அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

11/17/14

சனி பெயர்ச்சி பலன்கள் துலாம்;: (2014 -2017)

சனி பெயர்ச்சி பலன்கள் 
துலாம்;: (2014 -2017)
துலாம் (சித்திரை 3,4 ஆம் பாதம்;, சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம்)

     மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய சாமர்த்தியம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
வரும் 16.12.2014 இல் ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு  குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்யவுள்ளதால் ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெறவுள்ளது. என்றாலும் உங்களுக்கு ஏழரைச் சனி காலங்களில் முக்கால் வாசி கடந்து விட்டதால் இந்த இரண்டரை ஆண்டு காலங்களிலும் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு சாதகப்பலனை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்றாலும் சனி உங்கள் இராசிக்கு 4,5 இக்கு அதிபதியாகி யோககாரகன் என்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபார ரீதியாக போட்டிகள் நிலவினாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பேச்சை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ  அந்த அளவிற்கு வீண் பிரச்சினைகளும் குறையும்.
பாதசனி நடைபெறக்கூடிய இக்காலங்களில் ஆண்டு கோளான குரு பகவான் 05.07.2015 வரை 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். 05.07.2015 முதல் 02.08.2016 வரை லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது கஷ்டங்கள் குறையும்.  கணவன் மனைவியரிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்திலும் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பொருளாதார நிலை உயர்ந்து கடன்கள் குறையும். 02.08.2016 முதல் 02.09.2017 வரை குரு 12 இல்  சஞ்சாரம் செய்கின்ற காலங்களில் பண விஷயத்தில் கவனம் தேவை.

தேக ஆரோக்கியம்
     உங்கள் ஜென்ம ராசிக்கு 2 ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுகிறது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சனைகளால் மனநிம்மதி குறையும். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது.

குடும்பம் பொருளாதார நிலை
     குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை உண்டாகும். திருமண சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தாரளமாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு
     உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகள் தடைப்படாது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் பெயர் புகழுக்கு கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஊதிய உயர்வுகள் உண்டாவதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உடன் பணி புரிவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். அதிக நேரம் பணிபுரிவதைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரிகளுக்கு
     தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிப் பொறாமைகள் நிறைய உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவினாலும் இருக்கும் வாய்ப்புகளைக் கொண்டே முன்னேற்றத்தினைப் பெற்று விடுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களால் சிறுசிறு மன சஞ்சலங்களை சந்திப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். அபிவிருத்தி பெருகும்.

பெண்களுக்கு
     உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கணவன் மனைவியிடையே உண்டாகக் கூடிய மனசஞ்சலங்களால் நிம்மதி குறையும். எவ்வளவு தான் நீங்கள் மற்றவர்களுக்கு உதவிகள் செய்தாலும் பிறர் உங்களைக் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது, அனைவரையும் அனுசரித்து நடப்பது போன்றவற்றால் ஒரளவுக்கு சாதகப்பலனைப் பெற முடியும். வேலைப்பளு கூடும்.

கொடுக்கல் வாங்கல்
     பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்யத் துணியக்கூடிய காலம் என்பதால் உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை. கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் கிட்டும்.

அரசியல்வாதிகளுக்கு
     அரசியல்வாதிகளுக்கு மக்களின் செல்வாக்கு குறையக் கூடிய காலமாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உயர்பதவிகள் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களைப் பகைத்துக் கொள்வதால் வீண் சிக்கலில் மாட்டுவீர்கள். சிலருக்கு உடல்ரீதியாக உண்டாகக் கூடிய பிரச்சனைகளால் கட்சிப் பணிகளைத் தொடர முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகளுக்கு
     பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் புழு ப+ச்சிகளின் தொல்லைகளால் மகசூல் குறையும்.  பட்ட பாட்டிற்கு பலனின்றிப் போகும்.விளை பொருட்கள் சந்தையில் சுமாரான விலைக்கே போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. கால்நடைகளால் ஒரளவுக்கு அனுகூலத்தை அடைய முடியும். அரசு வழியில் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளால் கடன்கள் நிவர்த்தியாகும். மழைவளம் சிறப்பாக அமையும்.

படிப்பு
     கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. குடும்ப சூழ்நிலைகளை மனதில் வைத்துக் குழப்பிக் கொள்ளாமல் படிப்பில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 16.12.2014 முதல் 24.01.2015 வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் பாதசனி நடைபெறும் இக்காலத்தில் 6 இல் கேது இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் கடன்களைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் வீண்பழிச் செலவுகள் சொற்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைப்படிப்பது மிகவும் அவசியம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள்; சிறுசிறு தடைகளுக்குப் பின் கைகூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது  நல்லது.

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 14.03.2015 வரை
தனது சொந்த நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு வக்ர கதியில் இருப்பதாலும் கேது 6 இல் இருப்பதாலும் பணம் கொடுக்கல் சரளமாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். என்றாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் மன நிம்மதி குறையும். எதிர் பார்க்கும் உதவிகளும் சற்று தாமதத்துடன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.  எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். 

சனிபகவான் வக்ரகதியில் 15.03.2015 முதல் 30.07.2015 வரை
குடும்ப ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் 6 இல் கேது இருப்பதாலும் பிரச்சனைகள் விலகி அனுகூலமாக பலன்கள் கிடைக்கும். குரு 05.07.2015 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பாகும். உடல் நிலையில் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் நிம்மதி உண்டாகும். தனவரவு சிறப்பாகவே அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவினாலும் இறுதியில் வெற்றி கிட்டும். உடன் பிறப்புக்களால் அனுகூல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. வேலை பளு அதிகரித்தாலும் அனுகூலப்பலனையும் அடைவீர்கள். மங்கள கரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. பொன் பொருள் சேரும். வீடு, பூமி மனை வாங்க கூடிய யோகமும் அமையும். தொழில் வியாபாரத்திலிருந்த மந்த நிலை படிப்படியாக விலகும்.

சனிபகவான் துலா இராசியில் விசாகம் நட்சத்திரத்தில் 31.07.2015 முதல் 05.09.2015 வரை
உங்கள் இராசிக்கு  2 இல் சஞ்சரித்த சனி இக்காலத்தில்  பின்னோக்கி ஜென்ம இராசியில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு லாப ஸ்தானமான  11 ஆம் வீட்டிலும், கேது 6 லும்  இருப்பதால்  பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது  நல்லது. நிறைய தனவரவுகள் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். உத்தியோக நிலையில் பதவி உயர்வுகள் அமைந்தாலும் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கனால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் பழைய பாக்கிகளை வசூலிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைக் தவிர்ப்பது மூலம் வீண் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். 

சனிபகவான் விசாகம் நட்சத்திரத்தில் 06.09.2015 முதல் 18.10.2015 வரை
உங்கள் இராசிக்கு 3,6 இக்கு அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சனி 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் குரு  11 ஆம் வீட்டிலும்,கேது 6 லும்  இருப்பதால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்திலும் பொருளாதார நிலை மிக சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருபகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் சுபகாரிய  முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரிதியாக சிறுசிறு பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடன் பிறப்புகளால் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் பொருளாதாரமும் மேம்படும். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 19.10.2015 முதல் 26.03.2016 வரை
சனிபகவான் தனது சுய நட்சத்திரத்தில் 2 இல் சஞ்சரிக்கும் இக்காலத்தில் குரு 11 ம் வீட்டில் இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறப்பான பலன்கள் இருந்தாலும், பணம் தண்ணீர் போல செலவழியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். எதிர் பார்த்த உதவிகள் சற்று தாமதப்படும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். எந்த காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளையும், முன்ஜாமீனையும் தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தை தான் பெறமுடியும். கூட்டு தொழிலில் ஏற்றமான பலன்கள் உண்டாகும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து சொல்வதும் நல்லது. 

சனிபகவான் வக்ரகதியில் 27.03.2016 முதல் 11.08.2016 வரை
தன ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும், குரு 11 இல் 02.08.2016 வரையிலும்,  இராகு 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சுமாராக அமையும். கணவன் மனைவியிடையே  சிறுசிறு ஒற்றுமை குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளை சந்தித்தாலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதக பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் அனுசரனையாக நடந்து கொண்டால் உங்கள் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்த்து விடுதல் மூலம் வீண் விரயங்களை குறைக்கலாம். 

சனிபகவான் அனுசம் நட்சத்திரத்தில் 12.08.2016 முதல் 18.11.2016 வரை
குடும்ப ஸ்தானத்தில் சனியும் 12 இல் குருவும் சஞ்சரிப்பதால்  எதிர் நீச்சல் போட்டு முன்னேற கூடிய காலமாகும். குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் வீண் பிரச்சனைகள் ஏற்படாது. உறவினர் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடல் நிலை சற்று சோர்வு அடைந்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெற்று அலைச்சலை குறைத்து கொள்வார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எந்த காரியத்தை முடிப்பது என்றாலும் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். மனதை ஒருநிலைப் படுத்துவது கோபத்தைக் குறைப்பது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும்.

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 19.11.2016 முதல் 08.04.2017வரை
உங்கள் இராசிக்கு நட்பு கிரகமான புதன் சாரத்தில் சனியும், 12 இல் குருவும் சஞ்சரிப்பதால்  உங்களின் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை  வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்;கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிப்பீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி செய்ய முடியாத நிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. 

சனிபகவான் வக்ரகதியில் 09.04.2017 முதல் 04.08.2017 வரை
உங்கள் இராசிக்கு 2 இல்  சஞ்சரிக்கும் சனி இக்காலத்தில் வக்ர கதியிலும் குரு 12 லும் சஞ்சரிப்பதால்; நீங்கள் கவனமாக செயல்படுவதே நல்லது. கடந்த கால பிரச்சினைகள் இன்னும் தீரவில்லையே என்ற கவலைகளே மேலோங்கும். குடும்பத்திலும் ஒற்றுமை குறைவு, தேவையற்ற வாக்குவாதங்கள் என மனநிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகளே நிலவும். நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுதல் உத்தமம். திருமண சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த சாதகபலனை அடைய தாமதம் உண்டாகும். உடல்நிலை குறைவுகளால் உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக பேசுவது உத்தமம்.  இராகு 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உண்டு உங்கள் வேலையுண்டு என இருந்து கொண்டால் எந்த கஷ்டங்களும் உங்களை நெருங்காது. 

சனிபகவான் கேட்டை நட்சத்திரத்தில் 05.08.2017 முதல் 19.12.2017 வரை
உங்கள் இராசிக்கு 9,12 இக்கு அதிபதியான புதன் சாரத்தில் சனியும், 02.09.2017 முதல்  ஜென்ம இராசியில் குருவும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் மகிழ்ச்சியான பலன்களே உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய  போட்டிகளால் லாபம் குறைந்து  மந்த நிலை நிலவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க இடையூறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது மூலம் வீண் பழிகளிலிருந்து தப்பிக்க முடியும். 

சித்திரை 3,4 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     கட்டான கம்பீரமான உடலமைப்பும் சிறப்பான ஒழுக்கமும் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் குடும்பச் சனி நடைபெறுவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். ஆடம்பரமாக செலவுகள் செய்வது, பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
     பிறர் துன்பம் கண்டு வருத்தப்பட்டு உதவிகள் செய்யக் கூடிய நற்குணம் கொண்ட உங்களுக்கு கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். உற்றார் உறவினர்கள் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகி வரவேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும்.

விசாகம் 1,2,3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
     பண விஷயத்தில் எப்பொழுதும் ஜாக்கிரதையாக செயல்படக் கூடிய குணம் கொண்ட உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி நடைபெறுவதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படக் கூடும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைக் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனமுடனிருப்பது நற்பலனைத் தரும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

தேதி :-   4, 5, 6, 7, 8, 14, 15
கிழமை :-   வெள்ளி, புதன்
நிறம் :-   வெள்ளை, பச்சை
கல் :-   வைரம்
தெய்வம் :-   லட்சுமி