அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/24/14

சாமுண்டி பாடல் -(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

 சாமுண்டி பாடல்

சாமுண்டியே நீனு தங்க மொகு அம்மா
நங்கே கொடுபேக்கு நின்னு அருளம்மா

அழகு சாமுண்டியே !
மைசூரு சாமுண்டியே !
பெட்டது சாமுண்டியே !
தேவாங்க சாமுண்டியே !

பா எந்து கூங்கு முந்தே -பந்துடுவே நன்னு தாயே !
பா பா எந்து கூங்கு முந்தே -பந்துடுவே நன்னு தாயே !
கொடு எந்து கேளு முந்தே-கொட்டுடுவே நன்னு தாயே !

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே

கத்தி மொனேலி  நித்து பருவே நன்னு தாயி அம்மா
சிம்மதுமேல பவனி பருவே நன்னு தாயி அம்மா
பெட்டதுமேல காட்சி கொடுவே நன்னு தாயி அம்மா
தொட்டுது எல்லா நெடசி கொடுவே நன்னு தாயி அம்மா

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே

சங்கு சக்ர பில்லு அம்பு கத்தி கப்பு சாட்டை சூலம்
பிரம்பு குங்குமம் உடுக்கை கொண்டவளே நன்னு தாயி அம்மா
சூரன கொந்த வக்கிரகாளி நன்னு தாயி அம்மா

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே


நம்மு குல காத்து ஒள்ளவர கொடுதாயே
ஒந்து சேரி எல்லாருனு கொண்டாடு பேக்கு நன்னு தாயி அம்மா!!!

அழகு சாமுண்டியே
மைசூரு சாமுண்டியே
பெட்டது சாமுண்டியே
தேவாங்க சாமுண்டியே !

திருமதி. ஜானகி ராமசாமி
செங்கல்பட்டுPHOTO EDITING:(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

PHOTO EDITING:


ஆதி அந்த எல்லாணு நீனேத்தா நம்மம்மா தேவி சௌடாம்பிகே நீனு உய்யால ஆடுவம்மா அருளுகொட்டு பொருளுகொட்டு நின் ஊமகையெல்லா தாமரை ஊமவாங்க கெம்பு ஆயி அதவம்மா
நின் மக்களு நாவு கூங்க ஒடிபரா அம்மா
நீனே நம் எண்ணுகளு நீனேதாநம்மமா
தேவாங்க மகாிஷியே அருளுகொட்டவம்மா
நீனு பந்து இல்லி உய்யால ஆடுவம்மா
சங்கு சக்கர கதாதாாி சிம்மவாகன ஏராவம்மா
பூலோகதலி தவ இத்த நம்மு அம்மா
நீனே தா நமமு மொகு உய்யால ஆடுவம்மா
தேவி நீனு பந்து உய்யால ஆடுவம்மா
சக்தி சாமுண்டி ஜோதியாங்கா நின்ன நாவு தர்ஷண பாடிாி ஒங்காாி அம்மா நீீனு நம்மு face book ya பாவம்மாமணி , கருங்கலபட்டி

சக்தி அன்னை வழிபாடு:- முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014

சக்தி அன்னை வழிபாடு:-

பக்திக் கிவரெனப் பார்போற்றும் தேவாங்கர்
சக்திக் கடலே! சரணடைந்தோம் -முக்திக்கு
மூலமாய் நிற்கும் முதல்வியே! இங்குநீ
கோலமாய் நின்னருளைக் கூட்டுஎழுத்து -  சதீஷ் , புலிகுத்தி, சேலம்

ஒய்யார பவனி வரும் சாமுண்டி---(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

ஒய்யார பவனி வரும் சாமுண்டி

வெள்ளைக்குதிரை ஏறி
வெள்ளிக்குடை பிடிக்க
விளையாடி வருபவளே !!

ஹயக்ரீவர் மீதேறி
ஞானம் அருள்பவளே !!


மைசூரு மலைமீது அரசாளும் நாயகி நீ
பெட்டது சவுண்டம்மன் வடிவாக
பேழை மூடியிலே ஜமுதாடு வடிவெடுத்து
வீரமாக ஒய்யார பவனி வரும் சாமுண்டி !!!!!

வரம் தருவாய் தாயே...... (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

என் தாயாக வந்த தாயிற்கு சமர்ப்பனம்...
வரம் தருவாய் தாயே......
என் பாவத்தை போக்குவதற்காக இம்மண்ணில் எனக்காக உருவெடுத்தவளே...
உலகில் உள்ள அனைத்து இன்னல்களையும் எனக்காக தாங்கிக்கொண்டவளே...
பூர்வ ஜென்மத்தில் பாவங்களை செய்து நரகத்தில் தவிக்கும் பொழுது, எமனிடம் மன்றாடி என்னை கருவாக உயிர்பித்தவேளே....
நான் செய்த பாவங்களை ஒவ்வொரு நாளாக சுமந்து கருவறையில் ஒன்பது திங்களில் உருகொடுத்தவளே...
என்பாவத்தினை பாசமாக ஏற்று இந்தபாவியையும் ஈன்றேடுத்தவளே.....
பாசத்தை பாலாக்கி என் பிண்டமெங்கும் பரவச்செய்து பாவத்தை சுத்தம் செய்தவளே....
புதிதாய் உருவம் கொடுத்து என்னை மிளிரச்செய்தவளே...
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தை உன்னால் கழித்தேன் அம்மா,
ஆனால் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கழிக்க முடியாத பாவத்தை செய்து விட்டேன் தாயே.... உன்னை வருத்தி.
இதை கழிக்க உன்னை நான் சுமக்கவேண்டும் என் மகளாக.
வரம் தருவாய் தாயே......
எழுத்து - திரு ஜெயக்குமார், திருப்பூர் 

சாமி அலங்காரப்பாட்டு------- (முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)


பாடியவர்கள்
செல்வி. R. பவித்ரா.
செல்வி. S. கீர்த்தனா
இசை – திரு. நித்திஷ் செந்தூர்

சாமி அலங்காரப்பாட்டு

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

தாழை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ பூத்ததை பாருங்கம்மா
தாழம்பூ போலவே நம்ம சவுண்டம்மா
தலை அலங்காரம் பாருங்கம்மா

நெல்லிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப் பூ பூத்ததை பாருங்கம்மா
நெல்லிப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
நெத்தி வரிசையை பாருங்கம்மா

பாத்சரம் மம்மா பாதசரம் – தாயே
பத்து விரலுக்கும் பாதசரம்
பத்து விரலுக்கும் பாதசரம்
இருட்டு நாட்டிலே போட்டு நடந்திட்டா
எங்கும் ஜொலித்திடும் பாதசரம்.

கோவை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பு பூத்ததை பாருங்கம்மா
கோவைப்பூ போலவே தாயி சவுண்டம்மா
கொண்டை அலங்காரம் பாருங்கம்மா

குறிஞ்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
குறிஞ்சிப்பூ போலவே நம்மு சவுண்டம்மா
பல்லின் வரிசையைப் பாருங்கம்மா.
மான் கூவும் நல்ல மயில் கூவும் – தாயே
வன்னி மரத்துக் குயில் கூவும்
வன்னி மரத்துக் குயில் கூவும்
கொண்டை பெருத்தவ நம்ம சவுண்டம்மா
கொண்டை மேலே ரெண்டு கிளி கூவும்.

பாகை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ பூத்ததை பாருங்கம்மா
பாகைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
பாத சிலம்பணி பாருங்கம்மா

முல்லை படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ பூத்ததை பாருங்கம்மா
முல்லைப்பூ போலவே நம்ம சவுண்டம்மா
முக அலங்காரம் பாருங்கம்மா.

பிச்சிப் படர்ந்ததை பாருங்கம்மா – தாயே
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூ பூத்ததை பாருங்கம்மா
பிச்சிப்பூப் போலவே நம்ம சவுண்டம்மா
பின்னல் வரிசையைப் பாருங்கம்மா

தாமரை கொடியை பாருங்கம்மா – தாயே
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் பூத்ததை பாருங்கம்மா
தாமரைப் போலவே நம்ம சவுண்டம்மா
தன்னெழில் தோற்றமும் பாருங்கம்மா.

தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே
தன்னனனே நாதினம் தன்னானே – தன
தன்னனனே நாதினம் தன்னானே

7/23/14

இன்றைய பிரசங்கம்-(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

இன்றைய பிரசங்கம்

1.தேவாங்கர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த விபரம்

தேவாங்கர் என்பவர்கள் ஆதியில் சகரநாடு எனப்படும் காசி பகுதியில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வந்தனர்.
பின்பு ஹம்பி பகுதியை அடுத்த மன்னர் ஆணைக் கொந்தி மகாராஜா வீரப்பிராதாப ராய் [கி.பி.1336] ல் விஜய நகர சாம்ராஜ்யம் ஏற்படுவதற்கு முன் காசி பகுதியில் இருந்து தேவாங்கர்களை அழைத்து வந்து வேண்டிக் கொண்டதின் பேரில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க இராச குருவாக இருந்து நல்வழி காட்டி நடத்திச் சென்றனர்.
பின்னர் வம்சம் பெருகியது இந்நிலையில் ஹம்பியைத் தலை நகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்யம் பரந்து விரிந்து செயல் பட்டது.
அந்த விஜய நகர சாம்ராஜ்யத்தின் மேற்கு பகுதியில் தற்போதைய கர்நாடகத்தின் ஒரு பகுதி கன்னட மொழியும் கிழக்கு பகுதியில் தற்போதைய ஆந்திரத்தின் ஒருபகுதி தெனாலிவரை தெலுங்கு மொழியும் பேசி வந்தனர்.
இவர்கள் பிறசமயங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் நுழையாமல் இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் கட்டிக்காத்தனர்.
பின்னர் கி.பி.1565 ல் விஜயநகரப் பேரரசின் கடைசி மன்னன் ராமராயர் காலத்தில் பாமினி சுல்தான்கள் ஐவரும் சேர்ந்து படையெடுத்ததில் விஜயநகரத்துப் படைகள் தோற்றுப் போயின. ஹம்பி நகருக்கு பேரழிவு நேர்ந்தது.
இந்து சமயத்தைக் கட்டிக் காத்துவந்த தேவாங்க பிராமணர்கள் உயிருக்கு பயந்து, ஒரு பகுதியினர் பெங்களுர் வழியாக வந்தனர். ஒரு பகுதியினர் தாராபுரம் வரை வந்து தங்கி, பின்னர் மேலும் பிழைப்புக்கு வழி தேடி மதுரை முதலான தென் தமிழ் நாடு வரை வந்து விட்டனர். மற்றொரு பகுதி மைசூர் வழியாக திம்பம் மலைமீதும் பன்னாரி கோபி செட்டி பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் வந்து தங்கி அப்படியே நிலைத்து விட்டனர். மிகச் சிறிய பகுதியினர் தற்போதைய கேரளாவில் கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஶ்ரீ கிருஷ்ணாபுரம் எனும் ஊருக்கு பக்கம் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
எனவே தான் தேவாங்கர்களில் ஒருபகுதியினர் கன்னடமும் ஒருபகுதியினர் தெலுங்கும் பேசுகின்றனர். மொழி வேறுபட்டாலும் குலத்தால் தேவாங்கர்களே.

2. சேலம் தேவாங்கர்கள்:-.

தமிழ்நாட்டில் தேவாங்ககுல சோணாசல மடாதிபதிகள் குருவம்ச பரம்பரையில் முதல் குருவான இராமலிங்க சுவாமிகள் இன்றைக்கு 1150 ஆண்டுகளுக்கு முன் பட்டத்திற்கு வந்தவர் ஆகவே இதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தேவாங்கர்கள் குடியேறிவிட்டார்கள் என்பதை உறுதி செய்யலாம்..
சேலம் ஜில்லாவைச் சேர்ந்த தேவாங்கர்கள், தாங்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான "ஹம்பி"யில் வாழ்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேலம் ஜில்லாவில் தாரமங்கலத்தை அடுத்துள்ள கெட்டிமுதலி வம்சத்தாரின் தலைநகரமான "அமரகுந்தி" என்னும் ஊரே தங்கள் முதல் குடியிருப்பு பகுதி என்று கூறுவதாக "சென்னை கெஜட்-1967 ம்ஆண்டு-சேலம் ஜில்லா-பக்கம் 131-132" ய் திரு A.இராமசாமி என்பவர் குறிப்பிட்டுள்ளார்...


3.காயத்ரீ மந்திரத்தின் மகிமை
நமது இந்திய நாட்டில் முன்பு ஒரு முறை டெல்லியில் ஒரு பெரிய சக்ரவர்த்தி ஆட்சிசெய்து வந்தார். அவருக்கு அறிவிற் சிறந்த ஒரு அமைச்சர் மிகவும் நம்பிக்கையானவராக இருந்து வந்தார்.
ஒரு நாள் அந்த சக்கரவர்த்தியை காண ஒரு பிராமணன் வந்தான். அவன் அவரிடம் யாசகம் வேண்டி வந்தான். அந்த சக்ரவர்த்தி அவனைப் பார்த்து உம்மை பார்த்தால் பிராஹ்மணன் போல் தெரிகிறதே யாசகம் ஏன் வாங்க வந்தீர் என்று கேட்டார். இதைக் கேட்ட அமைசருக்கு மிகவும் மனவருத்தம் உண்டாயிற்று. ஏனென்றால் அவரும் ஒரு பிராஹ்மணரே. ப்ராஹ்மணர் பற்றிய தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும் என்று அமைச்சர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
யாசகம் வாங்கவந்தவனைப் பார்த்து உமக்கு காயத்ரீ மந்திரம் தெரியுமா? அதன் பொருள் தெரியுமா? தெரிந்தால் கூறிவிட்டு பரிசு வாங்கி செல்லுங்கள் என்றார். அதற்கு அந்த யாசகனும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் பொருளையும் கூறிவிட்டு பொருளை வாங்கி சென்றான். மறுநாளும் வந்து இதே மாதிரி கூறிவிட்டு பொருள் வாங்கி செல்லும்படி அமைச்சர் கூறினார். அவனும் அதுபோல் செய்தான். இப்படியே ஒரு நாளைக்கு ஒரு முறை என்பது இருமுறை பல முறையாகி பரிசு வாங்கி செல்வது பழக்கமாகியது. சக்கரவர்த்தியும் தினமும் யாசகன் வருவதை ஆவலோடு எதிர்பார்த்து அவன் கூறும் காயத்ரீ மந்திரத்தையும் அதன் விளக்கத்தையும் கேட்பது வழக்கமாகி விட்டது
ஒரு நாள் திடீரென்று யாசகன் வருவது நின்று விட்டது. சக்கரவர்த்தி யாசகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்து ஏமாற்ற மடைந்தார். அமைச்சரை அழைத்து யாசகன் வராத விபரத்தை கேட்டார். அதற்கு அந்த மதியூகி அமைச்சர் இனிமேல் அந்த யாசகன் வர மாட்டான். அவனை பார்க்க வேண்டுமானால் அவனிருக்குமிடம் தேடி நாம்தான் செல்ல வேண்டும் என்று கூறினார்.
அதற்கு சக்கரவர்த்தி எப்படியும் தேடி கண்டுபிடித்து யாசகனை பார்க்க வேண்டும் என்று கூறி இருவரும் புறப்பட்டு பல இடங்களில் தேடி கடைசியாக ஒருமரத்தடியில் அந்த யாசகனை கண்டார்கள்
அந்த யாசகன் கால்களை மடித்து யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தான். அவனை கண்டவுடன் சக்கரவர்த்திக்கு மெய்சிலிர்த்தது. ஒரு ஞானியைப் போல் அவனது முகத்திலும் உடம்பிலும் தேஜஸ் தெரிந்தது. உடனே சாஸ்டாங்கமாக அவன் எதிரில் விழுந்து வணங்கி எழுந்தார். உடன் வந்த அமைச்சரும் விழுந்து வணங்கி எழுந்தார்.
சக்கரவர்த்தி அமைச்சரை பார்த்து இது எப்படி சாத்தியமாயிற்று. நம்மிடம் யாசகம் வாங்கியவரின் காலில் நாம் விழுந்து வணங்கும் படியானது என்று கேட்டார். அதற்கு அமைச்சர் சக்கரவர்த்தி அவர்களே இவரை நான் முதன் முதலில் பார்க்கும் போதே சிறந்த பண்டிதர் என்று ஊகித்து விட்டேன். வறுமையின் காரணமாக இவர் நம்மிடம் யாசகம் வாங்க வந்தார். இவரை தினந்தோறும் காயத்ரீ மந்திரமும் அதற்குரிய விளக்கமும் கூறி பரிசு பெற்று செல்லுமாறு செய்தோம். அப்படி தொடர்ந்து காயத்ரீ மந்திரத்தைக் கூறி வந்ததால் இவருக்கு ஞானம் வந்து விட்டது. எனவே நமது பரிசு இனிமேல் இவருக்கு தேவை படாது. நாம்தான் இவரை தேடிவந்து. வணங்க வேண்டும் என்று கூறினார்.
இப்படி யாரிடம் யாசகம் வந்தாரோ அந்த சக்கரவர்த்தியே அவர்காலில் விழுந்து வணங்கும்படி சக்தியை, ஞானத்தை அளித்தது காயத்ரீ மந்திரம். அப்படிப் பட்ட அந்த சக்கரவர்த்தி டில்லியை ஆண்ட அக்பர்பாதுஷா தான். அந்த மதியூகி அமைச்சர் பீர்பால். இது வரலாற்று உண்மை. வீரபாலன் என்ற பெயர் வட நாட்டில் பீர்பால் என்று அழைப்பார்கள். பிராமணன் என்பது தேவாங்க பிராமணனைக் குறிக்கும்.
4. அடுத்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியைத் தலைமை இடமாக கொண்டு நெல்லைப் பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை அந்த மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. மன்னராயிற்றே எவ்வளவு வகையான வைதிய முறைகள் உண்டோ அவ்வளவு செய்து பார்த்தும் மன்னனது உடல் நிலை தேறவேயில்லை.
நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போனது. மன்னன் மிகவும் கவலை அடைந்து தலைசிறந்த ஜோதிடர்களை எல்லாம் வர வழைத்து பரிகாரம் கேட்டான். யாரும் ஒன்றும் சரியாக கூற வில்லை. ஒரே ஒரு சோதிடர் மட்டும் ஒரு வழி கூறினார்.
அது என்ன வென்றால் இரும்பினால் எம்தர்மனுடைய சிலை செய்து இரும்பினால் எருமைகடாவாகனம் செய்து இரண்டிலும் நவரத்தினங்கள் பதித்து எமன் சிலையை எருமை வாகனத்தில் அமர்த்தி ஒரு அறையில் வைத்து பூட்டி விட வேண்டும். எவர் ஒருவர் அந்த அறையினுள் சென்று வெளியில் வரும் போது மகிழ்ச்சியுடன் வருகிறாரோ அப்போது மன்னன் உடல் நிலை சரியாகி விடும். அப்படி சரியாகி விட்டால் அந்த சிலையில் உள்ள நவரத்தினங்களை அந்த நபருக்கே கொடுத்து விட வேண்டும். யாரும் மகிழ்ச்சியாக வர வில்லையென்றால் மன்னன் உடல்நிலை தேறவேதேறாது என்று கூறினார்.
சரி கடைசி பட்சமாக இதையும் செய்து விடலாம் என்று மன்னன் கருதி அப்படியே செய்தான். எல்லா இடங்களிலும் செய்தி பரவியது. பலர் நான் நீ என்று வந்தார்கள் அறைக்குள் போனார்கள் போன சிறிதுநேரத்திற்குள் ஐயோ அம்மா என்று பயந்து குரல் எழுப்பி அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். நாடகள் கடந்து கொண்டே சென்றன மன்னன் உடல் நிலை மோசமாகி விட்டது. ஒருநாள் தற்செயலாக இந்த விஷயம் கேள்வி பட்ட கன்னட தேவாங்கப் பிராமணன் அரண்மனைக்கு வந்து மன்னரைப் பார்த்து தான் அந்த அறைக்குள் போய் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூற மன்னன் நீயாவது எந்து உடல் நிலை தேற நல்லவிதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றான்.
அப்படியே ஆகட்டும் என்று கூறி அந்த கன்னட தேவாங்க பிராமணன் அறைக்குள் சென்றான் சற்று நேரம் ஆனது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அந்த கன்னட தேவாங்கப் பிராமணன் சாதாரணமாக மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். சற்று நேரத்தில் மன்னரின் உடல் நிலை சரியாகி விட்டது. மன்னன் மிகவும் மகிழ்ந்து. ஏற்கனவே கூறியபடி இரும்பு பொம்மைகளில் இருந்த நவரத்தினங்களை கன்னடதேவாங்கப் பிராமணனுக்கு கொடுத்து விட்டான். அவனும் வாங்கி கொண்டு தான் செல்வந்தன் ஆனது குறித்து மகிழ்ச்சியுடன் சென்று விட்டான்
.
திடீரென்று மன்னனுக்கு சந்தேகம் வந்தது. மற்றவர்கள் எல்லோரும் அறைக்குள் சென்று அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இந்த கன்னட தேவாங்கப் பிராமணன் மட்டும் சாதாராணமாக வெளியே வந்தான். உள்ளே என்ன நடந்தது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகி அமைச்சரை அழைத்து அந்த பிராமணன் எங்கிருந்தாலும் அழைத்து வரும்படி கூறினான்.
அப்படியே அந்த பிராமணனை அழைத்து வந்து அறையி உள்ளே என்ன நடந்தது என்று கேட்டார்கள். அதற்கு அந்த பிராமணன் கூறினான். அறைக்குள் சென்றவுடன் அந்த எம தர்மன் பொம்மைக்கு உயிர் வந்தது மாதிரி தன் விரல்கள் மூன்றை காட்டியது நான் முடியாது என்று தலையசைத்து விட்டேன். பிறகு பொம்மை இரண்டு விரலைக் காட்டியது அதற்கும் முடியாது என்று தலை அசைத்து விட்டேன். பிறகு ஒரு விரலை காட்டியதும் சம்மதம் என்று கூறி விட்டேன் மொம்மை கைவிரலைக் காட்டியதால் எல்லோரும் பயந்து போய் அலறிக் கொண்டு வெளியேஓடி வந்து விட்டார்கள் என்றான்.
ஒரு வேளை காயத்ரீ மந்திரம் ஜபம் செய்யும் பலனுக்கே அந்த பிராமணன் செல்வந்தன் ஆனான். நெல்லைப் பாண்டிய மன்னனின் உடல் நிலை தேறியது. இதையே மூன்று வேளையோ. தினந்தோறும் அடிக்கடி செய்தால் விளையும் பயனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பின்னர் அந்தப் பாண்டிய மன்னன் கன்னட தேவாங்க பிராமணன் நினைவாக தாமிர பரணி ஆற்றிலிருந்து பாசனவாய்க்கால் அமைத்து, அதற்கு கன்னட தேவாங்க பிராமணன் கால்வாய் என்று பெயர் வைத்தான். நாளடைவில் அது மருவி கன்னடியன் கால்வாய் என்றானது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டைப் பகுதியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் சேரன்மகாதேவி என்னும் ஊரின் அருகில் கன்னடியன் கால்வாய் இன்றும் உபயோகத்தில் இருப்பதைக் காணலாம். தற்போது இது தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.


S.V. ராஜ ரத்தினம்
கரூர்

ஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை(முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )

ஸ்ரீ சக்திகும்ப ஸ்தாபனம்- செய்முறை

அன்னை செளடேஸ்வரின் சக்தி அழைக்கும் முன் கலசத்தில் சில மூலிகைகள், வாசனை திரவியங்கள், ”வீரராயன பணம் (காசு)” ஆகியவற்றை இட்டு அன்னையை ஆவாகனம் செய்யும் காட்சி..ஆக்கம் செல்வன் :பிரேம் குமார் , திருப்பூர் 

கணபதி பூஜா - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )

முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014
கணபதி பூஜா 

.......நாங்கள்தொடங்கும் சகல காரியங்களிலும்
எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர்,
ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார்,
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும்,
பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறோம்.

ஓம் ஈச பத்னிஸ வித்மஹே
சிம்மத்வஜய தீமஹி
தன்னோ செளடி ப்ரசோதயாத்
படைப்பு :திரு தியாகராஜன் , நீலகிரி

வாழ்த்துப்பாடல் (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )

முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 
 வாழ்த்துப்பாடல் 

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
கணபதிராயன் அவனுடை
காலை பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே விடுதலை
கூடி மகிழ்ந்திடுவோம்
சொல்லுக்கடங்காவே…….செளடேஸ்வரி
சூரத்தனங்கலெல்லாம்
வல்லமை தந்திடுவாள் செளடேஸ்வரி
வாழியே என்று துதிப்போம்
வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ…….பகையே
துள்ளி வருகுது வேல்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் – பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

பாடியவர்
செல்வி பவித்ரா ராஜரத்தினம் & co  , கரூர்

குருவருள் - (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )


முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 
குருவருள்

தேவாங்கர்களின் ஐந்து குரு பீடங்களான
காசி, ஸ்ரீ சைலம், ஹேமகூடம், சோணாசலம், சம்புசைலம்
பீடாதிபதிகள்.ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் :- ஹம்பி ஹேமகூட பீடாதிபதியாக ஹம்பியில் ஜெகத்குரு பட்டாபிஷேகம் 30-4–1990 ல் நடைபெற்றது.
இயற்பெயர்- ஶ்ரீ தத்தாத்ரேயஸ்வாமி
கோத்திரம்- மனுமகரிஷி கோத்திரம்
வங்குசம்- நாகாபரணதவரு
தந்தை பெயர்- ஶ்ரீ பணிகெளடர் வம்ச ஹேமகூட பீடத்தின் ஐந்தாவது ஜகத்குருவின் வாரிசு கம்பளி மடம் ஶ்ரீ சங்கரையா சுவாமிகள்
ஹேமகூட பீடம்:- ஶ்ரீ பணிகெளடர் வம்சத்தில் உதித்தவர்களே குருவாக இருந்து வருகின்றனர். இது பீடத்தின் நடைமுறை.


படைப்பு :
S.V.ராஜ ரத்தினம்
கரூர்.

தொட்டப்ப ஆரம்ப காணொளி (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 )

முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014
தொட்டப்ப ஆரம்ப காணொளி

ஆக்கம் :செல்வன் .சோம சுந்தரம் 


ஆடி வருவாய் தாயே... (முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)

ஆடி வருவாய் தாயே...

அடி எடுத்து வைத்து ஆடி ஆடி வருவாய் தாயே....
ஆடியிலே எங்களுடன் ஓடி ஆடி விளையாட..

உனக்காகவே வாசலில் காத்து இருக்கிறோம் தோரணம் கட்டி..
உன் பூ பாதத்தை எடுத்து வைத்து வாருமம்மா..

மஞ்சள் அரைத்து வைத்துள்ளோம்...
மங்களமே நீ வருக...

குங்குமத்தை குவித்துளோம்....
எங்கள் குல தாயே வருக...

ஐந்து நாட்களுக்கு அழைக்கவில்லை...
உன்னுடன் ஐக்கியமாக காத்திருக்கிறோம்..

உன் பொற்பாதத்தில் சரணடைந்தோம்..
எங்களை நீ காக்க வேண்டும் தாயே...

                                  -திரு ஜெயக்குமார், திருப்பூர்

முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014
 

7/22/14

முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014


 முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014 

இதுவரை எத்தனையோ திருவிழாக்களை  நம் சமூகம் கண்டுள்ளது. ஆனால் E-Festival என்று கூறப்படும் முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014  ஆடி அமாவாசை அம்மன் அவதார திருநாளை  முன்னிட்டு சிறப்பாக நடைபெற உள்ளது . அதிலும் நம் சமூக முகநூல் மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த சவுடேஸ்வரி அம்மன் படங்களை தங்கள் படம் வைக்கும் இடத்தில் வைத்து என் தாய் வருகிறாள் .... நல் அருள் தருவாள் என்று வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் அன்னைக்கு படைக்க பல ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்... இது சவுண்டம்மன் திருவிழாக்களில் ஒரு சகாப்தம் என்றே கூறலாம் ......  அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக!!!


முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 கவிதை

நூல் எடுத்து ஆடை நெய்ய சொன்ன அன்னையே
முகநூலில் உனக்குப் பண்டிகை அம்மா எங்கள் தாயே
முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தெரியவில்லை-உன்
முக்தியாலே ஓன்றுக்கூடினோமே!!!

ஐந்து வர்ண சேலையில்
ஐந்து நாட்கள் முகநூலில்
ஐக்கியம் ஆக வேண்டும் தாயே
எங்கள் குலத் தேவியே
இராமலிங்க சவுடேஸ்வரியே!!!

                             - நிதீஷ் செந்தூர்


நன்றி முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் 

7/18/14

திருப்பூர் குமாரனந்த புரம் (பறையன்காடு) ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு அழைப்பிதழ்

திருப்பூர் குமாரனந்த புரம் (பறையன்காடு) ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் ஆடி வெள்ளி  சிறப்பு வழிபாடு அழைப்பிதழ்

நன்றி திரு பிரேம்குமார்

7/17/14

சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

சேலம் அம்மாபேட்டை தெலுங்கு தேவாங்கர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் புகைப்பட தொகுப்பு


நன்றி திரு ரவி பழனிச்சாமி சேலம்