அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/11/15

மலுமிச்சம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 02 - 03 - 2015

மலுமிச்சம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி கிராமம் , ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளால் முப்பது நம்மவர்கள் குடும்பங்களே உள்ள சிறிய அழகிய கிராமம் தன்னில் புதிய திருக்கோவில் தனக்கென வேண்டும் என்று கட்டிக்கொண்டு நம் அன்னை சௌடேஸ்வரி கொலுவிருக்க போகிறாள். வரும் மார்ச் மாதம் 02 - 03 - 2015 ஆம் தேதி சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக.
மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த கோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகம் நடைபெறும் தருவாயில் பல சோதனைகளை கொடுத்துள்ளாள். நன்கொடை வழங்க விரும்புவோர் இந்த கீழ்க்கண்ட வங்கி கணக்கின் மூலம் தாரளமாக வழங்கலாம் .
s.kalavathy. IOB bank, no : 170001000082718 .IFSC code: IOBA0001700
phone number : 9965836171
இப்படிக்கு
ஊர் செட்டுமை , மலுமிச்சம்பட்டி

நன்றி திருமதி. காயத்ரி கிருஷ்ணராஜ் 

2/4/15

நங்கவள்ளி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிசேகம் அழைப்பிதழ் - 15-02-2015

நங்கவள்ளி ஸ்ரீ இராமலிங்க  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிசேகம் அழைப்பிதழ் (15-02-2015)

 நன்றி திருமதி. சுனிதா, நங்கவள்ளி