அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/7/14

சாவக்கட்டுபாளையம் கும்பாபிஷேகம் மற்றும் தொட்டு அப்ப (பெருவிழா) 2014

சாவக்கட்டுபாளையம் கும்பாபிஷேகம் மற்றும் தொட்டு அப்ப (பெருவிழா)
புகைப்பட தொகுப்பு .
.

நன்றி கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் குழு , மற்றும் பெருவிழா கமிட்டியார் சாவக்கட்டுபாளையம்.

மஹா கும்பாபிஷேகம்




தொட்டு அப்ப  பெருவிழா

அம்மன் கொலு மேடை

 பண்டாரம் தயாரித்தல்





அச்சு வெல்ல கோட்டையும், அழகு கரும்பு பந்தல் அமைத்தல்










 ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல்

பெருவிழாவிற்கு சௌடேஸ்வரி அம்மனை வரும்படி அழைப்பு விடுக்க பெருவிழா செட்டிகாரர் தன் முதுகில் பண்டாரம் கட்டி வந்து அம்மனுக்கு அச்சாரம் கொடுத்து கூப்பிடும் சடங்கு .........










 சக்தி அழைப்புக்கு பயணம் சொல்லுதல்

 


ஸ்ரீ சக்தி அழைப்பு

 
முக்கிய நிகழ்வான ஸ்ரீ சக்தி அழைப்பு மூங்கில் பேளையில் அம்மனை அமர்த்தி கையில் வீரகுமாரர் ஏந்தி வர .. காவலுக்கு வீரமுட்டி .... பக்தியுடன்  கத்தி போடும் வீரகுமாரர்கள்...










ஸ்ரீ சாமுண்டி அழைப்பு

அன்னையை சாமுண்டியாக  அலங்கரித்து குதிரை மீது வைத்து ... அலகுசேவை செய்து கொலுமண்டபம் அடைதல்..









   
திருமஞ்சனம் மற்றும் பானக மெரவணை




ஸ்ரீ மஹா ஜோதி அழைப்பு

மஹா ஜோதி திரு விழாவில் மூன்றாவது

நிகழ்சியாக நாம் மஹா ஜோதி எடுகின்றோம்.

1)உருவம் 2)அரு உருவம் 3)அருவம் என்ற மூன்று நிலைகளை அன்னை கொண்டு உள்ளாள் .சிவ லிங்கம் அரு உருவமானது .உருவம் என்றும் சொல்லலாம் .உருவம் இல்லை ... என்றும் சொல்லலாம் .அதனால் அ ந்த நிலையை சாஸ்திரங்கள் அரு உருவம் எ ன்னுகின்றன் . மஹா ஜோதி அது போல் அரு உருவமானது .


















ஸ்ரீ குண்டம் சக்தி அழைப்பு

அசுர சம்ஹாரம் முடித்த அன்னை பாவங்கள் தீர அக்னி குண்டம் வளர்த்து அதில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது. அதை நினைவு கூறும் வகையிலும் நாமும் நம் பாவங்களைகளைய  மஹா குண்டம் வளர்த்து அதில் இறங்குகின்றோம்.










சாவக்கட்டுபாளையத்தில் தொட்டு அப்ப (பெருவிழா) சிறப்பாக நடைபெற்றது ... திருவிழா ஏற்பட்டு குழுவினருக்கும்... சிறந்த முறையில் கொங்கு மண்ணில் இதுபோன்ற பெருவிழா கண்டதில்லை என்று காண்போர் வியக்கும் வண்ணம் நடத்திகொடுத்த கருங்கல்பட்டி வீரகுமாரர்கள், சேலம் புலவர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், மணிகண்ட சாஸ்த்ரிகள் அவர்களுக்கும், குண்டம் நடத்திய கொமாரபாளையம் வீரகுமாரர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்...... 

உங்கள் சேவை  என்றும் தொடர அம்மன் அருளட்டும்  !!!



புகைப்படங்களை அனுப்பிவைத்த செல்வன் . லோகேஷ் , கருங்கல்பட்டி , அவர்களுக்கும் நன்றிகள். 


6/6/14

கதை சொல்லும் திருவிழா!

கதை சொல்லும் சவுண்டாத்தா திருவிழா!




        பாட்டன் முப்பாட்டன் சொன்ன செவிவழிக் கதைகளும், அதையட்டிய வில்லுப் பாட்டும், கணியன் பாட்டும் ஆயிரமாயிரம் நீதி சொல்லும் நம் வாழ்க்கைக்கு! அப்படி ஒரு தெய்வக் கதையோடு துவங்குகிறது ஒரு திருவிழா! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தாசப்பக்கவுடர்புதூர் (நால்ரோடு). மக்கள் குடியிருக்க வசதியாக தாசப்பக்கவுடர் என்பவர் தன் நிலத்தை தானமாகத் தந்தாராம். அவருடைய பெயரிலேயே திகழ்கிறது இந்த ஊர்! இந்த ஊரின் மையத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும் ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கும்தான் கதை சொல்லி திருவிழா நடத்துகிறார்கள்.



இந்தக் கோயிலில், தைப்பொங்கல் விசேஷம்! விழாவின் ஓர் அங்கமாக... அன்று காலை, கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது, 'சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா... பாம்மா... பாதாயே’ எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, கூடவே ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வரும் இளைஞர்கள் (வேண்டிக் கொள்பவர்கள் மட்டும்), தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாகப் பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்களாம்!



ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளானார்களாம். ஆகவே, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, ''மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர் களுக்கு ஆடை தயார் செய்து கொடு'' என்று பணித்தாராம்.




அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணு வைத் தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம்.

       அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் உருவாக, அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள்...அசுரகுணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன! அவர்களை, தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டுச் சென்றாளாம் அம்பிகை.



தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் சொல்கிறது அந்தக் கதை!

இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டால், நமது குறைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், 'கல்யாணத் தடை அகலவும், குழந்தைப்பேறு வாய்க்கவும் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை மனதார வேண்டிக் கிட்டா, எல்லா வரமும் கைகூடும்’ என்கிறார்கள் அம்பாளின் திருவருளை அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள்.



"நெசவாளர்களின் வாழ்வைக் காக்கும் அந்த அம்பிகையை நாமும் வழிபடுவோம்; நம் தொழில் சிறக்கவும் குலம் செழிக்கவும் அருள்புரிவாள் ஸ்ரீசௌடேஸ்வரி!"



நன்றி சக்தி விகடன் 


6/4/14

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

 பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா
விஜயதசமி அன்று காலை அம்மன் "சக்தி அழைப்பு" மற்றும் "தண்டிலி நீரு கொம்பராது" ... பகுதி ஒன்று அம்மன் சக்தி தொட்டு விநாயகர்  கோவிலில் இருந்து அலகு சேவையுடன் புறப்பாடு....



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா--2
சக்தி , ராகு ஜோதி , மற்றும் "தண்டுலி கொம்பந்த நீரு" தண்டில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில் கருவறை அடைந்தவுடன் அம்மனுக்கு மஹா தீபாராதனை...

"தண்டுலி நீரு கொம்பராது " என்றால் சக்தி நிலை நிறுத்துவதை போல அதிசயமான நிகழ்வுதான்... கீழே உள்ள வீடியோவில் கோவில் கருவறையில் அம்மனுக்கு மேல் ஊஞ்சல் போல அலங்காரம் உள்ளதா? அது தான் ஒரு தண்டில் வாழைக்காயை கட்டி விடுவார்கள் பின் அதில் குறுக்காக இரண்டு கத்திகள் சொருகப்படும். பின் கீழே உள்ள கத்தியில் பல நூல்களை சுற்றி அதில் நல்ல கனமான கும்பம் (நீருடன்) வைக்கப்படும். அனால் அந்த பாரம் தங்காமல் அந்த வாழைக்காய் எதுவும் ஆகாமல் அப்படியே ஊர் சுற்றிவந்து இப்படி கோவில் கருவறையில் மாட்டி விடுவார்கள்... பின் ராகு ஜோதி வந்து கோவில் சேரும் வரை அப்படியே இருக்கும். ......
காணக்கிடைக்காத காட்சி கண்டு மகிழவும்...


பெரிய நெகமம் இராகு ஜோதி அழைப்பு
சக்தி அழைப்பு முடிந்தவுடன் மஹா ஜோதியாக அம்மன் பெரியவீட்டு இருமனேர் குலத்தாரால் ... மெரவுணை பண்டைய முறைப்படி மாத்து (அகசரு மாத்து )மீது நகர்வலம் வந்து கோவில் அடைதல்



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா - அம்பு சேவை

ஒன்பது நாள் ஓம்கார கொலுவிருந்த நம் அன்னை பத்தாம் நாள் விஜயதசமி நாளில் மாலை அம்மன் சிம்மாவாகனம் ஏறி .. அசுரவதம் செய்வதாக ஐதீகம். அதை தான் நாம் அம்பு சேவை (அம்பு ஆக்காது / வன்னிமர குச்சாது) என்று அழைக்கிறோம்.
ஒரு பொது இடத்தில் பெரிய வாழை மரம் நட்டு அதில் வன்னிமர கொத்து ஒரு துண்டில் காணிக்கையுடன் கட்டப்பட்டிருக்கும் பின் அம்மன் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து ஆக்ரோஷமாக வில் அம்புடன் வந்து அசுரவதம் செய்கிறார்.

அம்மன் அசுரவதம் முடிந்தவுடன் அந்த வன்னிமர இலையை அனைவரும் போட்டி போட்டுகொண்டு எடுத்து சென்று வீட்டில் பத்திரப் படுத்தி வைத்து கொள்வார்கள். அது கிடைத்தால் அன்னை அருள் கிடைத்தது போல் மெய் சிலிர்ப்பார்கள்.... பின் அம்மன் மண்டகபடிக்கு எழுந்தருளி பானகம் நிவேதனம் செயப்படும்.


 இவ்வாறு தான் கோவை மாவட்ட நெசவாளர் கிராமங்களில் சவுண்டம்மன் அப்ப (பண்டிகை) கோலாகலமாக அலகுவீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன்  சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த வீடியோ தொக்குக்க உதவிய பெரியநெகமம் செல்வன்.துரை  அவர்களுக்கு நன்றிகள்
  

5/25/14

சாவகட்டுப்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா

சாவகட்டுப்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா

சாவக்கட்டுப்பாளையம்  ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மஹா கும்பாபிஷேகம் மற்றும் பெருவிழா(தொட்டு அப்ப) ஜூன் 2-5 ஆம் தேதி களில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் கொங்கு மண்ணில் இதுவரை கண்டிராத வகையில் சிறப்பாக கும்பாபிஷேகத்துடன்  பெருவிழா அதாவது தொட்டு அப்ப , ஸ்ரீ சக்தி , ஸ்ரீ சாமுண்டி , மஹா ஜோதி , பூ  குண்டம்  ஆக அம்மன் அருளி அழகான வெல்ல கோட்டையில் , கரும்பு பந்தலில் கொலுவிருக்கும் அழகை காண அனைவரும் வாருங்கள் கண்டு ஆனந்தம் கொள்ளுங்கள்.

 

 

 பெருவிழா சேலம் கருங்கல்பட்டி வீரக்குமாரர்களால் நடத்தி வைக்கப்படுகிறது .

நன்றி சாவக்கட்டுப்பாளையம் விழா குழுவினர்