மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் முதல் மரியாதை பெற்ற தேவாங்கர்கள் செப்பேட்டுத் தகவல்:-
மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் முதல் மரியாதை யாருக்கு? ஏன்? என்பதை தேவாங்கச் செட்டியார்களின் சமூகப் பட்டயமான ஓ.கோயில்பட்டிச் செப்பேடு தகவல் தெரிவிக்கிறது.
தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் வெளியிடப்பட்ட திருமலை நாயக்கர் செப்பேடுகள் என்ற நூலில் ஓ.கோயில்பட்டிச் செப்பேடு(தேவாங்கச் செட்டியார்கள் சமூகப்பட்டயம்) என்ற தலைப்பில் முதல் மரியாதை யாருக்கு? ஏன்? என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்
காமராசர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சங்கரலிங்கபுரம் அருகில் உள்ள ஓ.கோயில் பட்டி பச்சிப்பிலிபட்டத்து பட்டக்காரர், திரு.பெ.ரா.ம.நடராசன் செட்டியார் என்பவரிடம் இச்செப்பேடு உள்ளது. தொல்பொருள் அலுவலர் திரு.சொ.சாந்திலிங்கம் இதனை அறிந்து படித்துக் கல்வெட்டு காலாண்டிதழ் எண்,32இல் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்த செப்பேட்டின் படி பெறப்பட்டு இங்கு பதிப்பிக்கப்படுகிறது.
அமைப்பு
26 செ.மீ.நீளமும் 22 செ.மீ அகலமும் உள்ள இச்செப்பேட்டின் தலைப்பகுதி ஐந்து இதழ் வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 46வரிகளும் பின்பக்கம் எட்டு வரிகளும் உள்ளன. எழுத்துக்கள் சீரற்றும் பிழைகளுடனும் உள்ளன. முன் பக்கம் சூரியன் சந்திரன் உருவங்கள் பொறிக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
காலம்
சகாப்தம் 1513க்கு நேர் கர ஆண்டு ஆடி மாதம் 10ம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. சக ஆண்டும் தமிழாண்டும் பொருந்தி வருகின்றன. ஆனால் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் இவ்வாண்டில் வரவில்லை. சகம் 1573என்றிருந்தால் பொருந்தி வருகின்றது. இப்படி எடுத்துக் கொண்டால் கி.பி.1651 ஜுலை மாதமாக இதன் காலத்தைக் குறிக்கலாம்
செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள செய்தி:
முதனூறு, பெனு கொண்டா, படை வீடு, தாராபுரம் முதலிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டி குலத்தினைச் சேர்ந்த மதுரை, திருமங்கலம் மற்றும் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக் கோட்டை, தாயநேரி உள்ளிட்ட 14 ஊர்களில் உள்ள இச்சாதியார்கள் கூடி, திம்மி செட்டி, காரமல்லி செட்டி ஆகிய இருவருக்கும் அளித்த சிறப்பினைக் குறிக்கிறது செப்பேடு.
திம்மி செட்டியும் காரமல்லி செட்டியும் சேர்ந்து சாதிவாரியாக வசூலித்த பொன் 7000, திருமண வரி மற்றும் பிற இனங்களில் வசூலித்த பொன் 5400இவையனைத்தையும் கொண்டு மதுரைச் சொக்கநாதருக்குக் கட்டளை ஏற்படுத்தி அக்கோயிலில் கல்வெட்டுவித்து நற்பணி புரிந்தமைக்காக,அவ்விருவருக்கும் குற்றச் சட்டம் நிர்வகிக்கும் உரிமையையும்,கோயிலில் பஞ்சாட்சரம்,பாக்கு வெற்றிலை,சந்தனம் ஆகியவை முதலில் பெறும் மரியாதையினையும் வழங்கியதை இச்செப்பேடு தெரிவிக்கிறது.
நன்றி:
திருமலைநாயக்கர் செப்பேடுகள்:1994 ,
வெளியீடு: தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை,
சென்னை 113. பக்கம் 90--93

No comments:
Post a Comment