ஆஷாட அமாவாசை (ஆடி அமாவாசை)சிறப்புகள்
தேவலரிடம் உள்ள நூலை பறிக்க வந்த அசுரர்களை அழித்து தேவலரைக் காத்திட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை தேவலரை நோக்கி கூறினாள்.
"மகனே! உன் பகை நீங்கியது. புனிதமான நூல் காப்பற்றப்பட்டது. விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் உன் முன் இருப்பேன். இன்று ஆடி அமாவாசை அதுவும் ஓர் செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்). இவ்வமாவாசை இரவில் நீ என்னை நினைத்தாய். உனக்காக நானும் அவதரித்தேன். இவ்வவதாரம் தேவாங்கர்க்குச் சொந்தமான அவதாரம். எனவே இவ்வாடி அமாவாசை எனக்குப் பிறந்தநாள். இதே நாளில் நீயும் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டாய்.
தேவாங்க குலத்தோர் அமாவாசை நாளில் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும் சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் அணைத்து மங்கலங்களும் பெற்று வாழ்வர்" என்று தேவாங்க மகரிஷிக்கு வரம் தந்து மறைந்தாள் ஸ்ரீ சௌடேஸ்வரி.
எனவே தான் பெரியவர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையை நினைத்து வாழ்ந்தனர். நாம் அன்னையின் அருளைப்பெற கடும் தவத்தையோ, துறவு மேற்கொள்வதையோ வேறு கடுமையான விரதங்களையோ அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகின்றேன் என்ற அந்தக் கருணையை நினைந்து நினைந்து உருக வேண்டாமா. அதனால் தான் நம் குலத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு நம் அம்மனின் பெயரையே வைக்கும் நடைமுறை உள்ளது.

நாம் நம் சௌடேஸ்வரிக்கு பல ஊர்களில் வெவ்வேறு மாதங்களில் விழா எடுக்கிறோம், ஆனால் நம் அன்னைக்கு உலகில் உள்ள அனைத்து சௌடேஸ்வரி ஆலயங்களிலும் ஒரே நாளில் ஆடி அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனால் அனைவரும் அன்று ஒருநாள் நம் அன்னையின் ஆலயத்தில் அவளை வழிபட்டு வாழ்வில் சிறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பு: இவ்வாண்டு இந்த ஆஷாட அமாவாசை(06-08-2013) அன்னை அவதரித்த அதே கிழமையில் வருகிறது.
No comments:
Post a Comment