அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/22/14

குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா(02- 03- 2014,03- 03- 2014)அழைப்பிதழ்

குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ  மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ  மல்லீஸ்வரர்  திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா(02- 03- 2014,03- 03- 2014)அழைப்பிதழ்       

      திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமாரமங்கலம்  கிராமம் குமாரமங்கலம் மடமனை, மாலேலார் வம்சம், ஸ்ரீ  மல்லீஸ்வரி சமேத ஸ்ரீ  மல்லீஸ்வரர்  திருக்கோவில் மஹா சிவராத்திரி விழா (02- 03- 2014,03- 03- 2014) ஸ்ரீ சக்தி அழைப்பு  மற்றும்  மஹா பள்ளய பூஜை நடைபெற உள்ளது அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெருக.

            இந்த மடமனை கோவிலுக்கு பாத்தியப்பட்ட தாயாதிகள் ஞாயிற்று கிழமை விரதம் இருப்பவர்கள். பொதுவாக தேவாங்க தெய்வீக பிராமணர்கள் நாம் ஆனால் கால மாற்றத்தால் அசைவ உணவு உட்கொள்கிறோம், பொதுவாக நமது இல்லங்களில் ஞாயிற்றுக்கிழமை தான் அசைவம் உண்கிறோம். ஆனால் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவது இல்லை இது பல தலைமுறைகளாய் பின்பற்றப்பட்டு வருகிறது.

           இந்த குலத்தில் பிறந்த எண்ணுமக்கள் தாங்கள் மணம் ஆகும் வரை இந்த முறை பின்பற்றுகிறார்கள். அதே போல் இவர்கள் இல்லத்துக்கு வரும் மருமகள்களும் இந்த நடைமுறையை பின்பற்றவேண்டும்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், விரைவில் அதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதே போல் இவர்கள்  தீபாவளி பண்டிகையும் கொண்டாடுவது இல்லை.

நன்றி  திரு. கணேஷ் குமார் , பொள்ளாச்சி 

குமாரமங்கலம் மடமனை,மாலேலார் அறகட்டளை 


No comments:

Post a Comment