106ல் கண்ட தேவராத மகரிஷியும் இவரும் ஒருவர் தான் விளக்கம் 106ல் காண்க.
அஷ்டசித்திகளில் ஜயை என்பாள் ஒருத்தி. ஜயை பார்வதி தேவியின் தோழி. ஜயை ஒருமுறை பார்வதி தேவியிடம் இல்லற தருமம் பற்றி அறிய ஆசைப்பட்டு, அதனைப்பற்றித் தேவியிடம் கேட்டாள்.
ஜயையின் எண்ணத்தை உணர்ந்த எம்பிராட்டி; ஜயையே! உனக்கு மனிதப் பிறப்புத் தருகின்றேன். அப்பிறப்பில் நீ இல்லற தருமத்தைப் பற்றி அனுபவபூர்வமாக உணரலாம் என்றனள்.
அதன் படி ஜயை மானிடப் பெண் ஆனாள். தேவராத முனிவர் கற்பிற் சிறந்த கன்னி ஒருத்தியைத் தேடிக் கொண்டு இருந்தார். தாம் தேடிய உத்தமப் பெண் இச் ஜயை என முனிவர் உணர்ந்தார். அவளைச் சோதிக்க எண்ணினார். தாம் ஓர் அரக்க வடிவம் கொண்டார். ஜயையைத் தூக்கிக் கொண்டு சென்றார். ஜயையைக் கலக்க முனிவர் முனைந்தார்.
ஜயையோ தர்மதேவதையைச் சரண் புகுந்தாள். இவ்வரக்கனால் கற்பழியாது இருக்க என்னைக் கல்லாக மாற்றுக என வேண்டினாள். தர்மதேவதையின் அருளால் அவள் கல்லாக மாறினாள். அவள் மன உறுதிக்கு மகிழ்ந்த முனிவர் தம் தவ மகிமையால் அவள் கல்லுருவை மாற்றி மனிதப் பெண் ஆக்கினார். தம் வடிவையும் மாற்றிக் கொண்டார். அவளைச் சோதித்த உண்மையை உணர்த்தினார். ஜயையை மணந்து கொண்டார். இங்கனம் ஜயை இல்லற தருமம் கற்புடைமையே என்று அனுபவபூர்வமாக உணர்ந்தாள்.
சந்திரகிரிதவரு :- ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சரந்திதவரு :- உபகுருக்கள். குருவினிடமோ குருபீடாதிபதிகளிடமோ தீட்சை பெற்றுக் கொண்டு அவர்களைப் போல தேச சஞ்சாரம் செய்யும் உரிமை பெற்றவர். தட்சிணைகள் பெற்றுக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவர்.
சல்லாதவரு :- நீர்மோர் தானம் செய்பவர்.
குன்சதவரு :-

வங்குசப் பெயர் விளக்கங்கள்
குசதவரு :- தர்ப்பையைப் பயன்படுத்தி யாகாதி காரியங்கள் செய்பவர். வழிபாட்டில் தர்ப்பையைப் பயன்படுத்துபவர். தர்ப்பையும் கையுமாக எப்போதும் இருப்பவர்.சந்திரகிரிதவரு :- ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சரந்திதவரு :- உபகுருக்கள். குருவினிடமோ குருபீடாதிபதிகளிடமோ தீட்சை பெற்றுக் கொண்டு அவர்களைப் போல தேச சஞ்சாரம் செய்யும் உரிமை பெற்றவர். தட்சிணைகள் பெற்றுக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவர்.
சல்லாதவரு :- நீர்மோர் தானம் செய்பவர்.
குன்சதவரு :-
No comments:
Post a Comment