அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/2/13

கல்லஞ்சிரா(பாலக்காடு) சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் வருட அபிசேக விழா(29/06/2013)

நன்றி  :  தேவாங்க .ஒஆர்ஜி

 


















97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம்

பந்து என்பவரின் குமாரர். இவருக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர். 
1) விசாலன் 
2) சூண்யபந்து 
3) தூம்ரகேது 
இம் மூவரும் ஆண்மக்கள். இனிபிளை என்பவள் மகள். காசியபருக்கும் புலஸ்தியருக்கும் இவர் மாமனார் என்றும் கூறுவர். இவரின் தவத்தைக் கெடுக்க தேவர் அரணி என்னும் தேவப் பெண்ணை அனுப்ப அவளை மானுடப் பெண்ணாகச் சபித்தார். இப் பெண் இந்துமதி என்னும் பெயருடன் போஜ நாட்டை ஆண்ட மன்னனுக்குப் பிறந்தாள். 
சிவபிரான் இம்முனிவருக்கு ஒரு குடத்தினுள் இருந்து தரிசனம் தந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சீமெயதவரு :- கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவரைச் சீமைக்குச் சென்று வந்தவர் என்று இன்றும் அழைக்கின்றோம். 
பரிச்சந்ரதவரு :- சந்ர கௌரி விரதம் இருப்பவர். 
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
குங்குமதவரு :- ஆலயங்களுக்குக் குங்குமம் தரும் திருப்பணி செய்தவர். குங்குமம் தர்மம் செய்தவர். 
கோரண்டலதவரு :- கோரண்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சயனதவரு :- சயன சுகம் மிக்கவர். சயனாசனம் இட்டு ஜெபதபங்கள் செய்தவர். 
சிய்யம்தவரு :- சிய்யம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
தாமரதவரு :- தாமரைப் பூக்கள் கொண்டு வழிபாடு செய்தவர். 
பண்ணசரதவரு :- பல நிறங்கள் கொண்ட சரங்களை அணிந்தவர். 
பாலாதவரு :- பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர். 
பில்வதவரு :- வில்வதலைகளை கொண்டு பூசிப்பவர். 
பூஷணதவரு :- சிறந்த ஆபரணங்கள் அணிபவர். 
ஜாஜூலதவரு :- ஜாஜூல புஷ்பம் - சாதிமல்லி கொண்டு வழிபடுபவர். 
பைஜனதவரு, பௌஞ்சலதவரு, மக்குலதவரு, யராம்சதவரு, சமதவரு.

ஆஷாட அமாவாசை

ஆஷாட அமாவாசை (ஆடி அமாவாசை)சிறப்புகள்

 தேவலரிடம் உள்ள நூலை பறிக்க வந்த அசுரர்களை அழித்து தேவலரைக் காத்திட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை தேவலரை நோக்கி கூறினாள். 

   "மகனே! உன் பகை நீங்கியது. புனிதமான நூல் காப்பற்றப்பட்டது. விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் உன் முன் இருப்பேன். இன்று ஆடி அமாவாசை அதுவும் ஓர் செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்).  இவ்வமாவாசை இரவில் நீ என்னை நினைத்தாய். உனக்காக நானும் அவதரித்தேன். இவ்வவதாரம் தேவாங்கர்க்குச் சொந்தமான அவதாரம். எனவே இவ்வாடி அமாவாசை எனக்குப் பிறந்தநாள். இதே நாளில் நீயும் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டாய்.

   
தேவாங்க குலத்தோர் அமாவாசை நாளில் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும் சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் அணைத்து மங்கலங்களும் பெற்று வாழ்வர்"  என்று தேவாங்க மகரிஷிக்கு வரம் தந்து மறைந்தாள் ஸ்ரீ சௌடேஸ்வரி.

    எனவே தான் பெரியவர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையை நினைத்து வாழ்ந்தனர். நாம் அன்னையின் அருளைப்பெற கடும் தவத்தையோ, துறவு மேற்கொள்வதையோ வேறு கடுமையான விரதங்களையோ அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகின்றேன் என்ற அந்தக் கருணையை நினைந்து நினைந்து உருக வேண்டாமா. அதனால் தான் நம் குலத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு நம் அம்மனின் பெயரையே வைக்கும் நடைமுறை உள்ளது.
    நாம் நம் சௌடேஸ்வரிக்கு பல ஊர்களில் வெவ்வேறு மாதங்களில் விழா எடுக்கிறோம், ஆனால் நம் அன்னைக்கு உலகில் உள்ள அனைத்து சௌடேஸ்வரி ஆலயங்களிலும் ஒரே நாளில் ஆடி அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனால் அனைவரும் அன்று ஒருநாள் நம் அன்னையின் ஆலயத்தில் அவளை வழிபட்டு வாழ்வில் சிறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு: இவ்வாண்டு இந்த ஆஷாட அமாவாசை(06-08-2013) அன்னை அவதரித்த அதே கிழமையில் வருகிறது.