அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

9/20/13

121 .பர்வத மகரிஷி கோத்ரம் :

பர்வத மகரிஷி தேவரிஷிகளுள் ஒருவர். நாரதரின் சகோதரியின் புத்திரர். இவர் நாரதமகரிஷியைத் தன் குருவாகக் கொண்டவர். இருவரும் மிக ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்ததால் பர்வத நாரதர் என்று அழைக்கப்பட்டார். 

தேவாங்க சம்பிரதாயத்தில் பர்வதம் என்றால் அது ஸ்ரீ சைலத்தைக் குறிக்கும் - எனவே இவர் ஸ்ரீ சைலத்தில் தவம் செய்தவர் என்றும் கூறப்படுகின்றது. நாரதர் ஒரு முறை பர்வதரைப் பூவுலகில் சுற்றி வரும்படி நியமித்தார். அப்போது பர்வதர் ஸ்ரீ சைலத்தில் தங்கித் தவம் செய்து இருக்கலாம்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கஞ்சலகுண்டதவரு :- கஞ்சம் = தாமரை. தாமரை வடிவமாக யாககுண்டம் அமைத்து யாகம் செய்வது என்பது ஒருமுறை. 

கோமயத்திற்கு - பசுவின் நீர்; கஞ்சல என்பது பெயர். சுத்திக் கிரமங்கள் செய்வதற்குக் கஞ்சலம் தெளிப்பது முறை. கஞ்சலம் தெளித்து தலசுத்தி முதலியன செய்து யாகம் வளர்த்து ஆசாரசீலர்களாக வாழ்ந்தவர்கள். 
சக்கரதவரு, சக்ராலதவரு :- சங்குசக்ர முத்திரை தரித்துக் கொண்டவர். சமஸ்காரம் செய்து கொண்டவர். இவர்களுடைய சமாதியிலும் சக்கரம் ஸ்தாபிக்கப் பெறும். 
சங்கரதவரு :- சங்கரனை வழிபடுபவர். 
சப்தகவியவரு :- ஏழுவிதமாகக் கவி பாடுபவர். 
சரபகவியவரு :- சிங்கத்தை வெல்லும் பறவை சரபம் என்பது. எனவே சரபத்தைப் போன்று யாராலும் வெல்ல முடியாத கவிஞர் இவர். 
சஜ்ஜாதவரு :- வெள்ளிப் பெட்டியில் சிவலிங்கம் வைத்துப் பூசிப்பவர். 
ரங்கதவரு :- ஸ்ரீ ரங்கநாதனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். 
மாதனதவரு :- செல்வந்தர்கள். 
சாந்திதவரு :- அமைதியாக வாழ்பவர். 
பெக்லாலதவரு, முப்பனதவரு, முள்ளதவரு, யுர்மனதவரு, அங்கபுதவரு.

9/19/13

120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம்

ரிக்வேதத்தில் 9-67; 11-1-30; 37-43; 53-74 வது ரிக்குகளுக்குப் பரத்வாஜர் கர்த்தா. இம்முனிவர் நாள்தோறும்அக்நிஹோத்ரம் செய்வார். 

கங்கையில் இவர் நீராடச் செல்கையில் தம் வீரியத்தைத் துரோண கும்பத்தில் வைத்தார். இத்தேஜஸினால் துரோணர் பிறந்தார். துரோண கும்பத்திலிருந்து பிறந்தமையின் துரோணர் எனப்பட்டார். 

ரிக்வேதத்திலும், சாமவேதத்திலும் பல சூக்தங்களுக்குப் பரத்வாஜர் கர்த்தா. 

மிகவும் வயதானவர். நீண்ட காலம் வாழ்ந்தவர். முந்நூறு ஆண்டுக்காலம் பிரம்மச்சரியத்துடன் வேதங்களை ஓதியவர். அங்கங்கள் நொந்து முதிர்ந்து தளர்ந்து படுக்கையில் இருந்த இவரிடம் வந்த இந்திரன் இன்னும் நூறாண்டு காலம் ஆயுளை உமக்குத் தந்தால் என்ன செய்வீர் ? என்றான். அந்நூறாண்டு ஆயுளிலும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்வேன். வேதம் ஓதிக் காலம் கழிப்பேன் என்றார் பரத்வாஜர். 

வனவாசம் மேற்கொண்டு இராமபிரான் இவர் ஆசிரமத்திற்குச் சென்றான். மீண்டும் இராவணவதம் முடிந்து அயோத்தியைக்கு மீண்டு வருகையில் இவரது ஆசிரமம் வந்து விருந்து உண்டனன் எம்பிரான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாகுளதவரு :- ஸ்ரீ காகுளம் என்னும் ஊர்க்காரர். 

கங்காளதவரு :- கங்காள ருத்திரனை வழிபடுபவர். 

கமலதவரு :- தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்பவர். 

குத்தாலதவரு :- குத்தால மகரிஷியை வணங்குபவர் குத்தாலம் என்னும் ஊர்க்காரர். 

கொசனதவரு :- 

சிகாகோலதவரு :- கூந்தலை மிக அழகாக அலங்கரித்துக் கொள்பவர். 

சிலுகதவரு :- கிளி வளர்த்தவர். 

சீலவந்துதவரு :- சீலத்துடன் விளங்குபவர். 

சென்னூறுதவரு :- சென்னூரு என்னும் ஊர்க்காரர். 

நிரஞ்சனதவரு :- மனநிறைவுடன் செல்வத்துடன் வாழ்பவர். 

நீகூரிதவரு :- நீகூரி என்னும் ஊர்க்காரர். 

பகடலதவரு :- பவள நகை அணிபவர். பவள வணிகர். 

பங்காருதவரு :- தங்க நகை அணிபவர். தங்கமானவர். 

பட்டதவரு :- அரசனிடம் பட்டயங்கள் பெற்றவர். 

பயிடிதவரு, பைடிதவரு :- பசுக்களை வளர்த்தவர். 

பாபகதவரு :- நேர் வகிடு எடுத்துக் கூந்தலை முடித்துக் கொள்பவர். 

மத்திகூடிதவரு :- மத்திகூடி என்னும் ஊர்க்காரர். 

மராபத்திரைதவரு :- மராபத்தினி என்னும் ஊர்க்காரர். 

முங்குரதவரு :- மூக்குத்தி அணிபவர். 

முத்யதவரு :- முத்துநகை அணிபவர். முத்து வணிகர். 

மதுரதவரு :- மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

கட்கதவரு :- அம்மனின் 32 விருதுகளில் கத்தியும் ஒன்று. கத்தியை வழிபாடு செய்து வணங்குபவர். 

முத்கரதவரு :- காயத்ரி மஹாமந்திரத்தின் 24 முத்திரைகளில் முத்கரம் ஒன்று. இம் முத்கா முத்திரையை உடம்பில் தரித்தவர்.

9/17/13

கல்யாணமாம் கல்யாணம்

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்

அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ.............

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்

அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிவரும் நாடா தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் ஈத்தக்கம்பு வாத்தியம்

அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அட அஞ்சுஅரட்டு தாருசுத்தி கொண்டுவாரா பாட்டியும்
அங்க கறந்து கறந்து போகுதய்யா, கந்தநூலு சிட்டையும்....
கந்தநூலு சிட்டையும்..

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ
கருப்பாயிபாட்டி தாருசுத்தும் கண்டுப் பெட்டில லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட மாலக்கவுறு வச்சதைய்யா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா பாவோடிதானுங்கோ

அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..
மாப்பிள சொந்த பந்தம் நீளமான விழுதுங்கோ
விழுதுகட்டி கண்ணிசெஞ்சு கரட்டாண்டி பிடிக்கலாங்கோ..

பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா
பெண்னுக்கு சொந்த பந்தம் மீசக்கார நாடா....
அந்த நாடக்கு அடில உருளக்கட்ட வழவழப்ப தருகுது..வழவழப்ப தருகுது.

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
மாப்பிள பாவுநூலு துரச்சாமிபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஊடநூலு தோப்பட்டி தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் இழவாங்கி அண்ணங்கோ

இந்த மணமக்களை வரவுவக்கிற பெரிய மனுஷன் யாருங்கோ
..
..
..
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ
பன்னாடி காடாத்துண்டு தானுங்கோ....

பாவு நூலுக்கும் ஊட நூலுக்கும் கல்யாணம்
அந்த கைராட்டு, செரவு எல்லாம் ஊர்கோலம்
அந்த தாக்குழியில் நடக்குதய்யா திருமணம்
அங்கு பசைக்கஞ்சி ஆளுகெல்லாம் கும்மாளம்
 

9/2/13

நெசவாளர் இனங்கள்/ Weavers

நெசவாளர் இனங்கள்/ Weavers

               

ஆடை :- மனிதன் மாறுபட்ட தட்ப வெப்ப நிலையிலிருந்து.தன் உடலை பாதுகாக்க நினைத்த போது உடை தோன்றியுள்ளது.

    முதலில் இலைத் தலைகளையும், பின் மிருக தோல்களையும் பயன்படுத்தி உள்ளான். சிவபெருமானை தோல் ஆடையுடன் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியத்தை இப்பொழுதும் காணமுடிகிறது.

    முந்தய காலத்தில் மனிதர்கள் நீண்ட முடியை வளர்த்துள்ளனர். பின் அதில் பின்னல்களை பின்னியுள்ளனர். அதன் வலிமையை பார்த்து கயிறு செய்வது உருவாகியிருக்கிறது. இதுவே நெசவு தொழிலுக்கு காரணகர்த்தாவாக அமைந்தது.

    ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி தயாரிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டுபூச்சி ஆகிய வற்றால் நெசவு தொழில் வளர்ந்துள்ளது. விவசாய தொழிலுக்கு முற்பட்டதாக நெசவு தொழில் இருந்துள்ளது.

சணல்:- ஆப்பிக்காவிலும், எகிப்திலும், --- கி.மு. 8000 த்திலும்.
பட்டு :- சீனா மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும்—கி.மு.5000-3000 த்திலும்
பருத்தி;- முதலில் இந்தியாவிலும், பின் அமெரிக்காவிலும்-கி.மு.1700-1500 ல் இருந்துள்ளது.

    வியாபாரம் என்பது ஆடை தொழில்களில் தான் ஆரம்பித்திருக்கிறது. கி.மு.114 ல் பட்டு துணி வியாபாரம் மேற்கையும்,கிழக்கையும் இனைத்துள்ளது. 5000 மைல் தொலைவில் உள்ள மக்களையும் இது ஈர்த்துள்ளது.

    இந்தியாவில் பருத்தி துணியை பல வகையான சித்திர வேலைபாடுகளுடன் தயாரித்துள்ளனர். இது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கிரேக், ரோமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கி.மு.3300-2600 ல் பருத்தியையே ஆடையாக பயன்படுத்தி உள்ளனர். என்பது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    சிலந்தியை முன் காலத்தில் நெசவாளர்களின் சின்னமாக சொல்லபட்டுள்ளது. பட்டு பூச்சியை போல சிலந்தி மூலமாக நூல் எடுக்க முயற்சிக்க பட்டுள்ளது. [Madagascar golden spiders] என்ற ஒரு வகை சிலந்தியின் நூல் இரும்பு கம்பிகளை விட வலிமையாக இருந்திருக்கிறது. அந்த சிலந்தி இனம் ஒன்றையொன்று சாப்பிட்டுக் கொள்ளும் இனமாதலாலும், அது நகரும் போது தான் நூல் எடுக்க முடியும் என்பதாலும். இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இருந்தாலும் சாதனைக்காக அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு, பிரான்ஸ் நாடுகளில் ஒரு சில சட்டைகளை தயார் செய்து வைத்து உள்ளார்கள்.

நெசவு;- நெசவு என்பது ஆடை தயாரிக்கும் முறை. ஆடை தயாரிக்க பொதுவாக இரண்டு விதமான நூல் வேண்டும். பாவுநூல் எனப்படும் நீள வாக்கில் வரக்கூடிய நூலும், ஊடை நூல் எனப்படும் குறுக்கு வாக்கில் வரக்கூடிய  நூலும் [warp & weft] இந்த ஊடை நூல் குறுக்கு வாக்கில் பின்னபட வேண்டும். இந்த ஊடை நூல் வித,வித மாக பின்னபடுவதில் தான் வித,வித மான வடிவங்கள் உருவாகிறது.

நெசவாளர்களின் இனம்:- இந்திய நெசவாளர்களில் பல ஜாதிக்காரர்களும், பல மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். பருத்தி, பட்டுநூல் கண்டுபிடிப்பின் மூலம் வாணிகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

    துளு நாட்டில் சாலியன் மரபை சார்ந்தவர்கள் பெரிய அளவில் வாழ்ந்துள்ளனர். சாலியன் என்ற வார்த்தை சிலந்தியை குறிக்கிறது. இவர்கள் நெசவாளர்களாக இருந்திருக்க வேண்டும்.

    செட்டியார்கள் துளு நாட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் வீரபத்திரன் என்ற கடவுளை வழிபட்டுள்ளனர். செட்டியார் என்ற வார்த்தை அர்த்தம் வியாபாரியை குறிக்கிறது. அவர்களின் இயல்பு தற்போது தழிழ் நாட்டில் உள்ள செட்டியார்களின் இயல்பை ஒத்திருக்கிறது. 

    மத்திய அரசின் கணக்கெடுப்பில் நெசவை தன் குல தொழிலாக கொண்ட நிறைய இனம் இருந்திருக்கிறது. அவைகள்
1.பத்மசாலி. 2.தேவாங்கா. 3.ஜன்றா. 4.தொகட்டா. 5.தொகட்டா வீரகஸ்றியா. 6.பட்டகாரு. 7.கர்மிபக்துலா. 8.காரகால பாக்குலா. 9.சுவாகுலா சாலி. 10.நீலசாலி. 11.நலகண்டி நெஸ்சி. 12.குர்ணி. 13.குர்மி செட்டி சாலி. 14.கரிகாலா. 15.கைக்கோலன். 16.செங்குவாகன். 17.பட்டுசாலி. 18.செட்டிகார்.

1. பத்மசாலி:- ஆந்திரபிரதேசம்—தாய்மொழி தெலுங்கு, குல தெய்வம் பத்மாவதி. ஶ்ரீனிவாச கடவுளின் துணைவி.

2. தேவாங்கா:- கர்நாடகா,ஆந்திரா—தாய்மொழி கன்னடம், தெலுங்கு. சுத்தமான பருத்தி துணிகளை நெய்பவர்கள். 

3. சாலியர்/பத்மசாலியர்/செட்டியார்:- தமிழ்நாடு,ஆந்திர பிரதேசம்—தாய்மொழி தமிழ்,தெலுங்கு. இவர்கள் செயற்கை பட்டு நெசவாளர்கள்.

4. பட்டகாரு:- கேரளா—தாய்மொழி மலையாளம். மலையாளி நெசவாளர்களை சாலியன், சாலியர், சாலி என்று அழைக்க படுகின்றனர். குடும்ப பெயரை வைத்து அடையாளம் கண்டறியப் படுகின்றனர்.

5. செட்டிகார்:- கர்நாடகம்—தாய்மொழி துளு,கன்னடம். சாலியன், சாலியர், சாலி என்று இவர்கள் மலையாள நெசவாளர்களைப் போல் அழைக்கப்பட்டலும் கேரளாவில் உள்ளவர்களிடம் இருந்து பழக்கவழக்கங்களில் மாறுபட்டு பிராமின் பழக்கவழக்கங்களை ஒத்திருக்கும்.


நெசவாளர் சமூகங்கள்  
தேவாங்கர் :- மிக பழமையான இனதில் ஒன்று. ஆடை இல்லாத காலத்தில் பிரம்மன், மற்றும் தேவர்களும் சிவபெருமானிடம் வேண்ட தேவர்களுக்கு ஆடை தயார் செய்து கொடுப்பதற்காக. சிவபெருமான் தன் சக்தியின் மூலம் தேவலர் என்பவரை வர வழைத்து நான்கு யுகத்தில் ஏழு அவதாரங்கள் எடுக்க செய்திருக்கிறார். அவர்களின் சந்ததிகளே தேவாங்கா இனத்தவர்கள்.

    கடவுளுக்கும், மனிதர்களுக்கும் நூல், மற்றும் துணிகளை தயாரித்து தன் ஏழு அவதாரத்திலும் தயாரித்து கொடுத்துள்ளார். மூன்று தூய்மையான பருத்திநூல் [yajno paveeta] [தமிழில் - பூணூல்] இவரால் அறிமுகபடுத்த பட்டு இவரின் இனத்தவர்களும், பிராமணர், ஷத்திரியர்கள், வைஸ்சியர்கள். இவர்களும் அணிய ஆரம்பித்தனர்.

    ஆமேத நகர் அரசர் தேவாங்கர்களின் வரலாற்றை தெரிந்து அவற்றின் தத்துவங்களை பரப்பியுள்ளார்.

    தேவாங்கர்கள் பல பிரிவாக பிரிந்திருந்தனர். கட்டகார்ஸ், லிங்க யாட்ஸ் இவர்கள் கர்னாடகா, மகாராஸ்ட்ராவில் வசித்துள்ளனர். கட்டகார்ஸ் என்பவர்கள். தாங்கர் என்ற ஜாதிக்குள் இருந்திருக்கிறார்கள். தென் இந்திய ஜாதிகளை பற்றி எழுதிய Edgar Dhurston என்பவர் அந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில் கட்டகார்ஸ் என்ற பிரிவு தேவாங்கா இனத்தை சார்ந்தது என்று எழுதி இருக்கிறார். அவர்களை கொடிக்கால் கட்டக்காரர் என்று அழைத்துள்ளனர். 


கோலி :- சிலந்தி என்று அர்த்தம். இவர்களை மீனவர்கள் என்றும் சொல்லுவர். இவர்களின் பழக்க வழக்கங்கள், ராஜஸ்த்தான், குஜராத், ஹிமாசல பிரதேஸ், உத்தர பிரதேஸ், ஹரியானா, பெங்கால், ஒரிசா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் இந்த மாநிலத்தவர்களின் நெசவாளர்களை ஒத்துள்ளது. ஆகவே இவர்களும் நெசவாளர்களே. இவர்கள் கோலி என்ற வார்த்தையை தன் பெயருக்கு முன்னும், பின்னும் இந்தியா முழுவதும் உபயோகின்றனர்.


சால்வி :- இவர்கள் பட்டு நெசவாளர்கள். இவர்கள் 12 ம் நூற்றாண்டில் கர்நாடகா, மஹாராஷ்ட்ரா விலிருந்து குஜராத்தை சுற்றியுள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். Shal மற்றும் Sal என்றால் குஜராத்தியில் தறி என்று பொருள் படுகிறது. துணியின் பூ வேலை பாட்டிற்கு பேர் போனவர்கள்.


பட்டு நூல்காரர்/ கத்ரி :- இவர்கள் குஜராத்தின் பட்டு நெசவாளர்கள். இவர்கள் செளராஷ்ட்ரா [குஜராத்] வில் இருந்து நாயக்கர் அரசர் அழைப்பினால் மதுரை க்கு வந்தவர்கள். இவர்கள் பழமையான மொழியான செளராஷ்ட்ரியை தமிழ், கன்னடம், தெலுங்கு கலந்து பேசியுள்ளனர். இவர்கள் அதிகம் இருந்ததால் சாகித்ய அகாடமி அவர்கள் பேசிய மொழியை அங்கீகரித்து தனி மொழியாக அறிவித்துள்ளது.


செங்குந்தர் மற்றும் கைக்கோலர்கள் :- இவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேஷ், மற்றும் ஶ்ரீலங்கா வில் இருந்துள்ளனர். இவர்கள் முதலியார் என்ற பெயரை இவர்களின் பெயருக்கு பின்னால் போட்டு கொண்டனர். முதலியார் என்பது “moodeley” என்ற சொல்லில் இருந்து வந்திருக்கிறது. Moodeley என்பது தென் ஆப்பிரிக்கா நெசவாளர்களின் பெயர் ஆகும்.

    Kai [கை] Kol [தறியில் பயன் படுத்தும் குச்சி] Kol என்பது இரும்பையும் குறிக்கிறது. இவர்கள் வலுவான கரங்களை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்களால் தேவதாஸா என்ற அமைப்பு தொடங்க பட்டுள்ளது. கோவில் களில் ட்ரஸ்டியாகவும் இருந்துள்ளனர்.

    கி.பி. 800 ல் சோழ மன்னர் ஆட்சி காலத்தில் இவர்கள்  போர் வீரர்களாக இருந்துள்ளனர். பின் 13 ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சிக்கு பின்னர், இவர்கள் முழு நேர நெசவாளர்கள் ஆனார்கள்.

    இவர்கள் துணிகள் ஏற்றுமதியிலும், விற்பனையிலும் பெரியவர்களாய் விழங்கினர். வித்யா மலை பகுதியில் இருந்து ஶ்ரீலங்கா வரையிலும் வியாபாரம் செய்தனர். அதனால் இவர்கள் துறைமுகத்தின் அருகில் வசித்தனர். பெரிதும் மங்களூர், மலபார் ஏரியாவில் வசித்தனர்.


அச்சுவாரு [Acchuvaru] :- என்ற இன்த்தவர்கள் 1901 MADRAS கணக்கெடுப்பின்படி தானியம் விற்கும் ஒரியா மக்கள் என்று பதிவு செய்யப்பட்டது. ஆனால் அச்சுவாரு என்பது தறியில் அச்சு வேலை செய்யும் அச்சுபணியை குறிப்பது. கைகோல் நெசவாளரின் கிளையில் உள்ள ஜாட்டிபிள்ளை [Jatipillai] யை ஒத்துள்ளனர். ஜாட்டிபிள்ளை என்பவர்களும் துணிகள் நெய்யக்கூடிய தறியில் அச்சு வேலை செய்பவர்களே.

Talye/ Talyer, Settigars :- இவர்கள் துளுநாடு [பிரிக்க படாத கனடா] வில் நெசவு தொழில் செய்தவர்கள். துளு மொழியில் “TALIYE” என்பது சிலந்தியை குறிக்கிறது. “TA” என்ற எழுத்தை மாற்றி “SA” என்று வைத்துக் கொண்டனர். அதனால் டாலியே என்பதும் சாலியே என்பதும் ஒன்றே. அரசு பதிவின்படி இவர்களே செட்டிகார்ஸ் ஆவர். இவர்கள் தேவாங்காஸ் அமைப்பின் படியும் இருந்தனர். 

   இவர்களை சாலே, சாலி, சாலியா என்று கன்னடம், மலையாளத்தில் அழைத்தனர். குஜராத் நெசவாளர்களையும் சாலியா என்று அழைத்தனர். 

   பிள்ளி மாக்கா [Billimagga]:- துளு நாட்டில் இருந்து  கிழக்கு கடற்கரை [ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு பாண்டிய மதுரை தேசம்] மற்றும் மேற்கு கடற்கரை கேரளா வழியாக கர்நாடகா வந்திருக்கிறார்கள். இவர்கள் துளு மொழியை தமிழ், கன்னடம், தெலுங்கு கலந்து பேசியிருக்கிறார்கள், 

    இவர்களை பிள்ளி மாக்கா என்று அழைப்பார்களாம். இவர்கள் வெள்ளை துணியையே நெய்தார்களாம். இவர்கள் ஏழு கோத்திரங்களை கொண்டிருந்தனர். {Mangalore, Kundapur and Udupi} தெய்வங்களாக வீரபத்ரர், பிராமலிங்கா, அம்னோரு, இருந்தனர். மொத்த இனத்திற்கும் தலைவராக ஒருவரை நியமித்து அவரை “பாத்துக்கு சொல்ற செட்டிகார்” என்று அழைத்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவரை நியமித்து அவரை  “குறிகாறா” என்று அழைத்தனர். {'தெற்கு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இந்திய தொகுதி .1' ல் க்யூவி Billmagga 240-242, எட்கர் தர்ஸ்டன்}


சமுதாய அமைப்பு:- ஆந்திராவில் உள்ள தேவாங்கர்கள் “மகாசபை” என்றும். கன்னட தேவாங்கர்கள் “ஆயகட்டு, கட்டமனே” என்றும் ஒரு அமைப்பை வைத்திருந்தார்கள்.

    குரு, எஜமானன், செட்டிகார்கள், சேசராஜூ {செட்டியாருக்கு உதவி செய்பவர்}, கரனிக்கா {கணக்கு வழக்கை பார்ப்பவர்} அர்ச்சகர் {கோவில் பூசாரி} சிங்கமு/ சிங்கம் வல்லு {இறந்தவர்களின் சடங்குகளுக்கு உதவி செய்பவர்} 

குரு  :- இவர் தேவாங்க கடவுளாக மதிக்கபடுபவர். இவர் வார்த்தையை மேன்மையாக கருதினர்.

குரு பீடத்தின் மறுமலர்ச்சி :-  1990 ம் வருடம் மே மாதத்தில் ஹம்பி ஹேம கூட காயத்ரி பீட ஜெகத் குருவாக ஶ்ரீஶ்ரீஶ்ரீ தயானந்தபுரி மஹாராஜாவை தேவாங்க குல மக்கள் ஏற்றுக் கொண்டனர். இந்த குரு பீட வழக்கம் விஜயநகர அரசர் காலத்தில் தொடங்க பட்டது. பின் அது காலத்தால் அழிந்தது. அது மீண்டும் மறுமலர்ச்சி பெற்றுள்ளது. இவருக்கு முன் ஶ்ரீமுத்துசங்கர் சுவாமி அவர்கள் ஜெகத் குருவாக இருந்தார்.


செட்டிகார்ஸ் :- வரலாற்று பதிவின் படி செட்டிகார்ஸ் என்பவர்கள். கர்நாடகா, ஆந்திர பிரதேஷ் தில் உள்ள தேவாங்கா/ பத்மசாலி யில் இருந்து பிரிக்க பட்டவர்கள்.  இவர்கள் வரதட்சனை அதிகம் கேட்டதால். இவர்களை முக்கிய பகுதியிலிருந்து விலக்கினர். இவர்கள் விஜயநகர அரசரின் காலத்தில் பெரும் மதிப்புடன் வாழ்ந்தனர்.

    நெசவாளர்கள் கிராமத்திலும், நகரத்திலும் ஒற்றுமையாய் வாழ்ந்தனர். இவர்களை “கேரி” என்று கன்னடத்திலும். டேரு என்று மலையாலத்திலும் கூறினர். 

    நெசவு என்பது குடும்ப தொழிலாகவே இருந்தது. தெற்கு இந்தியாவில் இரு பிரிவாக இருந்தனர். 1. மேல் பிரிவு. 2. கீழ் பிரிவு. தேவாங்கா மற்றும் கைக்கோலரை கீழ் இனத்தார் என்றும். ஆந்திராவில் உள்ள பத்மசாலியை மேல் இனத்தார் என்றும் அவர்களே வைத்து கொண்டனர். தமிழ்நாடு வழியாக இடம் பெயர்ந்த நெசவாளர்களையும் கீழ் இனத்தார் என்றே வைத்து கொண்டனர்.


    தேவாங்கர்கள் வேறு தொழில் செய்தாலும், அல்லது நெசவு தொழில் செய்து கொண்டு வேறு இனத்தில் இருந்தாலும், இவர்களை ஒன்று கூட்டுவது இவர்களின் மொழியே. அவர்களிடையே பல பிரிவினைகள் ஏற்பட்டிருந்தாலும் இவர்களின் மொழி ஒரு கருவியாய் அமைந்திருக்கிறது.

ஆதாரம் :  வேறு ஒரு  வலை பதிவில் ஆங்கிலத்தில்  -- Hosabettu Vishwanath (Pune) என்பவர் எழுதி இருக்கிறார் . எந்த ஆதார நூலையும் போடவில்லை. நடப்பில் உள்ள விசயங்களும், நமக்கு தெரிந்த விசயங்களும் நம்ப கூடிய வகையில் இருப்பதால். பதிவு செய்யப்  பட்டிருக்கிறது. S.V. RAJA RATHINAM. KARUR.


கட்டுரையை சுட்டி காட்டியவர் :- திரு. A. தியாகராஜன் அவர்கள்.


                 தமிழில்   பதிவு  செய்தது  :- S.V. ராஜ  ரத்தினம் .

8/23/13

119 .பராசர மகரிஷி கோத்ரம்

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் திரசந்தி. பராசரர் தம் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி உதிரன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும்போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திரயாகம் செய்தார். 

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும் புலஸ்திய பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்தியர் பராசரருக்குப் புராணம் பாட அருள் செய்தார். 

விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்பவாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் - தோல்வி அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார். மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் - காமத்தை வென்றவர் என்று பொருள் - பராசரர் எனப்பட்டார். 

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார். தாயின் கர்ப்பத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து கொண்டு வயிற்றைப் பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார். 

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணுமூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சி பூமியில் புதைத்தார். 

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவரமுயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார். உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினிவீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்தது அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார். 

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவானி கூடலில் உள்ளநதி இதுவாம். 

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சாதனதவரு ;- 
1) சரியை 
2) கிரியை வ் 3) யோகம் 
4) ஞானம் 
என்னும் சாதன சதுஷ்டயத்தில் ஊற்றமுடையவர்கள். 

துவாபாலகதவரு ;- அம்மன் திருவிழாவில் துவாரபாலகர்களாக திருத்தொண்டு செய்பவர். 

பில்வபத்ரதவரு ;- வில்வதளைகளால் வழிபாடு செய்பவர். 

பிண்டதவரு ;- பிதுரர்களுக்குத் தவறாது பிண்ட தர்ப்பணம் செய்பவர். 

போஜனதவரு ;- ஏழைகளுக்குப் போஜனம் வழங்கியவர். 

யெதலூரிதவரு ;- ஆந்திராவில் உள்ள யெதலூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

பக்கனதவரு ;- பக்கனபள்ளி என்னும் ஊர்க்காரர். 

சாமந்திதவரு ;- சாமந்தி மலர்களால் வழிபாடு செய்பவர். 

காஜிலதவரு, பூபெதவரு, பக்காதவரு, சும்மானதவரு.