கானகத்திடை ஒருபெரிய முருங்கைமரத்தின் மீது முடை நாற்றமும் பேழ்வாயும் கோரப்பற்களும் கனல்கக்கும் கண்களும் சடைமுடியும்
உடைய பயங்கரமான வேதாளத்தைக் கண்டான். உடனே அம்மரத்தின் மீதேறி அவ்வேதாளத்தைப் பிடித்துக் கட்டிச் சுமந்து கொண்டு
தேவதத்தை இருக்கும் சோலையை நோக்கிச் சென்றான்.
அப்போது வேதாளம் விக்கிரமாதித்த மன்னனை நோக்கி, 'மன்னா! நான் ஒரு கதையைச் சொல்வேன். அக்கதையில் அமைந்துள்ள பொருளை
நீ அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு நீ சொல்லாவிட்டால் உன் தலை சுக்கு நூறாகச் சிதறுண்டு போகும்' என்று கூறிக் கதையைச்
சொல்ல துவங்கியது.
இவ்வாறு வேதாளம் கதை சொல்வதும் மன்னன் விடை சொல்வதும் வேதாளம் கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கமரம் ஏறுவதுமாய்
இருபத்தினான்கு முறை நடந்தது. பின் முடிவில் மன்னன் இருபத்தைந்தாவது முறை வேதாளத்தைக் கட்டிச் சுமந்து கொண்டு வரும்
போது வேதாளம் மன்னனுக்கு விடை காணற்கரிய கதை ஒன்றைச் சொன்னது.
இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே மன்னன் பாடலிபுரத்து மலர்ச்சோலையிலிருந்த தேவதத்தை முன் போய்ச் சேர்ந்தான்.
மன்னன் முடிமீது கட்டுண்டிருந்த வேதாளமும் தேவதத்தையும் ஒருவரை ஒருவர் சந்தித்ததும், சிவபெருமான் அருளியபடி இருவரும்
சாபநீக்கம் பெற்று தெய்வவுரு அடைந்தனர். அச்சமயம் அங்கு திருவருளால் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. அதில் சாபநீக்கம் பெற்ற
புட்பதந்தனும் தேவதத்தையும் ஏறி அமர்ந்து கொண்டு, விக்கிரமாதித்த மன்னனைப்பார்த்து பலவாறு ஏத்தி ' எங்கள் சாபநீக்கத்துக்குக்
காரணமாயிருந்த உனக்கு நாங்கள் செய்யும் உதவி யாதுளது? நீ விரும்பிக் கேட்கும் வரத்தை அளிக்கிறோம். கேட்பாயாக' என்றனர்.
உடனே விக்கிரமாதித்த மன்னன் புட்பதந்தனைப் பார்த்து ' எனக்கு நீ எப்போதும் உறுதுணையாய் இருந்து நான் நினைக்கும்போது எல்லாம்
என்முன் தோன்றி உதவவேண்டும்' என்றான். இதைக்கேட்ட புட்பதந்தன் ஒரு ஆற்றல் மிக்க வேதாளத்தை வரவழைத்து, விக்கிரமாதித்த
மன்னனின் உள்ளக்குறிப்பை அறிந்து அவன் சொற்படி நடந்து உதவுமாறு பணித்தான். பின் கயிலையை அடைந்து விமலனடி பணிந்து
இனிது இருந்தான்.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
No comments:
Post a Comment