அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/14/13

76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம்

சுகம்=கிளி; சுகோத்பவர் எனில் கிளியிடம் தோன்றியவர் என்று பொருள். எனவே இந்த மகரிஷி; சுக மகரிஷியே யாவர். எனவே இவ்விரண்டு கோத்ரங்களும் 75ம் - 76ம் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காமவார்த்ததவரு :- கேட்பவர் ஆசைப்படும் வண்ணம் பேசுபவர்.
சிருங்கிதவரு ;- சிருங்கி மகரிஷியை வழிபடுபவர்.
புனுகுதவரு :- புனுகுப்பூனையை வளர்த்துப் புனுகு தந்தவர்.
போதனதவரு :- மற்றவர்களுக்குச் சத்விஷயங்களைப் போதிப்பவர்கள்.

குதம்பை சித்தர்


குரு:அழுகுணி சித்தர்

காலம்:-

சீடர்கள்:-

சமாதி:மாயவரம்

இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை.

பதில் : கேள்வி : வீரமுட்டி என்பது யார் ? அம்மன் விழாக்களில் அவர்பங்கு என்ன ?

இவர் வீரபத்ரன் என அழைக்கப்பட்டு வீரமூட்டி யாகி பின்பு வீரமுட்டி யாக மருவியவர்.

இவர் அம்மனின் தளபதி. வீர குமாரர்களுக்கு தலைவர். 

வீரகுமாரர்களுக்கு உற்சாகமூட்டுபவராகவும் ஆக்றோசமூட்டுபவராகவும் உள்ளார்.

அவர் எலுமிச்சம் பழத்தைக் கடிச்சிகிட்டு ஒரு முறை முறைச்சார்னா, குழந்தைகள் எல்லாம் அலறும். பெண்கள் பயந்து ஒளிய ஆரம்பிச்சிருவாங்க.. அவருக்கு ராஜ மரியாதைதான். இவர் கையில் குழந்தையைக் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினா குழந்தை வீரமா வளரும்னு ஒரு நம்பிக்கை.

வீரபத்திரர் வேஷம் போடறவர் நல்லா குண்டா உயரமா பெரிய கண்களோட இருப்பார். அவருக்கு தலைப்பாகை கட்டி உடலெல்லாம் ரோஸ் பவுடர் போட்டு பெரிய மீசை, நெத்தியில பட்டை, இடுப்பில ஆஞ்சநேயர் மாதிரி பளபளன்னு மின்னுற கச்சை கட்டி, காலில சலங்கை முதுகுல பெரிசா லிங்க வடிவத்தில ஒரு பாய்மரம் மாதிரி ஒண்ணைக் கட்டி கையில் பெரிய வாளும், வாயில் ஒரு எலுமிச்சம் பழமும் கொடுத்திருப்பாங்க. சிவப்பு லிப்ஸ்டிக் போட்ட வாய் கோரைப்பல். சிவப்பு கருப்பு வெள்ளையில் உடலில் முகத்தில் வண்ண வண்ண அலங்காரம் பண்ணி பார்க்கவே முனியப்பன் மாதிரி ஒரு கம்பீரமா இருப்பார்.

இவருடைய முக்கிய வேலைகள் கூட்டத்தை உற்சாகப்ப்டுத்தறது, யாராவது செருப்பு போட்டுகிட்டு இருந்தாலோ, கருப்பு டிரஸ் போட்டிகிட்டு இருந்தாலோ அவரை சாமி வர்ர வழியில இருந்து அப்புறப்படுத்த வைப்பது அப்புறம் முக்கியமா சாமிக் கரகம் எடுத்தவர் வரமாட்டேன் என அடம் பிடிக்கும் போது தண்டகம் சொல்லி வீரகுமாரர்கள் அழைத்தும் சாமி முன்னே வரலைன்னா போய் சாமியை அழைக்க வேண்டியது.