அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
7/31/13
95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம்
மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
கங்காளதவரு :- கங்காள பரமேசுவரியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.
கமலதவரு :- வழிபாட்டில் தாமரைப் பூவைப் பயன்படுத்துவபர்கள்.
குடகோலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
பிக்குலதவரு, பெக்குகுலதவரு :- பெக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொப்பனதவரு :- ஆந்திராவில் உள்ள பொப்பன பல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போடதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மஹாபக்திதவரு :- பக்தி மிக்கவர்.
மீசாலதவரு :- மீசையால் வந்த பெயர். அழகான மீசை உடையவர்.
முக்தாபுரதவரு :- ஆந்திராவில் உள்ள முக்தாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜண்டாதவரு :- அம்மனுக்கு ஜண்டா பிடிப்பவர்.
மந்துலதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
அஸ்வவைத்யதவரு :- குதிரை மருத்துவத்தில் வல்லவர். அஸ்வினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்.கங்காளதவரு :- கங்காள பரமேசுவரியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.
கமலதவரு :- வழிபாட்டில் தாமரைப் பூவைப் பயன்படுத்துவபர்கள்.
குடகோலதவரு :- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
பிக்குலதவரு, பெக்குகுலதவரு :- பெக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொப்பனதவரு :- ஆந்திராவில் உள்ள பொப்பன பல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
போடதவரு :- ஆந்திராவில் உள்ள போடபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மஹாபக்திதவரு :- பக்தி மிக்கவர்.
மீசாலதவரு :- மீசையால் வந்த பெயர். அழகான மீசை உடையவர்.
முக்தாபுரதவரு :- ஆந்திராவில் உள்ள முக்தாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஜண்டாதவரு :- அம்மனுக்கு ஜண்டா பிடிப்பவர்.
மந்துலதவரு :-
சிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்கள் ........
அழகான கன்னடத்தில் சிகந்தூர் சௌடேஸ்வரி அம்மன் பாடல்களை நமக்காக பதிவேற்றிய கரூர் திரு ராஜரத்தினம் அவர்களுக்கு நன்றிகள் !!!!!
அனைவரும் கேட்டுமகிழுங்கள் !!!!!!
அனைவரும் கேட்டுமகிழுங்கள் !!!!!!
இலவச திருமண சேவை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நம்குல மக்களுக்காக இலவச திருமண இணையதள சேவை புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தயவு செய்து தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம். இது இலவச சேவை ஆகும் ஆகையால் நல்ல முறையில் மட்டும் பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.
அனைவரும் பயன்பெற பகிரவும்.
7/30/13
கல்லஞ்சிரா மகா கும்பாபிஷேகம் 2012
மகா கும்பாபிஷேகம் 2012 :
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருவெம்பு ஊராட்சி கல்லன்சேரி அருள்மிகு இராமலிங்க சவுடேஸ்வரியம்மன் திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 2012 ஜுன் மாதம் 26 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பல்லாண்டுகளாக தேவாங்க பெருமக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் கல்லன்சேரி கிராமத்தில் மிகப் பழமையான ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் திருப்பணிகள் செய்து ஒவ்வொரு 12 வருருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து வருகின்றனர். இக்கோயிலின் ஜீர்ணோத்தராண திருப்பணி மற்றும் மிகச் சிறப்பான முறையில் செய்து சேலம் பிரதிஷ்டா ரத்னம் சிவஸ்ரீ எஸ்.பி.சிவமணிகண்ட சாஸ்திரிகள் சர்வசாதகத்தில் ஸ்ரீ ஹம்பி ஹேம கூட ஸ்ரீ காயத்திரி பீடம் தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.
மஹா கும்பாபிஷேகத்திற்கு அனைத்திந்திய தேவாங்க ஸ்ரீ சவுடேஸ்வரி நற்பணி மன்றத்தின் தலைவர் திரு எஸ்.எஸ்.எம்.பி இளங்கோ மற்றும் தலைமை மன்ற நிர்வாகிகள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர். மேலும் பக்கத்து ஊர்களான குத்தாம்புள்ளி, கரும்புழா, சிற்றூர் , நென்மாறா, கொல்லன்கோடு வண்ணமடை ஆகிய ஊர்களிலிருந்து செட்டுமை மற்றும் எஜமானர்கள் வருகை தந்து அம்மன் அருள் பெற்றனர்.
மஹா கும்பாபஷேகத்திற்கு நற்பணி மன்றத்தின் பாலக்காடு வட்டார நிர்வாகிகளும் மகளிர் அணியும் மிகச்சிறப்பான முறையில் சேவைகள் செய்தும் பொருளாதார உதவிகளும் செய்தும் விழாவை சிற்ப்பித்தனர். மகளிர் அணியின் சார்பில் நடத்தப்பட்ட அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், நூற்றுக்கணக்கான பெண்மக்கள் பங்குபெற்று குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் பிரசாதம் வழங்குதல் ஆகியவை மிகச் சிறப்பாக நடத்தினர்.
கும்பாபிஷேக ஹோமம் மற்றும் பூஜா நிகழ்ச்சிகள் அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரல் படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்தம் கொண்டு வருதல்(27.6.2012) ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி அளவில் பாலத்துள்ளி சிவன் கோவிலுக்கு அருகே உள்ள ஆற்றிலிருந்து ஊர்வலமாக , தேவாங்கர் கொடிகளையும் ஏந்தி, கல்லன்சேரி அம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். ஹோமங்களும், பூஜைகளும் முறையாக செய்ததற்குப் பன்பு, வெள்ளிக்கிழமை 9.30 முதல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேக அலங்கார பூஜைகளும் மகா தீபாராதணையும் நடைபெற்றது. மகளிர் அணியின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணியளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கு பூஜை சமர்ப்பித்தனர். இரவு அலங்கார பூஜையுடன் கும்பாபிஷேக நிழ்ச்சிகள் மங்களகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட்டு 15ஆம் தேதி புதன் கிழமை 48 ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.
நன்றி : ஆர்.வெள்ளியங்கிரி
ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா
ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா:
அருப்புக்கோட்டை மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மன் அவதாரத்திருநாள் ஜுலை 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவிலில் இருந்து மகளிர் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், காலை ஸ்ரீ சவுடேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
நன்றி : devanga.org
94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம்
இம்மகரிஷி புலஸ்திய மகரிஷியின் மாணாக்கர். இவர் பாஞ்சால மன்னனிடம் ஒரு முறை பசுக்களைத் தானம் கேட்டார். மன்னன் இறந்த பசுக்களைக் கொண்டுபோங்கள் எனக்கூறக் கோபம் கொண்டார். அவாகீர்ண சேத்திரத்தில் முனிவர் யாகம் தொடங்கினார். அதனால் மன்னன் ராஜ்யம் வளங்களை இழந்தது. மன்னன் முனிவரைப் பிழைபொறுக்க வேண்டினான். கருணை கொண்ட முனிவர் யாகத்தை நிறுத்தி நாட்டிற்கு நலம் பல புரிந்தார். இம்முனிவருக்குப் பகர் என்று ஒரு பெயரும் உண்டு.
சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
சொபகினதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
குண்டக்கல்லதவரு ;- குண்டக்கல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.சோகதவரு :- சோகத்துடன் காட்சியளித்தவர் - அ-சோகை நோய் உற்றவர் போல் தேகம் வெளுத்துத் தோன்றியவர்.
சொபகினதவரு :-
7/29/13
தேவாங்க எழுச்சி கீதம் ..
தேவாங்க மக்களே கேளுங்கள் தேவாங்க எழுச்சி கீதம் ...
தேவாங்க இன ஒற்றுமைக்காக எழுதப்பட்ட பாடல். நம் மக்கள் பல ஊர்களில் வாழ்ந்தாலும் ஒற்றுமையின்றி காணப்படுகின்றனர். அனைவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வேண்டுகோள்.
நன்றி நிதிஷ் செந்தூர் எங்களுடன் பகிர்ந்தமைக்கு ......

93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம்
மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
மிடியதவரு :-
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கங்கயதவரு :- கங்காபூசனை செய்பவர்.மிடியதவரு :-
7/28/13
92 .தம்ப மகரிஷி கோத்ரம்
அசுவினி தேவர்களுக்குத் தாம் செய்த சையாதி யாகத்தில் சியவன மகரிஷி அவிர்ப்பாகம் கொடுக்க ஆரம்பித்தார். இந்திரன் இதனால் கோபம் கொண்டான். மகரிஷியின் மீது தன் வஜ்ஜிராயுதத்தை ஏவக் கையை உயர்த்தினான். முனிவர் இந்திரன் கையை ஸ்தம்பிக்கச் செய்தார். இதனால் இம்மகரிஷியைத் தம்ப மகரிஷி - ஸ்தம்ப மகரிஷி என்று அழைத்தனர். மேலும் இம்மகரிஷி ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்து தவம் செய்வதில் வல்லவர்.
லாடதவரு :- லாட பாஷையில் வல்லவர்.
ஸ்தம்பதவரு ;- ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்வதில் வல்லவர். யாகம் செய்து தவவன்மை மிக்கவர். கோத்ர ரிஷியும் ஸ்தம்ப மகரிஷி, வங்குசமும் ஸ்தம்பதவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.லாடதவரு :- லாட பாஷையில் வல்லவர்.
ஸ்தம்பதவரு ;- ஜலஸ்தம்பம், அக்னிஸ்தம்பம் செய்வதில் வல்லவர். யாகம் செய்து தவவன்மை மிக்கவர். கோத்ர ரிஷியும் ஸ்தம்ப மகரிஷி, வங்குசமும் ஸ்தம்பதவரு.
7/27/13
மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை.மதுரை.
மஹா கும்பாபிஷேகம்
மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை மாநகரில் நமது சௌடேஸ்வரி அன்னையின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . தேவாங்க குல ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயனந்தபுரி சுவாமிகள் திருக்கரத்தால் கும்பாபிஷேகம் நடத்திவைத்தார்.
அக்கினியில் தோன்றிய நம் குல அன்னை சௌடேஸ்வரி :
கும்பாபிஷேகம் காண வந்த மக்கள் கூடத்தில் ஒருபகுதி
அம்மனுக்கு ஊர்வலமாக சீர்வரிசை கொண்டுவரும் நம் குல பெண்மக்கள்:
நம் அன்னைக்கு திருக்கல்யாணம் நடைபெறும் காட்சி
நம் அன்னையை தேவாங்க குல முறைப்படி சக்தி யாக கரகத்தில் எழுந்தருளச்செய்து கையில் சாமுண்டி ஜம்தாடு கத்தி ஏந்தி வைகை கரையில் இருந்து கோவிலுக்கு அலகுசேவை செய்தபடி அழைத்து வரும் நம் குல அலகுவீரர்கள்
நமது குலம் வாழவைக்கும் அன்னை சௌடேஸ்வரிக்கு அழகான முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதல் ..........
.பழமை மாறாமல் கும்மியடித்து அன்னைக்கு முளைப்பாரி படைக்க பட்டகாட்சி
பெண்கள் தங்கள் வாழ்வு சிறக்க அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்திய பெருங்காட்சி
திருவிழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் ஆடிக்களைக்கும் நம் குல மக்கள்
திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்தி ,படங்களை நம்முடன் பகிர்ந்த மதுரை மாநகர் ஸ்ரீ சௌடேஸ்வரி தேவாங்கர் மகாஜன அறக்கட்டளை மற்றும் நம் நண்பர்களுக்கும் நன்றிகள் .......

Subscribe to:
Posts (Atom)