தேவதாசிமைய்யன்
அவதார திருநாள் கொண்டாட்டம்:
இன்று கர்நாடகமெங்கும் தேவல மகரிஷியின் ஏழாவது அவதாரமான "ஆதி வச்சனகார .தேவர தாசிமைய்யன்" அவர்களின் பிறந்த நாள்(25-03-2015)
சிறப்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது . அதில் ஒரு முக்கிய பகுதியாக பெங்களுரு சட்டசபை கட்டிடமான விதான்சௌதா வளாகத்தில் உள்ள அரங்கில் முதல்வர். திரு சித்தராமையா
தலைமை வகிக்க. நமது தேவாங்க குல ஹம்பி ஹேமகூட குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி அவர்களுடன் இணைந்து கர்நாடகாவில் உள்ள மற்ற நெசவாளர் சமூகத்தின் குருக்கள் நால்வரும் முன்னிலை வகிக்க... மற்றும் பல முக்கிய மந்திரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பு, நிகழ்ச்சியின் வருணனை .......
விழா பகல் 11 மணிக்கு MLA மாளிகையில் அனைத்து நெசவாளர் குல குரு மார்களையும்
அழைத்துக்கொண்டு கர்நாடக முக்கிய மந்திரி. உமாஸ்ரீ, திரு.லக்ஷ்மி நாராயணன், திரு. கொண்டப்பன்
ஆகியோர் புடை சூழ .. கர்நாடகா மாநிலத்தின் கிராமிய கலைங்கர்களின் கலை நிகழ்சிகளுடன் தொடங்கிய ஊர்வலம் . விழா நடக்கும் கர்நாடக சட்டசபை வளாகமான "விதான் சௌதா" வை அடைந்தது அங்கு முதல்வர் சித்தராமையா
ஊர்வலத்தை வரவேற்றார்....
ஊர்வலத்தில் தேவதாசிமையன் அவர்கள் புகழை பரசைற்றும் விதத்தில் கர்நாடக அரசு ஒரு வண்ண ஊர்தியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பின் அங்கு வந்திருந்த ஐந்து குரு மார்கள், கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா , மற்றும் அவரது தலைமையிலான மந்திரிகள் பலர் மேடையில் அமர்ந்தார்கள். பின் கன்னட வணகப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பின் தாசிமைய்யனுக்கு நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
கர்நாடக கலாச்சார முக்கிய மந்திரி நமது உமாஸ்ரீ அவர்கள் அனைவரையும் வரவேற்றார் அப்பொழுது "ஜெய் நேக்காரா ஜெய் ஜெய் நேக்காரா"
கோஷத்துடன் குத்துவிளக்கு ஏற்றி முதல்வர், கொண்டையன், ஆஞ்சநேயா, சபாநாயகர் , குல குருக்கள் அனைவரும் மலர்தூவி மேடையில் வைக்கப்படிருந்த ஆதி வச்சனகாரர் தேவ தாசிமைய்யன் அவர்களின் படத்துக்கு மரியாதை செய்தனர்.
பின்னர் சபாநாயகர், கொண்டைய்யன், அவர்கள் எல்லாம் தேவ தாசிமைய்யனை புகழ்ந்து பேசினர். அடுத்ததாக நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான நெசவாளர்களின் ஒற்றுமை சங்கம் சார்பில் பெங்களுரு சுரேஷ் அவர்கள் இயக்கிய " ஜெய் நேக்கரா
" என்னும் என்னும் நேசவாளிகளின் அன்றாட வாழ்வு மற்றும் நெசவை சித்தரிக்கும் விதத்தில் புதிய வீடியோ பாடல்களும் ஒரு குறும் படமும் ஒரு காணொளி தட்டில் (வீடியோ சிடி ) யாக வெளியிடப்பட்டது...அதில் எப்படி ஒரு துணி தயாராகிறது என்பதை மிகவும் அருமையான
மூன்று பாடல்களுடன் கூடிய டாகுமெண்டரி படமாக அமைந்திருந்தது.
நமது சிறுமுகை நெசவாளர்கள் எப்படி திருக்குறளை சேலையில் நெய்து நமது வள்ளுவருக்கு மரியாதை செய்தார்களோ அவ்வாறே கர்நாடகத்தின் " ஆதி வச்சனகார .தேவர தாசிமைய்யன்" அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தாசிமைய்யன் அவர்களின் திருவுருவத்தை கைத்தறியில் நெய்து மற்றும் அவரின் 176 கவிதைகள் (வச்சனா ) வும் தறியில் நெய்து ஒரு புத்தக வடிவில் வெளியிட்டனர் ..
பின்னர் கர்நாடக முதல்வர். திரு.சித்தராமைய்யா அவர்கள் பேசுகையில்...
இவ்வாறன நிகழ்சிகள் நமது கன்னட மொழியை பாதுகாக்க பாடுபட்டவர்களை கௌரவிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்ய படுகிறது . மேலும் சென்ற ஆட்சியில் தேவ தாசிமைய்யன் அவர்களின் 1000 மாவது ஆண்டுவிழா சிறப்பாக அவரின் அவதார ஸ்தலமான மொதனூரில் கொண்டாடினார்கள் பின் எதுவும் செய்யவில்லை இன்று தான் உமாஸ்ரீ, கொண்டைய்யன் , ஆஞ்சநேயா , லக்ஷ்மி நாராயணன் அவர்களின் கடுமையான உழைப்பின் பயனாக நடக்கிறது... இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் உமாஸ்ரீ அவர்கள் சென்ற ஆட்சியில் இதே போல பாடுபட்டு ஏற்பாடு செய்தார் .. இப்பொழுதும் அவரே இந்த ஆட்சியிலும் பங்கு பெற்று இந்தனை நடத்தி யுள்ளார் இது பாராட்டபட வேண்டிய விஷயம் . ஜாதி ஒரு கருவியே .... அதனை தாண்டி நாம் செய்யும் தொழில் மூலம் ஒன்றிணைந்து "கர்நாடக ராஜ்யத நேக்காரா ஒக்கூட்ட ( சங்கம் )" ஒரு பலமான சங்கமாக உருவெடுத்து பல நல்ல செயல்களை செய்கிறது பயனும் பெறுகிறார்கள் மக்கள் இந்தனை நடத்திய லக்ஷ்மினரயணன், உமா ஸ்ரீ அவர்களுக்கும் ஒன்றிணைந்த அனைத்து 29 நேக்கார பங்களங்களுக்கும்.. அவர்களை வழிநடத்தி செல்லும் மேடையில் அமர்ந்திருக்கும் குரு மார்களுக்கும் பாராடுக்கள். மேலும் தாசிமைய்யன் அவர்கள் பிறந்த ஊரான முதனூரையும் அவர்கள் வழிபட்ட ராமநாதர் ஆலய
மேம்பாட்டிற்கும் நமது கர்நாடக அரசு சார்பில் ருபாய் "இரண்டு கோடி நிதி" வழங்கியுள்ளதை நினைவு கூறுவதாக தெரிவித்தார்.
பின் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள் " "கர்நாடக ராஜ்யத நேக்காரா ஒக்கூட்ட ( சங்கம் )" தின் சார்பாக நன்றியுரையையும் நினைவு பரிசும் வழங்கினர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாசிமைய்யன் அவர்களின் 176 வச்சனங்கள் (கவிகள்)
அடங்கிய புத்தகமும் , அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது .
மக்கள் ஒன்றுபட்டால் எவ்வாறான சாதனையும் சரித்திரத்தையும்
நிகழ்த்தலாம் என கர்நாடக மாநில நெசவாளர்கள் நிரூபித்துள்ளர்கள் . இந்த நிகழ்ச்சி நடக்க அரும்பாடுபட்ட நமது தேவாங்க குல குரு , உமா ஸ்ரீ , லக்ஷ்மி நாராயணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நன்றி
ர .பார்த்திபன் , பொள்ளாச்சி
மேலும் புகைப்படங்கள் :