முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014
இதுவரை எத்தனையோ திருவிழாக்களை நம் சமூகம் கண்டுள்ளது. ஆனால் E-Festival என்று கூறப்படும் முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா 2014 ஆடி அமாவாசை அம்மன் அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெற உள்ளது . அதிலும் நம் சமூக முகநூல் மக்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த சவுடேஸ்வரி அம்மன் படங்களை தங்கள் படம் வைக்கும் இடத்தில் வைத்து என் தாய் வருகிறாள் .... நல் அருள் தருவாள் என்று வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனைவரும் அன்னைக்கு படைக்க பல ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்... இது சவுண்டம்மன் திருவிழாக்களில் ஒரு சகாப்தம் என்றே கூறலாம் ...... அனைவரும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெருக!!!
முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014 கவிதை
நூல் எடுத்து ஆடை நெய்ய சொன்ன அன்னையே
முகநூலில் உனக்குப் பண்டிகை அம்மா எங்கள் தாயே
முகங்கள் பார்த்ததில்லை
முகவரிகள் தெரியவில்லை-உன்
முக்தியாலே ஓன்றுக்கூடினோமே!!!
ஐந்து வர்ண சேலையில்
ஐந்து நாட்கள் முகநூலில்
ஐக்கியம் ஆக வேண்டும் தாயே
எங்கள் குலத் தேவியே
இராமலிங்க சவுடேஸ்வரியே!!!
- நிதீஷ் செந்தூர்
நன்றி முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்
No comments:
Post a Comment