அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/20/13

சீராப்பள்ளி சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நந்தா தீபம்

மாலேலார் குல தெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில்

மாலேலார் குல தெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோவில்  திருக்கோவில் கலச தரிசன மேடையிலிருந்து

ஆதி சௌடேஸ்வரி அன்னை ...

ஆதி சௌடேஸ்வரி அன்னை ... நெல்லூர் நெல்லுகுப்பம்மன் ...!!!!!!!
கப்பேலார் குல தெய்வம்

116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்

115ல் காணப்படும் மகரிஷியும் இவரும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சோபனதவரு :- மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவர், மங்களத்துடன் வாழ்ந்தவர், மங்கள காரியங்களை முன் நின்று செய்பவர். 
சம்பாரதவரு :- மேன்மையுடன் வாழ்ந்தவர். 
ஜீரிகியதவரு :-

அருப்புக்கோட்டை மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்

அருப்புக்கோட்டை மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்

    அருப்புக்கோட்டை தேவாங்கர் குல மக்கள்
                   நடத்திய
       மஹா சக்தி சமஷ்டி – சண்டி யாகம்

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் மேல் நிலைப் பள்ளியில் தேவாங்கர் குல அனைத்து மக்களின் மேன்மைக்காகவும் 13.07.2013, 14.07.2013 சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரண்டு தினங்கள் சிறப்பாக யாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முக்கிய காட்சிகளின் படங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
ஆச்சரியகரமான சிறப்பு அம்சங்கள் : ஐம்பதூர் பட்டத்து எஜமானரும், முப்பதூர் பட்டத்து எஜமானரும் இருவரும் நேருக்கு, நேர் சந்தித்து கொள்ள மாட்டார்கள் இது பரம்பரை வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஒருவர் மாற்றி, ஒருவர் முன்னிலை வகுத்து. பரம்பரை வழக்கத்தை கைவிடாமல் இருவரும் கலந்து கொண்டதும்.
    நமது குல ஜெகத்குரு ஶ்ரீ ஹம்பி ஹேம கூட ஶ்ரீ காயத்ரி பீட ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் தலைமை வகித்ததும். சிறப்பு அம்சங்கள் ஆகும்.

    முக்கிய தலைவர்களையும் வர வழைத்து ஒருங்கினைந்து சிறப்பாக செயல்பட்டு. யாகத்தை வெற்றி கரமாக முடித்திட்ட அருப்புக்கோட்டை. தேவாங்கர் குல இளைஞர் நற்பணி மன்ற அமைப்புகளை பாரட்டியே ஆக வேண்டும்.

முதல் நாள் காட்சிகள் :-


முப்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ சிவானந்தம் [எ] மல்லி செட்டியார் அவர்கள்  


இரண்டாம் நாள் காட்சிகள் :-


ஐம்பதூர் பட்டத்து எஜமானர் ஸ்ரீ வேல் முருககிருஷ்ணன் M.Com. அவர்கள்  
தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ ஹம்பி ஹேம கூட ஸ்ரீ காயத்ரி பீட ஸ்ரீஸ்ரீஸ்ரீதயானந்தபுரி சுவாமிகள் அவர்கள் 
நன்றி திரு ராஜரத்தினம் , கரூர்