அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/22/13

சின்னவதம்பச்சேரி திருக்கோவில் வரலாறு



கோவை மாவட்டம், பல்லடம் சின்னவதம்பச்சேரி கிராமத்தில், கன்னட தேவாங்க வம்சம் கப்பேலார் குலம் வரதந்து மஹரிஷி கோத்திரம் சின்னவதம்பச்சேரி கெத்திகை மனையை சார்ந்த கப்பேலார் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் ஆலயம் கொண்டு அருள் பாலித்து வருகிறாள். கடந்த 25.04.2002 வருடம் சித்திரைபானு வருடம் சித்திரை மாதம் 12-ம் நாள் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதுமுதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான அருள்மிகு ராமலிங்க சமேத ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் மூன்று கால பூசை நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பூஜையும் அன்னாதானமும் பௌர்ணமி பூசையும் அன்னாதானமும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பஜனையுடன் கூடிய பூசைகளும் சிறப்புற நடைபெற்று வருகின்றது. இங்கே அன்னையை நாடிவரும் பக்தர்களின் குறைகளை அந்த அன்னையே ஏதாவது ஒரு ரூபத்தில் அருள்வாக்காகவோ, கனவிலோ உணர்விலோ நீக்க வழி கூறி குறைகளை நீக்கி அருள்பாலிக்கிறாள் எனவே இந்த சக்தி மிகுந்த ஆலயத்திற்கு, சமயம் ஜாதி, குலம் வித்தியாசமில்லாமல் அனைத்து மக்களும் வந்து அன்னை அருள்பெறுகிறார்கள்.

திருக்கோவில் கட்ட காரணம்

திருப்பூர் நகரை சேர்ந்த 61, புது ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் ராஜு என்கிற S.சந்திரசேகரன் இவர் சின்னவதம்பச்சேரி கெத்திகைமனையின் பெரிய வீட்டுக்காரர் என போற்றப்பட்ட உயர்திரு.சண்முகசெட்டியார் மகன் சுப்பய்யசெட்டியாரின் மகனாவார். தற்போது இந்த திருக்கோவிலின் செயலாளராக உள்ளார். திருக்கோவில் கட்டுவதற்கு முன்பு 2000-ம் வருடம் மாசி சிவன்ராத்திரியன்று திரு.சந்திரசேகரன் (ராஜு) சின்னவதம்பச்சேரிக்கு பள்ளய பூசைக்கு சென்ற சமயம் அவர் உடலில் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் இறங்கி குடிகொண்டு இந்த ஆலயம் கட்ட பணித்தாள் (ராஜு தனது தாயார் சவுண்டம்மாள் ஆசீர்வதத்துடன் திருப்பணியை செய்ய தொடங்கினார்.) இதன் தொடர்ச்சியாக சின்னவதம்பச்சேரி திருப்பூர் ஸ்ரீ பத்மா டெக்ஸ் S.P. நாச்சிமுத்து செட்டியார்  N.மாரம்மாள் , ஒரே மனதாக தங்களுக்கு சேர்ந்த சின்னவதம்பச்சேரியின் மையத்தில், சமமாகவும் வடக்கு முகமாகவும் அமைந்த சுமார் 33 செண்ட் நிலத்தினை திருக்கோவில் கட்ட உபயமாக கொடுத்துள்ளார்கள். திரு. S.P.ரங்கசாமி செட்டியார் பெரிய மகன் திரு.R.சவுடப்பன் தலைவராக இருந்து இந்த திருக்கோவில் கட்ட தன்னை அர்பணித்தார் அவரை தொடர்ந்து திருக்கோவிலின் கௌரவ தலைவர் (அணுகுண்டு தாத்தா) திரு.M.K.சவுண்டப்ப செட்டியார் அவர்களும், அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் அறக்கட்டளை தலைவராக திரு.V.R.சுப்பிரமணியம் அவர்களும் இருந்து நிர்வாகத்தை செவ்வனே நடத்தி வருகின்றனர்.

நெல்லுக்குப்பம்மன் பெயர் காரணம் : மூலஸ்தானமும், மூலகாரணங்களும்

நமது குல முன்னோர்கள் ஒட்டஞ்சத்திரம் அருகில் கன்னிவாடி அருகில் உள்ள குயவ நாயக்கன்பட்டி எனுமிடத்தில் மலையடிவாரத்தில் வயல்வெளிக்கு நடுவில் அருள்பாளித்து வருகின்ற பெட்டது சவுண்டம்மனை வழிபட்டு வந்தார்கள் அந்த கால கட்டத்தில் அந்த தாயானவள் அருள்வாக்கில் மக்களே உங்கள் குல தெய்வமானவள் சித்தயன் கோட்டைக்கு அருகில் சித்தரேவு என்னும் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நெல்வயல் நிறைந்த நெல்லூர் என்னுமிடத்தில் தனது ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் வயல்வெளியில் நெல் அறுவடை செய்த பின்பு நெல் பதர்களை போடும் நெல் குப்பை குழியில் கால சூழ்நிலையால் மறைந்துள்ளாள் அவளை எடுத்து வழிபடுங்கள் என கூறியுள்ளாள். அதனை தொடர்ந்து நமது முன்னோர்கள் அந்த இடத்தை கண்டுபிடித்து நெல்குப்பையிலிருந்து 8 கரங்களுடன கூடிய 6 அடி உயர உக்கிர தேவதை நெல்லுக்குப்பம்மனை எடுத்து திருக்கோவில் கட்டி வழிபட்டு வந்துள்ளார்கள். கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவருடைய ஆட்சி எல்லை தென்னகம் முழுக்க இருந்ததது. நாமும் கன்னடர்கள் ஏகபோகமாக பல இடங்களுக்கு வேலை நிமித்தமாக சென்றதில் நம்முன்னோர்கள் இந்த நெல்லுருக்கு அருகாமையிலுள்ள கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள் மீண்டும் காலம் மாறவோ பிழைக்க வழிதேடி அங்கிருந்து பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள் அதுசமயம் ஒவ்வொரு குழுவினரும் கப்பேலார் குல சகோதரர்களும் அந்த தாயை ஏதாவது ஒருரூபமாக தங்களுடன் அழைத்து சென்றுள்ளார்கள் அப்படி அந்த வகையில் நம் முன்னோர்கள்.

சின்னவதம்பச்சேரிக்கு அந்த தாயையும் சிவனையும் இரண்டு மண் கலயங்களில் ஜலவடிமாக பேழை மூடியில் வைத்து அதில் கத்திகள் இரண்டு வைத்து தலையில் சுமந்து அலகு சேவை செய்து அழைத்தும் வந்துள்ளார்கள். மூலஸ்தானத்தில் நம் முன்னோர்கள் அந்த தாயை வணங்கி தாயே எங்களுடன் வாருமம்மா என மன்றாடி அழைத்து வந்துள்ளார்கள் அந்த தாயானவள் அவர்களுடன் சர்ப்ப வடிமாகவும் வந்து சின்னவதம்பச்சேரியில் புற்றில் குடிகொண்டாள் அந்த புற்று மிகசிறிதாக ஓர் அடி உயரம்தான் இருந்தது. இன்று நாம்  திருக்கோவில் அமைத்த பிறகு 7 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்து இன்னும் வளர்ந்து கொண்டுள்ளது. அந்த புற்று இன்று உள்ள திருக்கோவிலுக்கு நேர் எதிரில் கம்பீரமாக அமைந்துள்ளது. அதற்கு பூசைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


நம்முன்னோர்கள் சின்னவதம்பச்சேரிக்கு அம்மை, அப்பனை அழைத்து வந்தார்கள் அந்த கால கட்டத்தில் சுமார் (300 வருடங்கட்கு முன்பு) அழைத்து வந்த அம்மனுக்கு ஆலயம் கட்ட இயலவில்லை இருந்தாலும் அந்த தாயிடம் வேண்டி தாயே நாங்கள் வருடம் ஒருமுறை சிவன் ராத்திரிக்கு உன்னை சிறப்பாக கொண்டாடுகிறோம். என வேண்டி சிவன்ராத்திரிக்கு கொண்டாடி பள்ளைய பூசை செய்து பிறகு பேழை மூடிக்குள் தாங்கள் வழிபடும் அன்னையை சக்தி அழைத்தலுக்கு பயன்படும் கேள் கடியே (பானை மூடி) மற்றும் கத்திகளை வைத்து மூடி எடுத்து பத்திரப்படுத்திவிடுவார்கள்.


(பேழை மூடி) யார் வீட்டில் உள்ளதோ அவர்தான் பூசாரியார். அப்படியாக அவருக்கு பின் அவர் மகன், பேரன் என வழி வழியாக வந்தது. கடைசியாக 2000-ம் ஆண்டில் பூசாரியாக இருந்த திரு.வெள்ளியங்கிரி செட்டியார் அவர்கள் காலமாகவே இந்த பேழை மூடியை சிவன் ராத்திரிக்கு முன்பாக சின்னவதம்பச்சேரியில் வாழ்ந்து ஜீவ சமாதியான அருளாளர் குரு அப்பய சுவாமிகள் பஜனை மடம் என அழைக்கப்படும் வீட்டில் கொண்டு போய் வைத்துள்ளார்கள். அந்த ஆண்டு 2000-ம் வருடம் மாசி மாதம் சிவன் ராத்திரிக்கு சின்னவதம்பச்சேரிக்கு தன் குடும்பத்தாருடனும் தனது சகோதரர் திரு.சண்முகம் குடும்பாத்தாருடனும் வந்த தற்போதைய திருக்கோவில் & அறக்கட்டளை செயலாளர் பெரிய வீடு சந்திரசேகரன் உள்ளத்தில் உடலில் அந்த தாயானவள் இறங்கி இந்த திருக்கோவில் கட்ட பணித்தாள் அந்த அற்புத பணியை தனது கப்பேலார் குல மூத்த சகோதரர் உயர்திரு.M.K.சவுண்டப்பன் (அணுகுண்டு தாத்தா) தலைமையில் 18.09.2000–ல் தாய் சவுண்டம்மாள் ஆசீர்வாதத்துடன் ராஜு என்கிற சந்திரசேகரன் திரு.பத்மா  R.சவுடப்பன் தலைமையில் மிகமிக கவனமாக செய்ய தொடங்கினார்.

திருக்கோவில் கட்ட 31.05.2001ல் பாலக்கால் போடப்பட்டு திருப்பணி நடந்து வந்தது. அதுசமயம் ஓவ்வொரு மாதமும் அண்ணன் தம்பிமார் கூட்டம் நடைபெறும் அதுசமயம் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன அதனை தெரிந்து கொள்ள கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த “திரு.OMS. சுந்திரம்” அவர்கள் உடலில் அருளாளர் குரு பொன்னுசாமி தாத்தா என்கிற தெய்வீக நல்ல உள்ளம் கொண்ட ஆன்மா பேசுவார், அவரிடம் சென்று அனுமதி பெற்று அவரை சின்னவதம்பச்சேரிக்கு அழைத்தோம் “திரு.OMS. சுந்திரமும்” வரசம்மதித்து சின்னவதம்பச்சேரி வந்தார் இங்கே அவர் உடலில் நமது குலதெய்வம் நெல்லுக்குப்பம்மன் வந்து பேசி அருள்வாக்கில் அப்பா, நான் நீங்கள் மூலஸ்தானத்திலிருந்து மண் எடுத்து வந்தபோதே உடன் வந்தேன், இப்போது இங்கே குடி கொண்டுள்ளேன், கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடக்கும் அதன்பிறகு நான் நல்ல முறையாக இங்கே இருந்து என்னை நம்பி வரும் மக்களை காத்து அருள்புரிவேன் என்று வாக்களித்தார்கள்.

No comments:

Post a Comment