அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/12/13

கங்கணம் கட்டுதலின் விதிமுறைகள் [ காப்பு ]

கங்கணம் கட்டுதல் :-

 முதன் முதலில் தேவலர் தறியில் அமர்ந்து துணிகளை நெய்ய ஆரம்பிக்கும் முன் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனை தியானித்தார். அம்மனும் தோன்றி தன் கையில் இருந்த நவரத்ன கங்கணத்தை தேவலரின் கரத்தில் அணிவித்து "இனி எந்த காரியத்தையும் சுலபமாக முடிக்கும் ஆற்றலை பெறுவாய்" என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

              இதனை மனதில் கொண்டுத்தான் அனைத்து சுப காரியங்களுக்கும்.  ஆரம்பிக்கும் முன் அம்மனை நினைத்து கங்கணம் கட்டிக்கொள்கிறோம். கங்கணம் கட்டிக்கொண்டு ஆரம்பிக்கும்  செயல்களுக்கு எந்த இடையூறும் ஏற்ப்படாது.
              கோயில் விசேஷத்திற்கு விரதம் இருப்பவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டிய முறைகள்.
  
               கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்து  சேர்த்து கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் அதன் மேல்  மஞ்சள் துணியால் விரலி மஞ்சளும் ,வெற்றிலையும் தெரியா வண்ணம் கட்டிகொள்ள வேண்டும் .இந்த கங்கணத்தை செட்டியார் ,பூசாரி கட்டி விட வேண்டும் .இதை கோயில் விழாவிற்கு 13 நாட்கள் முன்பிருந்து கடைசி நாள் வரை கட்டிக் கொள்ளலாம்.

விதி முறைகள் :-
     
 1.  காலை ,இரவு  இரண்டு நேரம் குளிக்க வேண்டும் 
 2.  காலணிகள் போட்டு நடக்கக்  கூடாது 
 3.  திருமணம் ஆனவர்கள் தனியாக படுக்க வேண்டும் 
 4.  கட்டிலில் படுக்கக் கூடாது தரையில் புதிய பெட்சீட்களை விரித்தும் தலைக்கு தலைகானி பயன்படுத்தாமல் புதிய பெட்ஷீட்களையே தலைக்கும் வைத்து  பயன்படுத்த வேண்டும் அல்லது  பழைய ,புதிய மஞ்சள் வேஷ்டி ,சேலைகளை விரிபுக்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். 
 5.  சாப்பிடும் தட்டு விரத நாட்களில் மட்டும் பயன்படுத்தும் தட்டு இருந்தால் அதில் சாப்பிடலாம் அல்லது வாழை இலை போட்டு சாப்பிட வேண்டும் 
 6.  நம் வீட்டில் நம் ஒருவர் மட்டும் கங்கணம் கட்டியிருந்தால் சாப்பாடு வகைகளை சமைத்தவுடன் தனியாக எடுத்து வைத்துவிட்டு பிறகு மற்றவர்கள் தொட வேண்டும்.  தூரமான பெண்கள் சமைத்த உணவை சாப்பிடக் கூடாது 
  7.  அடுத்தவர் வீட்டில் தண்ணீர் கூட அருந்தக்கூடாது 
  8.  ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் சாப்பிடக் கூடிய அவசியம் ஏற்பட்டால் வெஜிடேரியன் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட வேண்டும் வாழையிலை போட்டு சாப்பிட வேண்டும் 
  9.  கடைகளில் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும் தவிர்க்க முடியாத நேரங்களில் புதிய டீ  கப்பில் அருந்தவும்

10. துக்க காரியங்கள், ருது சடங்குகள் இவற்றில் கலந்து கொள்ளக் கூடாது.

இராஜ வம்ச மம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச,
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

பரமசிவன் நெத்தி கண்ணுலித்து, பந்த தம்மா நம்மு வம்ச
பாற்கடல் திருமாளுத்தற, சக்கர ஆயுதன தெய்தது நம்மு வம்சத் தம்மா
பரமசிவன்தர வெற்றின கொடா, நந்தி கொடின தெய்தது நம்மு வம்ச
பார்வதி, சௌடாம்பிகங்கே பந்து காட்சி கொட்டுது நம்மு வம்சகத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட  தம்மா நம்மு வம்ச

தேவுரியனு, மனுஷ மக்குளியனு மானன காப்பாத்தா, அங்கி கொட்டுது நம்மு வம்ச
தேவுர்களியே அங்கி கொட்டுதுனாலே, தேவ அங்கம்ந்து  எசுரு  தெய்தது  நம்மு வம்சத் தம்மா
சூரிய தேவனோட தங்கின மதிவே மாடிது நம்மு வம்ச
அத்து சாவரே குலங்கே பெரிகிது நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

ஆபத்துந்து கூங்கிறே ஓடோடி பத்தெனந்து, சவுண்டம்ம வாக்கு கொட்டுது  நம்மு வம்சகத் தம்மா
அமாவாசை தினதிலி, சௌடம்மன மொக்கி கொண்டாடாது நம்மு வம்சத் தம்மா
அம்முனு சலங்கெ சத்துதிலி, ஏம்மாந்தது நம்மு வம்ச
அதுனாலே, சலங்கே கட்டிண்டு, கத்தி ஆக்கி அம்மன மொக்காது  நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச                                                                                                   தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

சாவித்திரி தேவின காயத்திரி தேவிங்கே, உருவாசி கொட்டுது நம்மு வம்ச
காரிய சித்தி ஆகக்க, பூணூல் உருவாசி கொட்டுது நம்மு வம்சத் தம்மா
காயத்திரி தேவியே, மூறாவது காலு கொட்டுது  நம்மு வம்ச
மந்திரலே மகா மந்திர, காயத்ரி மந்திரன கொட்டுது நம்மு வம்சத் தம்மா

இராஜ வம்ச மம்மா நம்மு தேவாங்கர் வம்ச
தொட்டு ராஜ்ஜியன கட்டி ஆண்ட தம்மா நம்மு வம்ச

சௌடம்மவே பந்து,  கங்கன கட்டிபுட்டுது நம்மு வம்சகத் தம்மா
சௌடம்முனியே கரக எத்தி மொக்காது நம்மு வம்சத் தம்மா - அம்மா!
சௌடம்மா!  கையெத்தி மொக்குத் தெரம்மா, நம்மு வம்சன காபாத்து பேக்கம்மா.
சௌடம்மா தாயே, சவுடாம்பிகை  அம்மா.

                                                *****************************************

ஆக்கம் :-

          S.V. ராஜ ரத்தினம்,   செங்குந்தபுரம், கரூர்.

சௌடாம்பிகை அம்மன் சக்தி நிலை நிறுத்துதல்

சக்தி நிறுத்துதல் :- சக்தி நிறுத்துவது என்பது சௌடாம்பிகை அம்மன் கோவில்களில் எப்பொழுதாவது அம்மன் கனவில் வந்து சொல்வதை வைத்து செய்வது. இந்த சக்தி நிறுத்தும் விழா காலங்களில். மற்ற விழா காலத்தை விட அதிக நாள் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். குறைந்த பட்சம் 30 நாட்களாவது இருப்பார்கள். அந்த ஊரின் அனைத்து தேவாங்கர் மக்களும் கடுமையான கட்டுப்பாட்டுடன்  விரதம் இருப்பார்கள். ஒரு முறை ஒரு கோவிலில் சக்தி நிறுத்தினால் அடுத்து சக்தி நிறுத்த  20 வருடம் 25 வருடத்திற்கு மேல் ஆகும்.
 சக்தி நிறுத்தும் விதம் :-  புதிய மண் சட்டியில் நிரம்ப தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். பின் அந்த சட்டியின் மேல் விளிம்பில் அம்மனின் சக்தியான ஜம்முதாடு கத்தியை நிறுத்துவார்கள். மூன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை உள்ள அந்த கத்தி அப்படியே நிற்கும். எப்பொழுது அந்த கத்தி கீழே சாயும் என்பதை யாராவது ஒரு பெண் மணிக்கு சாமிவந்து சாமியாடி சொல்லும். அந்த நேரத்தில் துணியை விரித்து பிடித்து கொண்டிருப்பார்கள் அது தானாக சாய்ந்து விழும்.  குறைந்த பட்சம் 20 மணி நேரம் நிற்கும்.
சக்தி நிறுத்தும் முறை :- ஜம்முதாடு கத்தியை பூனுலில் கட்டி பூனூலின் இரண்டு முனைகளை இருவர் பிடித்துக் கொண்டு கத்தியின் முனையை மண் சட்டியின் விளிம்பில் வைப்பார்கள். கத்தி நிற்கும் வரை ஆள் மாற்றி ஆள் மாற்றி பிடிப்பார்கள். நின்ற உடன் பூனூலை விட்டு விடுவார்கள். 
              இன்னொரு முறை ஜம்முதாடு கத்தியை கையில் பிடித்துக் கொண்டு அதன் முனையை  மண் சட்டி விளிம்பில் வைப்பார்கள். அது தானாக நிற்கவில்லை என்றால் அடுத்த முக்கியஸ்தரிடம் கொடுப்பார். அது தானாக நிற்கும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் நிறுத்திக் கொண்டே இருப்பார்கள் 
               சக்தி நிறுத்தும் போது  30 நிமிடத்திற்குள்  நின்றாலும் நிற்கும் சில நேரம் 5 மணி, 6 மணி நேரத்திற்கு மேல் கூட ஆகும். சக்தி நிறுத்தும் போது அலகு வீரர்கள் கத்தி போடுவார்கள் .  நேரம் செல்ல, செல்ல கத்தி போடக் கூடியவர்களின் வேகம் மற்றும் ஆவேசம் அதிகமாகும். சக்தி நின்று விட்டால் குறைந்த பட்சம் 20 மணி நேரம் வரை நிற்கும்.
           இது வரை  சித்தையங்கோட்டையில்  2009 லும், அருப்புக்கோட்டை ஏரியாவில் உள்ள  கல்குறிச்சியில்  2009 லும், நீராவியில்   2010 லும், கட்டங்குடியில் 2011 லும் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள்.
           நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  ஒஸக் கோட்டையில்  10 - 2 - 2013 ல் சக்தி நிறுத்தி இருக்கிறார்கள். அதன் புகைப்படம் 

திருப்பூர் மாவட்டம்  திருப்பூர் மேட்டுப்பாளையம் 2012 ல்.

எங்கள் குலதெய்வம்

" எங்கள் குலதெய்வம் என்றும் அருள்வாள் "
எங்கள் குலதெய்வம் என்றும் அருளுவாள் எங்கள் ஈஸ்வரியே
நாளும் உடன் வந்து காத்திடும் தெய்வம் எங்கள் ஈஸ்வரியே
சாமுண்டேஸ்வரி சடுதியில் வந்திடு எங்கள் ஈஸ்வரியே
சகலநலம் தரும் எங்கள் குலதெய்வம் சௌடேஸ்வரி நீயே ! (எங்கள்)

சந்ததி காத்து சர்வநலம் தரும் சாமுண்டேஸ்வரியே
சிம்ம வாகினி தேவி திரிசூலம் ஏந்தி
சிவனுடன் இங்கு வந்தாய்
இராமலிங்க சௌடேஸ்வரி என்றுமானாய்! (எங்கள்)

காமாட்சி மீனாட்சி கற்பகம் என்றாலும்
எல்லாமே நீதானம்மா அபிராமி கருமாரி
சிவகாமி மகமாயி என்றாலும் நீதானம்மா! (எங்கள்)

கருவாகி உருவாகி வந்திடும் உயிர்கட்கு
எல்லாமே நீதானம்மா முடிவாகும் வாழ்கையில்
இடைவாழும் வாழ்கையில் என்றுமே நீதானம்மா ! (எங்கள்)

நோய்நொடி தீர்ந்து சௌபாக்கியம் தருவாய்
சௌடேஸ்வரி நீயம்மா - வாழ்கையில்
நொடிந்து விழாமல் தாங்கியே நிற்பாய்
உலகத்தாயே நீதானம்மா ! (எங்கள்)
புவனேஸ்வரி சர்வேஸ்வரி லோகேஸ்வரி
மாதேஸ்வரி சித்தேஸ்வரி ராஜேஸ்வரி
எல்லாமே நீதானம்மா!
இராமலிங்க சௌடேஸ்வரி நீதானம்மா ! (எங்கள்)
- நன்றி
சுலோச்சனா சௌந்தரராஜன், இசைக்கனிகள் புத்கம்(2009) -அருள் பதிப்பகம்.

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை
அறம் வளர் நாயகியே !
அகிலம் போற்றும் அன்னையே !!
அத்திவரதனின் அற்புதத்தங்கையே !
பரந்தாமனில் பாதியே!!
தேவாங்க குலத்தை தோற்றுவித்த தாய்
சௌடாம்பிகை நீயே !!
சுடரொளியாய் மின்னும் மணிமகுடம் தரித்து
சூடாம்பிகை ஆனாய் !
சிலிர்த்திடும் சிங்கத்தின் மீது அமர்ந்து
சிம்ஹவாகினி ஆனாய் !!
தேவலனை அசுரரிடமிருந்து ஆட்கொண்டாய்
தேவாங்க குலமகளே !!
மாசி சிவன்ராதிரியில் பள்ளயத்து பூஜை
காணும் செங்கமல நாயகியே !
அலகு சேவை கண்டு மனம் நெகிழ்ந்து -
பத்தாயிரம் குலங்களை வாழ வைக்கும்
சந்திரமதியே !!!
அச்சு வெல்ல கோட்டை கட்டி !
அழகு கரும்பு பந்தலிட்டு !!
வண்ண வண்ண பூமாலை சூட்டி !
வீர குமாரர்கள் கத்தியிட்டு !!
தெண்டகங்கள் சொல்ல கேட்டு !
மகா சக்தியாய் - ஸ்ரீ சாமுண்டியாய்
மகா ஜோதியாய் - பூக்குண்டமாய் அருளி!!
பச்சிளம் குழந்தையாய் அடம்பிடித்து !!
இரத்தின ராஜ சிம்ஹாசனம் தரித்து -
பெரிய நோன்பில் கொலுவிருக்கும்
வீர சௌடேஸ்வரி தாயே !!
நெய்வாளர்கள் நாங்கள் அல்லும்பகலும்
பாடுபட்டு - ஒற்றுமையாய்
நெசவு தொழில் புரிந்து இப்பாரினில்
வாழ அருள் புரிவாயே !!
எங்கள் குல தெய்வமே !!!
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகையே !!!
- ர.பார்த்திபன்
பொள்ளாச்சி