வரதந்து மஹரிஷியின் வரலாறு
கப்பேலார் கோத்திரி ரிஷி வரதந்து மஹரிஷியின் உருவம்
ராஜா போன்ற தலைமுடி, தலையில் கிரீடம், நெற்றியில் திருநீருபட்டை நடுவில்
சாந்து கிழே பிறை வடிவில், அகண்ட கண்கள், நீண்ட மூக்கு, காதில் குண்டலம்,
கம்பீரமானமீசை, தாடி, கழுத்தில் ருத்ராட்சம், முத்து ஸ்படிகமாலைகள்,
பச்சைவண்ண அங்கவஸ்திரம், சிகப்பு துண்டு, இடுப்பில் கட்டப்பட்டிருக்கும்
வெண்பட்டு வேஷ்டி, வலது கையில் தண்டம், இடது கையில் கமண்டலம், இடது கை
அக்குளில் மான் தோல், பாதகுரடு, பூநூல், ஆஜானுமாகுளான உயரம். மேற்கண்ட விபரபடிக்கு செயலாளர் ராஜு வரைந்தார். பிறகு அருளாளர் பொன்னுச்சாமி தாத்தாவிடம் காட்டி கேட்க சிலை செய்ய வேண்டுமானால் வரதந்து மஹரிஷியானவர் மனைவியுடன்தான் வரவிரும்புகிறார் என்றார் எனவே தாத்தா, சொல்லுங்கள் அவர் மனைவியையும் வரைகிறேன் என்று கேட்டார் ராஜு தாத்தா செயலாளர் ராஜுவிடம் தேவாங்கபுராணம் படி அதில் பதில் கிடைக்கும் என்றார்.
தேவாங்கபுராணம் ஒவ்வொரு தேவாங்கரும் அவசியம் படித்து தெரிய வேண்டிய ஒரு பொக்கிஷமாகும். தேவாங்கபுராணத்தை தேடி கண்டுபிடித்து செயலாளர் ராஜு படித்தார். அதில் கப்பேலார் கோத்திர ரிஷி ஸ்ரீ வரதந்து மஹரிஷி அவர்கள் சரித்தரம் இருக்கின்றது.
சிவ பெருமானிடமிருந்து தோன்றியவர் தேவலன். தேவர்களுக்கு அங்கம் மறைக்க உடை கொடுத்ததால் தேவாங்கனானார். தேவாங்க மக்களின் முதல் விதையே இவர்தான் இவர்மனைவி தேவதத்தை (சூரியபகவான் சகோதரி) தேவலமுனிவரின் 16 வது பிறவியே வரதந்து மஹரிஷியாவர். இவர் பட்டி விக்கிரமாதித்த மன்னனின் சகோதரனாவார். மகாகவி காளிதாஸை இனம் கண்டுபிடித்து உலகிற்கு காட்டியவராவார். மறைய இருந்த கலை, கல்வி, வேதம், இசைதனை மக்களுக்கு அளிக்கவந்தார்.
2004ம் வருடம் ஜனவரி மாதம் 16ம் நாள் தை மாதம் 3ம் நாள் செவ்வாய்கிழமை மாலை 3.40 மணிக்கு அருளாளர் பொன்னுசாமி தாத்தா அருள்வாக்குச் சொல்ல செயலர் ராஜு ஸ்ரீ வரதந்து மஹரிஷி அவர்களின் தர்மபத்தினி அமிர்தஸீலி தாயாரை கைபட வரைந்தார்.
மேற்கண்ட தினம் அதிகாலை 4 மணி சுமாருக்கு செயலர் ராஜுவின் மனைவி ராணி என்கிற சந்திரிகாவின் கனவில் ஸ்ரீ வரதந்துமஹரிஷியும் அவர்மனைவியும் செயலர் ராஜுவின் இல்ல வாசல் கதவை தட்ட ராஜு இல்லத்தினுள் மகிழ்ச்சியுடன் வருகின்றனர் வந்து ஆசிர்வாதம் செய்துள்ளனர்.
அதைதொடர்ந்து செயலர் ராஜுவும் உதவி செயலாளர் திரு.கிருஷ்ணனும் திருப்பூர் நகருக்கு வடக்கு புறம் உள்ள திருமுருகன் பூண்டி என்கிற ஸ்தலம் சென்று ஸ்தபதி சண்முகவேலை (திருமுருகன் சிற்ககூடம்) சந்தித்து ஸ்ரீ மஹரிஷிதம்பதிகளின் படங்களை கொடுத்து சிலைகள் செய்ய சொல்லியுள்ளார்கள். திரு.சண்முகவேல் ஸ்தபதியாரும் அவர்கள் மகன் திரு.செந்தில் ஸ்தபதியும் மேற்கண்ட சிலைகளை மிக அற்புதமாக உருவாக்கிதந்தனர் அதன் செலவு தொகைதனை சேலம் டாக்டர் திரு.S.ருத்ரமூர்த்தி கலாவதி குடும்பத்தினர் மனதார கொடுத்தனர்.
ஸ்ரீ வரதந்து மஹரிஷியும் அமிர்ஸீலிதாயாரும் விக்கிரக வடிவமாக அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் ஆலயத்தில் 23.04.2004 சித்திரை 11ம் நாள் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனுக்கு முன்புறம் மகாமண்டப வளாகத்தில் கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ வரதந்து மஹரிஷியவர்கள் அருள்வாக்காக சொன்னவை
திரு. OMS. சுந்திரம் அருளாளர் பொன்னுச்சாமி தாத்தா
செயலர் ராஜுவின் இல்லத்தில் வந்து அருள்வாக்கு சொன்ன சமயம் ஸ்ரீ
வரதந்துமஹரிஷியவர்கள் தாத்தா உடலில் வந்து கன்னடத்தில் பேசினார். அப்பா
நான் தினமும் கயிலாயம் சென்று வருவேன் எனவே அனுதினமும் என் அருகில் ஒரு
கலசத்தில் புதிய சுத்தமான தண்ணீரை வையுங்கள். நான் அதனை கயிலாசத்திற்க்கு
கொண்டு சென்று சேர்த்து பிறகு கைலாசத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வருவேன்.
எனவே இன்று வைத்த கலசநீரை நாளையதினம் அருள்மிகு நெல்லுக்குப்பம்மனுக்கும்
மற்றும் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை
மக்களுக்கு கொடுங்கள் என்றார். அதன்படி தினம் சுத்தமான தண்ணீரை பூசாரியார்
திரு. பாலசுப்பிரமணி அவர்கள் ஸ்ரீ வரதந்து மஹரிஷி அமிர்தஸீலிதாயார்
பாதத்தில் வைத்து அடுத்ததினம் எடுத்து அபிஷேகம் செய்கின்றார்.மூலஸ்தானமாகிய நெல்லூரில் நெல்லுக்குப்பம்மன் முன்னிலையில் 2003ம் வருடம் ஆவணி மாதம் 22ல் திங்கள்கிழமை முதல் ஆவணி 28 வரை ஞாயிறு காலை வரை சப்தரிஷிகள் யாகம் அருளாளர் பொன்னுசாமி தாத்தா தலைமையில் நடத்தப்படும்.
No comments:
Post a Comment