அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/13/13

108 .தைவராத மகரிஷி கோத்ரம்

106ல் கண்ட தேவராத மகரிஷியும் இவரும் ஒருவர் தான் விளக்கம் 106ல் காண்க. 

அஷ்டசித்திகளில் ஜயை என்பாள் ஒருத்தி. ஜயை பார்வதி தேவியின் தோழி. ஜயை ஒருமுறை பார்வதி தேவியிடம் இல்லற தருமம் பற்றி அறிய ஆசைப்பட்டு, அதனைப்பற்றித் தேவியிடம் கேட்டாள். 

ஜயையின் எண்ணத்தை உணர்ந்த எம்பிராட்டி; ஜயையே! உனக்கு மனிதப் பிறப்புத் தருகின்றேன். அப்பிறப்பில் நீ இல்லற தருமத்தைப் பற்றி அனுபவபூர்வமாக உணரலாம் என்றனள். 

அதன் படி ஜயை மானிடப் பெண் ஆனாள். தேவராத முனிவர் கற்பிற் சிறந்த கன்னி ஒருத்தியைத் தேடிக் கொண்டு இருந்தார். தாம் தேடிய உத்தமப் பெண் இச் ஜயை என முனிவர் உணர்ந்தார். அவளைச் சோதிக்க எண்ணினார். தாம் ஓர் அரக்க வடிவம் கொண்டார். ஜயையைத் தூக்கிக் கொண்டு சென்றார். ஜயையைக் கலக்க முனிவர் முனைந்தார். 

ஜயையோ தர்மதேவதையைச் சரண் புகுந்தாள். இவ்வரக்கனால் கற்பழியாது இருக்க என்னைக் கல்லாக மாற்றுக என வேண்டினாள். தர்மதேவதையின் அருளால் அவள் கல்லாக மாறினாள். அவள் மன உறுதிக்கு மகிழ்ந்த முனிவர் தம் தவ மகிமையால் அவள் கல்லுருவை மாற்றி மனிதப் பெண் ஆக்கினார். தம் வடிவையும் மாற்றிக் கொண்டார். அவளைச் சோதித்த உண்மையை உணர்த்தினார். ஜயையை மணந்து கொண்டார். இங்கனம் ஜயை இல்லற தருமம் கற்புடைமையே என்று அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- தர்ப்பையைப் பயன்படுத்தி யாகாதி காரியங்கள் செய்பவர். வழிபாட்டில் தர்ப்பையைப் பயன்படுத்துபவர். தர்ப்பையும் கையுமாக எப்போதும் இருப்பவர். 

சந்திரகிரிதவரு :- ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

சரந்திதவரு :- உபகுருக்கள். குருவினிடமோ குருபீடாதிபதிகளிடமோ தீட்சை பெற்றுக் கொண்டு அவர்களைப் போல தேச சஞ்சாரம் செய்யும் உரிமை பெற்றவர். தட்சிணைகள் பெற்றுக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவர். 

சல்லாதவரு :- நீர்மோர் தானம் செய்பவர். 

குன்சதவரு :-

8/12/13

விளக்கு ஏற்றும் விதம்

விளக்கு ஏற்றும் விதம்


தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்

வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்

புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும்

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்

சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்

பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்

கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்

மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்

பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்

குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்

நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்

நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்

விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்

வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்

ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்

கிழக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்

வடக்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்

மேற்கு திசை - நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்

அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;
நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் ;
புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்

மேட்டுப்பாளையம் பங்களா மேடு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன்

107 .தைவக்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கேட்யம்தவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குரிய 32 விருதுகளில் கேடயம் ஒன்று. இவர்கள் கேடயம் பிடிக்கும் உரிமை பெற்றவர். 
பத்மகந்திதவரு :- உடம்பில் தாமரைப் பூ மணம் வீசுமாறு உள்ளவர்கள். இது சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. 
மாசெர்லதவரு :- ஆந்திராவில் உள்ள மாசெர்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

8/11/13

106 .தேவராத மகரிஷி கோத்ரம்

108ல் காணப்படும் தைவராத மகரிஷியும் இவரும் ஒருவரே. தெய்வம் என்ற சொல் வடமொழியில் தைவம் என்று வழங்கப்படும். தைவராத மகரிஷி என்பதே தேவராத என்று வழங்கப்பட்டு இருக்கலாம். இவ்விரண்டு கோத்ரங்களினுள் வருகின்ற வங்குசங்களும் ஒன்றே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குசதவரு :- குசம் = தர்ப்பைபுல்; தர்ப்பையைக் கொண்டு வழ்பாடும், வைதிகச் சடங்குகளும் செய்தவர். தர்ப்பையும் கையுமாக இருந்தமையின் இவர் குசதவரு எனப்பட்டனர். 
தந்துலதவரு :- நூல் பற்றி வந்தவொரு பெயர். இவர் நூல் மந்திரித்துத் தந்தவராக இருக்கலாம்.