அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label சடங்குகள். Show all posts
Showing posts with label சடங்குகள். Show all posts

6/6/14

கதை சொல்லும் திருவிழா!

கதை சொல்லும் சவுண்டாத்தா திருவிழா!




        பாட்டன் முப்பாட்டன் சொன்ன செவிவழிக் கதைகளும், அதையட்டிய வில்லுப் பாட்டும், கணியன் பாட்டும் ஆயிரமாயிரம் நீதி சொல்லும் நம் வாழ்க்கைக்கு! அப்படி ஒரு தெய்வக் கதையோடு துவங்குகிறது ஒரு திருவிழா! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தாசப்பக்கவுடர்புதூர் (நால்ரோடு). மக்கள் குடியிருக்க வசதியாக தாசப்பக்கவுடர் என்பவர் தன் நிலத்தை தானமாகத் தந்தாராம். அவருடைய பெயரிலேயே திகழ்கிறது இந்த ஊர்! இந்த ஊரின் மையத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும் ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கும்தான் கதை சொல்லி திருவிழா நடத்துகிறார்கள்.



இந்தக் கோயிலில், தைப்பொங்கல் விசேஷம்! விழாவின் ஓர் அங்கமாக... அன்று காலை, கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது, 'சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா... பாம்மா... பாதாயே’ எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, கூடவே ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வரும் இளைஞர்கள் (வேண்டிக் கொள்பவர்கள் மட்டும்), தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாகப் பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்களாம்!



ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளானார்களாம். ஆகவே, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, ''மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர் களுக்கு ஆடை தயார் செய்து கொடு'' என்று பணித்தாராம்.




அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணு வைத் தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம்.

       அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் உருவாக, அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள்...அசுரகுணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன! அவர்களை, தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டுச் சென்றாளாம் அம்பிகை.



தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் சொல்கிறது அந்தக் கதை!

இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டால், நமது குறைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், 'கல்யாணத் தடை அகலவும், குழந்தைப்பேறு வாய்க்கவும் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை மனதார வேண்டிக் கிட்டா, எல்லா வரமும் கைகூடும்’ என்கிறார்கள் அம்பாளின் திருவருளை அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள்.



"நெசவாளர்களின் வாழ்வைக் காக்கும் அந்த அம்பிகையை நாமும் வழிபடுவோம்; நம் தொழில் சிறக்கவும் குலம் செழிக்கவும் அருள்புரிவாள் ஸ்ரீசௌடேஸ்வரி!"



நன்றி சக்தி விகடன் 


10/16/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப 2013

பத்தாம் நாள் அலங்காரம் மற்றும் அம்பு சேவை உடன்  அம்மன் அனைத்து மண்டகபடிகளுகும் எழுந்தருளல்


 மகிசாசுர மர்தினி அலங்காரம்





 சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறிய காட்சி













 அம்மன் சம்ஹாரம் செய்ய உள்ள வன்னி மரம்




 சம்ஹாரம் முடிந்து பானகம் நிவேதனம் செய்த பின்பு  ஓய்வெடுக்கும்  பல்லடம் சாலை யில் அமைகப்பட்ட கிழக்கு பகுதி மண்டகப்படி



9/29/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் திருவிழா அழைப்பிதழ்

ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் துணை 

            பொருளாட்சி செய்யும் பொள்ளாச்சி மாநகர் தனில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருகோவிலில் 72ம் ஆண்டு நவராத்திரி கலை விழா  மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு சேவை மற்றும் அம்மன்  சிம்மவாகனத்தில் வீதி உலா 14-10-2013 திங்கட்கிழமை மாலை நடைபெறும். 

தினமும் மாலை 5.30- 7.30 மணி வரை ஹோமங்களும் கலைநிகழ்ச்சி களும் நடைபெறும் . 7.30-8.00 மணி வரை குலம் காக்க கொலுவிருக்கும் அம்பிகைக்கு சிறப்பு நவராத்திரி கொலு மஹா பூஜை நடைபெறும்.

அனைவரும் வருக பொள்ளாச்சி ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் அருள் பெருக!!










தேவாங்க ப்ளாக் மூலமாக அனைவருக்கும் விழா அழைபிதழ் அனுப்பிய செல்வி சுஷ்மிதா சந்திரசேகர், பொள்ளாச்சி  அவர்களுக்கு நன்றி...

9/25/13

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

ஶ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் துணை .

ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா.

தேவாங்கர் குல மக்களுக்கு வணக்கம்.
நாங்கள் நம் தேவாங்கர் குல அன்னை ஶ்ரீசெளடேஸ்வரி அம்மனை அனைவரும் வீட்டில் வைத்து கும்பிடுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று நினைத்து அதை பற்றி பேஸ் புக் மூலம் சர்வே எடுத்தோம். பலரும் பல விதமான கருத்துக்களை கூறியிருந்தீர்கள். அதை பற்றி நம் குல முக்கியஸ்தர்களிடம் கேட்கலாம் என்று முகவரி கேட்டிருந்தோம். அனைவரும் அளித்தீர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று பெரியோர்களிடம் விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலை தங்களுக்கு தருகிறோம்.

தற்போது ஒவ்வொரு ஏரியாக்களிலும் வெவ்வேறான நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
உதாரணமாக‌-  
                                                                                                                                                                             A மற்றும், B  என்பதை.இரு பகுதி மக்களாக எடுத்து கொண்டால்


               A 
                  B  
1
ஶ்ரீசெளடம்மன் வழிபாடு [அம்மனை ஏதோ ஒரு ரூபத்தில்]
வீட்டில் வைத்து கும்பிடுகிறார்கள்
வீட்டில் வைத்து கும்பிடுவது இல்லை
2
கோவிலில் பிரசாதமாக அணிய கொடுப்பது
பண்டாரம் என்கிற மஞ்சள் கலவை
திருநீறு, குங்குமம், சந்தனம்
3
ஜனிமாரா என்ற பூணூல்
வருடம் ஒரு முறை ஆவணி மாதத்தில் நோன்பு வைத்து போடுகிறார்கள்
பூணூல் போடுகிறார்கள் நோன்பு வைத்து போடும் பழக்கம் இல்லை
4
கோவில் அப்ப என்று சொல்லக்கூடிய வருட திருவிழா [சில இடங்களில் நவராத்ரி விழா]
சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு, ஜோதி கொண்டு வருதல், மஞ்சள் மெரமனை, வீரமுட்டி வேஷம்
அப்ப என்ற வார்த்தையே தெரியாது. விழா என்பார்கள். கரகம் கொண்டு வருதல், முளைப்பாரி, ரதி சேர்த்தல் [அரிசிமாவு+ வெல்லம் சேர்த்தல்], அம்மன் வீதி உலா
5
கத்தி போடுதல்
சிரிய கத்தி போட்டு கொண்டு சலங்கை கட்டிக் கொண்டு வித,விதமாக நாட்டியம் போல் செய்கிறார்கள்
பெரிய கத்தி போடுகிறார்கள். இரத்தம் வழிய ஆக்ரோஷமாக போடுகிறார்கள். பத்தேவு என்கிற- வாளை வீசிக் கொண்டே அம்மன் கதை+ மக்களுக்கான வேண்டுதல்கள் சொல்கிறார்கள்
6
சக்தி நிலை நிறுத்துதல் [மண் சட்டியின் மேல் விழிம்பில் ஜம்முதாடு கத்தியை நிறுத்துவது]
இந்த வழக்கம் இல்லை
10 திலிருந்து 20 வருடத்திற்கு ஒரு முறை நிறுத்துகிறார்கள்
7
கத்தேவு பெட்டி [திரு நீறுபை, ஜம்முதாடு கத்தி என்ற சக்தியை வைத்திருப்பது]

இந்த முறை இல்லை
இதை முக்கியமாக கருதுகிறார்கள்
8
திருமணம்-- தாலி கட்டுவது
மணமகனின் வலது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
மணமகனின் இடது பக்கம் மணமகளை உட்கார வைத்து தாலி கட்டுகிறார்கள்
9
இறந்தவர்களுக்கு செய்யும் திவசம்
மூன்று படையல் வைத்து அரிசியை வைத்து முறை செய்கிறார்கள்
ஒரு படையல் மட்டும் வைத்து கும்பிடுகிறார்கள்

இன்னும் மற்ற பல சடங்கு முறைகளிலும், பழக்க வழக்கங்களிலும், கன்னடம் பேச்சு வழக்கும் அந்த, அந்த ஏரியா மக்களின் பழக்க வழகங்களோடு கலந்து இருப்பதால், இவற்றை யெல்லாம் மாற்றி ஒருமுக படுத்துவது சிரமம். ஆகவே அவரவர்கள் பிறந்ததிலிருந்தே இரத்திலேயே ஊறி போன பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது. தேவாங்க மக்கள் அந்த,அந்த ஏரியா வழக்கப்படி நடந்து கொள்ளட்டும். யாரும், யாருடையதையும் குறைத்து மதிப்பிடாமல் அனைவருடையதையும் மதித்து நடந்து கொள்வோம். இதை செய்தாலே போதும். நம் குலம் ஒற்றுமையுடன் இருக்கும். ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஜெய் தேவாங்கா. ஜெய் ஜெய் தேவாங்கா

                                   அன்புடன்
                                   S.V. ராஜ ரத்தினம்.
                                   ர. பார்த்திபன்

8/12/13

விளக்கு ஏற்றும் விதம்

விளக்கு ஏற்றும் விதம்


தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்

வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்

புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும்

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்

சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்

பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்

கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்

மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்

பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்

குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்

நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்

நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்

விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்

வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்

ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்

கிழக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்

வடக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்

மேற்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்

அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;
நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் ;
புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்