போ ' என்று அருள்
செய்தான். வரம் பெற்ற வணிகன்
எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க ஆடிப்பாடிய வண்ணம் திருக்கோயிலை வலம் வந்தான்.
இதைக் கண்ட மறையவன் மூண்ட சினத்தோடு கோயிலுக்குள் போய் இறைவனை நோக்கிப்
பரமேஸ்வரா! நீ எத்தகைய பட்சபாதம் உடையவன்? நான் எத்தனை நாட்களாக உன்னைப்
பூவும் நீரும் கொண்டு வழிபட்டு வருகிறேன். என் வழிபாட்டுக்கு இரங்கி
புத்திரப்பேறு
அருளாமல் இன்று வந்து இரத்தினக்கற்களைக் கொண்டு வழிபட்ட வணிகனுக்கு உடனே
மகப்பேறும் வரத்தை அருளினையே! நீ நீதி உடையவன் தானா? கருனையற்றவனே! நான்
பூக்கொண்டு செய்த பூசை உனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. வைசியன் கல்லால்
செய்த பூசை உனக்கு ஆனந்தத்தை அளித்து.
நான் நாள்தோறும் பூ பறித்து மாலை தொடுத்துக் கையெல்லாம் காய்த்து விட்டது.
வில்வ மூட்டை சுமந்து தலையும் முரடு தட்டிவிட்டது. இவ்வாறு நான் பூக்கொண்டு
செய்த அர்ச்சனை
வழிபாட்டுக்கு இரங்காது சிறு கற்களால் வைசியன் செய்த வழிபாட்டுக்கு
மகிழ்ந்து அவனுக்கு பிள்ளைப்பேறு அருளினாயல்லவா? நல்லது. இதோ நானும் நீ
மகிழும் கல்லாலேயே
உனக்கு பூசனை செய்கிறேன். வணிகன் சிறுகல் கொண்டு வழிபட்டு உன் அருளைப்
பெற்றான். நான் பெருங்கல் கொண்டு உன்னை வழிபடுகிறேன். சிருகல்லை
விடப்பெருங்கல்
உனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும்மல்லவா? ' என்று சொல்லிப் பெருங்கல்
ஒன்றைக் கொண்டு வந்து சிவலிங்க மூர்த்தியின் மீது போட்டான். கல் பட்டு
சிவலிங்கம் உடைந்தது.
மறையவனின் இத்தீயச்செயல் எவ்வளவு மதியீனமானது? இறைவனின் செயல்களை நம்
சிறுமதி கொண்டு அளக்கக் கூடாது என்று அருளாளர்கள் கூறினர். " ஆட்பாலவர்க்
கருளும்
வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்கவேண்டாம் " என்று
ஞானக்குழந்தை அருளியது.
இறைவன் நீதிக்கிருப்பிடம். சொன்ன சொல்லுக்குமாறாகத் தன் தோழனே போனபோது
கண்களைப் பறித்துக் கொண்டவரல்லவா இவர். அதனால் மறையவனின் செயல் அவனது
பக்குவமின்மையைக் காட்டுகின்றது.
முன்னைப் பிறவியில் வணிகன் தவஞ்செய்திருந்தான் தவத்தின் பயனாய்
இப்பிறவியில் செல்வனாகவும் பக்தியுடையவனாகவும் பிறந்தான். அத்தவம் அவனுக்கு
இப்போது
மகப்பேற்றை அளித்து.
மறையவன் வழிபட்டானேயன்றி பக்தியின் முதிர்ச்சியும் அருட்பக்குவமும்
பெறவில்லை. அதனால் வணிகனின் பக்குவத்தையும் இறைவனின் அருட்குறிப்பையும்
உணரவில்லை.
அறியாமையால் அருள்பெற்ற வணிகன் மீது பொறாமையும் இறைவன் மீது சினமும் கொண்டு
தகாத செயலைச் செய்தான்.
வேதியனின் தீச்செயலைக்கண்டும் கருணாமூர்த்தியாகிய இறைவன் அவன் செய்த
வழிபாட்டுக்காக அவனுக்கும் பிள்ளைவரத்தை நல்கினான். அதோடு அவனது
தீச்செயலுக்கு
தண்டனையாக குழந்தை பிறந்ததும் அவன் தலைவெடித்து மரணம் அடையும் படியும்,
பிறந்த குழந்தை ஒழுக்கத்தால் சூத்திரன் ஆகும்படியும் விதித்தான்.
இவ்வாறு வரத்தைப் பெற்ற வேதியன், குழந்தை பேற்றுக்காக மகிழ்ச்சியும்
தண்டனையையும் எண்ணி வேதனையும் அடைந்தவனாய் வீட்டுக்குப் போனான். அவன்
மனைவியும்
வரத்தின்படிக் கருவுற்று உரிய காலத்தில் ஒரு மகவை ஈன்றாள். அப்போதே
வேதியனும் தலை வெடித்து மரணம் அடைந்தான். அவன் மனைவி இதுகண்டுக் கணவன் போன
வழித் தானும் போனாள்.
பெற்றோரை இழந்த குழந்தை தாய்மாமன் ஆதரவில் துருமளன் என்னும் பெயரைப் பெற்று
வளர்ந்தது. குழந்தை பெரியவனாக வளரும் போதே எல்லாக் கலைகளையும்
நன்கு கற்றுணர்ந்து கலை வல்லோனாய் விளங்கியது.
துருமளன் நாள்தோறும் காட்டுக்குப் போய் மாமன் செய்யும் வேள்விக்குச்
சமயத்துக் குச்சிகளை பொருக்கிக் கொண்டு வந்து கொடுப்பான். இவ்வாறு
நடந்துவரும்போது ஒரு
நாள் காட்டில், பெண் நாய் ஒன்றை ஆண்சிங்கம் புணரக் கண்டான். அதிசயித்து
நின்றான். பின் பெண் நாய் அங்கிருந்து ஊருக்குள் போகவும், அதை அவன் பின்
தொடர்ந்து
போனான். நாய் சக்திராஜன் அரண்மனைக்குள் புகக்கண்டு அகன்றான்.
அந்த நாய் கருமுதிர்ந்து சிங்கத்தின் சாயலோடு கூடிய இரண்டு நாயக் குட்டிகளை
ஈன்றது.
ஒருநாள் சக்திராஜன் தனது தோட்டத்திலிருந்த பனைமரங்கள் ஏழின் முடிகளை ஒரே
அம்பால் இறுத்து வீழ்த்தினான். அப்போது அங்கிருந்த மக்கள் அதைக்கண்டு
மன்னனின்
வீரத்தைப் பலவாறு பாராட்டி ஆரவாரம் செய்தனர். அந்நேரத்தில் அங்கு
கூட்டத்தில் ஒருவனாய் இருந்த துருமளன், முன்வந்து, ' பனைகளின் முடிகளை விட
மரங்களையே வேரோடு சாய்ப்பது புகழுக்குரியதாகும்' என்றான். இதைக்கேட்ட
சக்திராஜன் ' நீ கூறும் வீரச்செயலை நீ செய்து காட்டவல்லையா? என்று
கேட்டான்.
துருமளன் அவ்வாறே செய்வதாகக் கூறி, வில்லைவாங்கி அம்பு தொடுத்து ஏழு
பனைமரங்களையும் வேரோடு வீழ்த்தினான். இதைக்கண்ட மன்னன் துருமளனைப்
பாராட்டி, ' நீ விரும்பும் பொருளைக் கேள் தருகிறேன்' என்றான். உடனே
துருமளன் அரண்மனையில் வளரும் அதிசய நாய்க்குட்டிகளைத் தருமாறு கேட்டான்.
மன்னனும் மகிழ்ச்சியோடு அந்த நாய்க்குட்டிகளை அவனுக்கு அளித்தான்.
துருமளன், பெற்ற நாய்க்குட்டிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று பிரியமாய்
வளர்த்தான்.
நாய்களை வளர்ப்பது சூத்திர ஆசாரம் என்று கருதிய பிராமணன் துருமளனை வீட்டை
விட்டே துரத்திவிட்டான். இதிலிருந்து துருமளன் சூத்திரன் என்றே
அழைக்கப்பட்டான்.
மாமன் வீட்டைத் துறந்த துருமளன் நாய்களுடன் சக்திராஜன் அரண்மனையை அடைந்து
மன்னனின் அன்பைப் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் பௌத்த மதத்தைச் சார்ந்த நேபாள நாட்டு மன்னன் சுதாகரன்,
சக்திராஜனைக் காண பரிட்டாண நகரம் வந்தான். மன்னனைக் கண்டான். பின் அவன்
துருமளனிடம்
வந்து, ' உனக்கும் சக்திராஜனுக்கும் இடையே உள்ள நட்பு ஆறு திங்களில் பகையாக
மாறும். நான் நிமித்த நூல் வல்லவன். ஆகையால் இது பொய்க்காது. பகை வந்துற்ற
போது என்னை நீ வந்து அடைவாயக' என்று கூறிச் சென்றான்.
இது நடந்து சிலதிங்களுக்குப் பின் துருமளனும் சக்திராஜனும் காட்டுக்கு
வேட்டையாடப் போயினர். வேட்டையினிடையே இவர்கள் இருவரும் தனித்து
விடப்பட்டனர்.
அப்போது சிங்கம் ஒன்று இவர்களை எதிர்த்தது. அதைச் சூத்திரன் அச்சமின்றி
எதிர்த்து நின்று பாணம் ஒன்றால் கொன்றான். மன்னனைப் பெருமைப்படுத்த எண்ணிச்
சூத்திரன், சிங்கத்தை மன்னன் கொன்றதாக வேட்டைக்காரரிடம் சொன்னான். அவர்கள்
பெருமகிழ்ச்சியோடு ஊரில் மக்களிடையே அறிவித்தனர். மக்களும் மன்னனின்
வீரத்தைப் பாராட்டி அவரைக் கோலாகலமாக வரவேற்க ஆயுத்தம் செய்தனர்.
அரசியும் மாவீரனாக வரும் தன் கணவனை வரவேற்கத் தன்னை அலங்கரித்துக்கொண்டு,
தலையில் சூடிக்கொள்ள பூவை எதிர்பார்த்து நின்றாள். பூக்காரி காலந்தாழ்ந்து
வந்தாள். வந்தவளை அரசி மிகவும் கடிந்து கொண்டாள். " ஊரார் ஒன்றுதிரண்டு
வரவேற்கும் போது நான் அரண்மனை வாயிலில் சரியான நேரத்தில் மன்னனை வரவேற்க
வேண்டாமா? நல்ல சமயத்தில் இவ்வாறு தாமதம் செய்கின்றாயே? இது உனக்குச்
சரியா? " என்று கோபித்துக் கொண்டாள்.
இதைக் கேட்ட பூக்காரி ஏளனமாகச் சிரித்த வண்ணம் ' அரசியே! உண்மையில்
சிங்கத்தைக் கொன்றது உன்கணவன் அல்ல. கொன்றவன் சூத்திரன் என்னும் துருமளன்
ஆகும்.
மன்னன் மீதுள்ள மதிப்பின் காரணமாகத் துருமளன், வேட்டைக்காரரிடம் மன்னன்
சிங்கத்தை கொன்றான் என்று உபசாரமாகச் சொன்னான். அதை நம்பி வேட்டைக்காரர்
ஊராரிடம் சொல்ல, ஊர் மக்கள் வரவேற்பில் ஈடுபட்டுள்ளனர். அதைப் பார்த்துத்
தாங்களும் உபசரிக்கப் பரபரக்கின்றீர்கள். இச்செய்தி உனக்கெப்படித் தெரியும்
என்று
கேட்கின்றீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். என் கணவன் பூக்கொய்யக் கானகம்
சென்றிருந்தார். அப்போது கானகத்தில் சூத்திரன் சிங்கத்தை எதிர்த்து அம்பு
தொடுத்து
சிங்கத்தைக் கொன்றதைப் பார்த்தார். அதை அவர் எனக்குச் சொல்லக்
கேட்டறிந்தேன். அதன் பிறகு அவர் கொணர்ந்த பூவை எடுத்துக்கொண்டு இங்கு
வருகிறேன்.
இதனால் தான் நான் தங்களுக்கு பூக்கொண்டு வருவதற்குத் தாமதம் ஆயிற்று
என்றாள்.
சிங்கத்தைக் கொன்றது மன்னன் அல்ல என்பதை அறிந்த அரசி வரவேற்கும் எண்ணத்தைக்
கைவிட்டு அந்தப்புரத்திலேயே இருந்து விட்டாள்.
மன்னனை ஊர்மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். மகிழ்ச்சியோடு வரவேற்பை
ஏற்றுக்கொண்ட மன்னன் அரண்மனையை அடைந்தான். அரண்மனை வாயிலில்
தாதிகள் ஆரத்தி எடுக்க மந்திரி பிரதானிகள் முதலியோர் வரவேற்றனர்.
வரவேற்புக் கூட்டத்தில் அரசியைக் காணாது மன்னன் விரைந்து அரண்மனைக்குள்
போனான்.
அரசியைக் கண்டான். வரவேற்பில் நீ ஏன் கலந்து கொள்ளவில்லை' என்று அரசியைக்
கேட்டான். அதற்கு அரசி ' சிங்கத்தைக் கொன்ற சூத்திரன் அன்றோ
பாராட்டுக்குரியவன்!
தாங்கள் அல்லவே? போலி ஆரவாரம் எதற்கு? ' என்றாள். இதைக்கேட்ட மன்னன்
துணுக்குற்று உள்ளத்துள்ளே சினம் பொங்க அவ்விடத்தை விட்டு அகன்றான்.
சூத்திரன் சிங்கத்தைக் கொன்ற செய்தி சூத்திரனும் மன்னனும் மட்டும் அறிந்த
செய்தியாகும். இதை வேறெவரும் அறியார். அப்படியிருக்க, அந்தப்புரத்திலிருந்த
அரசி
இச்செய்தியை எப்படி அறிந்தாள்? என்று மன்னன் சிந்தித்தான். சூத்திரனுக்கும்
அரசிக்கும் இரகசியத் தொடர்பு ஏதேனும் இருக்குமோ? என்று ஐயுற்றான். உள்ளக்
கொதிப்போடு
இரவைக் கழித்தான்.
விடிந்ததும் மன்னன் சூத்திரனை வரவழைத்து ' நீ என் நண்பனல்ல, ஊரைவிட்டப்
போய்விடு' என்று உத்திரவு இட்டான்.
மன்னன் சினத்துக்குக் காரணமறியாமல் சூத்திரன் திகைத்தான். என்றாலும் மன்னன்
உத்தரவு ஆதலால் மாறுபேசாமல் உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான்.
இப்போது, நேபாள மன்னன், முன்னாள் சொன்ன வார்த்தைகள் அவன் நினைவுக்கு வந்தன.
நேராக நேபாள நாட்டின் தலைநகரான ஜெயந்தி நகருக்குப் போனான்.
மன்னன் சுதாகரன் முன் போய் நின்றான். சுதாகரமன்னனும் மகிழ்ச்சியோடு
சூத்திரனை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டான்.
குற்றமற்ற தன்னைக் காரணமின்றி நாடு கடத்திய சக்திராஜனைப் பழிவாங்கச்
சூத்திரன் எண்ணினான். சுதாகரமன்னனைச் சக்திராஜன் மீது படையெடுக்கும்படி
செய்தான்.
பெரும்படைகளோடு சுதாகரன் துருமளனுடன் சக்திராஜனின் நாட்டை அடைந்து தலை நகரை
முற்றுகையிட்டான்.
இதை அறிந்த சக்திராஜன் சூத்திரனது வீரத்தை எண்ணி தேவாங்க மரபில் வந்த ஆமோத
நகர மன்னன் காலசேன மன்னனைத் தனக்கு உதவியாகக் கொள்ள அவனுக்கு
அழைப்பை விடுத்தான். காலசேன மன்னனும் அழைப்பை ஏற்றுத் தன் மக்களுடன்
நால்வகைப் படைகளோடு பரிட்டாண நகருக்கு வந்தான்.
இதை அறிந்த சுதாகரன் சூத்திரனுடன் ஆலோசித்து, மேலும் தன் படைபலத்தைப்
பெருக்கிக் கொள்வான் வேண்டி சாஹ்யபர்வதத்திலுள்ள மகா மாயாவியும்
பலசாலியுமான
பஞ்சபுடன் என்னும் பௌத்தனைத் துணை சேர்த்துக் கொண்டான்.
போர் துவங்கியது. போர் கடுமையாக இருந்தது. போரில் சூத்திரனால் சக்திராஜனும்
பஞ்சபுடனால் காலசேனனும் மாண்டனர்.
காலசேனன் மடியக் கண்ட அவன் மகன் ரூபசேனன் தன்தந்தையைக் கொன்ற பஞ்சபுடனை
எதிர்த்துப் போரிட்டுப் போரில் அவனைக் கொன்று வஞ்சம் தீர்த்துக் கொண்டான்.
சூத்திரன், தன் பகைவனான சக்திராஜனைக் கொன்றதோடு திருப்தியுற்று நேபாள
மன்னனை அழைத்துக்கொண்டு நேபாள நாட்டை அடைந்தான்.
போரில் வெற்றி கண்ட ரூபசேனன் சக்திராஜன் மகனை பரிட்டாண பட்டணத்துக்குத்
தலைவனாக நியமித்து விட்டு நேபாள நாட்டின் மீது போருக்குப் போனான்.
அப்போது நேபாள மன்னன் போருக்கு வராததால் ரூபசேனன், நேபாள நாட்டைத்
தனதாக்கிக் கொண்டு ஆட்சிபீடத்தில் தன் சகோதரன் ஒருவனை வைத்து விட்டு
ஆமோத நகரம் திரும்பினான்.
ரூபசேனன் ஆட்சியில் சகரநாடு செழித்தது. அறம் வளர்ந்தது. மக்கள் குறைவின்றி
வாழ்ந்தனர்.
நலம்.
6/4/13
ஸ்ரீசைலம் மாண்பு
ஒவ்வொருவரும் தலங்கள் தோறும் சென்று புண்ணிய தீர்த்தங்களாடி மூர்த்திகளை
வழபட வேண்டும். ஆன்மீக வாழ்க்கைக்கு இது மிக மிக அவசியமாகும்.
தேவதாச மன்னனும் இம்முறையை மேற்கொண்டு தலயாத்திரை சென்றான்.
பலதலங்களுக்குச் சென்று தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழிபட்டுக் கொண்டு
ஸ்ரீசைலம் அடைந்தார்.
ஸ்ரீ சைலம் இலிங்க மூர்த்தி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.
வீரசைவர்களுக்கு இது முக்கியமான தலமாகும். இது மல்லிகார்சுனம் சீர்ப்பதம்
என்றும்
பெயர் பெரும் இதற்கு மருதமரம் தலவிருட்சம். இது திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர் சுந்திரமூர்த்திகள் ஆகிய மூவரால் பாடப்பெற்றது.
சிலாதமுனிவரின் புதல்வர் திருநந்திதேவர் தவஞ்செய்து இம்மலையருப் பெற்று
இறைவனைத் தாங்கிவருவதாக ஸ்ரீகச்சியப்பர் கூறுகின்றார்.
இத்தலத்தைச் சிவமகாபுராணம் பெருமைப்படுத்திக் கூறியுள்ளது. சங்கரர்
சிவானந்தலகரியில் இரு சுலோகங்களால் இப்பெருமானைத் துதித்துள்ளார்.
இராமபிரான் இராவணனைக் கொன்ற பாவம் நீங்கச் சீதையோடு இங்கு வந்து சிவபிரானை
வழிபட்டு பாவநீக்கம் பெற்றார்.
பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பீமன் தவஞ்செய்த இடம் பீமகுண்டம்
எனப்பெயர்பெற்றுள்ளது.
சந்திராவதி என்னும் அரசகுமாரி பெருமானை மல்லிகை மலரால் வழிபட்டு பேறு
பெற்றாள்.
கோயிலுக்குச் செல்லும் வழியில் சாட்சி விநாயகர் உள்ளார். கோயில்
மூலமூர்த்தி இருக்கும் கருவறைக்கு வடக்கில் ஆதி மல்லிகார்சுனர் என்னும்
சிவலிங்கமூர்த்தி உளது.
சந்திராவாதி பூசித்த மூர்த்தி இது. இதற்குச் சிறிது வடக்கே
சகஸ்திரலிங்கேசரும் இவர் கோயிலுக்குப் பின் பலிபீடமும் வீரபத்திரர்கோயிலும்
உள்ளன. இதன் பக்கத்தில்
மல்லிகைப் பொய்கையும் அதன் நடுவே வசந்த மண்டபமும் உள்ளன. கருவறைக்கு மேற்கே
பஞ்சபாண்டவர் ஸ்ரீதேவி குமாரசுவாமி பஞ்ச நந்தீஸ்வரர் இராஜராஜேஸ்வரர்
ஆகியோர் கோயில்கள் கொண்டு உள்ளனர்.
அம்பிகை கோயில் மேற்கே உயரமான இடத்தில் உள்ளது. அதனருகே ஆயிரம் லிங்கங்கள்
உள்ளன. பாதாள கங்கையின் அருகே நரசிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
மகாசிவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். அப்போது திரளான மக்களும்
வழிபடக் கூடுவர்.
அபிஷேகநீரும் பூஜா திரவியங்களையும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து
வழிபடலாம்.
சிறப்பு மிக்க ஸ்ரீசைலம் வந்து தங்கிய மன்னன் தேவதாசமையன் பவுராம்பிகையோடு
கூடிய மல்லிகார்சுன நாதரை நாளும் வழிபட்டு வந்தார். அப்போது மாசிமாதம்
சிவராத்திரி விழா வந்தது. இவ்விழாவை மிகச்சிறப்பாக நடத்தி வழிபட
விரும்பினார். துவஜாரோகணம் செய்து விழாவைத் துவக்குவது மரபு. கொடிமரம்
மிகப்பெரிய
மரம். அதற்கு ஆனவாறு 12 முழ அகலம் 60 முழ நீளமும் உடைய அழகான துணியைத் தானே
நெய்து அதைக் கொடிமரத்தில் கட்டி கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
அன்றிரவு நான்கு யாமமும் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்தார். இவர்
வழிபாட்டை ஏற்று இறைவன் அம்மையுடன் எழுந்தருளி ' அப்பனே! நீ விரும்பும்
வரம் யாது?'
எனக்கேட்டார். அதற்குத் தேவதாசமய்யன் அடியேன் கட்டும் திருக்கோயிலில் எம்மை
எல்லாம் அருள் சுரந்து காத்து இரட்சிக்கும் சவுடாம்பிகை அம்மையோடு
தாங்களும்
எழுந்தருளிக் கோயில் கொண்டு அடியேனது குல மக்களைக் காத்தருள வேண்டும் '
என்று தொழுது நின்றார். இறைவனும் அவ்வாறே வரமருளி மறைந்தார்.
தேவதாசமய்யன் அங்கிருந்து ஆமோத நகரை அடைந்து பற்பல மணிகளலான அழகிய பெரிய
கோயில் ஒன்றை ஆகம முறைப்படி எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்து
'அம்மையோடு தாங்களும் எழுந்தருளி ஆட்கொள்ளவேண்டும்' என்று இறைவனைப்
பணிந்தார். சிவபெருமானும் சௌடநாயகியோடு தானும் கோயில் கொண்டருளி
கருணைபாலித்தார்.
தேவதாசமய்யன் முக்கட் குழகனுக்கு இராமலிங்க நாதன் எனத்]திருநாமம் சூட்டி
இராமலிங்க சௌடேஸ்வரியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டான். சிவபூஜையில்
திகழ்ந்து தேவதாசமய்யன் மனைவியோடு கயிலையை அடைந்து சிவபெருமானை வணங்கி
நின்றார்.
சிவபெருமானும் கிருபையோடு தேவதாசமையனுக்கும் அவன் மனைவி திலதாவதிக்கும்
முத்தியை அருளி ஆட்கொண்டான்.
6/3/13
தேவதாசமையன் அவதாரம்
இறைவன் கட்டளைக்கு இணங்க ஆமோத நகரை ஆட்சி செய்யும் வாமதேவ மன்னனின் மனைவி கமலலோசனையின் திருவயிற்றில் போய்ப் பிறந்தான்.
மகனைப் பெற்ற மன்னன் பெருமகிழ்ச்சி உற்றான். பிறந்த மைந்தனுக்கு தேவதாசமையன் எனப் பெயரிடுமாறு பலரும் வியந்து போற்ற வானொலி
உண்டாயிற்று. அவ்வாறே பெற்றோர்கள் பெயர் சூட்ட தேவதாசமையன் தெய்வக் குழந்தையாக வளர்ந்து வந்தான். வேதம் முதலான எல்லா கலை
ஞானங்களையும் கற்றுணர்ந்தான். வீராங்க மன்னனின் மகள் திலதாவதியை மணந்தான்.
மகனின் தகுதியை அறிந்து வாமதேவ மன்னன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தானும் தன்மனைவியுமாகத் தவம் செய்யக் காட்டுக்கு ஏகினான்.
ஆட்சியில் அமர்ந்த தேவதாசமையன் இறைவன் ஆணையை நினைவு கூர்ந்தான். நாட்டில் வீர சைவநெறியை நிலைநிறுத்த எண்ணினான். அப்போது
நாட்டில் எங்கும் சின்னெறிப் பல் சமயங்கள் நிரம்பி அறியாமை இருள் பரவி இருந்தது. இதை மாற்றிச் சைவ நன்னெறியைப் பரப்பி நாட்டில் அன்பு
அருள் அறங்கள் பரவும்படிச் செய்ய முற்பட்டான்.
மதத்தின் பெயரால் அழிவழுக்குப் பேசியவர்களின் மதத்தை அழித்தான். அறிவியல் வழி' மதவாதங்கள் புரிவதை விட்டு வெறும் அற்புதங்களின்
வழி மதத்தை நிலைநாட்ட முற்பட்டனர் சில மதவாதிகள். அவர்களையும் ஏற்றவாறு தெருட்டினான்.
சைவ நன்னெறியின் மேலான கருத்துக்களை தேவதாசமையன் எங்கும் பரப்பினான். நெறியில்லா நெறிதன்னை நெறியாகக் கொண்டு ஒழுக்கமும்
சீலமும் கெட்டு தடுமாற்றத்தில் வாழ்ந்த மக்களிடை அவர்களின் அன்றைய வாழ்க்கை முறைகளின் கேட்டையும் எடுத்துக் கூறினான்.
உய்யநெறி சைவமே என்பதைத் தெளிய உணர்த்தி அம்மக்களைத் தெருட்டினான். மக்களும் தவற்றை உணர்ந்து சைவநெறியை ஏற்று தேவதாசரை
அண்டினர். திருந்திவந்த மக்களுக்குத் திருநீறும் கண்டிகையும் அணிவித்து இலிங்கதாரணம் செய்தான். சமணரும் பௌத்தரும் கூட தேவதாச
மன்னரின் அருளுரைகளைக் கேட்டு அருட்பணியை உணர்ந்து திருந்தி சைவம் சார்ந்தனர். நெறியில்லா சமயங்கள் ஒழிந்தன. சைவப்பயிர்
எங்கும் தழைத்தது.
இவ்வாறு தேவதாச மன்னனின் அவதாரப்பணி நிறைவேறியது.
இவருக்கு விருபாட்சன் என்ற மகன் பிறந்தான். உரியபருவத்தில் அவனுக்குக் காஞ்சனமாலை என்ற அரச கன்னியை மனம் செய்வித்து அவனுக்கு
மணிமுடி சூட்டி ஆட்சியையும் ஒப்படைத்தார். வந்த பணி முடிந்துவிட்டதால் தெய்வ வழிபாட்டில் இறங்கினார்.
6/2/13
தேவசாலி அவதாரம்
வீரருத்திரன் சகர நாட்டை ஆண்டு வரும் போது கோமளை வயிற்றில் சுகுணன் என்னும்
மகன் பிறந்தான். அவன் திருமணப்பருவம் அடைந்ததும்
சத்தியாவதி என்னும் அரச கன்னியை மணந்தான். பின் அவனுக்கு மணிமுடிசூட்டி
ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு வீரருத்திர மன்னன் தன்
மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப் போனான்.
ஆட்சிக்கு வந்த சுகுணன் யாவரும் போற்றும்படியாக நல்லாட்சி நடத்தி வந்தான்.
அந்நாளில் வரமுனி இயற்றிய நூல்களைக் கற்றறிந்த சிலர் சிவயோகத்தை
முறையாகப் பயின்று அதனால் வரும் பேரின்பப் பயனை அடையக் கருதினர். சிவயோகமோ
குருவின் துணையின்றி பயின்று பலன் காணமுடியாது.
அதனால் அவர்கள் பெரிதும் கலக்கமுற்றனர்.
சனகன் சனந்தனன் சனாதனன் சனற்குமாரன் என்னும் நால்வரும் பிரம்மாவின்
புத்திரர்கள். இவர்கள் நால்வரும் நான்மறை ஆறங்கமுதலான எல்லாக் கலைகளையும்
கற்றவர்கள். நூற்கேள்வியும் உடையவர்கள். எனினும் ஒரு குருவை நாடினர்.
குருவில்லா வித்தை பாழ்தானே? ஆதி முதற்குரு தட்சணா மூர்த்தியல்லவா/ அதனால்
அவரையே நாடி இந்நால்வரும் கயிலைக்குப் போனார்கள்.
அப்போது சிவபெருமான் உமை அம்மையைப் பிரிந்து கல்லால மரத்தடியில் யோகியாய்
வீற்றிருந்தார். முனிவர்கள் நால்வரும் அவரை அணுகி, ' அருட்கடலே!
வேதாகமங்களைக் கற்றறிந்தும் மனம் அடங்கவில்லை. மன அடக்கம் பெற்று உய்யும்
வண்ணம் வேதாகமங்களின் உட்பொருளை உபதேசித்து அருள வேண்டும் '
எனப் பிரார்த்தித்தனர். பெருமானும் அவர்களை அமர்த்தி சிவாகமங்களில்
கூறியுள்ள பதி பசு பாசப் பொருளை உணர்த்திப் பின் முப்பொருள் உண்மையைச்
சின்முத்திரை காட்டி மௌனமுற்றுயோகத்தில் அமர்ந்தார். முனிவர்களும் மனம்
ஒடுங்கி ஞானநிலையை உணர்ந்தனர்.
எனவே எவ்வளவு தான் கற்றிருந்தாலும் குரு உணர்த்த உணரப்பெற்றாலன்றி கற்ற
கல்வி பயனில்லாமற்போகும் என்பது உணரத்தகும். இதைச் சாத்திரங்களும்
சாற்றுகின்றன.
எனவே சற்குருவை நாடி முனிவர்கள் தவம் கிடக்க, அவர்கள் தவத்திற் கிரங்கி
குருமூர்த்தி ஒருவரை அனுப்ப இறைவன் திருவுளம் பற்றினான். அப்போது
அருகிருந்த வரமுனியை நோக்கி ' நீ உன் பேரன் சுகுணனுக்கு மகனாய்ப் பிறந்து
சிவயோக நெறியை முனிவர்களுக்கும் மற்ற பக்குவிகளுக்கும் உணர்த்தி
மீண்டும் என்னை வந்து அடைவாயாக' என்று அருளினார். அதன்படி வரமுனி
சுகுணனுக்கு மகனாய்த் தோன்றினார். தேவசாலி என்னும் பெயரையும் பெற்றார்.
பெற்றோரும் புவிமன்னரும் சான்றோரும் போற்றும்படியாக ஞானச்செல்வராக
வளர்ந்தார்.
சிவயோகம் பயின்று அதன் பயனை அடைய விரும்பிய அறிஞர் பலர் தேவசாலியை குருவாக
ஏற்று அவரை சூழ்ந்தனர். அவரும் குருபரனாகி வந்தவர்க்கெல்லாம்
அட்டாங்க யோகத்தை விளக்கி உணர்த்தினார்.
இவ்வாறு அட்டாங்க யோகத்தை தேவசாலி, விரும்பி வந்து கேட்டவர்க்கெல்லாம்
விளக்கிக் கூறினார். கேட்டுணர்ந்த பலர் யோகப் பயிற்சியில் இறங்கினர். யோகம்
பயின்ற மாணவர்களுக்கு அவரவர்கள் பக்குவத்துக் கேற்ப பயிற்சிகளை அளித்து
வந்தார்.
வந்தவர்க்கெல்லாம் சலிப்பின்றி தக்கவாறுயோகத்தையும் ஒழுக்கத்தையும்,
உணர்த்தியும் பயிற்றியும் வந்தார். அதனால் நாடெங்கும் தெய்வ பக்தியும்
ஓழுக்கமும்
சிறந்தோங்கியது.
மகனின் அறிவு ஆற்றல்களைக் கண்டு மகிழ்ந்த சுகுணபூபதி ஆட்சியை மகனிடம்
ஒப்படைத்து விட்டுத் தவஞ்செய்ய மனைவியுடன் காட்டுக்குப் போனார்.
தேவசாலி, யோகிக்கு யோகியாகவும் ஆட்சிக்குச் சிறந்த மன்னனாகவும் இருந்து
பகைவரும் போற்ற நல்லாட்சி நடத்தி வந்தான். அப்போது பட்டத்தரிசி சுகதருணி
கருவுற்று ஒரு ஆண்மகனை ஈன்றாள். இவனுக்கு சசிசேகரன் என்னும் பெயரைச் சூட்டி
அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மகனாக வளர்த்தான்.
இவன் கனகரங்கன் மகள் உத்தமியை மணந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க, தேவசாலி
மன்னன் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து சிவபெருமான்
அடிக்கீழ் அமர்ந்தான்.
தந்தைக்குப் பின் ஆட்சி நடத்திய சசிசேகரன் இரத கஜ துரக பதாதி என்னும்
நால்வகைப் படைகளையும் பெருக்கிப் பகையின்றி நாட்டைச் செழிக்கச் செய்து
மன்னர் மன்னனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான்.
அவனுக்கு வாமதேவன் என்று பெயரிட்டு வளர்த்தான். அவன் மணப்பருவம்
அடைந்ததும் விதர்ப்பநாட்டு மன்னன் மகள் கமலலோசனையை மணஞ்செய்வித்தான். பின்,
தான் தன் மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப்போனான்.
வாமதேவனின் ஆட்சிக்காலத்தில் மதபேதங்கள் பல கிளைத்தன. சைவப்பயிர் வாடியது.
அதனால் மக்களிடையே மருள்நிலை படர்ந்தது.
இவ்வாறு பல சமயத்தவர் உண்மையான அன்புச் சமயத்தை அழுத்தித் தமது சமயத்தை
மக்களிடையே பரவவிட்டு இம்மை மறுமை வாழ்க்கையைக்
கெடுத்து வந்தனர். எங்கும் சமயவாதங்களும் பூசலும் நிலவின. ஒழுக்கநிலை
கெட்டு அமைதி குன்றி இருந்தது. அன்பும் அருளும் மறைந்து
மருள் நிரம்பி இருந்தது.
உலகெங்கும் சுற்றிவரும் நாரதர் ஆமோத நகரை அடைந்தார். அப்போது அங்கு
சமயபேதங்கள் என்னும் பெருங்கிளைகள் பெருத்து ஓங்கி இருந்த
காரணத்தால் மேலாண சைவப்பயிர் தலை தடுமாறி இருக்க எங்கும் அறியாமை இருள்
சூழ்ந்திருக்கக் கண்டார்.
இந்த அவலநிலையைக் கண்ட நாரதர். திருக்கயிலைக்குப்போய் சிவபெருமானை அணுகி
'எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் எல்லா உயிர்களிலும்
நிரம்பியுள்ள பெருமானே! உலகில் புன்மைசேர் மதங்கள் பலவும் தலைதூக்கி
இருப்பதால் மக்கள் செய்யத்தக்கன இவை செய்யத்தகாதன இவை
என்ற விதிவிலக்குகளை அறியாமல் குழப்பமுற்றுள்ளனர். ஆதலால்
கருணாமூர்த்தியாகிய தாங்கள் அவர்களிடை சைவப்பயிர் தழைத்தோங்கச்செய்து
அம்மக்கள் உய்யுமாறு அருள்பாலிக்க வேண்டும்' என்று இறைஞ்சினார்.
இதைக் கேட்ட சிவபெருமான் தமது அருகில் வீற்றிருந்த தேவசாலியை விளித்து '
குற்றமற்றவனே! நீ உன்னுடைய புத்திரனான சசிதேவனின் மகன்
வாமதேவ மன்னனுக்கு மகனாய்த் தோன்றி, குருநாட்டு மன்னனின் மகளாய்த் தோன்றும்
உன் மனைவியை மணந்து நாட்டை ஆள்வாயாக. அப்போது
தீமை பயக்கும் மதமாறுபாடுகளையெல்லாம் நீக்கி உறுதிபயக்கும் வீரசைவநெறியை
நல்லோர் யாவரும் மேற்கொள்ளும்படியாகச் செய்து நிலைநாட்டி
மீண்டும் உன்மனைவியுடன் என்னை அடைந்து மற்றீண்டுவாரா நெறியை அடைவாயாக'
எனப்பணித்தார். பணியை ஏற்ற தேவசாலி இறைவன்
ஆணைப்படி வாமதேவமன்னனுக்கு மகனாய் அவதரித்தான்.
6/1/13
வரமுனி அவதாரம்
உலகில் அறநெறி பிறழ்ந்தது. அன்பு பக்தி நல்லொழுக்கம் தெய்வவழிபாடு குன்றின.
அதனால் அஞ்ஞான இருள் சூழ்ந்து வாழ்க்கை நிலைகுலைந்தது.
துன்பமும் துயரமும் சூழ்ந்தன. பக்தியும் இறைவழிபாடும் குன்றினால் துன்பமும்
துயரமும் சூழும் என்பது நியதி.
உலகில் துன்பமும் துயரமும் இல்லா இன்ப வாழ்வு வாழ வேண்டுமானால் வேதாகம
நெறிப்படி மக்கள் வாழ வேண்டும். வேதாகம நெறிகளே மயங்கின்
மக்கள் வாழ்க்கை என்னாகும்?
எனவே வேதங்கள் காலந்தோறும் மாறுபாடும் வேறுபாடும் உற்று அவற்றைப் பின்பற்றி
நடப்போரிடம் குழப்பமும் ஒழுக்கக் குறைபாடுகளும் உண்டாயின.
நெறிகளும் பலவாக விரிந்தன. யாவரும் தத்தம் கருத்துப்படி ஒழுகினர். அதனால்
தீமைகள் மிகுந்தன. அன்பு பக்தி குல ஆசாரம் நன்னடத்தை குணம்
தவம் தெய்வ வழிபாடு நல்லறிவு இன்றி, அறியாமை இருளில் மக்கள் மயங்கிக்
கிடந்தனர்.
இத்துன்ப நிலையிலிருந்து உலகை மீட்க சிறந்த அருளாளர் தோன்ற
வேண்டியிருந்தது. அதனால் தேவர்கள் அம்மை அப்பரை நாடிக் கயிலையை அடைந்தனர்.
அம்மை அப்பரை அணுகி அவர்கள் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி வேதங்களைத்
திருத்தியும் ஆகமங்களை படைத்தும் உணர்த்தியும் உலகை நெறிப்படுத்த
நன்மகன் ஒருவனை உலகுக்கு அளிக்குமாறு வேண்டினர். பெருமானும் கருணையோடு
அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
'நீங்கள் கவலைப்பட வேண்டாம். எமது மானதபுத்திரனை உலகுக்கு அனுப்பி உலகில்
நன்னெறியும் நல்லொழுக்கமும் நிலைபெறச் செய்வோம் ' என்று கூறி
அனுப்பினார். பின் புட்பதந்தனை விளித்து நீ உன் பதினைந்தாம் தலைமுறையில்
தோன்றிய கங்காதரனுக்கும் சுகுணவாணிக்கும் மகனாய்ப் பிறந்து வேதங்களைத்
திருத்தி உலகில் நீதியும் ஒழுக்கமும் நிலைபெறுமாறு செய்து வருவாயாக ' என்று
ஆணையிட்டார்.
இறைவன் ஆணைப்படி புட்பதந்தன் கங்காதரனுக்கு மகனாய்ப் பிறந்தார். வரமுனி
என்று பெயரிடப் பெற்றார். எல்லா கலைகளையும் கற்று உணர்ந்தார். கல்வி
கேள்விகளில் வல்லவராகவும் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மெய்ஞ்ஞானியாகவும்
திகழ்ந்தார். உற்ற பருவத்தில், சுசீலனின் மகளாய் அமிர்தசீலி என்னும்
பெயரில் வளர்ந்த தேவதத்தையை மணந்தார். மகனின் தகுதியை அறிந்து அவனிடம்
ஆட்சியை ஒப்படைத்து விட்டுக் கங்காதரன் தவம் மேற்கொண்டு
மனைவியுடன் காட்டுக்கு ஏகினான்.
ஆட்சிபீடத்தில் அமர்ந்த வரமுனி நீதிநெறி வழுவாமல் ஆட்சியை நடத்தினான்.
மேலும் வேதங்களைத் திருத்தி ஒழுங்கு படுத்தி எல்லோரும் அதன்படி
நடக்கும்படியாக உணர்த்தினான். மக்களும் நீதி குலவொழுக்கம் வேள்வி விரதம்
வாய்மை நன்னடத்தை முதலிய நல்லொழுக்கங்களில் சிறந்து வாழ்ந்தனர்.
மேலும் இறைவனின் திருவருட்டுணை கொண்டு ஆகமங்கள் பலவற்றை இயற்றி உலகுக்கு
அளித்தான்.
எனவே உலகியல் நெறிவிளங்க வேதங்களைத்திருத்திய வரமுனி, ஆகமத் துறைபற்றி
யாவரும் சிவஞானம் பெற்றுமுத்திப்பேறு அடையவேண்டும் என்னும்
கருணையினால் பல ஆகமங்களை இயற்றி உலகுக்கு உபகரித்தார்.
வேதாகம நெறிகள் இரண்டும் உலகில் பரவியதால் உலகியல் ஒழுக்கமும் சிவநெறியும்
தெய்வபக்தியும் வழிபாடும் நிலைபெற்றன. எங்கும் அமைதியும்
சாந்தியும் நிலவியது. மக்கள் மன அமைதியுற்று இன்பமாக வாழ்ந்தனர்.
வரமுனிக்கு அமிர்தசீலிபால் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு வீரருத்திரன்
என்று பெயரிட்டு கல்வி ஒழுக்கங்களில் சிறந்தவனாக வளர்த்தார்.
திருமணப்பருவம்
வந்தடைந்ததும் அவந்தி மன்னன் கோமளையை மணஞ்செய்வித்து ஆட்சியை அவனிடம்
ஒப்படைத்து விட்டுத் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து
சிவபெருமான் திருவடி நிழலில் தங்கினார்.
வரமுனி இயற்றிய நூல்கள்
1. சாத்திர சூத்திர நிகண்டு
2. கணித சாஸ்திரம்
3. சந்திர சித்தாந்தம்
4. பிண்டோற்பத்தி சாஸ்திரம்
5. சந்தி சூத்திரம்
6. நர பிங்கல சாஸ்திரம்
7. சூரிய சித்தாந்தம்
8. சுத்த மீமாம்சம்
9. கௌமுதி வியாகரணம்
10. திரிலிங்க நிகண்டு
11. வஸ்து ஆயுள் நிர்ணயம்
12. பாக சாஸ்திரம்
13. யோனி நிகண்டு
14. ஞாய போதினி
15. சாந்தோக் ஞானம்
16. இலட்சண சாஸ்திரம்
17. ஸ்வர சூத்திரம்
18. பஞ்ச சூத்திர நிகண்டு
19. வேதாங்க மாலை
20. ஆயுள் வேதம்
5/31/13
வேதாளம் சாப விமோசனம்
கானகத்திடை ஒருபெரிய முருங்கைமரத்தின் மீது முடை நாற்றமும் பேழ்வாயும் கோரப்பற்களும் கனல்கக்கும் கண்களும் சடைமுடியும்
உடைய பயங்கரமான வேதாளத்தைக் கண்டான். உடனே அம்மரத்தின் மீதேறி அவ்வேதாளத்தைப் பிடித்துக் கட்டிச் சுமந்து கொண்டு
தேவதத்தை இருக்கும் சோலையை நோக்கிச் சென்றான்.
அப்போது வேதாளம் விக்கிரமாதித்த மன்னனை நோக்கி, 'மன்னா! நான் ஒரு கதையைச் சொல்வேன். அக்கதையில் அமைந்துள்ள பொருளை
நீ அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகச் சிதறுண்டு போகும்' என்று கூறிக் கதையைச்
சொல்ல துவங்கியது.
இவ்வாறு வேதாளம் கதை சொல்வதும் மன்னன் விடை சொல்வதும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கமரம் ஏறுவதுமாய்
இருபத்தினான்கு முறை நடந்தது. பின் முடிவில் மன்னன் இருபத்தைந்தாவது முறை வேதாளத்தைக் கட்டிச் சுமந்து கொண்டு வரும்
போது வேதாளம் மன்னனுக்கு விடை காணற்கரிய கதை ஒன்றைச் சொன்னது.
இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் பாடலிபுரத்து மலர்ச்சோலையிலிருந்த தேவதத்தை முன் போய்ச் சேர்ந்தான்.
மன்னன் முடிமீது கட்டுண்டிருந்த வேதாளமும் தேவதத்தையும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும், சிவபெருமான் அருளியபடி இருவரும்
சாபநீக்கம் பெற்று தெய்வவுரு அடைந்தனர். அச்சமயம் அங்கு திருவருளால் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் சாபநீக்கம் பெற்ற
புட்பதந்தனும் தேவதத்தையும் ஏறி அமர்ந்து கொண்டு, விக்கிரமாதித்த மன்னனைப்பார்த்து பலவாறு ஏத்தி ' எங்கள் சாபநீக்கத்துக்குக்
காரணமாயிருந்த உனக்கு நாங்கள் செய்யும் உதவி யாதுளது? நீ விரும்பிக் கேட்கும் வரத்தை அளிக்கிறோம். கேட்பாயாக' என்றனர்.
உடனே விக்கிரமாதித்த மன்னன் புட்பதந்தனைப் பார்த்து ' எனக்கு நீ எப்போதும் உறுதுணையாய் இருந்து நான் நினைக்கும்போது எல்லாம்
என்முன் தோன்றி உதவவேண்டும்' என்றான். இதைக்கேட்ட புட்பதந்தன் ஒரு ஆற்றல் மிக்க வேதாளத்தை வரவழைத்து, விக்கிரமாதித்த
மன்னனின் உள்ளக்குறிப்பை அறிந்து அவன் சொற்படி நடந்து உதவுமாறு பணித்தான். பின் கயிலையை அடைந்து விமலனடி பணிந்து
இனிது இருந்தான்.
5/30/13
வேதாள அவதாரம்
இவர்கள் இருவரும் இவ்வாறாக, உச்சினி மாநகரை ஆளும் மன்னன் விக்கிரமாதித்தன் வனசஞ்சாரம் செய்பவன் பாடலிபுரத்தை அடைந்தான்.
அன்றிரவு ஒரு பூஞ்சோலையில் தங்கினான். அப்போது ஒரு கந்துருவப்பெண் கல்லும் இரும்பும் நெக்குருக யாழ் வாசிக்கக் கேட்டான்.
இசையில் மயங்கினான். நெஞ்சுருக யாழ்மீட்டி இசையமுதம் பொழியும் அம்மாதரசைச் சந்திக்க எண்ணி அவளிருக்கும் இடத்தைக் கண்டறிந்து
அவளை அணுகினான்.
'அணங்கே! நீ யார்? உன் ஊர் யாது? உன் பெயர் என்ன? இரவுநேரத்தில் நீ இங்கு வரக்காரணம் யாது?' என்று வினவினான். அதற்கு அவள்,
'என் பெயர் தேவதத்தை, என் கணவன் பெயர் புட்பதந்தன். இறைவன் இறைவிக்குச் சொன்ன மறைபொருளை என் கணவர் மறைந்திருந்து
கேட்டு வெளிபடுத்தினார். அதற்குத் துணையாக நான் இருந்தேன். அதனால் நாங்களிருவரும் இறைவன் சாபத்திற்கு ஆளானோம்.
சாபத்தின் காரணமாய் என் கணவர் காட்டில் வேதாளமாய்ப் பேய்களுடன் ஒரு பெரிய முருங்கைமரத்தில் வசிக்கின்றார். நான் பகலில்
மானாகவும் இரவில் சுயவுருப்பெற்று யாழ் மீட்டிக் கொண்டும் திரிகின்றேன். நானும் என் கணவரும், விக்கிரமாதித்த மன்னன் உதவியால்,
நேருக்கு நேர் சந்திக்கும் போது எங்கள் சாபம் நீங்கும்' என்று கூறினாள்.
இதைக் கேட்ட விக்கிரமாதித்த மன்னன், 'நங்கையே இனி உன் கவலையை விடு. நீ எதிர்பார்க்கும் விக்கிரமாதித்த மன்னன் நானே. உன்
கணவன் இருக்கும் இடத்தை அறிந்து அவனை அழைத்து வந்து அவனும் நீயும் சந்திக்குமாறு செய்து நீங்கள் சாபவிமோசனம் பெறும்படி
செய்வேன்' என்று உறுதி கூறி அவ்விடத்தை விட்டு அகன்று பாடலிபுரத்தை விட்டு வேதாளம் இருந்த காட்டை அடைந்தான்.
5/29/13
புட்பதந்தன் பெற்ற சாபம்
வரம் பெற்ற புட்பதந்தன் நாள்தோறும் காலையில் மலர்களைக் கைக்கொண்டு
மனைவியுடன் கயிலைக்குச் சென்று அம்மையையும் அப்பனையும்
தொழுது தூமலர்த் தூவித்துதித்து வந்தான். பல நாட்கள் இவ்வாறு நடந்தது. ஒரு
நாள் மாலையில் மலர்கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட எண்ணி
மலர்களோடு கயிலைக்குச் சென்றான். அப்போது அம்மை அப்பர் இருவரும் தனித்து
ஓரிடத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட அவன் அவர்களைப்
பார்ப்பதற்கேற்ற சமயம் அது எனத் தெரிந்து தலைவாயிற்புறம் ஒதுங்கி நின்றான்.
அச்சமயம் பார்வதிதேவியார் சிவபெருமானை வணங்கிப் ' பெருமானே! எவருக்கும்
தெரியாத கதை ஒன்றைக் கூறி அருளவேண்டும் ' என வேண்டி நின்றார்.
சிவபெருமானும் உலகறியாக் கதை ஒன்றைக் கூறினார். இதை வாயிற்புறம் நின்ற
புட்பதந்தன் கேட்டுக்கொண்டிருந்தான்.
பின் இறைவனைக் கண்டு வணங்கும் தருணம் இது அன்று என எண்ணிய புட்பதந்தன்
கயிலையை விட்டு நீங்கி தன் மனைவியை அடைந்தான்.
நேரங்கழித்துவந்த தன்கணவனை தேவதத்தை சந்தேகக் கண்கொண்டு பார்த்தாள். ஊடல்
கொண்டாள். மனைவியின் ஊடலைத் தணிப்பான் வேண்டித் தான்
கயிலைக்குப் போனதையும் சிவபெருமான் அம்மைக்குப் புதிய கதை ஒன்றைக்
கூரியதையும் அக்கதையைத்தான் கேட்டுக்கொண்டிருந்ததையும் எடுத்துக் கூறினான்.
இதைக்கேட்ட தேவதத்தை அக்கதையைத் தனக்குக் கூறுமாறு வற்புறுத்தினாள். அவள்
பிணக்கைத் தீர்க்கும் கருத்தால் புட்பதந்தன் தான் கயிலையில் கேட்ட
கதையை அப்படியே கூறி அவள் ஊடலைத் தீர்த்து மகிழ்ந்தான்.
மறுநாள் காலையில் எப்போதும் போல் தேவதத்தையும் புட்பதந்தனும் நறுமணமுள்ள
பூக்களையும் பூசா திரவியங்களையும் எடுத்துக் கொண்டு கயிலையை
அடைந்தனர். புட்பதந்தன் அப்பனைப் பூக்கொண்டு வழிபட்டான். தேவதத்தை
அம்மையின் சன்னிதானத்தை அடைந்து அம்மையை வழிபட்டாள். பின் பெண்மதியால்
அம்மையை நோக்கித் ' தேவியே! அரிய கதை ஒன்று உள்ளது. அதைத் தாங்கள் கேட்டருள
வேண்டும் என்று பணிந்து கூறினாள். அம்மை அதற்கு இசைய,
தத்தை தான் கணவன் பால் கேட்டறிந்த கதையைக் கூறினாள்.
இதைக் கேட்ட அம்மை, அக்கதை, எவரும் அறியாக்கதை எனச் சிவபெருமான்
தனக்குச்சொன்ன கதையாயிருப்பதை அறிந்து, உடனே அவ்விடத்தை
விட்டு நீங்கிப் பெருமானிடம் சென்று "புதுக்கதை என்று பழங்கதையைச் சொல்லி
ஏமாற்றினீர்களே ! நன்று நன்று " என்று சினந்து நின்றாள்.
தேவியின் சினக்குறிப்பை அறிந்த சிவபெருமான் "இக்கதையைக் கூரினவர் யாவர்? "
என்று வினவ, அம்மை அங்கு வந்து நின்ற தேவதத்தையைச்
சுட்டிக் காட்டினார். உடனே தேவதத்தை தன் கணவனை சுட்டிக் காட்டினாள். உடனே
சிவபெருமான் புட்பதந்தனை விளித்து ' உனக்கு யார் இந்த
கதையைச் சொன்னவர் ? ' என்று கேட்டார்.
புட்பதந்தன் இறையடியை வணங்கிப் ' பெருமானே! அடியேன் தங்களை அர்ச்சித்து
வணங்கப் பூக்களுடன் நேற்று மாலை வந்தேன். அப்போது
தாங்கள் அம்மைக்கு இக்கதையைச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். தற்செயலாக அங்கு
அச்சமயம் வரநேர்ந்த அடியேன் அக்கதையைப் புறத்தே
இருந்து கேட்க நேர்ந்தது.
இவ்வாறு கேட்டறிந்த கதையைத் தேவதத்தைக்குக் கூறும் கட்டாயம் நேர்ந்து
விட்டது' என்று பணிவுடன் கூறினான்.
இதைக்கேட்ட சிவபெருமான் சினந்து ' யாருமறியாது பிராட்டிக்குச் சொன்ன
மறைபொருளை, மறைந்திருந்து கேட்டுப் பிறர் அறியக்
கூறியதால், நீ வெறி மனங்கொண்ட வேதாளமாகக் கடவை. மனவடக்கமின்றிக் கேட்டதை
வெளிப்படுத்திய உன் மனைவி மானாகப் பிறந்து
உழலக் கடவள் ' என்று சபித்தார்.
சாபம் பெற்ற புட்பதந்தன் பெரிதும் துயருற்று அஞ்சலி செய்து, "பெருமானே
இச்சாபம் எப்போது நீங்கும்" என்று வினவி நின்றான்.
புட்பதந்தன், பெரிதும் துயருற்று துதித்து வேண்டி நிற்கக் கண்ட சிவபெருமான்
மிகவும் இரங்கி, ' அன்பனே! தேவதத்தை
பாடலிபுரத்திற்குப் போய் அங்கு பகலில் மான் ஆகித் திரிந்து இரவில்
மடந்தையாகி யாழ் மீட்டி எம்மைப் பரவிய வண்ணமிருப்பாள்.
நீயோ, பாடலிபுரத்துக்கு ஒரு யோஜனைதூரத்திலுள்ள பெருங்காட்டில் ஒரு பெரிய
முருங்கை மரத்தின் மீது வேதாளமாய் இருப்பாய்.
சிலகாலம் கழித்து விக்கிரமாதித்த மன்னன் பாடலிபுரம் வருவான். அவன் உங்கள்
இருவரையும் சந்திக்கும்படி செய்வான். அப்போது
உங்கள் சாபம் நீங்கும். நீங்கள் இருவரும் மறுபடியும் பழைய நிலையை அடைந்து
என்னை அடைவீர்கள்' என்று அருள் செய்தார்.
சாபத்தின்படி புட்பதந்தன் வேதாளமாகிப் பாடலிபுரத்துப் பெருங்காட்டில் ஒரு
பெரிய முருங்கை மரத்தில் பேய்களுக்குத் தலைவனாய்
வசித்து வந்தான். தேவதத்தை மான் ஆகிப் பாடலிபுரத்தில் பகலில் மானாகவும்
இரவில் மடந்தையாகி யாழ் வாசித்துக் கொண்டும்
இருந்தாள்.
5/28/13
அருங்கலை உணர்த்திய வித்யாதரர்
சிவபெருமான் ஆணைப்படி, மேருமலைச்சாரலில் தவஞ்செய்து கொண்டிருந்த ஏமவருணனின்
முன், தேவலர், குழந்தையாகத் தோன்றினார். குழந்தையைக் கண்ட
ஏமவருணனும் அவன் மனைவியும் பெருமகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று கமலாட்சன்
என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவன் வேதாகம சாத்திரங்களை
தனது பதினோராவது வயதிலேயே நன்கு கற்றுத்தேர்ந்து சகல கலா வல்லவனாகத்
திகழ்ந்தான்.
நிறை ஞானியான தேவலமுனிவர், இப்பிறப்பில் சிறு வயதிலேயே எல்லாக் கலைகளையும்
கற்று வல்லவரானதில் வியப்பொன்றும் இல்லை.
"ஒருமைக்கட் டான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
என்பது மறை மொழியன்றோ!
கந்தருவர் வித்யாதரர் தேவர்கள் முதலிய பலரும் கலைஞானம் பெற வேண்டி இவரை
அடைந்து மானவராய்த் தொண்டு செய்து கலைஞானம் பெற்றனர்.
இறைவன் அருளாணைப்படி வித்யாதரர்களுக்கு கலைஞானம் உணர்த்தித் தமது
பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டாராதலால் மீண்டும்
கயிலையை அடைந்தார்.
தாம்பயின்ற இசையை யாழில் வைத்து கயிலைவாசனின் செவியில் அமுதெனப்
பாய்ச்சும் பணியில் தலைப்பட்டார், இசைக்கு மயங்கும், ஏழிசையாய்
இசைப்பயனாய் இன்னமுதாய் விளங்கும் சிவபெருமான், கமலாட்சனின் இனிய யாழிசையை
மாந்தி இனிது வீற்றிருந்தார்.
சிவபெருமான் மட்டுமல்லாமல் கயிலையிலிருந்து எல்லா உயிரினங்களும்
அத்தெய்வீக இசைக்கு மயங்கி உருகின. பகை உயிர்கள் பகை மறந்து ஒன்றுபட்டன.
பாம்பு மயில் மீது விழுந்தது. சிங்கமும் யானையும் நெருங்கி நின்றன. புலி
வாயினருகே மான்கள் அச்சமின்றி நடமாடின.
முனிவர்களின் தவங்குலைந்தது. காதலர்கள் காதலால் குழைந்தனர். சூரிய
சந்திரர்கள் தாம் செல்லும் திசையை மறந்தனர். கல்லும் உருகியது.
காற்றும் மரக்கிளைகளும் அசைவற்று இருந்தன. காட்டாறுகள் ஓடவில்லை. கடலலைகள்
ததும்பவில்லை.
இவ்வாறு நிற்பனவும் இயங்குவனவுமாயுள்ள எல்லா உயிரினங்களும் பொருள்களும்
இசைமயமாய் செயல்மறந்து நின்றன.
இத்தகைய இசையால் நாள்தோறும் இறைவனை யாழ் மீட்டிப், பாடி பரவிப் பணிந்த
வண்ணம் கமலாட்சன் இருந்தார்.
இசைவல்ல ஐவர இசைப்பணியோடு அளவற்ற புதிய பாடல்களையும் நல்ல நூல்களையும்
இயற்றிச் சிவபெருமான் முன் அரங்கேற்றினார்.
5/27/13
புட்பதந்தன் அவதாரம்
கனகமாபுரியை சுருதிகீர்த்தி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். இவனைச் சோரன்
என்னும் அசுரன் பெரிதும் துன்புறுத்தி வந்தான்.
இவனை வெல்ல இயலாமல் இவனது துன்பப்பிடியினின்றும் மீளக் கருதிக் கயிலை நாதனை
நோக்கித் தவங்கிடந்தான். தவத்துக்கிரங்கி
சிவபெருமான் மன்னன்முன் தோன்றி அசுரனை வெல்லும் மகன் ஒருவனை அளிப்பதாக
வரமருளி மறைந்தருளினார். அதன்படி இறைவன், கமலாட்சனை,
மன்னனுக்கு மகனாகப் பிறந்து சோரன் என்னும் அசுரனை அழிக்குமாறு பணித்தார்.
கமலாட்சனும் இறைவன் ஆணைப்படி சுருதிகீர்த்திக்கு மகனாக
அவதரித்தார். இந்தப் பிறப்பில் புட்பதந்தன் என்னும் பெயரும் பெற்றார்.
சிந்து மன்னனின் மகளாகப் பிறந்திருந்த தேவதத்தையை மணந்தார்.
ஒருநாள் மன்னன், தன்மகன் புட்பதந்தனை அழைத்து சோரன் என்னும் அசுரனை அழித்து
வருமாறு பணித்தார். புட்பதந்தனும் அசுரன் இருக்கும்
இடத்தைக் கண்டறிந்து, அவனுடன் பெரும் போர் செய்து அவனை அழித்து மீண்டான்.
சின்னாள் கழித்து மன்னன் தன் மகன் புட்பதந்தனுக்கு ஆட்சியை நல்கித் தானும்
தன்மனைவியுமாக தவமேற்கொண்டு காட்டுக்குச் சென்றான்.
ஆட்சி பீடமேறிய புட்பதந்தன் செங்கோன் முறைப்படி நல்லாட்சி நடத்தி வந்தான்.
இவன் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிவபக்தனாகவும் திகழ்ந்தான்.
கோயில் வழிபாடும் அர்ச்சனையின் சிறப்பையும் நன்கு உணர்ந்த புட்பதந்தன் தன்
நாட்டில் நல்ல முறையில் வழிபாடுகள் நடைபெற வேண்டும்
என்னும் கருத்தால் திருக்கோயில்களை கட்டினான். நந்தவனங்களை வைத்தான். தானே
பூப்பறித்துக் கொண்டு வந்து அர்ச்சனை வழிபாடுகளைச்
செய்து பக்திப் பயிரை வளர்த்தான்.
இவ்வாறு புட்பதந்தன் அறநெறிப்படி நல்லாட்சியையும் சிவநெறியையும் போற்றி
நாட்டைப் புரந்து வரும் போது சிவராத்திரி விழா வந்தது.
இவ்வாறு சைவர்களுக்கெல்லாம் ஏற்றதும் முதன்மையானதுமான சிவராத்திரி விரதத்தை
ஆகம விதிப்படி முறையாக ஏற்று புட்பதந்தன் சிவ
வழிபாடு செய்து வந்தான்.
புட்பதந்தனின் பூசனையை மகிழ்ந்து ஏற்றுச் சிவபெருமான் அம்மையுடன்
இடபவாகனத்தில் தோன்றி, அவன் விரும்பியவாறு, அவர்கள் நாள்தோறும்
கயிலைசென்று தம்மை தரிசனம் செய்யும் வரத்தை அளித்து மறைந்தார்.
5/26/13
மன்னன் இலிங்க வடிவு அடைதல்
ஒருநாள் வித்யாதரர்கள் யாவரும் ஒன்று கூடிக் கயிலைக்குப் போய்ச்
சிவபெருமானை அணுகிப் ' பெருமானே நாங்கள் தங்கள் அருளால் அறுபத்து நான்கு
கலைகளில்
சிலவற்றையே உணர்ந்துள்ளோம். மற்றுள்ள கலைகளையும் உணர்த்தி எங்கள்
உள்ளங்களைத் திருத்தியருளுதல் வேண்டும் எனப் பணிந்து நின்றனர். அதற்குச்
சிவபெருமான் 'உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச்சாரலில்
எம்மை நோக்கித் தவஞ்செய்கின்றான். அவனுக்கு நாம் ஓர் மகனை அருள்
செய்வோம். அவன் உங்களுக்கு வேண்டும் கலைகள் யாவற்றையும் விரித்துக்
கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக ' என்று அருள்
செய்தார்.
அவர்களும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம்
சேர்ந்தனர்.
பின் சிவபெருமான் ஆமோத நகரிலிருக்கும் தேவாங்க மன்னனை நினைத்தார். அவரும்
சிவபரமபொருளின் உள்ளக்கருத்தை உணர்ந்து கயிலையில்
சிவபெருமான் முன் தோன்றித் தாழ்ந்து எழுந்து தொழுது நின்றார். வந்தவரைச்
சிவபெருமான் இனிது நோக்கி 'மேருமலைச் சாரலில் தவஞ்செய்யும் ஏமவருணனுக்குப்
பிள்ளையாய்ப் போய் வித்யாதரர்களுக்கு அறுபத்து நான்கு கலைகளையும்
உணர்த்தி வா' என்று பணித்து விடை தந்து அனுப்பினார்.
தேவாங்க மன்னனும் இறைவன் பணியை ஏற்றுக் கொண்டு ஆமோத நகரை அடைந்தார். தனது
குமாரர்கள் மூவருக்கும் நல்லுரை கூறித் தனது மனைவியர் இருவரின்
உள்ளத்தை தேற்றித் தனது தூய உடம்பைச் சிவலிங்க வடிவில் விட்டு விட்டு
விண்ணுலகடைந்தார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூத்தமகன் திவ்யாங்கன் தனது தந்தையின்
இலிங்கவடிவத்துக்குத் திருக்கோயில் எழுப்பி, அதில் நாள்தோறும் பூசனைகள்
செய்து
வந்தான். ஏற்றுக்கொண்ட ஆட்சியையும் செங்கோன் முறைப்படி நீதி வழுவாமல் பகை
நீக்கி வளம் பெருக்கி ஆட்சிசெய்து வந்தான்.
5/25/13
விடைக் கொடியை இழத்தல்
வித்தையுத்தேசன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி
ஆமோத நகரை அடைந்தான். தேவாங்க மன்னனின் முன் போய் நின்று
வணங்கி, ' மன்னர் மன்னா! நான் தேவேந்திரனின் தூதுவன் வச்சிரதந்தன்
மீண்டும் பெரும் படைகளுடன் பொன்னகரம் வந்து வளைத்துக் கொண்டு போர்
புரிந்தான். போரில் தேவர்கள் யாவரும் தோற்று ஓடி மறைந்து வாழ்கின்றனர்.
அரக்கரை வென்று பொன்னகரைக் காப்பதற்கு விடைக் கொடியாலன்றி
வேறெதனாலும் முடியாது. அதனால் அதை தங்களிடமிருந்து பெற்றுவருமாறு
தேவேந்திரன் அனுப்பியுள்ளான். அருள் கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவ
வேண்டும்' என்று வணங்கி நின்றான்.
அசுரன் சொன்ன சொல்லை உண்மை என நம்பிய தேவாங்க மன்னன் நந்திக்கொடியை
அவனிடம் கொடுத்தனுப்பிவிட்டார்.
கொடியைப் பெற்ற அசுரன் பெருமகிழ்ச்சியோடு விரைந்து சென்று கொடியை
வச்சிரதந்தனிடம் சேர்ப்பித்தான். நந்திக்கொடியைப் பெற்ற அசுரமன்னன்
பெருங்களிப்பில் மூழ்கினான். சேனைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும்
தேவர்கள் மீது போருக்குப் போனான். விண்ணாட்டை அடைந்தான்.
அமராவதி நகரை வளைத்துக் கொண்டு போர்ப்பறை அறைவித்தான். இதை அறிந்த
தேவேந்திரன் படைகளுடன் அசுரரை எதிர்த்தான். அசுரர் படை
பலமிக்கதாயிருப்பதை அறிந்து தேவல மன்னனை உதவிக்கு வருமாறு, ஓலை கொடுத்து
தூதனை அனுப்பினான். தூதுவன் சொன்ன செய்திகளை அறிந்த
தேவாங்கன் " நேற்றனுப்பிய நந்திக்கொடிகையிலிருக்க நம்மை ஏன் இந்திரன்
அழைக்கின்றான்? இதில் ஏதோ சூது இருக்கிரது' என்று ஐயுற்றார்.
உடனே படைகளுடன் அமராவதி நகருக்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற பின்
அசுரர்களின் கபடநாடகம் வெளிப்பட்டது. போரில் தேவர்கள் தோற்றனர்.
தேவாங்க மன்னன் அசுரர்களிடம் சிறைப்பட்டார்.
சிறை பிடித்த தேவலமுனிவரை அசுரன் கொல்லாது தன்னாட்டுக்கு அழைத்துச்
சென்றான். அரம்பையின் சாபம் பலித்துவிட்டது.
நாட்டை அடைந்த அசுரமன்னன் தேவலமுனிவரைக் கொண்டு தனது குலமக்களும் ஆடைகளைப்
பெறவேண்டும் என்று திட்டமிட்டான்.
அதனால் அவரைச் சிறைக் கைதியாக நடத்தாமல் மரியாதைக்குரிய ஒருவராக வைத்து
நடத்தினான். தலைமைப் பதவியையும் கொடுத்தான்.
பின் தன் வளர்ப்பு மகள் பத்மினியை மணக்குமாறு வேண்டினான். அரக்க மகளை
மணக்க முனிவர் தயங்கினார். அப்போது அக்னி தேவன்
அங்கு தோன்றி பத்மினி என்னுடயை மகள். அக்னி தத்தை என்பது அவள் பெயர்.
இம்மன்னன் என்னுடயை நண்பன். அதனால் என் மகளை
இங்கு நான் வளர்க்க விட்டேன். அவளும் வளர்ந்து வருகின்றாள். தாங்கள்
தயங்காது இவளை மணக்கலாம். என்று கூறித் தானே முன்னின்று
மணத்தை முடித்து வைத்தான். இம்மணத்தில் இவர்களுக்கு சாலன் அலன் பெலன்
என்னும் மூன்று மக்கள் பிறந்தனர். இவர்களுக்குத்
தேவலர் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்களும் நெய்யும் தொழிலை
நன்கு கற்று ஆடைகளை அழகாக நெய்து அசுரர்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிலையில் தேவலர் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்.
தமது விருப்பத்தை அசுரமன்னனுக்கு அறிவித்தார். அவனும்,
ஆடைகளைத் தனது மக்களும் பெற வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி விட்டதால்
தடை சொல்லாமல் விடை கொடுத்து அனுப்பினான்.
தேவலமுனிவரும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நாட்டை அடைந்தார்.
ஆமோத நகரை சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.
5/24/13
வியாக்ரமுகன் வீழ்ச்சி
மகேந்திர நகரை அடைந்த வச்சிரதந்தன் அரக்கர்களை ஒன்று கூட்டி மந்திராலோசனை
செய்தான். அதில் வச்சிரதந்தனின் தம்பி வியாக்ரமுகன் 'கேவலம் ஒரு அற்ப
மனிதனிடம் நாம் தோற்று ஓடி வருவதா ? இது மகா கேவலம். நானே போர்
முகத்துக்குப் போய் தேவாங்கனுடன் போர் செய்து அவனை அழித்து வருகிறேன். விடை
தாருங்கள்' என்று வீரம் பேசினான். அண்ணனும் அவனுக்கு ஆசி கூறிப் பெரும்
படைகளுடன் போருக்கு அனுப்பினான். வியாக்ரமுகன் போர்முனைக்கு வந்து பலவிதமான
ஆயுதங்களைக் கொண்டு தேவலரை எதிர்த்துக் கடுமையாக போரிட்டான். முடிவில்
தேவாங்கரின் கணைகளால் தலை துண்டிக்கப்பட்டு வீழ்ந்திறந்தான்.
"ஒரு கணை யாற்குய வுலைய வாட்டி மற்
றிரூ கணையாற்சிலை யிறுத்து வெம்பொறி
தரு கனை யு'டைநிசா சரன்சி ரத்தையும்
அரு கனை தாக்கனத் தகற்றி னானரோ"
இதைக் கண்ட அரக்கர்கள் புலிமுகன் வீழ்ச்சியை வச்சிரதந்தனுக்குக் கூற
மகேந்திரம் நோக்கி ஓடினர்.
வெற்றி வாகை சூடிய தேவல மன்னனும் இந்திரனும் பெருமகிழ்ச்சியோடு தம் தம்
நகருக்கு ஏகினர்.
தேவலர் தேவதத்தை மணம்
திருக்கயிலையில் சிவபெருமான் தேவலருக்கு மணஞ்செய்து வைக்கத் திருவுளம்
பற்றினார். ஏழு முனிவர்களை - சப்தரிஷிகள் கயிலைக்கு வந்து சேருமாறு
திருவுளத்தே எண்ணினார்.
முனிவர்கள் எழுவரும் இறைவனின் உள்ளக் குறிப்பை உணர்ந்து திருக்கயிலையை
அடைந்து சிவபெருமான் திருமுன் போய் அவன் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி
நின்றனர். வந்த
முனிவர்களை நோக்கிச் சிவபெருமான் " முனிவர்களே! தேவாங்க முனிவருக்குச்
சூரிய தேவனின் தங்கையை மணமுடிக்க வேண்டும். நீங்கள் சூரியதேவனிடம் சென்று
மணவினைக்குரிய
நன்னாளைக்கூறி, அவனது ஒப்புதலைப் பெற்று வாருங்கள்!" என்று பணித்தார்.
முனிவர்களும் சிவபெருமானை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சூரிய உலகம்
சென்றனர். சூரியபகவானை
அணுகி, வந்த காரியத்தைச் சொல்ல அவனும் தன் சம்மதத்தை மகிழ்ச்சியோடு
அளித்தான். வைகாசித் திங்கள் பூர்வபட்சம் சத்தமி நாள் புதன் கிழமையன்று ஆறு
நாழிகைக்கு மேல் முகூர்த்த நாளைக் குறித்தனர்.
இம்முடிவை முனிவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானிடம் சொல்லி விட்டு
அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தம் தம் இடம் ஏகினர்.
சூரியன் தன் தங்கை தேவதத்தையின் திருமணத்தை பற்றிய செய்திகளை எல்லாம் தனது
அமைச்சன் வீரமார்த்தாண்டனிடம் சொல்லி, இம்மங்கல முடிவை ஆமோத நகரம் சென்று
தேவாங்க மன்னனுக்கு அறிவித்து அவரை குறித்த மணநாளில் மணமுடிக்க உற்றார்
உறவினருடன் சூரிய உலகம் வருமாறு கூறி, அழைப்பை விடுத்துத் திரும்பும்படி
அனுப்பினான்.
அமைச்சன் மார்த்தாண்டனும் தேவாங்க மன்னனிடம் சென்று மணவினைபற்றிய
முடிவுகளைச் சொல்லி குறித்த நாளில் சூரிய உலகம் வந்து சேருமாறு கூறி, விடை
பெற்றுக்கொண்டு
சூரிய உலகம் மீண்டான். சூரியனிடம் தான் ஆமோத நகரம் போய் வந்த விபரங்களைச்
சொன்னான். உடனே சூரியன் மயனைக் கொண்டு இரத்தினங்களால் ஆன திருமண மண்டபத்தை
அமைத்தான். முளைப்பாலிகைகள் தோற்றுவித்தான். நகரைத் தோரணங்களால்
அழகுபடுத்தினான். வரும் விருந்தினர் தகுதிக்கேற்றவாறு தங்குவதற்கு வசதி
மிக்க மாளிகைகளை
நிர்மானித்தான்.
பின் சிவபெருமானுக்கும் திருமால் நான்முகனுக்கும் மற்றுமுள்ள
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதர்கள் மூலம் திருமண அழைப்பை
அனுப்பினான்.
அழைப்பை ஏற்ற எல்லா தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் திருமணங் காண சூரிய
உலகம் வந்து கூடினர்.
தேவாங்க மன்னனும் தனது திருமணத்துக்கு வருமாறு திருமண திருமுகத்தை உலக
மன்னர்கள் யாவருக்கும் அனுப்பினார். அழைப்பை பெற்ற எல்லா மன்னர்களும் உரிய
காலத்தில்
அமைச்சர்கள் புடைசூழ ஆமோதநகரை வந்தடைந்தனர். அவர்களை எல்லாம் தேவாங்க
மன்னன் தக்கவாறு வரவேற்று விருந்து முதலியன வைத்து உபசரித்து அமர்த்தினார்.
நல்லநேரத்தில் மன்னர்களும் நால்வகைப் படையினரும், விருதுகள் பலரும் ஏந்த,
எக்காளம் துந்துபி பேரிகை முதலியன முழங்க, வாத்தியங்கள் ஒழிக்க
அழகிய பெண்கள் ஆடல் பாடல் நிகழ்த்த தேர்மீது அமர்ந்து சூரியவுலகம்
வந்தடைந்தார்.
சூரிய தேவன் மணமகனைத் தக்கவாறு வரவேற்று திருமணமண்டபத்துக்கு அழைத்துச்
சென்றான். மணமகன் மணக்கோலம் பூண்டு மனையில் அமர்ந்தான்.
அழகில் தனக்கு நிகர் தானே என விளங்கிய தேவதத்தை இயற்கை அழகும் செயற்கை
வனப்பும் பெற்று அன்னமென தேவமாதர்கள் புடைசூழ திருமணமண்டபம்
வந்தடைந்தாள். மணமகன் அருகில் மனைமீது அமர்ந்தாள். பலவகை வாத்திய கீதங்கள்
முழங்க, வேதகீதங்கள் ஒழிக்க தேவதத்தையின் கழுத்தில் தேவாங்க மன்னன்
மங்கல நாண் சூட்டினார். அம்மை அப்பரும் சூழ்ந்திருந்த மற்ற தேவர்களும்,
முனிவர் முதலியோரும் மலர் தூவி வாழ்த்தி அருளினர். சூரிய பகவான்
தாம்பூலத்தை
எல்லோருக்கும் இரத்தினப் பேழைகளில் வைத்துக் கொடுத்தான்.
இந்நேரத்தில் தேவல மன்னன் தான் கொண்டு வந்திருந்த அழகான ஆடைகளை
மூவருக்கும் அவர்கள் தேவிமார்களுக்கும், தேவர்களுக்கும் மன்னர்களுக்கும்
ஆண் பெண் அனைவருக்கும் அவர்கள் மகிழுமாறு அளித்தார். அப்போது அங்கு
வந்திருந்த பைரவக் கடவுளுக்கும் நல்லாடை ஒன்றை அளித்தார். அதைப்
பெற்றுக்கொண்ட பைரவர் தேவலரைப் பார்த்து " எல்லோருக்கும் நல்ல நல்ல
ஆடைகளைக் கொடுத்து விட்டு கடைசியில் மிஞ்சியிருந்த கழிசல் ஆடையை எனக்குக்
கொடுத்தாயல்லவா ? இதோ இந்த ஆடையின் கதியைப் பார் " என்று சொல்லி அந்த
ஆடையைச் சுக்கு நூறாகக் கிழித்தெரிந்தார். அதற்குப் பிறகு நல்லதோர்
ஆடையைத் தமக்கு அளிக்குமாறு கேட்டார். பைரவரின் தகாத செயலைக் கண்ட தேவலர்
இன்னொரு ஆடையை அவருக்கு அளிக்க மறுத்தார். உடனே
பைரவர் சிவபெருமானிடம் சென்று தமக்கு ஆடை கொடுக்க மறுக்கிறார் என்று
கூறினார்.
பெருமான் தேவலரிடம் நடந்த செய்தியைக் கேட்டறிந்து பைரவரை நோக்கி, "
தேவலர் அளித்த ஆடைகளை நாங்களெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்று உடுத்திப்
போற்றினோம்.
நீயோ கொடுத்த ஆடையை மதிக்காது பெற்று கிழித்து எறிந்தனை. அதனால் இன்று
முதல் நீ கிழிந்த ஆடையுமின்றி நிர்வாணமாய் இருக்கக் கடவை" என்று சபித்தார்
சாபம் பெற்ற பைரவர் அங்கிருந்து நீங்கினார்.
திருமணம் நான்கு நாட்கள் நடைபெற்றன. வந்திருந்த யாவருக்கும் நான்கு
நாட்களும் விருந்து உபசாரங்கள் நடைபெற்றன.
நான்காவது நாள் திருமணத்துக்கு வந்திருந்த யாவரும், தேவலமன்னன்
தம்பதிகளுக்கு ஆசி கூறி சூரிய தேவனிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர்
இருப்பிடம் சென்றனர்.
தேவலமன்னன், தானும் தன் மனைவியுமாக சில நாட்கள் அங்கு தங்கி
இன்புற்றிருந்தார். அதன் பின் சூரியதேவன் அளித்த ஏராளமான சீர் வரிசைகளைப்
பெற்றுக் கொண்டு
தன்னுடன் தங்கியிருந்த மன்னர்களும் நால்வகைப் படைகளும் புடை சூழ்ந்து வர
தேவதத்தையை அழைத்துக் கொண்டு சூரியதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு
தமது நகர் அடைந்தார்.
Subscribe to:
Posts (Atom)
