ஸ்ரீ சவுடாம்பிகை அம்மன் தேவாங்கர்களின் குல தெய்வம் ஆகும். தேவாங்க மக்கள்
உள்ள எல்லா இடங்களிலும் அம்மனுக்குக்கோயில் இருக்கும். ஆந்திரம்
கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், கலிங்கம், வங்கம் முதலான நாடுகளில்
கோயில்கள் உள்ளன. இங்கெல்லாம் அம்மன் சௌடாம்பகை என்றே
அழைக்கப்படுகின்றார். ஆனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் 'வனசங்கரி' என்ற
பெயரில் அம்மை கோயில் கொண்டுள்ளார். அங்கு அம்மனுக்கு ' சாகம்பரி '
என்ற மற்றொரு பெயரும் உண்டு. இகோயில் பாதாமிக்கு அருகில் இருக்கின்றது.
இதைச்சுற்றி தேவாங்கர்கள் வசிக்கின்றார்கள்.
இனிக் கல்வெட்டுச் சாசனங்களோடு கூடிய பழங்கோயில்களும் பல ஊர்களில் உள்ளன.
இராயலசீமை கதிரி தாலூக்காவில் லேபாட்சி போகும் வழியில் சோளசமுத்திரம்
என்னும் ஊரில் சௌடேஸ்வரியம்மன், வீற்றிருக்கும் கோலத்தில்
பெரிய வடிவில் உள்ளார்.
அனந்தப்பூர் ஜில்லா குத்தி தாலூக்கா உபர்சலா கிராமத்தில் ஓர் கோயில்
உள்ளது.
கர்னூல் நந்தியால் தாலூக்கா ஆத்மகூரில் ஒரு கோயிலும் நந்தவரத்தில் ஒரு
கோயிலும், மதனபள்ளி சனபாளையத்தில் ஒரு கோயிலும் உள்ளது.
நந்தவரம் கோயிலில் உள்ள அம்மனின் திருவுருவம் காசியிலிருந்து
கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். இந்த தேவியின் பெயரால்தான்
தண்டகங்கள்
கூறப்படுகின்றன. ' நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற தண்டகம்
அம்மையைப் புகழ்கின்றது.
தஞ்சையில் பாபநாசம் தாலூக்கா கபிஸ்தலத்தில் தேவாங்கர் மடம் ஒன்று
இருக்கின்றது. இதில் உள்ள கல்வெட்டின்படி 400 ஆண்டுகளுக்கு முன்னமேயே
தேவாங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியேறினர் என்பதாக அறிகிறோம்.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
No comments:
Post a Comment