அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/12/13

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை
அறம் வளர் நாயகியே !
அகிலம் போற்றும் அன்னையே !!
அத்திவரதனின் அற்புதத்தங்கையே !
பரந்தாமனில் பாதியே!!
தேவாங்க குலத்தை தோற்றுவித்த தாய்
சௌடாம்பிகை நீயே !!
சுடரொளியாய் மின்னும் மணிமகுடம் தரித்து
சூடாம்பிகை ஆனாய் !
சிலிர்த்திடும் சிங்கத்தின் மீது அமர்ந்து
சிம்ஹவாகினி ஆனாய் !!
தேவலனை அசுரரிடமிருந்து ஆட்கொண்டாய்
தேவாங்க குலமகளே !!
மாசி சிவன்ராதிரியில் பள்ளயத்து பூஜை
காணும் செங்கமல நாயகியே !
அலகு சேவை கண்டு மனம் நெகிழ்ந்து -
பத்தாயிரம் குலங்களை வாழ வைக்கும்
சந்திரமதியே !!!
அச்சு வெல்ல கோட்டை கட்டி !
அழகு கரும்பு பந்தலிட்டு !!
வண்ண வண்ண பூமாலை சூட்டி !
வீர குமாரர்கள் கத்தியிட்டு !!
தெண்டகங்கள் சொல்ல கேட்டு !
மகா சக்தியாய் - ஸ்ரீ சாமுண்டியாய்
மகா ஜோதியாய் - பூக்குண்டமாய் அருளி!!
பச்சிளம் குழந்தையாய் அடம்பிடித்து !!
இரத்தின ராஜ சிம்ஹாசனம் தரித்து -
பெரிய நோன்பில் கொலுவிருக்கும்
வீர சௌடேஸ்வரி தாயே !!
நெய்வாளர்கள் நாங்கள் அல்லும்பகலும்
பாடுபட்டு - ஒற்றுமையாய்
நெசவு தொழில் புரிந்து இப்பாரினில்
வாழ அருள் புரிவாயே !!
எங்கள் குல தெய்வமே !!!
ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகையே !!!
- ர.பார்த்திபன்
பொள்ளாச்சி

No comments:

Post a Comment