ஒருநாள் வித்யாதரர்கள் யாவரும் ஒன்று கூடிக் கயிலைக்குப் போய்ச்
சிவபெருமானை அணுகிப் ' பெருமானே நாங்கள் தங்கள் அருளால் அறுபத்து நான்கு
கலைகளில்
சிலவற்றையே உணர்ந்துள்ளோம். மற்றுள்ள கலைகளையும் உணர்த்தி எங்கள்
உள்ளங்களைத் திருத்தியருளுதல் வேண்டும் எனப் பணிந்து நின்றனர். அதற்குச்
சிவபெருமான் 'உங்கள் குலத்தைச் சேர்ந்த ஏமவருணன் என்பவன் மேருமலைச்சாரலில்
எம்மை நோக்கித் தவஞ்செய்கின்றான். அவனுக்கு நாம் ஓர் மகனை அருள்
செய்வோம். அவன் உங்களுக்கு வேண்டும் கலைகள் யாவற்றையும் விரித்துக்
கற்பிப்பான். நீங்கள் அவனிடம் கற்றுணர்ந்து உய்வீர்களாக ' என்று அருள்
செய்தார்.
அவர்களும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு தங்கள் தங்கள் இருப்பிடம்
சேர்ந்தனர்.
பின் சிவபெருமான் ஆமோத நகரிலிருக்கும் தேவாங்க மன்னனை நினைத்தார். அவரும்
சிவபரமபொருளின் உள்ளக்கருத்தை உணர்ந்து கயிலையில்
சிவபெருமான் முன் தோன்றித் தாழ்ந்து எழுந்து தொழுது நின்றார். வந்தவரைச்
சிவபெருமான் இனிது நோக்கி 'மேருமலைச் சாரலில் தவஞ்செய்யும் ஏமவருணனுக்குப்
பிள்ளையாய்ப் போய் வித்யாதரர்களுக்கு அறுபத்து நான்கு கலைகளையும்
உணர்த்தி வா' என்று பணித்து விடை தந்து அனுப்பினார்.
தேவாங்க மன்னனும் இறைவன் பணியை ஏற்றுக் கொண்டு ஆமோத நகரை அடைந்தார். தனது
குமாரர்கள் மூவருக்கும் நல்லுரை கூறித் தனது மனைவியர் இருவரின்
உள்ளத்தை தேற்றித் தனது தூய உடம்பைச் சிவலிங்க வடிவில் விட்டு விட்டு
விண்ணுலகடைந்தார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மூத்தமகன் திவ்யாங்கன் தனது தந்தையின்
இலிங்கவடிவத்துக்குத் திருக்கோயில் எழுப்பி, அதில் நாள்தோறும் பூசனைகள்
செய்து
வந்தான். ஏற்றுக்கொண்ட ஆட்சியையும் செங்கோன் முறைப்படி நீதி வழுவாமல் பகை
நீக்கி வளம் பெருக்கி ஆட்சிசெய்து வந்தான்.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
No comments:
Post a Comment