அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

11/27/13

திருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு

திருப்பூர்- தேவாங்க எழுச்சி மாநாடு
திருப்பூரில் 2011ல்  நடைபெற்ற தேவாங்க எழுச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பேசிய உரைகளின் சுருக்கம்.
                                                                           திரு. கவிஞர். சிவதாசன் அவர்கள்
உரை சுருக்கம்

திராவிடம் என்ற வார்த்தையை அனைத்து கட்சிகளும் கெட்டியாக பிடித்து கொண்டுள்ளன. அந்த திராவிடம் என்ற வார்த்தையை கண்டுபிடித்தது நம் தேவாங்கர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு, ஆந்ரா, கர்நாடகா, கேரளா இவைகள் அனைத்து ஒன்றாக ராஜதானி என்ற பெயரில் இருந்த 1920 ல் முதல் முதலாக பொது தேர்தலும், மேயர் தேர்தலும் வந்தது. தென்னிந்திய நல உரிமை சங்கத்திலிருந்து வந்த நீதி கட்சி அதில் வெற்றி பெற்றது. அதன் ஸ்தாபகர் தேவாங்கர் குலத்தில் பிறந்த திரு தியாகராஜ செட்டியார் ஆவார்.

நம் குலத்தில் பிறந்தவர் தான் முதல் மேயர். 1920, 1921,1922, 1923 என்று நான்கு வருடம் மேயராக பதவி வகித்தார். இப்பொழுதும் சென்னையில் உள்ள ரிப்பன் பில்டிங்கில் அவர் படம் அலங்கரித்து கொண்டிருக்கிறது. இது நமக்கு பெருமை அல்லவா.

மேலும் அந்த நேரத்தில் திராவிடம் என்ற பத்திரிக்கையை திரு தியாகராஜ செட்டியார் நடத்தினார். அந்த பெயரில் இருந்துதான் திராவிடர் கழகம் என்ற பெயர் பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது.
திருமதி. உமா ஸ்ரீ  Ex MLC  அவர்கள் 

இவர் கர்நாடக மாநிலத்தில் தேவாங்கர் குலத்தில் பிறந்தவர். இது வரை 400 திரை படங்களில். நடித்து சிறந்த நடிகைக்கான சர்வ தேச விருது, தேசிய விருது, சிறந்த நடிப்புக்கான விருது, மற்றும் மாநில விருது 7 முறை. என்று நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றவர். தற்பொழுது, அரசியலில் நுழைந்து ஆல் இந்தியா காங்கிரஸ் கமிட்டி யில் ASS உறுப்பினராகவும், OBC STATE PRESIDENT ஆகவும். காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளில் உள்ளார்.

நானும் உங்கள் மகள் தான் என்று ஆரம்பித்த
இவர் பேசியதின் சாராம்சம்

நாம் எந்த காரியத்தை செய்தாலும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஜாதியினரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் நமது ஜாதியினர் ஒன்று சேர்வது இல்லை.
ஏன்?
எனக்கு இன்னும் புரியவில்லை.
ஏன் ஒன்று சேர்வது இல்லை
பயம்.
நவிய எதுக்கப்ப இதெல்லா. நாவு நம்மு ஜோலின நோடானு
என்று ஒதுங்கி இருக்கிறார்கள்.
அரசியலில் நுழைய வேண்டும். 
அதில் நுழைந்தால் தான் நமது உரிமையை பெற முடியும்.
முதலில் 5 MLA இருந்தார்கள்
அப்புறம் 4 அப்புறம் 3…….2
இப்பொழுது 1
அடுத்து 0
ஒன்றுக்கு பக்கத்தில் 0 சேர்த்து 10 ஆக இருக்க வேண்டாமா. ஏன் முடியாதா?
அனைவரிடமும் ஒற்றுமை இருந்தால் இது நடக்கும்.
10 பேராவது MLA ஆக இருந்தால் தான் நமது சமுதாயத்திற்கான உரிமையை கேட்க முடியும். தேவையானதை பெற முடியும்.
சமுதாயத்தில் நமது சமுதாயம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறோம்.
உங்களை முன்னேற்ற வேண்டும் என்றால் நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் உங்களை முன்னேற்றுவார்கள் என்று நினத்தால். அது நடக்காது.
அது கனவு.
பாவம். இவர்களுக்கு ஒரு சீட் கொடுக்கலாம் என்று எந்த கட்சி கொடுத்தாலும், அதை ஏற்று தக்க வைத்து கொள்ள வேண்டும். அவர்களை ஜெயிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நாம் முன்னேற முடியும்.
நமக்கு என்று குரல் கொடுக்க ஒரு அரசியல் பிரதிநிதி வேண்டும். ஏன் என்றால், பொருளாதாரத்தில் நாம் பின் தங்கியவர்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும், ஒருவருக்கு கருணாநிதி அவர்களை பிடிக்கும், ஒருவருக்கு ஜெயலலிதா அவர்களை பிடிக்கும், ஒருவருக்கு சோனியா அவர்களை பிடிக்கும். ஒருவருக்கு வாஜ்பாய் அவர்களை பிடிக்கும். மற்றவர்களையும் கூட பிடிக்கலாம்.
ஆனால்……..
அந்த அபிமானத்தை எல்லாம் மீறி நாம் நம் குலத்தவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.
இந்த மாதிரி செய்தால். இப்பொழுது 1 ஆக இருப்பது 0 வையும் சேர்த்து 10 ஆக மாறும். இல்லையென்றால் இந்த 1 ம் 0 ஆகி விடும்.

திரு. S. பத்பனாபன் அவர்கள்
உரை சுருக்கம்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முன்டாசு கவிஞன் பாரதி பாடினான்.
ஆனால் நம்மை ஆளுகின்ற அரசுகள் எல்லாமே ஜாதியைதான் முதன்மை படுத்துகிறது. பாதுகாப்பு கொடுக்கிறது.

நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமை இருந்தால் தான் 169 தொகுதியில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாம் மதிப்பு மரியாதையை பெற முடியும்.

நம்மவர்களில் பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் கன்னடத்தில் பேசுவதற்கே பயபடுகிறார்கள்.
எதனால்
அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால். நமது சமுதாயம் அவர்கள் பின் நிற்க வேண்டும்.

காந்திஜி சொல்லி இருக்கிறார் எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் எனக்கு பின் என் சமுதாயம் நிற்கும். என்று சொல்லி இருக்கிறார்.
அதேபோல் நாம் அதிகாரத்தில் இருப்பவர்கள் பின் நின்றால் அவர்களும் பயமில்லாமல் நமக்கு உதவிகள் செய்வார்கள்.

                                    

திரு K.K. மதிவாணான் அவர்கள்
உரை சுருக்கம்.

பகுத்தறிவு கலந்த ஆன்மீகம் வளரும். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. நாம் ஒரு காரியத்தை நல்ல படியாக செய்து முடிக்க கங்கணம் கட்டி கொள்கிறோம். அது போல அனைவரும் கங்கணம் கட்டிக்கொண்டு நம்மவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.

                              


திரு. நல்லி சுப்பிரமணிய செட்டியார் அவர்கள்
உரை சுருக்கம்

மாதா பிதா குரு தெய்வம்- நான் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது என் அம்மாவை கும்மிடாமல் வெளியில் வர மாட்டேன். அது இரவு 2 மணியானாலும் சரி 5 மணியானாலும் சரி.

அடுத்து குரு அதன் பின்தான் தெய்வம். நமது ஜெகத்குரு வந்த பின்னால் தான் அவரின் பட்டாபிஷேகத்திற்கு பின்புதான் நாம் அனைவரும் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறோம். அனைவரும் இதை நினைத்து பார்க்க வேண்டும். நமது குருவை மதிக்க வேண்டும். குருவை மதித்தால் தான் தெய்வ கடாட்சம் கிடைக்கும். இதை நினைவில் வையுங்கள்.

நாம் நமக்காக ஆளை தெரிவு செய்யும் போது நமக்கு 10,000 த்தை 15,000 மாக ஆக்குபவர்களை கொண்டு வர வேண்டும். அவர்களை பாரட்ட வேண்டும். 10,000 த்தை 9,000 மாக ஆக்குவது பெரிய விஷயமல்ல.
அனைவரும் அன்புடன் ஒற்றுமையாக இருந்து சாதிக்க வேண்டும்.

திரு. S.S.M.P. இளங்கோ அவர்கள்
உரை சுருக்கம்

M.G.R. அவர்கள் 8 முறை முதல் அமைச்சராக இருந்த போது 8 முறையும் எங்களின் காரில் தான் போய் வேற்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த காரில் போய்தான் முதல் அமைச்சர் பதவியும் ஏற்றிருக்கிறார்.

நான் பெரிய போராட்டங்களில் ஈடுபட்டிருந்திருக்கிறேன்.
அந்தியூரில் நம் குலத்தவரின் விழாவில் வேறு ஜாதியினர் புகுந்து பிளேடால் அருத்து விட்டு பயமுறுத்தி இருக்கிறார்கள்.
அதை என்னிடம் சொன்னார்கள்.
ஊர்வலம் ஏற்பாடு செய்ய சொன்னேன். ஊர்வலம் நடந்தது. ஊரின் ஒதுக்கு புரத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த மீட்டிங்கை எவ்வளவு நேரம் ஆனாலும் சரி ஊரின் நடுவே போடுங்கள், மற்றவர்கள் கேட்க வேண்டும். என்று சொன்னேன். ஒரு மணி நேரத்தில் அதே போல் ஏற்பாடு செய்தார்கள்.
நான் பேசினேன்.
இனி மேல் நம் இனத்திற்கு  பிரச்சினை ஏற்படுத்தினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நான் 1000 பேரோடு இங்கு வருவேன் நீங்களா நானா என்று பார்த்து விடலாம் என்று பேசினேன். 18 வருடம் ஆகி விட்டது. இது வரை எந்த பிரச்சனையும் வர வில்லை.

அதே போல் சேலத்தில் நம்மவர்களின் சினிமா தியேட்டர்களின் கண்ணாடியை உடைப்பதும், திரை சீலையை கிழித்து விடுவதுமாக பிரச்சனை இருந்தது. பிளைப்பிற்காக வந்தவர்கள் இப்பொழுது சேலத்தில் 90% சினிமா தியேட்டர் வைத்து நடத்துகிறார்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும். என்று எழுதிய நோட்டிஸ் ஒருவர் பெயரில் வினியோகிக்க பட்டது.
என்னிடம் சொன்னார்கள்.
நான் கலைக்டர், D S P இவர்களை போய் பார்த்து அடுத்த 1 மணி நேரத்தில்  நோட்டீஸ் எழுதி வினியோகித்தவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டார்.

அடுத்து மாலையில் D S P யிடமிருந்து போன் வந்தது. கம்பிளைன்ட் வாங்காமல் நோட்டிஸை வைத்து அரெஸ்ட் செய்து விட்டோம். ஒரு கம்பிளைன்ட் எழுதி கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.

போன் செய்து கம்பிளைன்ட் ஒன்று எழுதி கொடுங்கள் என்று தியேட்டர் காரர்களிடம் சொன்னேன்.
அவர்கள் நமக்கு எதுக்கு வம்பு. நீங்களே சங்கத்திலிருந்து கொடுத்து விடுங்கள். என்று சொன்னார்கள்.
நான் உங்கள் ஊரில்தான் பிரச்சனை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். ஒரு நான்கு வரி எழுதி கொடுத்தால் போதும். என்று சொன்னேன்.
அவர்கள் மழுப்பினார்கள்.
அப்படி யென்றால் கைது செய்தவரை விட்டு விட சொல்கிறேன். நேராக உங்கள் தியேட்டருக்குத்தான் வந்து கல் விட்டெரிந்து கண்ணாடியை உடைப்பான். பராவாயில்லையா. நான் இனி வரமாட்டேன். நீங்களே தான் பார்த்து கொள்ள வேண்டும். என்று சொன்னவுடன் கம்பிளைண்ட் எழுதி கொடுத்தார்கள்.
இப்படி பயபடுபவர்கள் தான் நம் ஜாதி மக்கள்.
கன்னட தேவாங்க செட்டியார்களும், தெலுங்கு தேவாங்க செட்டியார்களும் இனைந்து செயல்படலாம் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்கும்படி கேட்டு கொள்கின்றேன்
அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இப்படியெல்லாம் நடைபெறாது.
                                  


ஹம்பி ஹேமகூட காயத்ரி  பீடாதிபதி தேவாங்கர் குல ஜெகத்குரு
                 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்  

உரை சுருக்கம்.
நாமெல்லாம் தேவாங்கர்கள் என்று சொல்லுகிறோம். தேவாங்கர் என்றால் தேவர் மனசு உள்ளவர்கள் என்று அர்த்தம். எந்த சண்டை சச்சரவுகளுக்கும் போகாதாவர்கள்
நாமெல்லாம் பண்டிகை சமயங்களில் ஆடுகளையோ, கோழியையோ எந்த உயிரனங்களையும் பலி கொடுப்பது கிடையாது. அம்மனை அழைக்க நமது இரத்தத்தை சிந்தி நம்மையே பலி கொடுத்து கொள்வது நமது தேவாங்கர் குலம் மட்டுமே
அதுவும் இல்லாமல் தேவாங்கர்களுக்கு ஜேண்டர்கள் என்ற பெயர் உண்டு. அது உங்களுக்கு எல்லாம் தெரியும். ஜேண்டர்கள் என்றால் பூர்வீக கன்னடத்தில் சூட்சும புத்தி உள்ளவர்கள் என்று அர்த்தம். புத்திசாலிகள் என்று அர்த்தம்.
தமிழ் நாட்டில் நமது சமுதாய மக்கள் 25 லட்சம் மக்கள் இருக்கிறோம். மிகவும் பிற்படுத்த பட்ட  வகுப்பில் சேர்க்க நாங்களும் கேட்டு கொண்டே இருக்கிறோம். இதுவரை கிடைக்க வில்லை. தட்டி கேட்க வேண்டிய சூழ்நிலை வரவேண்டும். தேவாங்கர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, கேரளம், என்று பிரித்து பார்க்க கூடாது. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள தேவங்கர்கள் அனைவரும் ஒன்றுத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்.
போட்டிகள் நிறைந்த காலம். இந்த இன்டர்நெட் உலகத்தில் சூட்சுமமாக யோசிக்க வேண்டும். நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும். அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.
நாம் நம் குழந்தையை பள்ளியில் சேர்க்கும் பொழுது என்ன ஜாதி. பிற்படுத்தபட்டவரா? மிகவும் பிற்படுத்த பட்டவரா? என்றுதான் கேட்பார்கள். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நமது தமிழ்நாட்டில் கன்னட தேவாங்கர், தெலுங்கு தேவாங்கர் என்ற பிரிவினை உள்ளது.
பெரியவர்கள் சொல்லுகிறார்கள், கன்னட தேவாங்கர்களும் தெலுங்கு தேவாங்கர்களும் ஒன்று சேர்ந்தால் மிகவும் பிற்படுத்த பட்டவர் என்ற பிரிவில் பதிவு செய்ய முடியும் என்று
அதனால் நாம் முன்னேற வேண்டும் என்றால் நாம் விட்டு கொடுத்து ஆக வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். இனிதே அனைத்தும் நடக்கும்


தீர்மான குழுத் தலைவர் திரு. சுப்புராயன்  அவர்கள்
மாநாட்டில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்கள்:-

1.   தேவாங்கர் முன்னேற்ற பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பு ஏற்படுத்த படுகிறது. அனைத்து தேவாங்கர்களின் நலனுக்காகவும் இது செயல்படும்

2.   பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள நமது ஜாதியை, மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பில் நமது ஜாதியை அரசு அங்கீகரிக்க வேண்டும்.

3.  மற்ற சிறுபான்மை வகுப்பினருக்கு கிடைகின்ற பல சலுகைகள் நமக்கு கிடைக்க வில்லை. ஆகவே மற்ற சிறுபான்மை மக்களுக்கு அளிக்கின்ற அனைத்து சலுகைகளையும் நம் ஜாதியினருக்கும் அரசு கொடுக்க வேண்டும். என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

4.  அரசு நியமன பதவிகளில் குறிப்பாக MLC, கல்வியில் TNPC, சட்ட துறையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்ற நியமன பதவிகள் மற்ற ஜாதிகளுக்கு இனையாக நமது ஜாதிக்கும் கொடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

5.  பட்டுநூல்கள், கோரா பட்டு விலைகள் அதிக ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் மானிய விலையில் சொசைடிகள் மூலமாக கொடுக்க வேண்டும்.

6. கைதறி பட்டு சீலைகளுக்கு அனைத்து விலையுள்ள சீலைகளுக்கும் ரூ100/- என்று சீலிங் முறையில் மானியம் இருக்கிறது. 300 ரூபாய் சீலைக்கும் 100 ரூபாய் 1000 ரூபாய் சீலைக்கும் 100 ரூபாய் என்று இருப்பதை சதவீத அடிபடையில் 20% முதல் 30% வரை அரசு மானியம் நிர்ணயிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

7.  மாதம் 50 யூனிட் மின்சாரம் இலவசம் எனறு இருக்கிறது. இதை விவசாயிகளுக்கு வழங்குவதை போல் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

8. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிருந்து பெற்ற பிராவிடண்ட் பண்ட் என்று சொல்லபடுகிற பொது நிதி சேவை நிதி தொகையிலிருந்து நமது சமூகத்தினருக்கு கல்லூரி தொடங்கவும், மருத்துவ மனைகள் கட்டவும் கடன்கள் வழங்க வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும் என மாநாட்டின் மூலம் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

9.  மேலும் இந்த மாநாட்டில் நமது சமுதாய மக்கள் தொகை விகிதாசாரபடி சட்டமன்ற பதவிகளில் நமது சமுதாயம் இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டை கொண்டுவர சூழுறை எடுத்து கொள்ள வேண்டும் என்று நமது சமுதாய மக்களிடம் கேட்டு கொள்கிறது.

மாநாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

C.D  கொடுத்து உதவிய திரு . நித்திஸ் செந்தூர் . சிங்கப்பூர் அவர்களுக்கு நன்றி
எழுத்தாக்கம் :- S. V. ராஜ ரத்தினம். கரூர்.
 
Thanx  : admin  http://karurdevangar.blogspot.in