இறைவன் கட்டளைக்கு இணங்க ஆமோத நகரை ஆட்சி செய்யும் வாமதேவ மன்னனின் மனைவி கமலலோசனையின் திருவயிற்றில் போய்ப் பிறந்தான்.
மகனைப் பெற்ற மன்னன் பெருமகிழ்ச்சி உற்றான். பிறந்த மைந்தனுக்கு தேவதாசமையன் எனப் பெயரிடுமாறு பலரும் வியந்து போற்ற வானொலி
உண்டாயிற்று. அவ்வாறே பெற்றோர்கள் பெயர் சூட்ட தேவதாசமையன் தெய்வக் குழந்தையாக வளர்ந்து வந்தான். வேதம் முதலான எல்லா கலை
ஞானங்களையும் கற்றுணர்ந்தான். வீராங்க மன்னனின் மகள் திலதாவதியை மணந்தான்.
மகனின் தகுதியை அறிந்து வாமதேவ மன்னன் ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தானும் தன்மனைவியுமாகத் தவம் செய்யக் காட்டுக்கு ஏகினான்.
ஆட்சியில் அமர்ந்த தேவதாசமையன் இறைவன் ஆணையை நினைவு கூர்ந்தான். நாட்டில் வீர சைவநெறியை நிலைநிறுத்த எண்ணினான். அப்போது
நாட்டில் எங்கும் சின்னெறிப் பல் சமயங்கள் நிரம்பி அறியாமை இருள் பரவி இருந்தது. இதை மாற்றிச் சைவ நன்னெறியைப் பரப்பி நாட்டில் அன்பு
அருள் அறங்கள் பரவும்படிச் செய்ய முற்பட்டான்.
மதத்தின் பெயரால் அழிவழுக்குப் பேசியவர்களின் மதத்தை அழித்தான். அறிவியல் வழி' மதவாதங்கள் புரிவதை விட்டு வெறும் அற்புதங்களின்
வழி மதத்தை நிலைநாட்ட முற்பட்டனர் சில மதவாதிகள். அவர்களையும் ஏற்றவாறு தெருட்டினான்.
சைவ நன்னெறியின் மேலான கருத்துக்களை தேவதாசமையன் எங்கும் பரப்பினான். நெறியில்லா நெறிதன்னை நெறியாகக் கொண்டு ஒழுக்கமும்
சீலமும் கெட்டு தடுமாற்றத்தில் வாழ்ந்த மக்களிடை அவர்களின் அன்றைய வாழ்க்கை முறைகளின் கேட்டையும் எடுத்துக் கூறினான்.
உய்யநெறி சைவமே என்பதைத் தெளிய உணர்த்தி அம்மக்களைத் தெருட்டினான். மக்களும் தவற்றை உணர்ந்து சைவநெறியை ஏற்று தேவதாசரை
அண்டினர். திருந்திவந்த மக்களுக்குத் திருநீறும் கண்டிகையும் அணிவித்து இலிங்கதாரணம் செய்தான். சமணரும் பௌத்தரும் கூட தேவதாச
மன்னரின் அருளுரைகளைக் கேட்டு அருட்பணியை உணர்ந்து திருந்தி சைவம் சார்ந்தனர். நெறியில்லா சமயங்கள் ஒழிந்தன. சைவப்பயிர்
எங்கும் தழைத்தது.
இவ்வாறு தேவதாச மன்னனின் அவதாரப்பணி நிறைவேறியது.
இவருக்கு விருபாட்சன் என்ற மகன் பிறந்தான். உரியபருவத்தில் அவனுக்குக் காஞ்சனமாலை என்ற அரச கன்னியை மனம் செய்வித்து அவனுக்கு
மணிமுடி சூட்டி ஆட்சியையும் ஒப்படைத்தார். வந்த பணி முடிந்துவிட்டதால் தெய்வ வழிபாட்டில் இறங்கினார்.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
No comments:
Post a Comment