நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திடதமிழ் எழுதியைபயன்படுத்தவும்)
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம் அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ.. மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா.... அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம் அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ .. .. .. பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....
பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம் அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம் அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம் அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்