அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/8/14

ஸ்ரீ மல்லிங்கர் சுவாமியும் முத்தளதவரு வம்சமும்

ஸ்ரீ மல்லிங்கர் சுவாமியும் முத்தளதவரு வம்சமும்

கோத்திரம் : சிருங்கி மகரிஷி
வம்சம் : முத்தளதவரு
பூர்வீகம் : கர்நாடகம்
இருப்பிடம் : தேனி மாவட்டம்
இறைவன் : ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர்
இறைவி : ஸ்ரீ மனோன்மணி அம்மை
பெத்தரை என்று அழைக்கபெரும்   எண்ணு மக்கள் தெய்வங்கள் :
1.)ஸ்ரீ இராஜ கொண்டம்மாள்,
2.)ஸ்ரீ செல்வ கொண்டம்மாள்,
3.)ஸ்ரீ திம்மம்மாள் ,
4.)ஸ்ரீ வீரு சின்னம்மாள் ,
5.)ஸ்ரீ வீரு தாதம்மாள்,
6.)ஸ்ரீ வீரு நாகம்மாள் .
7.)ஸ்ரீ பொம்மம்மாள்

காவல் தெய்வம் : ஸ்ரீ முனியப்பன்
கோவில்களின் இருப்பிடம் :
1) ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில் , தேவாரம்
2) ஸ்ரீ திம்மம்மாள், ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில், போடி நாயக்கனூர்
3) ஏழு பெண்(பெத்தரை) தெய்வங்கள் கோவில் , கொம்பை


கோவில் சிறப்புகள் :

1) ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில் , தேவாரம்

இத்திருக்கோவில் 120 வருடங்கள் பழமையானது. இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் பாணமானது திரு .P. மல்லண்ன செட்டியாரால் காசியில் உள்ள கங்கை நதியில் குளிக்கும்போது சாளக்ராம கல்லாக கிடைக்கபெற்றது.
தேவாரம் கொண்டு வரப்பட்டு சிவலிங்கமாக ஸ்தாபிதம் செய்யப்பட்டது. 1991 ஆம் வருடம் கோவில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. 2003 ஆம் வருடம் மறு குடமுழுக்கு நடைபெற்றது. வருகிற 2015 ஆம் ஆண்டு இரருளால் மீண்டும் குடமுழுக்கு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது. இக்கோவில் உள்ள தலைக்கட்டு  சுமார் 470. பெண் தெய்வங்களை பாதுகாத்த "லாடசந்நியாசி"சுவாமி விக்ரகமும் உள்ளது.
 ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர்:
 பெத்தரை என்று அழைக்கபெரும்   எண்ணு மக்கள் தெய்வங்கள்:

தகவல் : "தேவாங்கர் குலதெய்வ வழிபாடு" நூல். தொகுப்பாசிரியர் : திரு.பாப்ரியா.

படங்கள் : திரு . ஜுபிட்டர் செல்வம் அவர்களுக்கு நன்றிகள் .

10/7/14

வெள்ளலூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014

வெள்ளலூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014
சிறப்பாக அம்மன் சக்தி கும்பம் அழைப்பு , வீரகுமாரர்களின் அலகு சேவை   மற்றும் சிம்ம வாகனத்தில் அம்புசெவையுடன் சிறப்பாக நடைபெற்றது. புகைப்பட தொகுப்பு . நன்றி திரு சதீஷ் , வெள்ளலூர்பெரிய வாளவாடி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014

வளம்கொளிக்கும் பெரிய வாளவாடி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2014 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது அதில் ஸ்ரீ சௌடாம்பிகா இளைஞர்அணியினர் கலை இலக்கிய விளையாட்டு போட்டிகளுடன்  சிறப்பாக விழாவை நடத்தி உள்ளார்கள். புகைப்பட தொகுப்பு நன்றி செல்வன் குமாரவேல், வாளவாடி