அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/9/15

"தேவாங்க புராணம்" நூல் சிறப்புக்கள்/ முக்கியத்துவம்

"தேவாங்க புராணம்" நூல் சிறப்புக்கள்/ முக்கியத்துவம் 


நன்றி திரு அ. தியாகராஜன்,குன்னூர் 
http://www.edubilla.com/onbook/devanga-puranam/
 

5/31/15

அஜ்ஜி அம்மன் வரலாறு

பெரிய குமாரபாளையம் , கப்பேலார் வம்சத்தின் அஜ்ஜி அம்மன் வரலாறு :

தேவாங்க வம்சம் கப்பேலார் குல தெய்வமாக விளங்கும் பெரிய குமாரபாளையம் சக்தி சொரூபமாக விளங்கும் அஜ்ஜி அம்மன் திருக்கோவில் ஆகும். கருணை மிகுந்த தெய்வமாகவும், கப்பேலார் வம்ச மக்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் அஜ்ஜி அம்மன் திருக்கோவில் , உடுமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. திருப்பூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது.

அம்மனின் திருவிளையாடல் 

தெய்வ சக்தி மிகுந்த அஜ்ஜி அம்மன் பக்தர் அழைத்தவுடன் ஓடி வந்து காப்பாற்றும் தெய்வமாகவும், குழந்தை செல்வத்தை அருளும் தெய்வமாகவும் , நோயற்ற வாழ்வு வாழ அருளும் தெய்வமாகவும், பொருட்செல்வம் , கல்விச்செல்வம் அருளும் தெய்வமாகவும் விளங்கி வருகிறது.


வணங்கும் முறை
கப்பேலார் வம்சத்தில் பிறந்த தேவாங்க சமூக மக்கள் உலகில் எங்கு இருந்தாலும் வருடம் ஒரு முறையாவது இங்கு வந்து ஆலயத்தில் அம்மன் அருள் பெற்றால் தீராத வினைகள் அகலும். குடும்பத்தில் செல்வாக்குடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கப்பேலார் வம்ச மக்களுக்கு பெரிய வீடாக பெரிய குமாரபாளையம் அஜ்ஜி அம்மன் கோவில் கொண்டுள்ளார். இந்த அம்மனின் கிளைகள் பூளவாடி, வாளவாடி, பெல்லம்பட்டி, ஆகிய ஊர்களில் கொண்டாடி வருகின்றனர். எங்கு வேண்டுமானாலும் சூழ்நிலை காரணமாக அம்மனை வேண்டலாம். அழைத்தால் ஓடி ஓடி வருவாள் .

அம்மனின் தோற்றம் 

பெரிய குளம் நாட்டில் தேவாங்க சமூக மக்கள் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அப்போது தேவாங்க சமூக மக்களின் பெண் மகளை நவாப் திருமணம் செய்ய ஆயத்தம் ஆனார். மன்னரின் ஆதிக்கத்தால் என்ன செய்வது என்று அறியாது கண் கலங்கினார். மனமுருகி வேண்டினார்.' அப்போது நான் பார்த்துகொள்கிறேன் , என் ஆலயத்தில் தீபம் ஏற்றி விட்டு கதவை சாத்தி விடு' என்று கூறினாள். உடனே விபூதி தட்டையும் மணி மற்றும் அம்மனின் பெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறினர்.

தேவாங்க சமூக மக்களின் நடவடிக்கை மன்னரின் காதுக்கு செய்தி எட்டியது.உடனே குதிரை வீரர்களின் புடை சூழ வந்து கொண்டு இருந்தான். அப்போது தேவாங்க சமூக மக்கள் என்ன செய்வது என்று அறியாது அம்மனிடம் மனம் உருகி வேண்டினர். அப்போது அம்மன் இவர்களிடம் 'விபூதியை எடுத்து மூன்று முறை போடுங்கள்' என்று அருள் புரிந்தாள்.விபூதியை போட்டவுடன் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் இக்கரைக்கு வர முடியாமல் போனான். அரசன் இவர்களின் திறமையை உணர்ந்து திரும்பி சென்று விட்டனர். தேவாங்க சமூக மக்கள் ஊர் ஊரக விபூதி தட்டையும் , மணி அம்மன் பெட்டி ஆகியவற்றை தூக்கிகொண்டு கிராமத்தில் கிடைத்த வேலையை செய்து கொண்டு கூலி பெற்று வாழ்கை நடத்தி வந்தார்கள்.ஊர் ஊராக வந்த போது சின்ன பூளவாடி என்ற கிராமத்தில் வந்து தங்கி வேலை செய்து வாழ்ந்தார்கள். இவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது அம்மனின் பெட்டி , விபூதி தட்டு , மணி இவற்றை வைக்கோல் போருக்கு உள்ளே ஒளித்து வைத்து இருந்தார்கள்.

தோட்டத்து சொந்தக்காரர் ஒருநாள் வைக்கோல் எடுக்க சென்ற போது நாக சர்ப்பம் இவரை வைக்கோல் போருக்கு அருகே நெருங்க விடாமல் பாதுகாத்து வந்தது. இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தேவாங்க சமூக மக்களுக்கு செய்தி எட்டியது. உடனே ஊர் மக்களிடம் நடந்த விபரத்தை கூறினர், ஊர்மக்கள் அன்று முதல் அம்மனை வணங்க ஆரம்பித்தனர்.

அம்மனுக்கு ஆலயம் உருவாகுதல்
பெரிய குமாரபாளையம் லட்சுமண செட்டியார் வகையறா , முத்தஞ்செட்டியார், சவுண்டப்ப செட்டியார் , கந்தசாமி செட்டியார் வகையறா, அப்பிலிங்க செட்டியார் வகையறா, பூளவாடி சமாஜி வகையறா, திருப்பூர் நடராஜ் செட்டியார் வகையறா ஆகியோர் இணைந்து ஒரு மேடை அமைத்து அம்மனை வழிபட ஆரம்பித்தனர். கோயில் நிர்வாகத்தை பெரிய பொன்னான், சின்ன பொன்னான் ஆகிய இருவரும் நடத்தி வந்தனர்.ஒரு நாள் திடீரென்று பெரிய பொன்னான் என்று கூறும் கந்தசாமி செட்டியார் , M. சந்திரசேகரை அழைத்து எங்களுக்கு பின்னல் நீதான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இறைவனை வழிபட்டும் இறைவனுக்கு தொண்டு புரிய வேண்டும், என்று கட்டளை இட்டார்." இதை கண்டிப்பாக நடத்தி கொடுத்தால் தான் உனது குடும்பம் குழந்தைகளும் நன்றாக செல்வ செழிப்புடன் இருப்பார்கள்". என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தேன். மூன்று நாட்கள் கடும் விரதம் இருக்க சொன்னார்கள். இருந்தேன், அப்போது எலுமிச்சை கனியும், தெய்வ சக்தி படைத்த சிறிய பெட்டி ஒன்றை கொடுத்து " நீ அழைக்கும்போது ஓடி வருவேன் உனக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பேன்" என்று கூறினார்.
தெய்வ சக்தி படைத்த அந்த சிறிய பெட்டியில் என்ன இருக்கிறது என்று இதுவரை பார்த்ததில்லை. இதை கவனமுடன் பார்த்து வரவேண்டும் என்று கூறி விட்டனர். அம்மன் திருவடிகளை வணங்கினால் தீராத துன்பங்களை தீர்த்து அருள்புரியும் சக்தியாக விளங்குவாள்.

கனவில் அம்மன் தோன்றுதல்

காங்கேயம் M. சந்திரசேகர் அவர்களின் மனைவியிடம் கனவில் வந்து கப்பேலார் வம்சத்து பெரிய நாயகியாக விளங்கும் அஜ்ஜி அம்மன் நாக சர்ப்பம் வடிவில் வந்து "ஏன் என்னை கவனிபதில்லை என்றும் கோயிலில் வந்து ஊழியம் செய்ய வேண்டும் " என்று அருளியது
நன்றி : காங்கேயம் M.சந்திரசேகர், தேவாங்கர் இதழ்
பல மடமனைகள் , கெத்திகை மனைகள் உருவாக மூல காரணமாக இருந்த இந்த அஜ்ஜி அம்மனை வணங்கி நலம் பெறுவோம் .

3/26/15

தேவதாசிமைய்யன் அவதார திருநாள் கொண்டாட்டம்:தேவதாசிமைய்யன் அவதார திருநாள் கொண்டாட்டம்:

இன்று கர்நாடகமெங்கும்  தேவல மகரிஷியின் ஏழாவது அவதாரமான "ஆதி வச்சனகார .தேவர தாசிமைய்யன்"   அவர்களின் பிறந்த நாள்(25-03-2015) சிறப்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது . அதில் ஒரு முக்கிய பகுதியாக பெங்களுரு சட்டசபை கட்டிடமான விதான்சௌதா வளாகத்தில் உள்ள அரங்கில் முதல்வர். திரு சித்தராமையா  தலைமை வகிக்க. நமது தேவாங்க குல ஹம்பி ஹேமகூட குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிஜி அவர்களுடன் இணைந்து கர்நாடகாவில் உள்ள மற்ற நெசவாளர் சமூகத்தின் குருக்கள் நால்வரும் முன்னிலை வகிக்க... மற்றும் பல முக்கிய மந்திரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பு,  நிகழ்ச்சியின் வருணனை .......


விழா பகல் 11 மணிக்கு MLA  மாளிகையில் அனைத்து நெசவாளர் குல குரு மார்களையும்  அழைத்துக்கொண்டு கர்நாடக முக்கிய மந்திரி. உமாஸ்ரீ,  திரு.லக்ஷ்மி நாராயணன்,  திரு. கொண்டப்பன்  ஆகியோர் புடை சூழ .. கர்நாடகா மாநிலத்தின் கிராமிய கலைங்கர்களின் கலை நிகழ்சிகளுடன்  தொடங்கிய ஊர்வலம் . விழா நடக்கும் கர்நாடக சட்டசபை வளாகமான "விதான் சௌதா" வை அடைந்தது அங்கு முதல்வர் சித்தராமையா   ஊர்வலத்தை வரவேற்றார்....
ஊர்வலத்தில் தேவதாசிமையன் அவர்கள் புகழை பரசைற்றும் விதத்தில் கர்நாடக அரசு  ஒரு வண்ண ஊர்தியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பின் அங்கு வந்திருந்த ஐந்து குரு மார்கள், கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா , மற்றும் அவரது தலைமையிலான மந்திரிகள் பலர் மேடையில் அமர்ந்தார்கள். பின் கன்னட வணகப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. பின் தாசிமைய்யனுக்கு நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

கர்நாடக கலாச்சார முக்கிய மந்திரி நமது உமாஸ்ரீ   அவர்கள் அனைவரையும் வரவேற்றார் அப்பொழுது "ஜெய் நேக்காரா  ஜெய் ஜெய் நேக்காரா" கோஷத்துடன் குத்துவிளக்கு ஏற்றி முதல்வர், கொண்டையன், ஆஞ்சநேயா, சபாநாயகர் , குல குருக்கள் அனைவரும் மலர்தூவி மேடையில் வைக்கப்படிருந்த ஆதி வச்சனகாரர் தேவ தாசிமைய்யன் அவர்களின் படத்துக்கு மரியாதை செய்தனர்.

பின்னர் சபாநாயகர்,  கொண்டைய்யன், அவர்கள் எல்லாம் தேவ தாசிமைய்யனை புகழ்ந்து பேசினர். அடுத்ததாக நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான நெசவாளர்களின் ஒற்றுமை சங்கம் சார்பில் பெங்களுரு சுரேஷ் அவர்கள் இயக்கிய " ஜெய் நேக்கரா " என்னும்  என்னும் நேசவாளிகளின் அன்றாட வாழ்வு மற்றும் நெசவை சித்தரிக்கும் விதத்தில் புதிய வீடியோ பாடல்களும் ஒரு குறும் படமும் ஒரு காணொளி தட்டில் (வீடியோ சிடி ) யாக வெளியிடப்பட்டது...அதில் எப்படி ஒரு துணி தயாராகிறது என்பதை மிகவும் அருமையான  மூன்று பாடல்களுடன் கூடிய டாகுமெண்டரி படமாக அமைந்திருந்தது.


 நமது சிறுமுகை நெசவாளர்கள் எப்படி திருக்குறளை சேலையில் நெய்து நமது வள்ளுவருக்கு மரியாதை செய்தார்களோ அவ்வாறே கர்நாடகத்தின் " ஆதி வச்சனகார .தேவர தாசிமைய்யன்" அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தாசிமைய்யன் அவர்களின் திருவுருவத்தை கைத்தறியில் நெய்து மற்றும் அவரின் 176 கவிதைகள் (வச்சனா ) வும் தறியில் நெய்து ஒரு புத்தக வடிவில் வெளியிட்டனர் ..

பின்னர் கர்நாடக முதல்வர். திரு.சித்தராமைய்யா   அவர்கள் பேசுகையில்... இவ்வாறன நிகழ்சிகள் நமது கன்னட மொழியை பாதுகாக்க பாடுபட்டவர்களை கௌரவிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்ய படுகிறது . மேலும் சென்ற ஆட்சியில் தேவ தாசிமைய்யன் அவர்களின் 1000 மாவது ஆண்டுவிழா சிறப்பாக அவரின் அவதார ஸ்தலமான மொதனூரில் கொண்டாடினார்கள் பின் எதுவும் செய்யவில்லை இன்று தான் உமாஸ்ரீ, கொண்டைய்யன் , ஆஞ்சநேயா , லக்ஷ்மி நாராயணன் அவர்களின் கடுமையான உழைப்பின் பயனாக நடக்கிறது... இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் உமாஸ்ரீ அவர்கள் சென்ற ஆட்சியில் இதே போல பாடுபட்டு ஏற்பாடு செய்தார் .. இப்பொழுதும் அவரே இந்த ஆட்சியிலும் பங்கு பெற்று இந்தனை நடத்தி யுள்ளார் இது பாராட்டபட வேண்டிய விஷயம் . ஜாதி ஒரு கருவியே .... அதனை தாண்டி நாம் செய்யும் தொழில் மூலம் ஒன்றிணைந்து "கர்நாடக ராஜ்யத நேக்காரா ஒக்கூட்ட ( சங்கம் )" ஒரு பலமான சங்கமாக உருவெடுத்து பல நல்ல செயல்களை செய்கிறது பயனும் பெறுகிறார்கள் மக்கள் இந்தனை நடத்திய லக்ஷ்மினரயணன், உமா ஸ்ரீ அவர்களுக்கும் ஒன்றிணைந்த அனைத்து 29 நேக்கார பங்களங்களுக்கும்.. அவர்களை வழிநடத்தி செல்லும் மேடையில் அமர்ந்திருக்கும் குரு மார்களுக்கும் பாராடுக்கள். மேலும் தாசிமைய்யன் அவர்கள் பிறந்த ஊரான முதனூரையும் அவர்கள் வழிபட்ட ராமநாதர் ஆலய  மேம்பாட்டிற்கும் நமது கர்நாடக அரசு சார்பில் ருபாய் "இரண்டு கோடி நிதி" வழங்கியுள்ளதை நினைவு கூறுவதாக தெரிவித்தார்.


பின் திரு லக்ஷ்மி நாராயணன் அவர்கள் " "கர்நாடக ராஜ்யத நேக்காரா ஒக்கூட்ட ( சங்கம் )" தின் சார்பாக நன்றியுரையையும்  நினைவு பரிசும் வழங்கினர் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தாசிமைய்யன் அவர்களின் 176 வச்சனங்கள் (கவிகள்)  அடங்கிய புத்தகமும் , அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது .


மக்கள்  ஒன்றுபட்டால் எவ்வாறான சாதனையும் சரித்திரத்தையும்  நிகழ்த்தலாம் என கர்நாடக மாநில நெசவாளர்கள் நிரூபித்துள்ளர்கள் . இந்த நிகழ்ச்சி நடக்க அரும்பாடுபட்ட நமது தேவாங்க குல குரு , உமா ஸ்ரீ , லக்ஷ்மி நாராயணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நன்றி
.பார்த்திபன் , பொள்ளாச்சி
 மேலும் புகைப்படங்கள் :