அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label அழைப்பிதழ்கள். Show all posts
Showing posts with label அழைப்பிதழ்கள். Show all posts

12/30/14

பொள்ளாச்சி அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வரலாறு 



           நமது பொள்ளாச்சி சௌண்டம்மன் திருக்கோவில் கொங்கு மண்டல சௌண்டம்மன் திருக்கோவில்களில் மிகவும் பழமையான பிரமாண்டமான திருக்கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவில் 29-03-1940 ல் முதன் முதலில் கற்சிலையுடன்  மூலஸ்தானம் அர்த்த மண்டபம், மஹா மண்டபம் உள்ளிட்டவைகளுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்பாகவே இக்கோவில் அமைக்க நம் சமூக வாலிபர்கள் ஒன்றிணைந்து பெரியவர்களிடம் கூறிய பொழுது வேண்டாம் நீங்கள் சிறுவர்கள் எதுவும் முடியாது என்று கூறி நிராகரித்தனர் 1930ல். பின் உயர்திருR.K. காமாட்சி செட்டியார் அவர்கள் முன்னிலையில் அப்போதைய வாலிபர்கள் ஒன்றிணைந்தார்கள். தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தை மிகவும் பிரசிதம். அப்போது அங்கு வியாழக்கிழமைகளில் ஜவுளி விற்க பல நம் தேவாங்க குடும்பங்கள் கூடுவர். அப்பொழுது நம் வாலிபர்கள் உண்டியல் வசூல் செய்யலாம் என்று முடிவு செய்து வசூலித்தனர் முதலில் பலர் ஆதரவு தந்தாலும் வாரா வாரம் அங்கு சென்று உண்டியல் ஏந்தியதை கண்டு பலர் துச்சம் செய்தனர். அதையும் பொருட்படுத்தாமல் நமது அம்மனுக்கு கோவில் கட்டியே ஆகவேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு வசூலித்தனர். சிலசமயம் செவ்வாய்கிழமை நெகமம் சந்திக்கும் சென்று வசூல் பெறப்பட்டது. இந்த காலகட்டங்களில் நெசவாளர் இனம் மிகவும் வறுமைகோட்டிற்கு கீழ் இருந்தது குறிப்பிடதக்கது .
இப்படியாக ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்ததில் கோவில் கட்ட பணம் உள்ளது இடம் இல்லை என்ற நிலையில் .. நம் குல முன்னோடிகளில் ஒருவரான பொள்ளாச்சி சுப்பு செட்டியார் அவர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த அழகிய கம்பிரமான விநாயகர் கோவிலுடன் கூடிய நந்தவனத்தை தேவாங்க மக்கள் கோவில் கட்டிக்கொள்ள தானமாக வழங்கினார்.



அந்த இடத்தில் அன்னை சௌடேஸ்வரி ஒய்யார கோவிலில் கொலுவிருந்தாள். திரு R.K. காமாட்சி செட்டியார் ,V.K.ராமசாமி செட்டியார் , N.சங்கப்ப செட்டியார் முன்னிலையில்  கோவில் மட்டும் கட்டி 29-3-1940 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.கொங்கு மண்டலத்தில் எழுந்தபழமையான  சௌண்டம்மன்  கோவில் என்பதால் இங்கு வந்து பல ஊர் கோவில்களுக்கு அம்மன் சிலை அச்சு எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு நம் சமூக வாலிபர்களின் உழைப்பால் எப்படியோ கோவில் கட்டி முடிக்கப்பட்டது. நித்திய பூஜைகள் செய்ய வருமானம் வேண்டும் என்று கேள்வி எழும்பியது அப்பொழுது கோவில்க்கு முன்பாக ஓட்டு கொட்டகை இட்டு அதனை நம் சமுதாய மக்கள் பயன்பாட்டிற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடத்த வாடகைக்கு விடப்பட்டது. அப்பொழுது பொள்ளாச்சியில் சுற்றியுள்ள மக்களும் இங்கு வந்து கல்யாணம் உள்ளிட்ட மங்கள நிகழ்சிகள் நடைபெற்றது. அவ்வாறு கோவிலுக்கு வருமானமும் பெருகியது. பின் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து தார்ச் கட்டடமாக அமைத்தால் நன்றாக இருக்கும் அதுபோக பொள்ளாச்சியில் கல்யாண மண்டபமும் இல்லை என்பதால் அக்கால உயர் தொழில் நுட்பம் கொண்ட மெட்ராஸ் தார்ச்  கட்டடமாக மிகவும் பிரமாண்டமான கல்யாண மண்டபம் கட்டி கோவிலுடன் இணைக்கப்பட்டது. 26-01-1967 ல் அதே வாலிபர்களால் சமூகத்திற்கு அர்பணிக்கப்பட்டது.


பின் நல்ல வருமானம் வர தொடங்கியது , கொங்கு மண்ணில் வேறு எந்த ஊரிலயும் சௌண்டம்மன் கோவிலில் கல்யாண மண்டப வசதி இல்லை. ஒருமுறை பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கல்யாணத்திற்கு வந்து பார்த்துவிட்டு அசந்துவிட்டார் தேவாங்கர் இவ்வளவு  பெரிய மண்டபம் கட்டியுள்ளார்கள் என்பதை பார்த்து. அதன் பின்னர் தான் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இவ்வாறாக திருப்பூர் சித்தப்ப செட்டியார் அவர்கள் வந்து பார்த்துவிட்டு இவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் பொள்ளாச்சி தேவாங்கர்கள் செயல்பட்டுளர்கள் நாமும் திருப்பூரில் ஒரு கல்யாண மண்டபம் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அப்பை செட்டியார் அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒடக்காடு காலேஜ் ரோடு சௌடாம்பிகா கல்யாண மண்டபம் கட்டினார். இவ்வாறாக பொள்ளாச்சி தேவாங்க வாலிபர்கள் தாங்கள் நிலை நாட்டியதை நினைவு கூறும்படியாக உருவாக்கப்பட்டது தான் "பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம்".  முற்றிலும் வாலிபர்கள் முயற்சியில் உருவானதால் பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம் என்று பெயர் பெற்றது.



இதுவரை கோவிலில் தலைவர்களாக பொறுப்பில் இருந்தவர்கள் :

திரு. R.K காமாட்சி செட்டியார்       - 29-03-1940  முதல் 02-12-1979 வரை
திரு. K.ஆறுமுகசாமி  செட்டியார் - 03-12-1979 முதல் 06-03-2000 வரை
திரு. S. சிவானந்தம் செட்டியார்     -  07-03-2000 முதல் 26- 05- 2006 வரை
திரு. K. தங்கராஜு                                -  27- 05- 2006 முதல் 18-09-2010 வரை
திரு. N.M.சுப்ரமணியம்                       - 19-09-2010 முதல் 06-12-2010 வரை
திரு. M.கிருஷ்ணபாரதி                       - 07-12-2010 முதல்  19-04-2011 வரை
திரு. S.வரதராசன்                                - 20-04-2011 முதல்   11-04- 2013 வரை
திரு. P.தியாகராஜன்                            - 22-09-2013.




கோவில் சிறப்புக்கள் :
மாதம்தோறும் அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் அன்னதானமும், பிரதோஷம், சதுர்த்தி , கிருத்திகை, மார்கழி கட்டளை உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுவதோடு  வருட உற்சவமாக நவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக 10 - 13 நாட்கள் வெகு விமரிசையாக சௌண்டம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


பல்வேறு திருப்பணிகள், கல்யாண மண்டபம் புனரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றுகொண்டுள்ளது,இவ்வாறாக பல கும்பாபிஷேகங்களை கடந்து இப்பொழுது பல்வேறு பரிவார தெய்வங்களுடன் 2015 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் சீரிய முறையில் நடக்கவுள்ளது.

இந்த அறிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட திருவாளர். M.கிருஷ்ணபாரதி மயில்சாமி  அவர்களுக்கு நன்றிகள் பல.

திருக்கோவில் திருப்பணி வேலைகள் ஒரு சிறிய புகைப்பட தொகுப்பு:-














7/2/14

சேலம் , அம்மாபேட்டை , ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா.

சேலம் , அம்மாபேட்டை , ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு  பெருவிழா அழைப்பிதழ்(07-07-2014).




நன்றி தெலுங்கு தேவாங்க  சமூக விழா குழுவினர்

6/9/14

பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்




பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்


விழுப்புரம் மாவட்டம் பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ சக்தி ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு திருவிழா அழைப்பிதழ்.

இது தெலுகு மொழி பேசும் தேவாங்கர்கள்  நடத்தும் திருவிழா.கன்னடம் தெலுகு மற்றும் எந்த மொழி பேசினாலும் தேவாங்கர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக உள்ளோம் என்பதற்கு இந்த திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு.......

திருவிழாவினை  சிறப்பாக நமது சேலம் பகுதியை சார்ந்த கருங்கல்பட்டி மற்றும் S.நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள் நடத்தி கொடுக்கவுள்ளார்கள். அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.


நன்றி விழா குழுவினர் பனைமலைபட்டி, விழுப்புரம் மாவட்டம் 

3/20/14

அருப்புகோட்டை,ஓடை சவுண்டம்மன் அம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்


அருப்புகோட்டை சொக்கலிங்கபுரம், ஈசான்யபுரம்   ஓடை சவுண்டம்மன் அம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்



நன்றி கல்யாணக்குமார் ,அருப்புகோட்டை

2/24/14

நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி , ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி , ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி , ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற 12 - 03 - 2014 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது . அதுசமயம் அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக.





நன்றி திரு. மதன் , கோத்தகிரி 

2/22/14

செல்லப்பம்பாளையம் கத்திகை , இரேமனேர் வம்சம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

செல்லப்பம்பாளையம் கத்திகை ,  இரேமனேர் வம்சம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்


செல்லப்பம்பாளையம் கத்திகை ,  சதானந்த மகரிஷி கோத்திரம், இரேமனேர் வம்சம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா (27-02-2014)சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக.





நன்றி , திரு .ராகேஷ் குமார் , செலக்கரிசல் 

அணிக்கடவு மடமனை, லத்தேகார் வம்சம், மலையாண்டிபட்டிணம் , ஸ்ரீ ராமபாண சுவாமி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

அணிக்கடவு மடமனை, லத்தேகார் வம்சம்,  மலையாண்டிபட்டிணம் , 
ஸ்ரீ ராமபாண சுவாமி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

சிவராத்திரி நாளில் ராமர் தரிசனம் ...

திருப்பூர் மாவட்டம் , உடுமலை வட்டம் , மலையாண்டிபட்டிணம், அருள்மிகு ஸ்ரீ ராமபாண சுவாமி திருகோவிலில் , மகாசிவராத்திரி ஸ்ரீ சக்தி அழைப்பு மற்றும் சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபாண சுவாமி அருள் பெருக



நன்றி , ராம் ரவி ,கஞ்சம்பட்டி 

குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா(02- 03- 2014,03- 03- 2014)அழைப்பிதழ்

குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ  மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ  மல்லீஸ்வரர்  திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா(02- 03- 2014,03- 03- 2014)அழைப்பிதழ்       

      திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமாரமங்கலம்  கிராமம் குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ  மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ  மல்லீஸ்வரர்  திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா (02- 03- 2014,03- 03- 2014) ஸ்ரீ சக்தி அழைப்பு  மற்றும்  மஹா பள்ளய பூஜை நடைபெற உள்ளது அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெருக.

            இந்த மடமனை கோவிலுக்கு பாத்தியப்பட்ட தாயாதிகள் ஞாயிற்று கிழமை விரதம் இருப்பவர்கள். பொதுவாக தேவாங்க தெய்வீக பிராமணர்கள் நாம் ஆனால் கால மாற்றத்தால் அசைவ உணவு உட்கொள்கிறோம், பொதுவாக நமது இல்லங்களில் ஞாயிற்றுக்கிழமை தான் அசைவம் உண்கிறோம். ஆனால் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவது இல்லை இது பல தலைமுறைகளாய் பின்பற்றப்பட்டு வருகிறது.

           இந்த குலத்தில் பிறந்த எண்ணுமக்கள் தாங்கள் மணம் ஆகும் வரை இந்த முறை பின்பற்றுகிறார்கள். அதே போல் இவர்கள் இல்லத்துக்கு வரும் மருமகள்களும் இந்த நடைமுறையை பின்பற்றவேண்டும்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதே போல் இவர்கள்  தீபாவளி பண்டிகையும் கொண்டாடுவது இல்லை.

நன்றி  திரு. கணேஷ் குமார் , பொள்ளாச்சி 

குமாரமங்கலம் மடமனை,மாலேலார் அறகட்டளை 


சுப்புராயன்புதூர் கத்திகை, சித்துகொள்ளார் வம்சம், ஸ்ரீ மல்லைய்ய சுவாமி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

சுப்புராயன்புதூர்  கத்திகை, சித்துகொள்ளார் வம்சம், ஸ்ரீ மல்லைய்ய சுவாமி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கருமத்தம்பட்டி கிராமம் சுப்புராயன்புதூர்  கத்திகை, சித்துகொள்ளார் வம்சம், ஸ்ரீ மல்லைய்ய சுவாமி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா மஹா பள்ளய பூஜை நடைபெற உள்ளது அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெருக.





நன்றி செல்வன்.முத்துபிரகாஷ்  தங்கராஜ் , சத்தியமங்கலம்

2/17/14

நரிகல்பட்டி கெத்திகை குடிகேலார் வம்சம், காமாட்சி அம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

நரிகல்பட்டி கெத்திகை குடிகேலார் வம்சம், காமாட்சி அம்மன் திருக்கோவில்  மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்






நன்றி Dr. திரு.வேணுகோபால் ராஜா ராமசாமி ,சத்தியமங்கலம் 

உஜ்ஜைனி செவ்வேலார் வம்ச மல்லிகர்ஜூன மூர்த்தி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்

உஜ்ஜைனி  செவ்வேலார் வம்ச   மல்லிகர்ஜூன  மூர்த்தி திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா அழைப்பிதழ்





நன்றி திருமதி லக்ஷ்மி சம்பத் , கோவை 

2/16/14

பூளவாடி கப்பேலார் மடமனை ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் , மஹா சிவராத்திரி அழைப்பிதழ்

பொன்குலுக்கிகாடு  பூளவாடி கப்பேலார் மடமனை
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் , மஹா சிவராத்திரி பள்ளய பூஜை , கப்பேலார் வம்ச குல மகள் கெச்சாளம்மன் பூஜை , சிறப்பாக வரும் 27-02-2014 அன்று இரவு மற்றும் 28-02-2014 அன்று காலையில் சிறப்பாக நடைபெறும். 01-03-2014 அன்று மாசி அமாவாசை வழிபாடும் நடைபெறும் . 
அது சமயம் அனைவரும் கலந்துகொண்டு அம்மன் அருள்  பெருக ...





நன்றி பூளவாடி கப்பேலார் அறக்கட்டளை நிர்வாகிகள் .
செல்வன் . நிஷாந்த் குமார் , பொள்ளாச்சி 

2/12/14

சத்தியமங்கலம் வெள்ளியம்பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் வெள்ளியம்பாளையம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்பட   தொகுப்பு .....

நன்றி திரு.வேணுகோபால் மற்றும் செல்வன்.முத்துபிரகாஷ் .