அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

பேசும் படம்


பேசும் படம்


பேசும் படம்


பேசும் படம்


கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!


காதல்

ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு
இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி ஏண்டி
சோகமா இருக்க?ன்னா.

அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்
அடடே
அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி
எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற
கண்டிப்பா
இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற


ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்


மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t25755-topic#ixzz2U1cYi76q
Under Creative Commons License: Attribution

அபராதம்

ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள
போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க
முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள்
எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா
கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா
500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு
சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா
பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது

ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"

பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,

"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"

யக்ஞோபவீதம் வழங்கல்

பிறகு தேவலர் இறைவனைநோக்கிப் "பெருமானே! அடியேன் தங்கள் திருவுளப்பாங்கின்படி ஆடைகளை நெய்து மூவுலகிலுள்ளோர் யாவருக்கும் அணியக்கொடுத்து அவர்கள் மானத்தைக் காக்கும் பேற்றைப் பெற்றேன். ஆடைகள் நெய்து அளித்தது போக மீதியாக நூல் எஞ்சியுள்ளது. அதை என்ன செய்ய?" என்று வினயமாகக் கேட்டார். அது கேட்ட சிவபெருமான் "மைந்தனே! எஞ்சியுள்ள நூலைக்கொண்டு யக்ஞோபவீதம், மாங்கல்யம், கங்கணம், கடிசஞ்சாதம் என்னும் ஐந்து சூத்திரங்களைத் தயாரிக்கவும். யக்ஞோபவீதத்தை பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், பிராமணர்கள் ஆகிய இவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து அணியக்கொடுக்கவும். மாங்கல்ய சூத்திரத்தை கற்புடைய மகளிருக்கும், கங்கண சூத்திரத்தை உபநயன காலத்திலும், சஞ்சாத சூத்திரத்தைப் பெண்களின் பிரசவ காலத்திலும் அணியக் கொடுக்கவும் எனப் பணிந்தார். தேவலமுனிவரும் இறைவன் பணித்தபடி சூத்திரங்களைத் தயார் செய்து உரியவர்க்களித்தார். இதனால் இவர் இவர்களால் சூத்திரகர்த்தா என்று துதிக்கப்பெற்றார்.

அரனிடம் வாளும் நந்திகொடியும் பெற்றது

அடுத்து தேவல முனிவர் சிவபெருமானை வணங்கி அவருடைய நல்லாசிகளைப் பெற விரும்பினார். பல நிறங்களில் அழகிய ஆடைகளை எடுத்துக் கொண்டு, தேவரும் முனிவரும் புடை சூழ்ந்து பெருமானின் புகழைப்பாட, இடப்பாகத்தில் அம்மை வீற்றிருக்கக் கொலுவிருந்த கயிலை மால்வரையை நண்ணினார். பெருமானின் முன் சென்றார். அம்மை அப்பரின் அடிவணங்கிப் பல்வாறு துதித்துப் பரவினர். தாம் எடுத்துச் சென்ற அழகான அம்பரங்களைத் திருமுன் எடுத்து வைத்துப் " பெருமானே! தங்கள் திருவருட்டுணையால் இந்த ஆடைகளை வனைந்தேன். இவற்றைத் தாங்கள் ஏற்று அணிந்து அருள வேண்டும் என்று இருகை கூப்பி வணங்கிப் பணிந்தார். தேவலரின் வேண்டுகோளுக்கு இசைந்து சிவபெருமானும் அம்மை பராசக்தியும் மகிழ்ந்தேற்று அணிந்து பொலிவுடன் விளங்கினர். பின் மூத்தபிள்ளைக்கும் முருகனுக்கும் வீரபத்திரருக்கும் நந்தியம் பெருமானுக்கும் மற்றும் அங்குள்ள முனிகணங்களுக்கும் அவரவர்களுக்கு உரிய ஆடைகளை வழங்கி அவர்களது அன்புக்கும் ஆசிகளுக்கும் உரியவரானார். அதன் பின் சவுடநாயகியை எண்ணித் துதித்தார். சௌடேஸ்வரியும் எழுந்தருளி முனிவர் அளித்த ஆடைகளை மகிழ்வோடு அணிந்தருளி ஆசி கூறி மறைந்தருளினார். அதன் பிறகு தேவலர் சிவபெருமானின் திருமுன் போய்ச் சேர்ந்து வணங்கி நின்றார். வணங்கிய தேவலரைப் பெருமானும் ஆதரவோடு அருகே அமரச் செய்தார். அப்போது தேவசபை நடனமாதுக்கள் அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலியோர் அங்கு வந்து நடனம் ஆடினர். நடன முடிவில் சிவபெருமானின் குறிப்பறிந்து, முனிவர் வண்ண ஆடைகள் பலவற்றைப் பெருமான் முன் வைத்தார். சிவபெருமான் அந்த ஆடைகளை அங்கிருந்த இருடிகளுக்கும், நடனமாதர்களுக்கும் வழங்கி மகிழ்வித்தார். பிறகு சிவபெருமான் தேவலரை அருகழைத்து சக்திவாய்ந்த இடபக் கொடியையும் ஒப்பற்ற வாள் ஒன்றையும் அளித்து "இவை உள்ளளவும் உனக்குப் போரில் தோல்வியும் அச்சமும் உண்டாகாது " என்று ஆசி கூறி அருளினார். அப்போது அங்கு வந்திருந்த சூரிய பகவானை நோக்கி " நீ உன்தங்கை தேவதத்தையை ஆணழகனாயுள்ள இத்தேவாங்க மன்னனுக்கு மணஞ்செய்து கொடு " என்று பணித்தார். அதற்கு சூரிய தேவனும் இசைந்தான். அதன் பின் யாவருக்கும் விடை தந்தருள அனைவரும் தம் தம் இருப்பிடம் ஏகினர்.

மக்களுக்கும் நாகர்க்கும் அம்பரம் நல்கியது

பின்னர் முனிவர் நாவலந் தீவை அடைந்து அந்நாட்டு மன்னனுக்கும் மக்களுக்கும் ஆடைகளை வழங்கிப் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு இறலித் தீவு, கிரெளஞ்சத் தீவு, சாகத் தீவு, புட்கரத் தீவு முதலிய தீவுகளுக்குச் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் அம்பரங்களை நல்கிப் பின் பாதாள உலகம் சென்றார். அங்குள்ள தக்கன், வாசுகி, கார்க்கோடகன், சங்கன் முதாலன நாகர்களுக்கும் நாக கன்னியர்க்கும் தக்க உடைகளை அளித்து மகிழ்வித்தார். அவர்கள் தந்த மாணிக்கங்களையும் மற்ற பரிசுப் பொருள்களையும் பெற்றுக்கொண்டார். அப்போது நாக மன்னன் அனந்தன், தன்மகள் சந்திரரேகையை தேவலருக்கு மணஞ்செய்து கொடுத்துச் சீதனமாக பல அரிய பொருள்களையும் கொடுத்தான். முனிவர் சின்னாள் அங்கு தங்கிப் பின் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மனைவியுடனும் சீர்வரிசைகளுடனும் நாடு திரும்பினார்.

தேவர்களுக்கு ஆடைகள் அளித்தது

தேவல முனிவர் தாம் நெய்த விதவிதமான கண்கவர் வனப்புமிக்க ஆடைகளைத் தேவர்களுக்கு அளிக்க விரும்பினார். முதலில், நூலைக் கொடுத்துதவிய திருமாலுக்குக் கொடுக்க எண்ணி அழகிய அம்பரங்களை எடுத்துக் கொண்டு வைகுந்தம் போனார். அங்கு பாம்பணையில் பள்ளி கொண்டிருந்த பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி பூதேவிகளுக்கும் மற்றுமுள்ள வைகுண்ட வாசிகளுக்கும், கொண்டு சென்ற அபூர்வமான ஆடைகளை அணியத் தந்தார். அவர்களும் அவற்றை அணிந்து பெருமகிழ்ச்சியுற்றுக் கைமாறாக ஏராளமான அரிய பொருள்களைப் பரிசாக அளித்தனர். முனிவரும் பெற்ற வெகுமதிகளை எடுத்துக் கொண்டு சத்தியலோகம் போனார். அங்குள்ள பிரம்மாவுக்கும் அவர் மனைவிகள் நாமகளுக்கும் சாவித்திரிக்கும் செந்நிறம் வெண்ணிறம் பசுமைநிறமுள்ள ஆடைகளை முறையே நல்கி மகிழ்வித்தார். மற்றும் அவ்வுலகில் வசிக்கும் புலத்தியர் கின்னரர் கிம்புருடர் சித்தர் முதலியோருக்கும் ஆடைகளை அளித்தார். பின் பிரம்மாவை அணுகி வணங்கி அண்ணலே திருமால் அளித்த நூலைக்கொண்டு அடியேன் ஆடைகளைத் தயாரிக்கிறேன். எனக்குப் பின் என் சந்ததியார் நூலுக்கு என்ன செய்வர்? என வினவினார். அதற்கு நான்முகன், திருமாலின் உந்தியிலிருந்து தோன்றிய மானி அபிமானி என்னும் இரு பெண்களை உலகத்திற்கு அனுப்பி அவர்களைப் பருத்திச் செடியாக முளைக்கும்படி செய்கிறேன். அதில்பெரும் பருத்தியை நூலாக்கி ஆடைகளை நெய்து உன் சந்ததியார் எல்லோருக்கும் அளிக்கட்டும் என்று வரமருளி அனுப்பினார். பிறகு தேவல முனிவர் இந்திர உலகம், அட்ட திக்குப்பாலகரின் உலகங்கள், உருத்திர உலகங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளோர் யாவருக்கும் ஏற்ற ஆடைகளை அளித்து அவர்கள் விரும்பியளித்த பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார். இவ்வாறு தேவர்களின் அங்கங்களை ஆடைகளால் அலங்கரித்ததால் தேவல முனிவர் தேவாங்கன் என்ற பெயரையும் பெற்றார்,

46 .சகுனி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அகதுளதவரு :- அகதிகளுக்கு அன்னதானம் செய்தவர். கதியற்றவர்க்கு அன்னதானம் செய்தவர்.
அகரம்தவரு :- அகரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அமாவாஸ்யதவரு :- தவறாது அமாவாசை விரதம் இருப்பவர்.
ஊட்ளவாரு :- இயற்கை நீர் ஊற்றுவரும் இடங்களில் வீட்டு தெய்வத்தை வணங்குபவர்.
கெகனதவரு :- ககனம் - ஆகாயம். தவவன்மையால் ஆகாய மார்க்கத்தில் சென்றவர்.
சிவசிவாதவரு :- ஓயாமல் சிவசிவா என முழங்குபவர். சிவபூசனையில் ஊற்றம் மிக்கவர்.
சுரடிதவரு :- சுரடி - சுருட்டைப் பாம்பு - சுருட்டைப் பாம்புக் கடிக்கு மருந்து தந்தவர்.
தந்துலதவரு :- நூல் நூற்றவர். நூல் பற்றி வந்த பெயர்.
பஜனதவரு :- தவறாது பஜனை செய்பவர்.
பெல்லம் கொண்டதவரு :- பெல்லம் கொண்டா என்பது சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருமலை. அதனைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ப்ருகுதேவனதவரு :- ப்ருகு மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
மராபத்தினிதவரு :- ஆந்திராவில் உள்ள மராபத்தினி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குக்கிலதவரு :- குங்கிலியம் என்னும் தூபத் திரவியம் கொண்டு தூபம் இட்டுப் பூசனை செய்பவர்.
ஷட்சக்ரதவரு :- அருகோணச் சக்கரம் இட்டு சுப்ரமண்யர் வழிபாடு செய்பவர்.
விருதுதவரு :- விருதுகள் வென்றவர்.
மங்கலதவரு :- மங்கலமானவர். மங்கல காரியங்கள் செய்து வைப்பவர்.
மல்லூரதவரு :- கர்நாடகத்தில் உள்ள மல்லூர் என்னும் ஊர்க்காரர்.
சின்னகூடதவரு :-
குலும்தவரு :-
கூட்லதவரு :-
சோமகதவரு :- சிவலிங்கத்தின் நடுப்பாகம் போன்ற தட்டம். இத்தட்டத்தில் பொருள்களை வைத்துத் தானம் செய்பவர்.
தீவெனதவரு :-
நூகலதவரு :-
நேரநாதவரு :-
பந்தாதவரு :-
பில்லுலதவரு :-
பொம்மலாட்டதவரு :- பொம்மலாட்டக் கலையில் வல்லவர்.
முந்திதிதவரு :-
முவ்வன்சுதவரு :-
ரெப்பகதவரு :-
ஜீடாதவரு :-
மரதத்திதவரு :-
முசகியவரு :-
சூரடியதவரு :-

45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வத்த பத்ரதவரு :- அஸ்வத்த பத்ரம் - அரசமர இலைகள். இவ்விலைகளைக் கொண்டு வழிபடுபவர்.
குறிப்பு :- ஒன்பது கணுக்கள் கொண்ட பச்சைமூங்கிலில் அரசங்கொழுந்து அடங்கிய கொத்தைச் சேர்த்துக் கட்டி, ஸ்தளது கொம்பு என்று பெயரிட்டு மணவறை ஜோடித்துத் திருமணம் புரியும் வழக்கம் இன்றும் உள்ளது. மங்கள காரியங்களுக்கு அரசமர இலைகள் பயன்படுகின்றன.
அஸ்வதவரு :- குதிரைகளைச் செல்வமாகக் கொண்டவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்.
அஸ்வவைத்யதவரு :- அசுவினி தேவர்களைப்போல் வைத்தியத்தில் வல்லவர், குதிரை மருத்துவத்தில் சிறந்தவர்.
காஷ்மீரதவரு :- காஷ்மீர நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பதவரு :- மைசூரில் உள்ள கொப்பம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்பூரம் என்னும் இசைக் கருவி வாசிப்பவர்.
துளசிதளதவரு :- துளசிதளத்தால் வழிபாடு செய்பவர். துளசிச் செடியடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர்.
நரசிம்மதவரு :- நரசிம்ம சுவாமியை வழிபடுபவர்.
மடம்வாரு :- மடாலயங்கள் கட்டித் தர்மம் செய்தவர்.
பாபனபல்லெதவரு :- பாபனபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நரசாபட்டுதவரு :-
ப்ரெண்டதவரு :-
மதிரெதவரு :- வட மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வ வைத்யதவரு :- அசுவினி தேவர்களைப் போல் வைத்தியத்தில் வல்லவர்கள். குதிரை மருத்துவத்தில் தனிச்சிறப்புப் பெற்றவர்கள்.
கொண்டபல்லிதவரு :- ஆந்திராவில் இன்றும் பொம்மைகளுக்குப் பெயர்போன கொண்டபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பெரெதவரு :- மைசூர் மாநிலம் பெல்காம் அருகில் உள்ள கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையில் பூர்வீகமாக வாழ்ந்தவர்.
தம்பூரதவரு :- தம்பூரா என்னும் இசைக்கருவி வாசிப்பவர்.
பிண்டதவரு :- முன்னோர்களுக்கு - பிதுரர்களுக்கு பிண்டபிரசாதம் தவறாது இட்டு வணங்குபவர்.
போகுலதவரு :- போகுல - ஓடு; ஓட்டு வீட்டினர். பில்லெமனேரு என்று வழங்கப்படுவது போல் வந்த ஒரு பெயர்.
மதுரகவினவரு :- இனிய சுவைமிக்க கவிபாடுவதில் வல்லவர்.
மின்ச்சுதவரு :- காலில் மெட்டி அணிபவர்.
முலகதவரு :- முளைப்பாலிகை இடுபவர்.
தடிதவரு, மதரெதவரு, நோபிதவரு, யத்திலதவரு, பெட்யம்தவரு.

43 .கௌதம மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- ரிக் வேதத்தில் பல ரிக்குகளுக்கும் சாம வேதத்தில் பல கானங்களுக்கும் கௌதமர் கர்த்தா ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குத்திதவரு :- பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குத்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குப்பிதவரு :- தும்கூர் மாவட்டத்தில் உள்ள குப்பி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கும்மளாபுரதவரு :- கர்நாடகாவில் உள்ள கும்மளாபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சண்டிகனவரு :- ஸ்ரீ சண்டிகேஸ்வரரை இஷ்ட தெய்வமாக வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
கொண்டிசூலதவரு :- சூலாயுதங்கள் ஒரிலைச்சூலம், ஈரிலைச் சூலம், மூவிலைச் சூலம் எனப்பலவகைப்படும். இவர்கள் ஒரிலைச் சூலம் ஏந்தியவர்கள். இவ்வங்குசம் ஒண்டி சூலதவரு என்று இருக்கவேண்டும்.
சோபனதவரு :- அழகும் மங்களமும் உடையவர். குண அழகும் உடல் அழகும் கொண்டவர்.
கோமுகதவரு :- பசுவின்முகம். இதுபற்றி வந்த ஒரு பெயர்.
சௌட வித்யலதவரு :- தம் கல்வித்திறமையால் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு நூல்கள் இயற்றிவர்.
தத்தூரபூலதவரு :- ஊமத்தைப்பூக் கொண்டு வழிபட்டவர். சிவபிரான் மகிழ்ந்த மலர்களுள் ஒன்று ஊமத்தை ஒன்று.
தேவாரதவரு :- மதுரை போடி நாயக்கனூர் அருகில் உள்ள தேவாரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தானபுத்ரதவரு :-
1) சந்தான கோபால கிருஷ்ண பூசனை செய்பவர்.
2) சந்தான லட்சுமி பூசனை செய்பவர்.
3) புத்திர தானமுறையில் - தத்தெடுத்தல் - வந்தவர்.
4) புத்திரனைத்தத்துக் கொடுத்தவர் என்று பல பொருள் கூறுகின்றனர்.

தேவதைதவரு :- ஸ்ரீ தேவியை வழிபடுபவர்.
நில லோகதவரு :- பூவுலகத்தவர். கணக்கற்ற நில புலன்களுடன் வாழ்கின்றவர்.
பசுலதவரு :- பசுக்களுக்கு உணவிட்டு வணங்குபவர்.
குறிப்பு :- தேவாங்கர் தினமும் விருந்தினருடன் உணவு உண்பவர்கள். விருந்தினர் இல்லாத தினங்களில் பசுவையே விருந்தினராகப் பாவித்து " ஓம் கோப்யஸ்ச்ச நம " என்னும் மந்திரத்துடன் உணவு கொடுத்து அதன்பின் உண்பார்கள்.
பச்சலதவரு :- பச்சைக் கற்களான மரகதங்களை விரும்பி அணிபவர். மரகதக்கற்களை வியாபாரம் செய்தவர்.
பச்சாமன்திதவரு :- பச்சை நிற சாமந்திப் பூக்களால் வழிபாடு செய்பவர்.
பன்சலதவரு :- பஞ்ச யக்ஞங்கள் செய்பவர்.
பஞ்சயக்ஞதவரு :- ஐந்து யாகங்கள் செய்பவர்.
பாமுலதவரு :- பாமு - பாம்பு; நாகவழிபாடு செய்பவர்.
பலராமுலுதவரு :- பலராமனை வழிபடுபவர்.
பீரகதவரு :- பீரக - பீர்க்கங்காய். இதனை விரும்பி உண்பவர்.
புஷ்பதந்ததவரு :- தேவாங்க அவதாரங்கள் ஏழனுள் புஷ்பதந்த அவதாரம் ஒன்று. அவரை வழிபடுபவர்.
பொம்மன்சுவாரு :- பொம்மண்ண சுவாமி வழிபாடு உள்ளவர்.
ராமாயணவாரு :- ராமாயண காவியத்தில் வல்லவர். ராமாயண உபந்யாசம் சிறப்பாகச் செய்பவர்.
பாருகத்திதவரு :-
பேரிசெட்டிதவரு :-
சக்குத்திதவரு :-

சக்தி நிலைநிறுத்தல்

சக்தி நிலைநிறுத்தல்

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம்  ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன் கோவிலில் சக்தி நிலைநிறுத்தல் நடைபெற்றது. இது காணகிடைக்காத காட்சியாகும். இதில் சக்தி பானையின் மேல் அலகு கத்தி எந்த பிடிமானமும் இல்லாமல் அன்னையின் அருளால் நிற்பதை காணலாம்.

இவன்,

வெ.ர.பூபாலன்

Varathandhi maharishi kothiram kappelar kula deivam Sri Birava KariyaPerumal Panikanur


வரதந்து மகரிஷி


அசத்தலான தசரா கொண்டாட்டம்
ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!

பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே
!
 • அசுரனை அழிக்க முப்பெரும் தேவிகளும் இணைந்து தவம் செய்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
 • தமிழகத்தில் நவராத்தரி விழா கொலுவாக கொண்டாடப்படுகிறது.    உலகப் புகழ் பெற்ற மைசூரில், நவராத்திரி விழாவான தசரா விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கோலாகலமாக பத்து நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
 • மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா .சாமுண்டி மலையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்...

நவராத்திரி 9வது நாளை தொடர்ந்து 10வது நாளில் இந்த விழா, முழு விடுமுறையுடன் கொண்டாட்டம் களை கட்டுகிறது. 
விழாவின் 10-ம் நாளன்று அன்னை சாமுண்டீஸ்வரி அலங்கரிக்கப்பட்ட யானையில் தங்க பல்லக்கில் தகதகவென்று ஜொலிக்கும் சர்வ அலங்காரத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
[Mysore+Dasara+2008+(13)-799133.jpg]
 • அம்மன் பவனி வரும் யானையை பின்தொடர்ந்து யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவையும் வரும் மைசூர் தசரா பண்டிகையில் யானைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. 

மொத்தம் 12 யானைகள் கலந்து கொள்வதற்காக யானைகள் 

நாகாஹொளே தேசியப் பூங்காவிலிருந்து அழைத்து 

வரப்படுகின்றன. யானைப் பேரணிக்கு தலைமை
தாங்கும் பலராமாவுக்கு தனிச் சிறப்புண்டு. 
தொடர்ந்து 


பல வருடமாக அது தங்க அம்பாரியைச் சுமக்கிறது

துரோணா என்ற யானை இதுவரை 14 தடவை தங்க அம்பாரியைச் 

சுமந்து சாதனை படைத்துள்ளது. 


பலராமாவுடன் அர்ஜுனா, பரதா, கஜேந்திரா போன்ற யானைகளும் 

வரும்
[Mysore+Dasara+2008+(15)-702377.jpg]
அரண்மனை மின்னொளியில் ஜொலிக்கும் அழகையும்,  மைசூர் நகரமே மின்னொளியில் ஜொலி ஜொலிக்கும் காட்சியையும் காண 
இந்தியா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அன்றைய தினம் தவறாமல் மைசூருக்கு வந்து விடுகின்றனர் ...
கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனைமிகச் சிறந்த
முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அசத்தலான ஆர்க்கிடெக்ச்சர்!
Mysore News: Karnataka- Mysore Dasara-a feature

BALARAMA ELEPHANT CARRYING THE GOLDEN HOWDAH

balarama elephant carrying the golden howdah
 • தசராவுக்காக காட்டிலிருந்து வரும் இந்த யானைகளுக்குத் தரப்படும் வரவேற்பே தனி அழகு. 
 • மலர்கள் தூவப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் யானைகள் வரவேற்கப்படுவதைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.
 • யானைகள் வந்துவிட்டாலே தசரா களை கட்டிவிடும்.
 • வண்ண, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பலராமா யானை கம்பீரமாக நடந்து செல்ல, அதன் இருபக்கமும் இரு யானைகள் நடந்து வர ஊர்வலம் அரண்மனையில் இருந்து புறப்படும்.

DASARA ELEPHANT

dasara elephant
மைசூர் தசரா விழாவின் விஜயதசமியன்று நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் யானைகள், குதிரைகள் கலந்து கொள்ளும். ஊர்வலம் தொடங்கும் முன்பு 21 தடவை பீரங்கிகளில் இருந்து குண்டுகள் வெடிக்கப்படும்.  பட்டாசுகள், வாணவேடிக்கையும் நடைபெறும்.

[Mysore+Dasara+2008+(16)-704201.jpg]
ஜம்பு சவாரி ஊர்வலம் முடிந்த பிறகு  மண்டபத்தில் உள்ள மைதானத்தில் தீப விளையாட்டு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் வெடிகுண்டுகள் மற்றும் வாண வெடிகள் வெடிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகள், குதிரைகள் மிரண்டு ஓடாமல் இருப்பதற்காக  அரண்மனை வளாகத்தில வெடிகுண்டு 
சத்தத்தை எழுப்பி பயத்தை போக்கும் 
வகையில் பயிற்சி 
அளிக்கப்பட்ட பிறகே விழாவில் கலந்துகொள்ள 
அனுமதிக்கப்படுகின்றன ,,,!

[Mysore+Dasara+2008+(22)-720265.jpg]
fire breather @ mysore dasara 2010

TIGER DANCE

tiger dance

DASARA DOLLS


dasara dolls

LAMBADI WOMEN

lambadi women
[Mysore+Dasara+2008+(21)-719602.jpg]
[Mysore+Dasara+2008+(19)-709935.jpg]

[Mysore+Dasara+2008+(14)-700990.jpg]
[Mysore+Dasara+2008+(7)-783033.jpg]
[Mysore+Dasara+2008+(5)-777413.jpg]

[Mysore+Dasara+2008+(2)-770811.jpg]

கொங்குக் குலமணி' - சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார்

செந்தமிழ்ப் புலவராய் இருந்து தமிழை வளர்த்தோரைக் காட்டிலும், வேறு வேறு துறைகளில் புலமை பெற்றவரே தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாய் இருந்துள்ளனர்.  ந.மு.வேங்கடசாமி நாட்டார், உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து பின் புலவராகப் பொலிந்தவர்  "பண்டிதமணி" கதிரேசச் செட்டியார், வணிகராய் இருந்து பின்னர் புலமை நலங்கனிந்தவர். "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரம் பிள்ளை , "நாவலர்" சோமசுந்தர பாரதியார்,  கா.சு.பிள்ளை, இரா.பி.சேதுப்பிள்ளை முதலான பெருமக்கள், வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழில் தேர்ச்சி பெற்றவராவர்.  பா.வே.மாணிக்க நாயக்கர், பொறியாளராய் இருந்து, பின் மொழித்தேர்ச்சி பெற்றவர் "புலவரேறு" வரதநஞ்சைய பிள்ளை, ஊர்க்காவலராய் இருந்து, பின் ஒண்டமிழில் தேர்ச்சி பெற்றவர். "சைவ ஞாயிறு" கோவைக்கிழாரும் வழக்குரைஞராய் இருந்து, பிறகு தண்டமிழில் மேதையானவர்.

கோவைக்கிழார் கல்லூரியில் கற்றபாடம், இயற்பியல், சட்டவியல்.  கோவைக்கிழார் தமிழ் இலக்கண, இலக்கியங்களை, திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோரிடம் கற்றுக்கொண்டார்.

கோவைக்கிழாரின் இயற்பெயர், இராமச்சந்திரன் செட்டியார்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மருதாசலம் செட்டியார் - கோனம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

 • தொடக்கக்கல்வியை கோவை நகராட்சிப் பள்ளியிலும்
 • உயர்நிலைக் கல்வியை இலண்டன் மிஷின் பள்ளியிலும்
கல்லூரிக் கல்வியை சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.

சென்னை சட்டக் கல்லூரியில் 1912இல் பி.எல். பட்டமும் பெற்றார். கோவையில் வழக்குரைஞராய் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். அத்தொழிலில் அவர் மனம் ஈடுபடவில்லை.தமிழ்த் தொண்டிலும் சமயத் தொண்டிலும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொண்டார்.சென்னையில் படிக்கும் காலத்திலேயே சமுதாயப் பணியிலும் ஈடுபட்டார்.தாம் வழக்குரைஞர் தொழிலுக்குச் சென்றபிறகு, தம் குலத்துச் சிறுவர்களுக்குப் பணிபுரிய விரும்பி, "தேவாங்கர் சிறுவர் சபை" என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் செயலராக இருந்து பணிபுரிந்தார்.

ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டிப் பணிபுரிந்தார். அச்சபை இன்றும் கோவை - சுக்கிரவாரப்பேட்டையில் இயங்கி வருகிறது. கோவைக் கிழார், 1918ஆம் ஆண்டில் கோவை நகராட்சியின் துணைத் தலைவரானார்.1943, 1946 ஆகிய ஆண்டுகளில் பட்டதாரித் தொகுதியில் நின்று சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுபினராக வெற்றி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சி ஆலோசகராக இருந்தார். கோவையில் தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியைத் தோற்றுவித்தார். அதன் ஆட்சிக்குக்குழு உறுப்பினராய் இருந்தார்.

கோவைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் தலைமையில் செயலாளராகப் பணிபுரிந்தார்.
 • சென்னை சுவடிச்சாலை
 • தஞ்சை சரஸ்வதி மகால் புத்தகசாலை
ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார்.  கோவை - அரசுக் கல்லூரி பழைய மாணவர் கழகத்திலும்
கோவை - காஸ்மோபாலிடன் கிளப்பிலும் (இறுதிக்காலம் வரை) தலைவராய் இருந்தார்.

இவர் இடம்பெறாத கல்விக் கழகங்களோ பொதுப்பணி மன்றங்களோ சமயச் சபைகளோபொழுதுபோக்கு அமைப்புகளோ பொது மாநாடுகளோ இல்லை என்றே கூற வேண்டும்.தம் குலத்தினர் நெசவுத் தொழில் ஒன்றிலே நின்று, உயரும்போது உயர்ந்தும், தாழும்போது தாழ்ந்தும் துன்புறுதலைக் கண்டு உள்ளம் வருந்தினார்.

அத்தொழிலை வளமுடையதாக்கப் பல கைத்தறிக் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினார். மாநாடுகள் பலவற்றை நடத்தினார்.  அவர்களின் குறைகளைப் போக்க முயன்றார். கோவைக்கிழார், சென்னை - இராஜதானியின் அறநிலையத்துறை ஆணையாளராக இருந்தபோது, கோயில்களின் வருவாயில் ஒரு பகுதியை,  சமய வளர்ச்சிக்கென ஒதுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சமயச் சொற்பொழிவுகள்,  நூல்கள் வெளியிடுதல் நூல் நிலையங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தினார்.

 • கோயில்களில் திருமுறைகள் ஓதுதல்
 • திருமுறைப் பதிகங்களைக் கல்லில் பதித்தல்
 • தல வரலாறுகள் எழுதுதல்
 • கோயில் குடமுழுக்குகளை ஆகம முறைப்படி செய்தல்
ஆகியவற்றுக்காக அயராது உழைத்தார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் சேர்ந்து தமிழ் நாடெங்கும் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறப் பாடுபட்டார்.சமய ஆதீனங்களான
 • தருமபுரம்
 • திருப்பனந்தாள்
 • திருவாவடுதுறை
 • மயிலம்
முதலியவற்றில் தமிழ்க் கல்லூரிகள் தோன்றக் காரணமாக இருந்தார்.

கொங்குநாட்டுப் பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் சார்பிலும் தமிழ்க்கல்லூரி ஒன்றைத் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாருடன் சேர்ந்து தோற்றுவித்தார், அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

திருமடத்தின் சார்பில் உயர்நிலைப் பள்ளி தோன்றவும் காரணமாக இருந்தார்.கோவைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக கோவைக்கிழார் இருந்தபோது, "கொங்குமலர்" என்னும் திங்கள் இதழை நடத்தினார்.

சைவசித்தாந்த சமாஜத்தின் இதழான, "சித்தாந்தம்" இதழுக்கும் ஆசிரியராக இருந்து அரும் பணியாற்றினார்.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உறுப்பினராய் இருந்தபோது, "இராமப்பய்யன் அம்மானை" என்ற நூலையும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழியாக "தமிழிசைக் கருவிகள்" என்ற நூலையும் பதிப்பித்து வெளிப்படுத்தினார்.
கோவைகிழார், தமிழ் நாட்டின் வரலாற்றையும், புலவர்களின்  வரலாற்றையும், கல்வெட்டு - செப்பேடுகளின் துணையால் ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுவரையிலும் யாரும் அறிந்து எழுதாத "கொங்குநாட்டு வரலாற்றை" பலரும் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார்.  ஏறக்குறைய எண்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இன்னும் அச்சில் ஏறாத நூல்களும் பல உள்ளன.கோவைக்கிழாரின் பணியைப் பாராட்டி ஆங்கில அரசு,
 • 1930இல் "இராவ்சாகிப்" என்ற பட்டத்தையும்
 • 1938இல் "இராவ்பகதூர்" என்ற பட்டத்தையும்
அளித்துச் சிறப்பித்தது.

 • சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம், "செந்தமிழ்ப்புரவலர்" என்ற பட்டத்தையும்
 • சென்னை மாநிலச் தமிழ்ச்சங்கம், "சிந்தாந்தப்புலவர்" என்ற பட்டத்தையும்
 • மதுரை ஆதீனம் "சைவஞாயிறு" என்ற பட்டத்தையும்
வழங்கிப் பாராட்டியது.

கொங்குநாட்டு வரலாறு என்ற நூலுக்குத் தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசளித்துப் போற்றியது. கோவை நன்நெறிக்கழகம் பொற்பதக்கம் வழங்கிப் போற்றியது.  தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் என எட்டு மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இச்சான்றோர், 1969ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இயற்கை எய்தினார்.

இவரின் சமாதி பேரூர் தமிழ்க்கல்லூரித் தோப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- தினமணி

கோவை கத்தோலிக்க தேவாங்கர் சங்க வரலாறு

முதல்பாகம் (காலம் 1964 முதல் 1984 முடிய)  
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் தேவாங்கர் குலமக்கள் கிறிஸ்தவர்களாக சத்திய மறையில் சேர்ந்தார்கள் என்பது RED SAND (ரெட்சேன்ட்) என்னும் பத்திரிக்கை மூலம் நாம் அறிகிறோம். நமது முன்னோர்கள் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையை நமது குலத்திற்கு பாதுகாவலியாக கொண்டு அதை சுற்றியுள்ள ஊர்களில் குடும்பத்துடன் தங்கி நெசவு தொழில் செய்து வந்தார்கள். நெசவு தொழில் நல்லமுறையில் நடைபெற்றுக் கொண்டு வந்தபொழுது ஏற்பட்ட இரண்டாம் உலகபோரால் நெசவு தொழிலுக்கு போதிய உபகரணங்கள் கிடைக்கப்பெறாததால் நெசவு தொழில் வீழ்ச்சி அடைந்தது. நெசவு தொழில் வீழ்ச்சி அடைந்துவிட்ட காரணத்தால் நமது முன்னோர்கள் கோவை மாவட்டத்தை விட்டு 1926-ம் ஆண்டு கல்கத்தா, பினாங்கு, ரங்கூன் ஆகிய ஊர்களுக்கு சென்று பிழைக்க வழி தேடினர். மேலும் சிலர் இங்கேயே தங்கி தொழில் நடத்தி வந்தார்கள். அவர்களில் பலர் 1946-ம் ஆண்டு பம்பாய் மாநகருக்கு சென்று அங்குள்ள நூல் மில்களில் சேர்ந்து தங்களது தொழிலை செய்து வந்தார்கள். பம்பாய் மாநகரில் நமது குல மக்கள் அதிகபட்சமாக சுமார் 200 குடும்பங்கள் அங்கு குடியேறியதால் அங்குள்ள நமது முன்னோர்கள் 1956-ம் ஆண்டு தென்னிந்திய கத்தோலிக்க தேவாங்க சங்கம் என்னும் ஓர் அமைப்பை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தார்கள். அவர்கள் அங்கு வாழும் நமது முன்னோர்களின் வாழ்க்கை தரம், படிப்பு மற்றும் தொழில் ஆகியவற்றில் நன்கு வளர பல வழிகளில் உதவி செய்து வந்தார்கள். தற்பொழுதும் அதுபோல் உதவிகள் அச்சங்கம் செய்து வருகிறது. 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் பொன் விழாவினை 2009-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடினார்கள்.
கோவை மாவட்டத்தில் வாழும் நமது முன்னோர்கள் நமது குலமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்று எண்ணி பெரிதும் பாடுபட்டார்கள். ஆனால் மற்ற இனத்தவர்களைப் போல் நமது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வு அடையாததை கண்டு பெரிதும் மனம் வருந்தி அதற்கு ஒரு வழி தேடினார்கள். மற்ற இனத்தவர்கள் படிப்பிலும், தொழிலிலும் முன்னேறி உயர்வான வாழ்க்கையை அமைத்து கொண்ட சமயத்தில் நமது முன்னோர்களின் கவனம் நமது மக்களின் மேல் விழ நமது குழந்தைகளை படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்து பின்தங்கியுள்ள நமது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அரசாங்கத்திடமிருந்து நமது மக்களுக்கு சலுகைகள் பெற்றுத் தரவும், நமது சமுதாயம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி திரு. ஆர்.எம். செட்டியார் (சுங்கம்) அவர்களும்

திரு. ஆர்.எம். செட்டியார்

திரு.மரியசூசை செட்டியார்
திரு.மரியசூசை செட்டியார் (புலியகுளம்) அவர்களும் நமக்காக ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். இவர்களுடைய முயற்சியால்தான் கத்தோலிக்க தேவாங்கர் சங்கம் 1964-ம் ஆண்டு ஜுலை மாதம் 12-ம் நாள் கோவை கர்னாட்டிக் தியேட்டரில் திருவாளர் பழனி எம்.ஏ. பொன்னுசாமி செட்டியார் (பழனி) அவர்கள் தலைமையில் (அனைத்து ஊர்களிலுள்ள நமது மக்களின் நலனுக்காக) வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இந்த சங்கத்திற்கு முதல் தலைவராக திரு. மரியசூசை செட்டியார் (புலியகுளம்) அவர்களும், உதவி தலைவர்களாக திரு. எம்.ஏ. தானியேல் செட்டியார், சோமனூர், எஸ். மைக்கேல் செட்டியார், சவுரிபாளையம், திரு. எஸ். குழந்தைசாமி செட்டியார், திருப்பூர், செயலாளராக திரு. ஐ. பாபு சோமனூர், உதவி செயலாளராக திரு. எஸ்.ஏ. மைக்கேல் சாமி செட்டியார், சவுரிபாளையம், பொருளாளராக திரு. சிலுவை சந்தியாகு, சிங்கநல்லூர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுடன் ஆலோசர்களாக திரு. ஆர்.எம். செட்டியார் (சுங்கம்) அவர்களும், திரு. சவுரிமுத்து செட்டியார் (ரிடையர்டு டி.எஸ்.பி சவுரிபாளையம்) அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நமது குலத்திற்காக அரும்பாடுபட்டு ஒர் அமைப்பினை ஏற்படுத்தி நமது குல மக்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய நமது முன்னோர்களுக்கு நாம் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த சங்கம் இன்று பொன்விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லும் போது பெருமிதம் கொண்டுள்ளோம்.

1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையை பாதுகாவலியாக கொண்டு சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு வந்தது. ஜெபமாலை அன்னையின் கோயிலை கட்ட நமது குல மக்கள் பெரிதும் உதவி செய்திருக்கிறார்கள். கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னையின் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த 10 ஊர்களிலுள்ள நமது குலமக்களிடமிருந்து வரி வசூல் செய்து சிறப்பாக நடத்தி வந்தார்கள். கோவில் வரி வசூல் செய்யும் பொறுப்பினை வேட்டுவ பாளையம் மரியசூசை செட்டியார் ( புள்ளிகாரர் குடும்பம் ) அவரது மகன் துரைசாமி செட்டியார் அவர்கள் ஏற்று திருவிழாவிற்கு முன் அனைத்து ஊர்களுக்கும் சென்று வரி வசூல் செய்து மாதாவின் திருவிழாவை நடத்தி வந்தார்கள். வரி வசூல் செய்ய அனைத்து ஊர்களுக்கும் செல்லும் போது அங்குள்ள ஊர் செட்டியார் என்பவர் இவர்களுடன் சேர்ந்து அங்கு வாழும் மக்களிடம் வரி வசூல் செய்து கொடுக்க உதவி செய்தார்கள். அப்போது நமது குல மக்கள் அனைவரும் வரி தொகையினை தவறாது அன்னையின் கோயிலுக்கு அளித்து வந்ததுடன் ஆண்டுதோறும் திருவிழாவிற்கு அனைத்து ஊர்களிலிருந்து புகைவண்டி மூலமும், மாட்டு வண்டி மூலமும் திருவிழாவிற்கு வந்து ஒரு வாரம் வரையிலும் தங்கி செல்வார்கள். மாதாவின் கோயிலுக்கு வந்து செல்வதை நமது மக்கள் ஒரு பாடலாக இயற்றி உள்ளார்கள். அந்த பாடல் தற்பொழுதும் நமது திருமணங்களில் பாடப்பட்டு வருகிறது.
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம், ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம், ஆனந்தம் ஆரோக்கிய மாதாவின்
பாதாரமே பரமானந்தமே!
போத்தனூர் இரயில் ஏறிவந்தோம், புது
சிங்கநல்லூர் ஸ்டேசன் தாண்டி வந்தோம்
சூலூர் சோமனூர் மீண்டும் வந்தோம்
ஜெபமாலை மாதா கோவில் அண்டிவந்தோம்.
கோபுர மேலுயர்வாக தெரியுது
கொடி பறக்குது தேர் வருது
சாவடி சத்திரம், மக்கள் தங்குவது
சித்திர வேலைகள் ஜோராகுது
ஆலயத்தில் சிற்ப வேலைகளும்
அதற்கந்தபுரம் பல சாலைகளும்
அந்தணர் வேதியர் தங்குவதற்குமே
அலங்காரமான கூடமுண்டு
1964-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் தனது மாதாந்திர கூட்டங்களை சோமனூர் எம்.ஏ.பி.எம். அன்ட் சன்ஸ் மில் கட்டிடத்தில் நடந்து வந்தது. நமது சங்கத்தின் ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15-ம்நாள் அன்னையின் விண்ணேற்பு திருநாளன்று கருமத்தம்பட்டியில் நடத்துவது என்று முடிவு செய்து ஆண்டுவிழா கூட்டம் மற்றும் நமது குல வழக்கப்படி பூணூல் விழாவும் அன்றைய தினமே நடைபெற்று வந்தது. முன்னோர்கள் அன்றையதினம் பூணூல் அணிவிப்பதை ஒரு சடங்காக செய்து வந்தனர். நமது குலத்தவர்கள் அனைவரும் பல ஊர்களில் இருந்து தொழில் செய்து வந்தார்கள். அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு மலர் அச்சிட்டு வெளியிட சங்க நிர்வாகிகள் முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டியை தேர்வு செய்தனர். அதில் இடம் பெற்றவர்கள் மலர்குழு தலைவராக திரு. எல். மரியபிரகாசம், டெப்டி கலெக்டர் ரிடைர்டு காந்திபுரம், டாக்டர் எம். அருள்சாமி, பி.ஈ. திருப்பூர் செயலாளராகவும், மலரின் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் ஏ. தாமஸ், எம்.எஸ்ஸி, எம்பில் கோவை அவர்களும், வி.எஸ். குழந்தைசாமி, எம்.ஏ. எம்எட் திருப்பூர் அவர்களும், திரு. எம். குருசாமி சவுரிபாளையம் அவர்களும், திரு. எஸ். துரைசாமி, பி.ஏ. கோவை அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது இடைவிடாத முயற்சியால் அயராது பாடுபட்டு தேவாங்கர் குல மலரை 1979-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஜெபமாலை அன்னைக்கு நன்றி செலுத்தி வெளியிடப்பட்டது. இந்த தேவாங்கர் குல மலர் அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மலர் அனைவருக்கும் கிடைத்தபின்பு தான் இந்த மலரின் முக்கியத்துவத்தை அனைவராலும் அறியமுடிந்தது. இந்த மலரின் மூலம் நமது குல மக்களின் முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் அறிய முடிந்தது. திருமணம் செய்ய மணமகன், மணமகள் விவரங்கள் அறிய எளிதாக இருந்தது. எனவே பெருமுயற்சி செய்து இந்த மலரினை வெளியிட்ட மலர்குழுவிற்கு நாம் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் திரு. மரியசூசை செட்டியார் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த பொறுப்பிற்கு திரு. எஸ். சிலுவை சந்தியாகு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இவரது தலைமையில் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு சங்க பணிகளை செய்து வந்தனர். அப்போது பங்கு தந்தையாக இருந்த சங்கைகுரிய எம்.எம். சின்னையன் அடிகளார் நமது சங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்து ஆண்டுவிழா கொண்டாட்டங்களை கோவில் மண்டபத்திலும் சவுரியார் மண்டபத்திலும் நடத்த நமக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது ஆண்டு விழாவிற்கு வரும் அனைத்து நமது குல மக்களக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது நமது சங்கம் குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த, நன்கு படித்து அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகமதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. இச்சங்கம் 1982-ம் ஆண்டு நமது சமூக மக்களின் நலன் கருதி அரசாங்கத்திடமிருந்து அனைத்து சலுகைகளையும் பெற நமது இனத்தை பிற்பட்டோர் இனத்தில் சேர்க்க வேண்டுமென அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தது. பிற்பட்டோர் இனத்தில் நமது சங்கம் சேர்க்கப்படுமானால் கல்வியிலும் வாழ்க்கை தரத்திலும் நமது மக்கள் முன்னேற வழிவகுக்கும். 1982-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அம்பாசங்கர் பிற்பட்டோர் நலவாரியத்தில் நமது சமூகத்தை சேர்க்க வேண்டுமென 02.09.1983-ம் ஆண்டு நமது குலமக்கள் அனைவரும் கோவை டவுன் ஹாலிலிருந்து ஒரு ஊர்வலமாக செல்ல சவுரிபாளையம் இளைஞர் அணி முடிவு செய்து தலைமை சங்கத்திடம் தெரிவித்தது. அதன்படி 2.9.83 தேதி டவுன் ஹாலிலிருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை நமது சங்க தலைவர் திரு. எஸ். சிலுவை சந்தியாகு அவர்களின் தலைமையில் தலைவர்கள் முன்னே செல்ல, தொண்டர்கள் அணிவகுத்து சென்ற காட்சி நம்மை விட்டு இன்னும் அகலாமல் இருக்கிறது. அன்று பேனர் எழுதி ஊர்வலத்தை அருமையான முறையில் நடத்தி கொடுத்த சவுரிபாளையம் இளைஞர் அணிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த ஊர்வலத்தில் சங்க தலைவர்கள், நிர்வாகிகளுடன் அந்தந்த ஊர் மணியகாரர்கள், மற்றும் ஊர் செட்டியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த ஊர்வலம் சங்கத்திற்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது எனவும் கூறுலாம். ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடைந்தபின் நமது சங்கத் தலைவர்கள், பிற்பட்டோர் நலதுறை கமிட்டி அம்பாசங்கர் அவர்களை சந்தித்து நமது அறிக்கையினை அவர்களுக்கு கொடுத்தார்கள். நமது குலத்தை பிற்பட்டோர் இனத்திற்கு கொண்டுவர அன்று நமது இந்து சகோதரர்கள் நமக்காக அம்பாசங்கரிடம் பரிந்து பேசினர். அவர்களில் திரு. வெள்ளிங்கிரி அவர்கள் முக்கியமானவர். அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்
மார்ட்டின் ஜோசப்
பொதுச் செயலாளர்
கோவை கத்தோலிக்க தேவாங்க சங்கம்
கருமத்தம்பட்டி

ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் திருக்கோயில் செல்லும் வழி

முகவரி

அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் திருக்கோயில்
,
சின்னவதம்பச்சேரி,
சூலூர் வட்டம்,
கோவை மாவட்டம்.


வரதந்து மஹரிஷியின் வரலாறு

வரதந்து மஹரிஷியின் வரலாறு


கும்பாபிஷேகத்திற்கு வந்து சின்னவதம்பச்சேரியை சேர்ந்த கப்பேலார் குல சகோதரர் சேலத்தில் மருத்துவ பணிபுரியும் ரூத்ரமூர்த்தி பாலிகிளினிக் உரிமையாளர் உயர்திரு.Dr.S.ரூத்ரமூர்த்தி அவர்களும் அவர்கள் துணைவியார் கலாவதி அம்மையாரும் செயலாளர் ராஜுவிடம் அப்பா நமது கோத்திரி ரிஷி வரதந்து மஹரிஷியின் சிலை செய்து வையுங்கள் அதற்கான பொருளுதவி நாங்கள் செய்கிறோம் என்றார்கள். அப்போதிலிருந்து செயலாளர் ராஜு வரதந்து மஹரிஷி எப்படி இருப்பார்? என பல அருளாளரிடம் கேட்டு கண்டுபிடிக்க முயற்சித்தார் அதன்பலனாக 2003ம் வருடம் ஆவணி மாதம் 22ம் நாள் திங்கள்கிழமை அதிகாலை நமது அன்னை நெல்லுக்குப்பம்மனின் மூலஸ்தானமாகிய நெல்லூர் கோவிலில் 7 நாட்கள் அருளாளர் பொன்னுச்சாமி தாத்தா தலைமையில் நடந்த சப்தரிஷிகள் யாகத்தின் முதல் நாளில் அன்னை நெல்லுக்குப்பம்மாவிடம் செயலாளர் ராஜு வேண்ட அருளாளர் பொன்னுச்சாமி தாத்தா அந்த அன்னையிடம் கேட்டுச் சொல்ல சொல்ல செயலாளர் ராஜு வரதந்து மஹரிஷியின் உருவத்தை வரைந்தார்.

கப்பேலார் கோத்திரி ரிஷி வரதந்து மஹரிஷியின் உருவம்

ராஜா போன்ற தலைமுடி, தலையில் கிரீடம், நெற்றியில் திருநீருபட்டை நடுவில் சாந்து கிழே பிறை வடிவில், அகண்ட கண்கள், நீண்ட மூக்கு, காதில் குண்டலம், கம்பீரமானமீசை, தாடி, கழுத்தில் ருத்ராட்சம், முத்து ஸ்படிகமாலைகள், பச்சைவண்ண அங்கவஸ்திரம், சிகப்பு துண்டு, இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் வெண்பட்டு வேஷ்டி, வலது கையில் தண்டம், இடது கையில் கமண்டலம், இடது கை அக்குளில் மான் தோல், பாதகுரடு, பூநூல், ஆஜானுமாகுளான உயரம்.

மேற்கண்ட விபரபடிக்கு செயலாளர் ராஜு வரைந்தார். பிறகு அருளாளர் பொன்னுச்சாமி தாத்தாவிடம் காட்டி கேட்க சிலை செய்ய வேண்டுமானால் வரதந்து மஹரிஷியானவர் மனைவியுடன்தான் வரவிரும்புகிறார் என்றார் எனவே தாத்தா, சொல்லுங்கள் அவர் மனைவியையும் வரைகிறேன் என்று கேட்டார் ராஜு தாத்தா செயலாளர் ராஜுவிடம் தேவாங்கபுராணம் படி அதில் பதில் கிடைக்கும் என்றார்.


தேவாங்கபுராணம் ஒவ்வொரு தேவாங்கரும் அவசியம் படித்து தெரிய வேண்டிய ஒரு பொக்கிஷமாகும். தேவாங்கபுராணத்தை தேடி கண்டுபிடித்து செயலாளர் ராஜு படித்தார். அதில் கப்பேலார் கோத்திர ரிஷி ஸ்ரீ வரதந்து மஹரிஷி அவர்கள் சரித்தரம் இருக்கின்றது.

சிவ பெருமானிடமிருந்து தோன்றியவர் தேவலன். தேவர்களுக்கு அங்கம் மறைக்க உடை கொடுத்ததால் தேவாங்கனானார். தேவாங்க மக்களின் முதல் விதையே இவர்தான் இவர்மனைவி தேவதத்தை (சூரியபகவான் சகோதரி) தேவலமுனிவரின் 16 வது பிறவியே வரதந்து மஹரிஷியாவர். இவர் பட்டி விக்கிரமாதித்த மன்னனின் சகோதரனாவார். மகாகவி காளிதாஸை இனம் கண்டுபிடித்து உலகிற்கு காட்டியவராவார். மறைய இருந்த கலை, கல்வி, வேதம், இசைதனை மக்களுக்கு அளிக்கவந்தார்.

2004ம் வருடம் ஜனவரி மாதம் 16ம் நாள் தை மாதம் 3ம் நாள் செவ்வாய்கிழமை மாலை 3.40 மணிக்கு அருளாளர் பொன்னுசாமி தாத்தா அருள்வாக்குச் சொல்ல செயலர் ராஜு ஸ்ரீ வரதந்து மஹரிஷி அவர்களின் தர்மபத்தினி அமிர்தஸீலி தாயாரை கைபட வரைந்தார்.


மேற்கண்ட தினம் அதிகாலை 4 மணி சுமாருக்கு செயலர் ராஜுவின் மனைவி ராணி என்கிற சந்திரிகாவின் கனவில் ஸ்ரீ வரதந்துமஹரிஷியும் அவர்மனைவியும் செயலர் ராஜுவின் இல்ல வாசல் கதவை தட்ட ராஜு இல்லத்தினுள் மகிழ்ச்சியுடன் வருகின்றனர் வந்து ஆசிர்வாதம் செய்துள்ளனர்.


அதைதொடர்ந்து செயலர் ராஜுவும் உதவி செயலாளர் திரு.கிருஷ்ணனும் திருப்பூர் நகருக்கு வடக்கு புறம் உள்ள திருமுருகன் பூண்டி என்கிற ஸ்தலம் சென்று ஸ்தபதி சண்முகவேலை (திருமுருகன் சிற்ககூடம்) சந்தித்து ஸ்ரீ மஹரிஷிதம்பதிகளின் படங்களை கொடுத்து சிலைகள் செய்ய சொல்லியுள்ளார்கள். திரு.சண்முகவேல் ஸ்தபதியாரும் அவர்கள் மகன் திரு.செந்தில் ஸ்தபதியும் மேற்கண்ட சிலைகளை மிக அற்புதமாக உருவாக்கிதந்தனர் அதன் செலவு தொகைதனை சேலம் டாக்டர் திரு.S.ருத்ரமூர்த்தி கலாவதி குடும்பத்தினர் மனதார கொடுத்தனர்.

ஸ்ரீ வரதந்து மஹரிஷியும் அமிர்ஸீலிதாயாரும் விக்கிரக வடிவமாக அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் ஆலயத்தில் 23.04.2004 சித்திரை 11ம் நாள் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனுக்கு முன்புறம் மகாமண்டப வளாகத்தில் கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பூஜைகள் நடத்தி வருகின்றனர்.


ஸ்ரீ வரதந்து மஹரிஷியவர்கள் அருள்வாக்காக சொன்னவை

திரு. OMS. சுந்திரம் அருளாளர் பொன்னுச்சாமி தாத்தா செயலர் ராஜுவின் இல்லத்தில் வந்து அருள்வாக்கு சொன்ன சமயம் ஸ்ரீ வரதந்துமஹரிஷியவர்கள் தாத்தா உடலில் வந்து கன்னடத்தில் பேசினார். அப்பா நான் தினமும் கயிலாயம் சென்று வருவேன் எனவே அனுதினமும் என் அருகில் ஒரு கலசத்தில் புதிய சுத்தமான தண்ணீரை வையுங்கள். நான் அதனை கயிலாசத்திற்க்கு கொண்டு சென்று சேர்த்து பிறகு கைலாசத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வருவேன். எனவே இன்று வைத்த கலசநீரை நாளையதினம் அருள்மிகு நெல்லுக்குப்பம்மனுக்கும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை மக்களுக்கு கொடுங்கள் என்றார். அதன்படி தினம் சுத்தமான தண்ணீரை பூசாரியார் திரு. பாலசுப்பிரமணி அவர்கள் ஸ்ரீ வரதந்து மஹரிஷி அமிர்தஸீலிதாயார் பாதத்தில் வைத்து அடுத்ததினம் எடுத்து அபிஷேகம் செய்கின்றார்.


மூலஸ்தானமாகிய நெல்லூரில் நெல்லுக்குப்பம்மன் முன்னிலையில் 2003ம் வருடம் ஆவணி மாதம் 22ல் திங்கள்கிழமை முதல் ஆவணி 28 வரை ஞாயிறு காலை வரை சப்தரிஷிகள் யாகம் அருளாளர் பொன்னுசாமி தாத்தா தலைமையில் நடத்தப்படும்.

சின்னவதம்பச்சேரி திருக்கோவில் வரலாறுகோவை மாவட்டம், பல்லடம் சின்னவதம்பச்சேரி கிராமத்தில், கன்னட தேவாங்க வம்சம் கப்பேலார் குலம் வரதந்து மஹரிஷி கோத்திரம் சின்னவதம்பச்சேரி கெத்திகை மனையை சார்ந்த கப்பேலார் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் ஆலயம் கொண்டு அருள் பாலித்து வருகிறாள். கடந்த 25.04.2002 வருடம் சித்திரைபானு வருடம் சித்திரை மாதம் 12-ம் நாள் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதுமுதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான அருள்மிகு ராமலிங்க சமேத ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் மூன்று கால பூசை நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பூஜையும் அன்னாதானமும் பௌர்ணமி பூசையும் அன்னாதானமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பஜனையுடன் கூடிய பூசைகளும் சிறப்புற நடைபெற்று வருகின்றது. இங்கே அன்னையை நாடிவரும் பக்தர்களின் குறைகளை அந்த அன்னையே ஏதாவது ஒரு ரூபத்தில் அருள்வாக்காகவோ, கனவிலோ உணர்விலோ நீக்க வழி கூறி குறைகளை நீக்கி அருள்பாலிக்கிறாள் எனவே இந்த சக்தி மிகுந்த ஆலயத்திற்கு, சமயம் ஜாதி, குலம் வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களும் வந்து அன்னை அருள்பெறுகிறார்கள்.

திருக்கோவில் கட்ட காரணம்

திருப்பூர் நகரை சேர்ந்த 61, புது ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் ராஜு என்கிற S.சந்திரசேகரன் இவர் சின்னவதம்பச்சேரி கெத்திகைமனையின் பெரிய வீட்டுக்காரர் என போற்றப்பட்ட உயர்திரு.சண்முகசெட்டியார் மகன் சுப்பய்யசெட்டியாரின் மகனாவார். தற்போது இந்த திருக்கோவிலின் செயலாளராக உள்ளார். திருக்கோவில் கட்டுவதற்கு முன்பு 2000-ம் வருடம் மாசி சிவன்ராத்திரியன்று திரு.சந்திரசேகரன் (ராஜு) சின்னவதம்பச்சேரிக்கு பள்ளய பூசைக்கு சென்ற சமயம் அவர் உடலில் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் இறங்கி குடிகொண்டு இந்த ஆலயம் கட்ட பணித்தாள் (ராஜு தனது தாயார் சவுண்டம்மாள் ஆசீர்வதத்துடன் திருப்பணியை செய்ய தொடங்கினார்.) இதன் தொடர்ச்சியாக சின்னவதம்பச்சேரி திருப்பூர் ஸ்ரீ பத்மா டெக்ஸ் S.P. நாச்சிமுத்து செட்டியார்  N.மாரம்மாள் , ஒரே மனதாக தங்களுக்கு சேர்ந்த சின்னவதம்பச்சேரியின் மையத்தில், சமமாகவும் வடக்கு முகமாகவும் அமைந்த சுமார் 33 செண்ட் நிலத்தினை திருக்கோவில் கட்ட உபயமாக கொடுத்துள்ளார்கள். திரு. S.P.ரங்கசாமி செட்டியார் பெரிய மகன் திரு.R.சவுடப்பன் தலைவராக இருந்து இந்த திருக்கோவில் கட்ட தன்னை அர்பணித்தார் அவரை தொடர்ந்து திருக்கோவிலின் கௌரவ தலைவர் (அணுகுண்டு தாத்தா) திரு.M.K.சவுண்டப்ப செட்டியார் அவர்களும், அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் அறக்கட்டளை தலைவராக திரு.V.R.சுப்பிரமணியம் அவர்களும் இருந்து நிர்வாகத்தை செவ்வனே நடத்தி வருகின்றனர்.

நெல்லுக்குப்பம்மன் பெயர் காரணம் : மூலஸ்தானமும், மூலகாரணங்களும்

நமது குல முன்னோர்கள் ஒட்டஞ்சத்திரம் அருகில் கன்னிவாடி அருகில் உள்ள குயவ நாயக்கன்பட்டி எனுமிடத்தில் மலையடிவாரத்தில் வயல்வெளிக்கு நடுவில் அருள்பாளித்து வருகின்ற பெட்டது சவுண்டம்மனை வழிபட்டு வந்தார்கள் அந்த கால கட்டத்தில் அந்த தாயானவள் அருள்வாக்கில் மக்களே உங்கள் குல தெய்வமானவள் சித்தயன் கோட்டைக்கு அருகில் சித்தரேவு என்னும் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நெல்வயல் நிறைந்த நெல்லூர் என்னுமிடத்தில் தனது ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் வயல்வெளியில் நெல் அறுவடை செய்த பின்பு நெல் பதர்களை போடும் நெல் குப்பை குழியில் கால சூழ்நிலையால் மறைந்துள்ளாள் அவளை எடுத்து வழிபடுங்கள் என கூறியுள்ளாள். அதனை தொடர்ந்து நமது முன்னோர்கள் அந்த இடத்தை கண்டுபிடித்து நெல்குப்பையிலிருந்து 8 கரங்களுடன கூடிய 6 அடி உயர உக்கிர தேவதை நெல்லுக்குப்பம்மனை எடுத்து திருக்கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளார்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவருடைய ஆட்சி எல்லை தென்னகம் முழுக்க இருந்ததது. நாமும் கன்னடர்கள் ஏகபோகமாக பல இடங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றதில் நம்முன்னோர்கள் இந்த நெல்லுருக்கு அருகாமையிலுள்ள கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள் மீண்டும் காலம் மாறவோ பிழைக்க வழிதேடி அங்கிருந்து பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள் அதுசமயம் ஒவ்வொரு குழுவினரும் கப்பேலார் குல சகோதரர்களும் அந்த தாயை ஏதாவது ஒருரூபமாக தங்களுடன் அழைத்து சென்றுள்ளார்கள் அப்படி அந்த வகையில் நம் முன்னோர்கள்.

சின்னவதம்பச்சேரிக்கு அந்த தாயையும் சிவனையும் இரண்டு மண் கலயங்களில் ஜலவடிமாக பேழை மூடியில் வைத்து அதில் கத்திகள் இரண்டு வைத்து தலையில் சுமந்து அலகு சேவை செய்து அழைத்தும் வந்துள்ளார்கள். மூலஸ்தானத்தில் நம் முன்னோர்கள் அந்த தாயை வணங்கி தாயே எங்களுடன் வாருமம்மா என மன்றாடி அழைத்து வந்துள்ளார்கள் அந்த தாயானவள் அவர்களுடன் சர்ப்ப வடிமாகவும் வந்து சின்னவதம்பச்சேரியில் புற்றில் குடிகொண்டாள் அந்த புற்று மிகசிறிதாக ஓர் அடி உயரம்தான் இருந்தது. இன்று நாம்  திருக்கோவில் அமைத்த பிறகு 7 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து இன்னும் வளர்ந்து கொண்டுள்ளது. அந்த புற்று இன்று உள்ள திருக்கோவிலுக்கு நேர் எதிரில் கம்பீரமாக அமைந்துள்ளது. அதற்கு பூசைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


நம்முன்னோர்கள் சின்னவதம்பச்சேரிக்கு அம்மை, அப்பனை அழைத்து வந்தார்கள் அந்த கால கட்டத்தில் சுமார் (300 வருடங்கட்கு முன்பு) அழைத்து வந்த அம்மனுக்கு ஆலயம் கட்ட இயலவில்லை இருந்தாலும் அந்த தாயிடம் வேண்டி தாயே நாங்கள் வருடம் ஒருமுறை சிவன் ராத்திரிக்கு உன்னை சிறப்பாக கொண்டாடுகிறோம். என வேண்டி சிவன்ராத்திரிக்கு கொண்டாடி பள்ளைய பூசை செய்து பிறகு பேழை மூடிக்குள் தாங்கள் வழிபடும் அன்னையை சக்தி அழைத்தலுக்கு பயன்படும் கேள் கடியே (பானை மூடி) மற்றும் கத்திகளை வைத்து மூடி எடுத்து பத்திரப்படுத்திவிடுவார்கள்.


(பேழை மூடி) யார் வீட்டில் உள்ளதோ அவர்தான் பூசாரியார். அப்படியாக அவருக்கு பின் அவர் மகன், பேரன் என வழி வழியாக வந்தது. கடைசியாக 2000-ம் ஆண்டில் பூசாரியாக இருந்த திரு.வெள்ளியங்கிரி செட்டியார் அவர்கள் காலமாகவே இந்த பேழை மூடியை சிவன் ராத்திரிக்கு முன்பாக சின்னவதம்பச்சேரியில் வாழ்ந்து ஜீவ சமாதியான அருளாளர் குரு அப்பய சுவாமிகள் பஜனை மடம் என அழைக்கப்படும் வீட்டில் கொண்டு போய் வைத்துள்ளார்கள். அந்த ஆண்டு 2000-ம் வருடம் மாசி மாதம் சிவன் ராத்திரிக்கு சின்னவதம்பச்சேரிக்கு தன் குடும்பத்தாருடனும் தனது சகோதரர் திரு.சண்முகம் குடும்பாத்தாருடனும் வந்த தற்போதைய திருக்கோவில் & அறக்கட்டளை செயலாளர் பெரிய வீடு சந்திரசேகரன் உள்ளத்தில் உடலில் அந்த தாயானவள் இறங்கி இந்த திருக்கோவில் கட்ட பணித்தாள் அந்த அற்புத பணியை தனது கப்பேலார் குல மூத்த சகோதரர் உயர்திரு.M.K.சவுண்டப்பன் (அணுகுண்டு தாத்தா) தலைமையில் 18.09.2000–ல் தாய் சவுண்டம்மாள் ஆசீர்வாதத்துடன் ராஜு என்கிற சந்திரசேகரன் திரு.பத்மா  R.சவுடப்பன் தலைமையில் மிகமிக கவனமாக செய்ய தொடங்கினார்.

திருக்கோவில் கட்ட 31.05.2001ல் பாலக்கால் போடப்பட்டு திருப்பணி நடந்து வந்தது. அதுசமயம் ஓவ்வொரு மாதமும் அண்ணன் தம்பிமார் கூட்டம் நடைபெறும் அதுசமயம் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன அதனை தெரிந்து கொள்ள கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த “திரு.OMS. சுந்திரம்” அவர்கள் உடலில் அருளாளர் குரு பொன்னுசாமி தாத்தா என்கிற தெய்வீக நல்ல உள்ளம் கொண்ட ஆன்மா பேசுவார், அவரிடம் சென்று அனுமதி பெற்று அவரை சின்னவதம்பச்சேரிக்கு அழைத்தோம் “திரு.OMS. சுந்திரமும்” வரசம்மதித்து சின்னவதம்பச்சேரி வந்தார் இங்கே அவர் உடலில் நமது குலதெய்வம் நெல்லுக்குப்பம்மன் வந்து பேசி அருள்வாக்கில் அப்பா, நான் நீங்கள் மூலஸ்தானத்திலிருந்து மண் எடுத்து வந்தபோதே உடன் வந்தேன், இப்போது இங்கே குடி கொண்டுள்ளேன், கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடக்கும் அதன்பிறகு நான் நல்ல முறையாக இங்கே இருந்து என்னை நம்பி வரும் மக்களை காத்து அருள்புரிவேன் என்று வாக்களித்தார்கள்.