அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/22/13

86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை. 
இவர் சாக்கிய தேவரிஷி என்றும் அழைக்கப்படுகின்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஸ்வவைத்யதவரு :- அசுவினி தேவர்களைப்போல் வைத்தியத்தில் வல்லவர்கள். குதிரை மருத்துவ சாஸ்திர நிபுணர்கள். 
காலபுதவரு :- ஆந்திராவில் உள்ள காலபு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
குடகோலதவரு :- இப்பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர். 
இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வீட்டில் வைத்து இருக்கலாம். அல்லது குடகோலிகளைத் தயாரித்து வியாபாரம் செய்து இருக்கலாம். 
கொண்டவன்கதவரு :- இருமலைகளுக்கிடையே இருக்கும் வளைவுகள் சந்துகள் இவற்றிற்குக் கொண்டவன்க என்பது பெயர். அவற்றைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 
கோடிதவரு :- கோடி = சேலை; கோடி சேலை நெய்தவர்கள். கோடி சேலைகள் தானம் வழங்கியவர். 
நக்கதவரு :- தந்திரம் மிக்கவர். 
நந்திவாகனதவரு :- கோயில்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர். பிரதோஷ நாட்களில் நந்தி பூசனை செய்பவர். 
புட்டகண்டிதவரு :- ஆந்திராவில் உள்ள புட்டகண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
பொப்பண்ணதவரு :- பொப்பண்ணன் என்பவர் வம்சத்தினர். 
போடாதவரு :- போடா என்னும் மலையை பூர்வீகமாகக் கொண்டவர். 
களெபதவரு, காளவதவரு, கானிபதவரு, சாதாதவரு.

தங்கரதம் சிங்கரதம் மங்களமாய் பொங்கிவரும் அம்பிகையே!!!!

தங்கரதம் சிங்கரதம் மங்களமாய் பொங்கிவரும் அம்பிகையே!!!!
நிதிஷ் செந்தூர் அவர்களின் உழைப்பில் உருவான "ஆடிடும் சூலம் " இசை வட்டில் உள்ள வீரமணிதாசன் அவர்களால் பாடப்பெற்ற நமது சௌடேஸ்வரி பாடல் ..................