அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

பாதாளமடத்துச் சிலாசாசனம்

கல்வெட்டுச்சான்றுகள் :-
     " தேவாங்கர் பாதாளமடத்துச் சிலாசாசனம்"  என்னும் பெயரில் ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் பாகம் - 3  பகுதி 2 -ல் வெளியிடப்பட்டுள்ளது. 

        இக்கல்வெட்டு விசயநகர வேந்தர் அச்சுத தேவராயர் காலமான சக வருசம் 1464 (கி.பி.1542)ஆம் ஆண்டைச் சேர்ந்தது.  கி.பி. 1542 ல் வீரசைவர்களின் குருவான சாரங்கதேவ மடத்தைச் சேர்ந்த தலைவருக்கு ஒரு கொடை விலைப் பிரமாணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. குருவின் பெயர் சாரங்க தேவராகிய தேவாங்க பக்தர் என்பதாகும். இதன்மூலம் வீரசைவர்களும் தேவாங்கர்களைத் தம் குருவாக ஏற்றனர் என்பது புலப்படும்.அல்லது தேவாங்கர்கள் வீரசைவநெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்றும் கூறலாம். 

      புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றும் தேவாங்கர் பற்றிய செய்தியைத் தருகிறது.  இலை வணிகம் செய்யும் சிலர் போலியான ஆவணம் ஒன்றைக் காட்டி அரசு அலுவலர்களுக்குக் கையூட்டும் கொடுத்து கைக்கோளர்களுக்கும், தேவாங்கர்களுக்கும் உரிய சில பட்டங்களைத் தங்களுக்குரியன என்று மாற்றிக்கொண்டார்.  இதனை அறிந்த கைக்கோளர்களும், தேவாங்கர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அவ்வூரை விட்டு அகன்றனர். அதன் பின்னர் அரசு அலுவலர்களால் கைக்கோளர்களின் செப்பேட்டு ஆவணம் ஒப்பு நோக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டது. 

       கும்பகோணம் நகருக்கு அருகிலுள்ள பட்டீசுவரம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டு ஒன்று பட்டு நூல் நெசவு செய்பவர்களுக்கும் சேணியர் என்னும் செட்டிகளுக்குமிடையே ஏற்பட்ட ஒரு வழக்குத் தொடர்பான செய்தியைக் கூறுகிறது.  திருமணச் சடங்குகளின் போது வெற்றிலைப் பாக்கு மரியாதை யாருக்கு முதலில் தரப்பட வேண்டும் என்பதில் பட்டுநூல்காரர்களுக்கும் செட்டிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனை தஞ்சை நாயக்கர் அரசில் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் தீர்த்துவைத்துள்ளார். இங்கு குறிப்பிடப்படும் சேணியர் என்பார் சேடர் என்று பெயர் பெறும் தேவாங்க மரபினராக இருக்கலாம். சேடர்கள் அதிகம் வாழும் ஊர் சேடபட்டி என்றும்,சேடர்பாளையம் என்றும் வழங்கும் ஊர்கள் முறையே விருதுநகர், மதுரை, சேலம் மாவட்டங்களில் உள்ளன.

No comments:

Post a Comment