அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/12/13

எங்கள் குலதெய்வம்

" எங்கள் குலதெய்வம் என்றும் அருள்வாள் "
எங்கள் குலதெய்வம் என்றும் அருளுவாள் எங்கள் ஈஸ்வரியே
நாளும் உடன் வந்து காத்திடும் தெய்வம் எங்கள் ஈஸ்வரியே
சாமுண்டேஸ்வரி சடுதியில் வந்திடு எங்கள் ஈஸ்வரியே
சகலநலம் தரும் எங்கள் குலதெய்வம் சௌடேஸ்வரி நீயே ! (எங்கள்)

சந்ததி காத்து சர்வநலம் தரும் சாமுண்டேஸ்வரியே
சிம்ம வாகினி தேவி திரிசூலம் ஏந்தி
சிவனுடன் இங்கு வந்தாய்
இராமலிங்க சௌடேஸ்வரி என்றுமானாய்! (எங்கள்)

காமாட்சி மீனாட்சி கற்பகம் என்றாலும்
எல்லாமே நீதானம்மா அபிராமி கருமாரி
சிவகாமி மகமாயி என்றாலும் நீதானம்மா! (எங்கள்)

கருவாகி உருவாகி வந்திடும் உயிர்கட்கு
எல்லாமே நீதானம்மா முடிவாகும் வாழ்கையில்
இடைவாழும் வாழ்கையில் என்றுமே நீதானம்மா ! (எங்கள்)

நோய்நொடி தீர்ந்து சௌபாக்கியம் தருவாய்
சௌடேஸ்வரி நீயம்மா - வாழ்கையில்
நொடிந்து விழாமல் தாங்கியே நிற்பாய்
உலகத்தாயே நீதானம்மா ! (எங்கள்)
புவனேஸ்வரி சர்வேஸ்வரி லோகேஸ்வரி
மாதேஸ்வரி சித்தேஸ்வரி ராஜேஸ்வரி
எல்லாமே நீதானம்மா!
இராமலிங்க சௌடேஸ்வரி நீதானம்மா ! (எங்கள்)
- நன்றி
சுலோச்சனா சௌந்தரராஜன், இசைக்கனிகள் புத்கம்(2009) -அருள் பதிப்பகம்.

No comments:

Post a Comment