அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/13/14

குருபூர்ணிமா விழா

குருபூர்ணிமா  விழா
பெங்களுரு நெலமங்கலா தேவாங்க மடத்தில்... ஸ்ரீ ஹம்பி ஹேம கூட மகாசமஸ்தான டிரஸ்ட் சார்பில் குரு பூர்ணிமா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு , கர்நாடக , ஆந்திரா , மகாராஷ்டிரா , சட்டிஸ்கர் மாநில முக்கிய மந்திரி திரு. மோத்திலால் தேவாங்கன்., பிஜப்பூர். ஆகிய மாநிலங்களில் இருந்து தேவாங்க சங்க உறுபினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பெரும் கூடத்திற்கு முன்பு குரு பூஜை  நடைபெற்றது அப்போது நான்கு வேதங்களும் தொகுக்கப்பட்ட ஒரு மெகா சைஸ் புத்தகம் பூஜையில் வைக்கப்பட்டு பின் அதனை திருப்பூர் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி தலைவர் அவர்கள் அதனை பிரதக்ஷணமாக தலையில் வைத்து மடத்தை சுற்றி வந்து பின் அந்த வேதம் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பெங்களுரு  DIG அவர்கள் அருமையான உரை நிகழ்த்தினார். அவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்துகொண்டு இவ்வளவு அருமையாக பேசினார் என்று நல்லி. சுப்ரமணிய செட்டியார் அவர்கள் மனம் நெகிழ்ந்து கூறினார். பின்  தேவாங்க நற்பணி மன்ற தலைவர் திரு இளங்கோ அவர்கள் உரையாற்றினர். அதில் தமிழ்நாடு கர்நாடக தேவாங்க இணக்கம் மற்றும் . தமிழ்நாட்டில் தெலுகு , கன்னடம் பேசும் தேவன்கர்களின் ஒட்ற்றுமை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு நம் சமுதாயத்தை மற்றும் செயல்கள் எந்த அளவில் உள்ளது என்பது பற்றி கூறினார்.
அடுத்தாக சட்டிஸ்கர் மாநில முக்கிய மந்திரி திரு. மோத்திலால் தேவாங்கன் அவர்கள் உரை நிகழ்த்தினார். தென் இந்தியா வில் தேவாங்கர் ஒற்றுமை பற்றி பேசி மகிழ்ந்தார்.
பின் நம் குல ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகளின் அருளுரை நடந்தது . அதில் விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தேவாங்கர்களை இணைக்கும் வகையில் "ALL INDIA DEVANGA FEDERATION" துவங்க உள்ளதை தெரிவித்தார்.

இறுதியாக "தேவாங்க குல தேவதா " என்னும் இசைவட்டு  கர்நாடகாவில் வெளியிட்ட செல்வன் சுரேஷ் அவரின் "தேவாங்க குலத தேவதையாகி .... " என்னும் சௌடேஸ்வரி அம்மனின் படலை அவர் உருக்கமாக பாடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ...

பின் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது

இந்த நிகழ்வின் புகைப்பட தொகுப்பு
















































































7/3/14

கன்னடம் தெலுங்கு தேவாங்க சமூக ஒற்றுமை கூட்டம்.

கன்னடம் தெலுங்கு தேவாங்க சமூக ஒற்றுமை கூட்டம்.
இரண்டு குரு மார்கள் முன்னிலையில்  வேலூர் மாவட்டம் ஒன்னுபுரத்தில் நடைபெற்றது  அதன் புகைப்பட தொகுப்பு
















இதே போல் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது





நன்றி திரு. ரவி பழனிசுவாமி, சேலம்

7/2/14

சேலம் , அம்மாபேட்டை , ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா.

சேலம் , அம்மாபேட்டை , ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு  பெருவிழா அழைப்பிதழ்(07-07-2014).




நன்றி தெலுங்கு தேவாங்க  சமூக விழா குழுவினர்

6/19/14

ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 ஸ்ரீ இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் மங்கள பாடல்கள்

 

 

 

 

 

 

 

 

மங்களப் பாடல் - 1

 பாலிலே அபிஷேகம்
 பழத்திலே அபிஷேகம்
 தேனிலே அபிஷேகம்  தேவர்களுக்கு
 எள்ளிலே அபிஷேகம்
 எண்ணாயிரம்  காணிக்கை சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம் 

மங்களப் பாடல் - 2

 அசுரன நரவெத்தி
 அலெயனு கூண்ட்டனு மாடி
 நிரவு மந்தாரா கிரியெல்லி
 நீண்ட்டு மக்கான ஊடி
 உலவு தேவாங்கனியே
 ஓப்பு சாமுண்டேஸ்வரி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 3

 அந்தி மல்லிகை மலர்
 அருளி செந்தா மலர்
 கொத்து மாமரிக் கொளுந்து
 குமு குமுகுமுங்கவே
 அந்த மலர் வாசங்கள்
 எங்கெங்கு மணக்குமோ
 தந்தையுடன் நடராஜன் தமயந்திக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 4

 அச்சுநா நத்தனுக்கு
 அமுத பார்வதி கௌரி
 கச்சத்துடன் நகையணிந்து
 கல்யாணக் கோலம் கொண்டு
 ரங்கனி துடாங்கனி ரதிசுவனக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 5

 அஞ்சு சீர் அருள் பெட்டி
 அரிய செம்பலு பெட்டி
 ஆளாத்தி கேசெம்பு சேத்தப் பெட்டி
 இந்திரண்டு செல்வேடு
 அந்திரெண்டு பொய்வேடு
 பந்த கஸ்தூரி பல பொட்டு பெட்டி
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 6

 சரஸ்வதிக்கும் பார்வதிக்கும்
 சம பூமி லட்சுமிக்கும் அனுதினமும்
 துதி செய்ய அருள் ஜோதிக்கு
 மகாலட்சுமி வாரார்னு
 மங்களம் பாடவே சௌடேஸ்வரிக்கு
 ஜெய மங்களம் நித்திய சுப மங்களம்

மங்களப் பாடல் - 7

 சின்ன சின்ன சொம்புலு
 சிவகஞ்சி தீர்த்தமுலு
 அப்புரஞ்சி ஜமுக்காள அம்மனுக்கு
 செல்லின கந்தமுலு
 செமந்திய புஸ்மமுலு
 தல்லி சாமுண்டியே
 நீ கார்த்தியுலு
 சதிபதி கூடவே யித்து
 நீ நோடு பேக்கம்மா
 சௌடேஸ்வரிக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 8

 தேவாங்க குல தெய்வதாயியெ
 தேவல முனின காப்பாடிதவளியெ
 தேவாங்க குலன காப்பாடு பவளியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 9

 கைலாச வாசவியெ
 கையல்லி திரி சூல தவளியெ
 கேளிதவர கொடுவ அம்மனியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 10

 மங்கள மங்கள ஸ்ரீ சௌடேஸ்வரியெ
 சாந்த ரூபி சூடாம்பிகெயெ
 ஆதிவீர சாமுண்டீஸ்வரியெ
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

மங்களப் பாடல் - 11

 பேரூரு விளங்கவே
 பெரிய தேரோடவே
 தெப்பத்தேரோடவே
 திருநாட்டியம் ஆடவே
 ஜனங்கள் கூடவே
 திருவிழா கொண்டாடவே
 அருள்மிகுபட்டீஸ்வரருக்கு
 ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்

பாடல் -12

 சௌடேஸ்வரியை நாம் தொழுதால்
 சுகம் எல்லாமே தேடி வரும்
 அந்த நாயகியை நினைத்திருந்தால்
 நலம் யாவும் நாடி வரும் (சௌ)
 தேவாங்கர் குலம் விளங்க
 தேவியவள் அருள் தருவாள்
 தேடி தினம் துணை கொள்வோம்
 தேவியவள் திருப்பாதம் (சௌ)
 ஆலயம் பல இருந்தும் கோவில் செல்ல 
 மனம் இல்லையோ
 படைத்தவள் நினைவில்லையோ (சௌ)
 ஆதி சிவன் மேனியில் பாதிசக்தி
 ஆனவளாம் பாடி தினம் பணிந்திடுவோம்
 பாரினில் அவள் புகழை 
 சௌடேஸ்வரியை நாம்
 தொழுவோம்.
 
 
நன்றி devangakula.org 

6/9/14

பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்




பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்


விழுப்புரம் மாவட்டம் பனைமலைப்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ சக்தி ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு திருவிழா அழைப்பிதழ்.

இது தெலுகு மொழி பேசும் தேவாங்கர்கள்  நடத்தும் திருவிழா.கன்னடம் தெலுகு மற்றும் எந்த மொழி பேசினாலும் தேவாங்கர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக உள்ளோம் என்பதற்கு இந்த திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு.......

திருவிழாவினை  சிறப்பாக நமது சேலம் பகுதியை சார்ந்த கருங்கல்பட்டி மற்றும் S.நாட்டாமங்கலம் வீரகுமாரர்கள் நடத்தி கொடுக்கவுள்ளார்கள். அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.


நன்றி விழா குழுவினர் பனைமலைபட்டி, விழுப்புரம் மாவட்டம்