காடும் மலையும் கடந்து செல்லும் போது ஒரு அடர்ந்த காட்டினிடைக் கொடிய
சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டது. தேவலரைக் கண்டதும் அவர் மீது பாய்ந்து
தாக்கியது. உடனே தேவலர் சிங்கத்தின் மீது பல
அம்புகளை எய்து அதை வீழ்த்தினார். அப்போது சிங்கம் வீழ்ந்த இடத்தில்
புனிதமான உடலோடு ஒருவன் ஒரு வானவூர்தியில் ஏறக்கண்டார். அதைக் கண்டு
பெரிதும் வியப்புற்ற தேவலர் ' நீ யார்? '
என வினவினார். அவன் நான் குபேரனின் அலுவலரில் ஒருவன். என் பெயர் கபிஞ்சலன்
என்பது.
ஒரு நாள் நான் வேட்டைக்குப் போனேன். அங்கு அழகான மான் ஒன்றைக் கண்டேன்.
அதன் மீது அம்பை எய்தினேன். அம்பின் அடிபட்ட மான் காயமுற்று அருகிருந்த
ஆசிரமத்திற்குள் பாய்ந்து ஓடியது.
அது கௌதம முனிவரின் ஆசிரமம் ஆகும். நான் அடிபட்ட மானைத் துரத்திக்கொண்டு
ஆசிரமத்துக்குள் போனேன். அடிபட்ட மானையும் அதைத் தொடர்ந்து என்னையும் கண்ட
கௌதம முனிவர்
பெரிதும் சினங்கொண்டு என்னைச் சிங்கமாக ஆகுமாறு சபித்தார். சாபத்தைப்
பெற்ற நான் அச்சமுற்று முனிவரை வணங்கி மன்னிக்குமாறும் சாபவிமோசனம்
அளிக்குமாறும் வேண்டினேன்.
அவரும் சினந்தணிந்து இரங்கி, தேவலமுனிவரால் உன்சாபம் நீங்கும் என்று
அருளினார். சாபத்தால் சிங்கமாய்ப் பல விலங்குகளை அடித்துத் தின்று வந்த
நான் இன்று தங்களால் சாபநீக்கம்
பெற்றேன். தாங்கள் இக்காட்டின் வடக்கே மூன்று யோசனை தூரத்தில் உள்ள
வாலகில்லிய முனிவர் ஆசிரமத்துக்குப் போய் அம்முனிவரை தரிசித்துக் கொண்டு
உங்கள் பிரயாணத்தைத்
தொடருங்கள். என்று கூறி விமானமேறி விண்ணிடை மறைந்தான்.
அன்புடையீர் நல்வரவு ,
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)
நன்றி.
No comments:
Post a Comment