அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/21/13

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) பொதுப்பலன்கள்

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

பொதுப்பலன்கள்
2014-ஆம் ஆண்டு கடக ராசிக்கு 6-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னியா லக்னத்திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. 6-ஆவது ராசி என்பதால் மத்திம பலன் என்று பயப்படவேண்டாம். வருட ராசிநாதன் குரு- கடகத்தில்தான் தனுசுவுக்கு 8-ஆவது ராசியில்தான் உச்ச பலம் அடைவார். அது மட்டுமல்ல; கடக ராசிநாதன் சந்திரன் தனுசு ராசியில் நிற்கும்போதுதான் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது. மேலும் வருடம் பிறக்கும் காலம் தனுசு ராசிநாதன் குருவும், உங்கள் ராசிநாதன் சந்திரனும் சமசப்தமமாக நின்று பார்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல; ஆங்கிலப் புதுவருடம் கன்னியா லக்னத்தில் பிறக்க, அந்த லக்னாதிபதி புதனும் தனுசுவில் நின்று குருவால் பார்க்கப்படுவதோடு- புதனும் குருவும் பர்வர்த்தனையாகவும் இருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான கிரக அமைப்பு.

6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பாக்கியஸ்தானம் ஆகும். எனவே இந்தப் புதுவருடத்தில் உங்களுக்கு தொழில் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். படித்துமுடித்து வேலை தேடி அலைவோருக்கும் இந்த ஆண்டு நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். ஏற்கெனவே வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். கடக ராசிக்கு 8-க்குடைய சனி உச்சம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் அரபு நாடுகளுக்குப் போய் வேலை பார்க்கலாம். கைநிறைய சம்பாதித்து சொந்த ஊரில் வீடு, மனை, பிளாட் வாங்கலாம். கடக ராசிக்கு 6-ஆம் இடத்தை சனி, ராகு, குரு பார்ப்பதால், 4-ஆம் பாவப் பலனுக்காக கடன் வாங்கலாம். 4-ஆம் இடம் வாகனஸ்தானம். 4-க்குடைய சுக்கிரன் வாகன காரகன். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை என்பதால் சிலர் கார் வாங்குவதற்காகவும், கடன் வாங்கலாம். சிலர் டூவீலர் வாங்கலாம். சிலர் "ஃபோர் வீலர்' வாங்கலாம்.

7-க்குடைய சனி, ராகு சம்பந்தம் என்பதால் சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க இடமுண்டு. 7-க்குடையவரை குரு பார்ப்பதால் பெற்றோர் சம்மதத்துடன் மேற்படி திருமணம் நடக்கும். குரு ஜூன் மாதம் கடக ராசிக்குமாறி உச்சம் அடையும்போது கடகத்துக்கு 7-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், காதல் திருமணத்தில் ஒருதலைக் காதலாக இருந்தால்- காமோகர்ஷண ஹோமம் செய்துகொண்டால்  முறையற்ற காதல் நிறைவேறாமல் போய்விடும்.

4-ல் சனி, ராகு நிற்பதால், சிலர் கடந்த வருடத்தில் ஆரோக்கியக் குறைவையும் அறுவை சிகிச்சை போன்ற அவஸ்தைகளையும் தந்திருக்கலாம். செவ்வாய்- சனி பார்வைக்குப் பிறகு அந்நிலைமாறி முன்னேற்றமான திருப்பங்களைக் கொடுத்தாலும்- புது வருடத்திலிருந்து 100-க்கு 100 என்பதைவிட- 100-க்கு 150 மடங்கு முழு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லாம்.

நோய் குணமாகியும் ஓய்வில் இருக்கும்படியான சூழ்நிலையில் கட்டிப்போட்ட மாதிரி இருந்தவர்களுக்கு இந்த ஆங்கிலப் புதுவருடத்தில் இருந்து சுதந்திரமாக உலா வருதலும்- சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்படுவதுமான சூழ்நிலை உண்டாகிவிடும். வெய்யிலில் அலையக் கூடாது- மழையில் நனையக் கூடாது- அசைவ உணவு சாப்பிடக் கூடாது- உப்பு, புளி, காரம் சேர்க்கக்கூடாது என்றெல்லாம் கட்டுண்டு கிடந்தவர்கள் எல்லாம் கட்டுப்பாடுகளைக் களைந்து தூக்கியெறிந்துவிட்டு விருப்பப்பட்ட உணவுகளைச் சாப்பிடலாம். சைக்கிளிலும், டூவீலரிலும், காரிலும் முன்புபோல் ஊர் சுற்றலாம். இனிமேல் எந்த ஒரு சங்கடமும் இல்லை; சஞ்சலமும் இல்லை. 4-ல் சனி, ராகு நிற்க எப்படி முழு ஆரோக்கியம் ஏற்படும் என்று சந்தேகமாக இருக்கிறதா?

4-ல் உள்ள சனி, ராகுவை வருட ராசிநாதன் குரு பார்ப்பதோடு, வருட லக்னமான கன்னி லக்னத்துக்கு 4-ஆம் இடமான தனுசுவையும் மிதுன குரு பார்ப்பதே காரணம். அடுத்து ஜூன் மாதம் வருட லக்னத்துக்கு- கன்னிக்கு 4-க்குடைய குரு உங்கள் ராசியில் கடகத்தில் உச்சம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்க்கப்போவதும் ஒரு காரணம்!

7-க்குடைய சனி 7-க்கு 10-ல் உச்சம் பெற, சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதாலும், மனைவிக்கு வேலைவாய்ப்பும் அல்லது மனைவி பேரில் தொழில் யோகமும் உபரி வருடமானமும் ஏற்பட இடமுண்டு. ஏஜென்ஸி அடிப்படையில் அல்லது யந்திர சம்பந்தமான அல்லது நூல் ஆடை, அலங்கார சாதனங்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபகரமாக இருக்கும். படித்துப் பட்டம்பெற்ற மனைவிகளுக்கு அரசுப் பணி அல்லது தனியார் வேலை அமைய வாய்ப்புண்டு.

3-க்குடைய புதன் கடகத்துக்கு 6-ல் மறைந்து செவ்வாய், சனி, ராகு பார்வையைப் பெறுவதால், உடன்பிறப்புகள் வகையில் ஒருசிலருக்கு காரணமில்லாத கவலைகளும் பிரச்சினைகளும் ஏற்படலாம். என்றாலும் குருவும் புதனைப் பார்ப்பதோடு, புதனும் குருவும் பரிவர்த்தனை என்பதால், நீரடித்து நீர் விலகாது  என்பதுபோல சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை- புதனும் குருவும் பரிவர்த்தனை. ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்ச பலனைவிட பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்களுக்குத்தான் முழு யோகம் உண்டாகும். அதேபோல தர்மகர்மாதிபதி யோகத்துக்கும் அதிநன்மை ஏற்படும்.

கடக ராசிநாதன் சந்திரனும், பாக்கியாதிபதியான குருவும் ஒருவருக்கொருவர் சமசப்தம கேந்திரத்தில் இருப்பதால் கெஜகேசரி  யோகம் உண்டாகிறது. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம். கேந்திரமாக இருந்தால் கெஜகேசரி யோகம். சந்திரன் 6-லும் குரு 12-லும் மறைவதால் மைனஸ் பாய்ண்ட் என்றாலும், சந்திரன் கடக ராசிநாதன் என்பதோடு, குரு கடக ராசிக்கு உச்சநாதன் என்பதால் இருவருக்கும் விதிவிலக்கு உண்டு. ஆகவே மேலே சொன்ன யோகங்கள் எல்லாம் பிளஸ் பாயிண்டாக மாறிவிடும்.

நீண்டகாலம் நிலவிய குடும்பப் பிரச்சினைகள் எல்லாம் தீரும். கணவன்- மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புகள், உற்றார்- உறவினர்கள் வகையில் ஒற்றுமையும் உடன்பாடும் உதவிகளும் உண்டாகும். வீடு பத்திரப்பதிவு, மனை ஆரம்பம், கிரகப்பிரவேசம் போன்ற திட்டங்கள் வெற்றியடையும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர, அலங்காரப் பொருட்கள் எல்லாம் வாங்கலாம். சிலர்  உள்ளூரைவிட்டு வெளியூரில் வாங்கிப் போட்ட காலி மனை- பிளாட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, உள்ளூரில் வேறு இடம் பரிவர்த்தனை செய்யலாம். அல்லது வாகனம் வாங்கலாம். நல்ல காரியங்கள் நிறைவேறும். மொத்தத்தில் இந்த வருடம் இனிய வருடமாக அமையும். 

இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரகப்பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13-6-2014-ல் குருப்பெயர்ச்சியும், 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. 

இதுவரை கடக ராசிக்கு 12-ல் மறைவாக இருந்த குரு 13-6-2014-ல் ஜென்ம ராசிக்கு உச்சமாக மாறுவார். 6, 9-க்குடையவர் ஜென்மத்தில் உச்சம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்க்கக்கூடும். அது பூர்வ புண்ணியஸ்தானம். 9-க்குடையவரே 9-ஆம் இடத்தைப் பார்ப்பது உன்னதம்! அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக விளங்கும். தெய்வானுகூலம் தேடிவரும். இதுவரை நீங்கள் செய்த பூஜாபலனும் பிரார்த்தனைகளும் ஜெப  தபங்களும் இனிமேல்தான் வேலை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் வழிபாடு முனிவர்கள் தவம் இயற்றியதுக்குச் சமம். உங்கள் தவத்தை மெச்சி தெய்வம் நேரில் தோன்றி நீங்கள் கேட்கும் வரத்தைக் கொடுப்பதுபோல, இனி நீங்கள் விரும்பியதும் வேண்டியதும் கிடைக்கும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

அடுத்து கடக குரு 5-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், திருமணம், புத்திர பாக்யம் போன்ற நன்மைகளும் நல்லதும் நடக்கும். ஏற்கெனவே திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்களுக்கு மனைவி- மக்கள் எதிர்காலத்துக்காக இன்சூரன்ஸ் பண்ணுவது- பிக்சட் டெபாசிட் சேமிப்பது போன்ற வைப்புநிதி முதலீடுகள் செய்யும்படி அமையும். 9-ஆம் இடம் என்பது திரிகோணஸ்தானம், அதற்குடைய குரு 5, 9 என்ற திரிகோணத்தைப் பார்ப்பதால் எல்லாம் நலம்- எல்லாம் வளம்- எல்லாம் இன்பமயம்!

குரு திரிகோணத்தில் பலம் என்பதுபோல சனி கேந்திரத்தில் பலம். சனி கடக ராசிக்கு 4-ஆம் இடம் கேந்திரத்தில் பலம் பெற்று லக்ன கேந்திரத்தையும், தசம கேந்திரத்தையும் (10-ஆம் இடத்தையும்) பார்ப்பதால், உங்கள் ஆற்றலும் திறமையும் பளிச்சிடும்; வெளிப்படும். ஊரும் உலகமும் நண்பர்களும் மற்றவர்களும் உங்கள் திறமையைக் கண்டு வியந்து போற்றிப் புகழ்வார்கள். டி.வி. நிகழ்ச்சியில் புதுப்புது இசைக் கலைஞர்கள் தங்கள் சாதனையைப் படைத்து பாராட்டுப்பெறுவதுபோல, உங்கள் தொழில் துறையில் நீங்களும் புகழ்பெறலாம்,

10-ல் கேது இருப்பதால் ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவத் துறையிலும் பிரகாசிக்கலாம். 10-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கட்டட காண்ட்ராக்ட் தொழில் துறையிலும் மேன்மையடையலாம். அல்லது ஹோட்டல், அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பித்து பிரபலம் அடையலாம். சனியும், ராகுவும் 10-ஆம் இடத்தை பார்ப்பதால் கம்ப்யூட்டர், டிராவல்ஸ், யந்திர சாதன இரும்புத்தொழில் வகையிலும் பேர் எடுக்கலாம். லாபம் தேடலாம்.

21-6-2014-ல் துலா ராகு கன்னியிலும் மேஷ கேது மீனத்திலும் மாறுவார்கள். 3-ஆம் இடம் ராகுவுக்கு யோகமான இடம். 9-ஆம் இடம் மீனம். அந்த பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வரும் கேது அந்த வீட்டுக்குடைய குருபார்வையைப் பெறுவது விசேஷம். முன்னரே சொன்ன மாதிரி, ஆன்மிக ஈடுபாடும் ஆன்மிகத்தொண்டும் தொடரும். சிலர் அறநிலையத்துறையில் தர்மகர்த்தா பதவி, ஆன்மிகத்தொண்டர் பணி, ஆலயத் திருப்பணிக் குழுவின் பொறுப்பு ஏற்கலாம். சகோதர சகாயம், முஸ்லிம் நண்பர்களின் நட்பு, உதவி போன்ற நன்மைகளையும் 3-ஆம் இடத்து ராகு தருவார். இஸ்லாமிய  ஜாதகர்கள் வக்ப் போர்டில் முக்கிய பொறுப்புகள் ஏற்கலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


உடல் ஆரோக்கியத்தில் தெளிவும் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். மருத்துவச் செலவுகளும் ஆஸ்பத்திரி அலைச்சலும் விட்டுவிலகிவிடும். முயற்சிகளில் முன்னேற்றமும் தொழில் துறையில் வளர்ச்சியும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் இடம் பெறும். கொடுக்கல்- வாங்கலும் தாராளமாக நடைபெறும். பயணங்களும் பலன் தரும்.

பிப்ரவரி


இந்த மாதம்  பொருளாதாரரீதியாக எந்தப் பிரச்சினைகளும் இருக்காது. தாராளமான வரவு- செலவுகளும் கொடுக்கல்- வாங்கல், வாக்கு நாணயமும் காப்பாற்றப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி புதிய வேலைகளைத் தொடங்கலாம். இடம், பொருள் கிரயம் ஏற்படவும் இடமுண்டு, உடல்தெம்பும் மனத்தெம்பும் இருப்பதால் உற்சாகமாகச் செயல்பட்டு சாதிப்பீர்கள். 

மார்ச்


தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடந்தாலும் தேக்கம் இருக்காது. வியாபாரிகளுக்கு வருமானவரி, வர்த்தகவரி பிரச்சினைகள் சற்று வருத்தமளிக்கலாம். "மாமூல்' செலவு கூடுதலாக அமையும். ஹோட்டல், லாட்ஜ் அதிபர்களுக்கு டென்ஷன் அதிகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தொல்லைகள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது! 

ஏப்ரல்


தமிழ்ப் புதுவருடம் ஜயவருடம் 14-ஆம் தேதி பிறக்கிறது. அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் தமிழ்வருடப் பிறப்பு. உங்கள் ராசிக்கு சகாய ராசி. உங்கள் ராசிநாதன் சந்திரனின் நட்சத்திரம். 10-ஆவது  லக்னம். ஆக, ஆங்கிலப் புதுவருடமும், தமிழ்ப் புதுவருடமும் உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும் என்பதில் எந்த வகையிலும் சந்தேகமில்லை. பிள்ளைகள் விளையாட்டுத் தனமாக இருந்தாலும் படிப்பில் தனிக்கவனம் செலுத்துவார்கள். 

மே


12-ல் குரு அடுத்தமாதம் கடக ராசிக்கு மாறப்போகிறார் அதற்குள் எதிர்பாராத செலவுகளையும் விரயங்களையும் ஏற்படுத்தலாம். உறவினர்கள், விருந்தாளிகள் வகையிலும் தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் லாபமும் வெற்றியும் உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலாதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் உண்டாக்கும். தொழில் அதிபர்களுக்கும் சிப்பந்திகளுக்கும் நல்ல உடன்பாடு ஏற்படும். 

ஜூன்


இம்மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சியும், 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. இந்தப் பெயர்ச்சிகள் உங்களுக்கு யோகமான சிறப்பான பெயர்ச்சியாக அமையும். பழம் நழுவிப்பாலில் விழுந்த மாதிரி அதியோகமாக இருக்கும். ராசிக்கு 3-ல் ராகு வருவது மிக உத்தமம். குரு ஜென்மத்தில் இருந்தாலும் உச்சமாகி சுபஸ்தானங்கள் (5, 7, 9) பார்ப்பது யோகம்தான். குருப்பெயர்ச்சிக்கு தென்காசி செங்கோட்டை அருகில் புளியறை சென்று வழிபடவும். ராகு- கேது பெயர்ச்சிக்கு கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும். 

ஜூலை


இந்த மாதம் செல்வந்தர்களையும் பிரபலமான வி.ஐ.பிக்களையும் உங்கள் அறிவுத்திறனால் வசப்படுத்துவீர்கள். அப்போதைக்கு அதனால் எந்த நன்மையும் பயனும் தெரியாவிட்டாலும், பின்நாளில் பெரிய நன்மைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அது அஸ்திவாரமாக அமையும், உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு இது ஒரு பிள்ளையார் சுழி என்று நிம்மதி அடையலாம்.

ஆகஸ்டு


உடல் ஆரோக்கியத்தில் கவலைப்படும் படியான சங்கடம் ஏதுமில்லை யென்றாலும், சர்க்கரைநோய் உள்ளவர்கள் கட்டுப்பாடாக இருக்கவேண்டும். சர்க்கரை என்பது ஒரு பெரிய நோய் அல்ல என்றாலும் (ஸ்லோ கில்லர்)  மெதுவாக மரணத்தை உண்டுபண்ணக்கூடும் என்பார்கள். உணவுக் கட்டுப் பாடு இருந்தாலே போதும்; மருந்துகள் தேவையில்லை எனலாம். யோக தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தினசரி நடக்க வேண்டும் என்பார்கள். 

செப்டம்பர்


தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகமாகும். உழைப்பின் ஊதியத்தை திட்டமிட்டபடி பயன்படுத்த முடியாமல் திசை மாறிச் செலவாகும். இருந்தாலும் பணத்தட்டுபாடு இருக்காது. பொருளாதாரத்தில் பற்றாக்குறை வராது. அதே சமயம் தேவைகள் பூர்த்தியடையும். வரவுகள் தாராளமாக இருக்கும். சேமிப்பு இருக்காது. சிலகாரியங்களை அக்கம்பக்கம் கடன் உடன் வாங்கி நிறைவேற்றும் நிலை.

அக்டோபர்


இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 19 வரை சனி அஸ்தமனமாக இருக்கிறார். 4-ல் உள்ள சனி அஸ்தமனத்துடன் ராசியைப் பார்ப்பது பிரச்சினைதான். 8-க்குடையவர் அஸ்தமனமாவது நல்லது. ஆனால் 7-க்குடையவர் அஸ்தமனடைவது நல்லதில்லையே! அதனால் திருமண மாகாதவர்களுக்கு திருமணத்தடையும் தாமதமும் ஏற்படும். பெண்கள் பார்வதி சுயம்வர கலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கொண்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணமானவர்களுக்கு கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உச்சம் பெற்றகுரு கடகத்திலிருந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிரச்சினை களுக்கு தீர்வு உண்டாகும்.  

நவம்பர்


சனியின் அஸ்தமனம் 19-ஆம் தேதியுடன் நிவர்த்தியாகி, உதயமாகி விடுவார். அதனால் கடந்த ஒரு மாதகாலமாக சனியின் அஸ்தமனத்தால் அனுபவித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் இப்போது விமோசனம் ஏற்படும். பிரச்சினைகள் வரும்போது அவற்றை சமாளிப்பதில் ஒரு சாமர்த்தியமே உள்ளது. சில சமயம் ஒரு சரித்திரமே அடங்கும். போட்டி இருந்தால்தான் உங்கள் ஆற்றலும் எக்ஸ்ட்ரா திறமையும் வெளிப்படும். 

டிசம்பர்


இந்த மாதம் 16-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வருகிறது. இரண்டரை ஆண்டுகள் துலாராசியில் உச்சமாக இருந்த சனி கடக ராசிக்கு  5-ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். சிம்ம ராசியில் இருக்கும் குரு வக்ரமடைந்து டிசம்பர் 24-ல் கடகத்துக்கு மாறி ஆறுமாதத்துக்குமேல் மீண்டும் சிம்மத்துக்கு மாறுவார். அதுவரை கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் சனி இனியவராக மாறி நற்பலன் தருவார்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


புனர்பூச நட்சத்திரத்துக்கு 2014 வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 13-ஆவது நட்சத்திரம் 4-ஆவது க்ஷேமதாரை நட்சத்திர நாயகன் கேது வருட முற்பகுதியில் 10-லும் பிறகு 9-லும் சஞ்சரிக்க கடக குருவின் நட்சத்திர நாதனின் பார்வையைப் பெறும் காலம், உங்களுக்கு யோகமாகவும் க்ஷேமமாகவும் அமையும். தேக ஆரோக்கியம், சௌக்கியம், செயல்வேகம் எல்லாம் திருப்திகரமாக அமையும். குருவின் அருளைப் பெற கும்பகோணம் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும். ஆலய தொடர்புக்கு நாகசுப்பிரமணியம், செல்: 94872 92481.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

பூசம் சனியின் நட்சத்திரம். அதிலிருந்து 2014 வருடம் பிறக்கும் நட்சத்திரம் மூலம்- 12-ஆவது நட்சத்திரம்- 3-ஆவது விபத்தாரை. எனவே 2014-ல் எதிர்பாராத விபத்துகளையும் ஏமாற்றங்களையும் வைத்திய செலவுகளையும் சிலர் சந்திக்க நேரலாம். தொழில்துறையில் அரசு அதிகாரிகளினால் நஷ்டங் களையும் சிக்கல்களையும் சந்திக்கலாம். அரசியல்வாதிகளின் எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படலாம். கோவை- காரமடை அருகில் இருகம்பாளையம் ஜெயவீர ஆஞ்சனேயரை வழிபடவும். சுயஜாதக தசாபுக்தி நல்லபடி உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமிராது.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:


ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன்தான் 2014 வருடம் பிறக்கும் கன்னிலக்னாதிபதி. வருடம் பிறக்கும் நட்சத்திரம் மூலம். இது உங்கள் நட்சத்திரத்துக்கு 11-ஆவது நட்சத்திரம். 2-ஆவது சம்பத்தாரை. எனவே 2014-ல் உங்களுக்குப் பணத்தட்டுப்பாடே இருக்காது. கௌரவம், செல்வாக்கு, கீர்த்தி பெருகும். வி.ஜ.பிக்களின் தொடர்பும் அதனால் பயனும் பலனும் உண்டாகும். நீண்ட நாள் கனவுத்திட்டங்கள் எல்லாம் நிறைவேறும். உங்களை விட்டு விலகிப்போன சொந்த பந்தமும் சுற்றமும் நட்பும் உங்களோடு வந்து ஒட்டிக்கொள்ளும். நாகர்கோவில் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம். ஆயில்யம் ஆதிசேஷனின் நட்சத்திரம். அங்கு சென்று வழிபடவும்.

No comments:

Post a Comment