தேவாங்கர் சமுதாயத்தில் ஒற்றுமைக்குறைவு ஏன் உள்ளது? என்பது குறித்து
சாதாரண கைத்தறி நெசவாளராக இருந்து ஞானியாக மாறிய ஸ்ரீநரசிம்ம செட்டியார்
எழுதியுள்ள பிர்மாண்ட புராணத்தில்( வீரபோக வசந்தராயர் பத்திரிக்கை)செய்தி
உள்ளது. அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு:
பன்னெடுங்காலத்திற்கு முன்பே, தமிழகத்தில் ஆங்காங்கே தொழில்
நிமித்தம் பொருட்டு தேவாங்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர்.அதே போன்று
கோயம்புத்தூரில் கொண்டீசூர் என்றழைக்கப்படும் ஒண்டிப்புதூரிலும்
தேவாங்கர்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர்.கைத்தறி நெசவையேத் தொழிலாகக்
கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்றும் ஒண்டிப்புதூரில் தேவாங்கர்கள் வாழ்ந்து
வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 144
வருடங்களுக்கு முன்பு நாகு செட்டியார் என்பவர் வசித்து வந்தார்.அவருக்கு
இரண்டு மகன்கள். மூத்தவர் நரசிம்ம செட்டியார். இளையவர் கோவிந்த செட்டியார்.
சாதாரண மக்களைப் போல் நரசிம்ம
செட்டியாரும் குலத் தொழிலான கைத்தறி நெசவு நெய்து வந்தார்.இந்நிலையில்
ஐப்பசி மாதம் 27ஆம் நாள்,ஒட்டுப் போட்ட சேலையணிந்து வந்த ஏழைப்
பெண்ணொருத்தி,ஓலை ஒன்று அவரிடம் தந்து மறைந்தாள். ஓலைப் பெற்ற நிமிடம்
முதல் அருள் பெற்றுக் கவிபாடத் துவங்கினார். இச்சம்பவத்தை ஓலைச் சுவடியில்
கவியாக அவர் எழுதியுள்ளார்.
தன் கவிகள்
அனைத்தையும் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார். அக்கவிகள் எல்லாம் உலகின்
எதிர்கால நிலை குறித்தும், மக்கள் நலம் பெற நடந்து கொள்ள வேண்டிய வழிமுறை
குறித்தும் எழுதியுள்ளார்.
மேலும், தேவாங்க
புராணத்தை பிர்மாண்ட புராணம் என்ற பெயரில் எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட 400
ஏடுகள் வரை அவர் எழுதியுள்ளார்.மேட்டுப் பாளையம்,சிறுமுகை பகுதியில் உள்ள
தேவாங்க சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஓலைச் சுவடிகள் பல எழுதி
தந்துள்ளார். அவர் எழுதித் தந்த ஓலைச் சுவடிகளில் எல்லாம் "வீரபோக
வசந்தராயர் பத்திரிக்கை " என்ற தலைப்பிட்டு எழுதித் தந்துள்ளார்.
நாடா இல்லாமல் நெய்யும் முறை வருங்காலத்தில் வரும்
என்ற செய்தியினையும், பிரம்மாவினுடைய சாபத்தினால் தேவாங்க சமுதாயத்தில்
ஒற்றுமைக் குறைவுகள் உள்ளதாகவும் பிர்மாண்டபுராணத்தில் தெரிவித்துள்ளார்.
அக்ஷ்ய வருஷத்தில் (சுமார் 144 வருடங்கள்) வாழ்ந்த
நரசிம்ம செட்டியார், காளயுக்தி வருடத்தில் (89 வருடம்) ஜீவ சமாதி
அடைந்தார்.
ஓலைச் சுவடிகளில் இருந்த
கவிகளையெல்லாம் படியெடுத்து நோட்டில் எழுதி வைத்துள்ளனர். நரசிம்ம
செட்டியாருக்கு அருள் வந்த நாளான ஐப்பசி மாதம் 27ஆம் தேதியும்,ஐக்கியமான
நாளான மார்கழி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் ஆகிய இருநாளும் ஓலைச்
சுவடியில் இருந்து படி எடுக்கப்பட்ட கவிகள் வாசிக்கப்படுகின்றன.
இன்றும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. அவ்விரு நாளும்
காலை 10 மணி முதல் 1 மணி வரை கவிகள் வாசிக்கப்படுகின்றன. மதியம் பிரசாதம்
வழங்கப்படுகின்றன.
திருப்பூர், மேட்டுப்பாளையம்,
சிறுமுகை மற்றுமம் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள்
இன்றும் இவ்விரு நாளும் வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அவர் எழுதிய முதல் பாடல்:
உண்மை என்னும் ஆதிவத்சை
யாவரும் பணிந்து போற்றார்
உண்மையைக் காணார்
இன்னும் உலகளாந்தாதி வஸ்து
நன்மையாம் பக்குவத்தை
நாடியே மனதுள்
ஐந்தை ஒன்னுமாய நிற்க நாதன்
உறுதியைக் காட்டுவார்.
இவர் ஐக்கியமான பின்பு அவரை அடக்கம் செய்த இடத்தை
சாமியார் மேடை என்றழைக்கின்றனர்.இங்குதான் வருடத்தில் இரண்டு நாட்களும்
கவிகள் படிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment