அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/5/14

பாணியார் வம்சம் எண்ணுமகள் பொன்னம்பூத்தி அம்மன் வழிபாடு

பாணியார் வம்சம் எண்ணுமகள்  பொன்னம்பூத்தி அம்மன் வழிபாடு

வருடா வருடம் சாங்கில்ய மகரிஷி கோத்திரம் பாணியார் வம்ச தாயாதிகள் பொள்ளாச்சி அடுத்துள்ள வக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் பங்குனி உத்திர நாளில் ஒன்று கூடி தங்கள் எண்ணு மக்களை(பெண் மக்கள் ) அழைத்து தங்கள் வம்ச எண்ணுமக்கள் தெய்வமாக விளங்கும் "பொன்னம்பூத்தி அம்மன் " என்னும் சவுண்டம்மன் அம்சமாக விளங்க கூடிய அந்த அம்மனுக்கு சிறப்பாக ஆற்று ஓரத்திலே படையல் போட்டு வழிபடுகிறார்கள். அப்பொழுது வரும் பெண்களுக்கு "மள்ளி தும்புசாது" என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதன் தாத்பரியம் என்ன வென்றால் பெண் மக்களுக்கு மடி நிறைய பொருட்களை வழங்குவார்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்கள் பிறந்தவீடும் பிறந்த குலமும் தழைக்க வாழ்த்துவார்கள். பொதுவாக நம் குலத்தில் பெண் மக்களுக்கு தான் முன்னுரிமை அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் என்று கூறுவார்கள்.

அதற்காக தான் இந்த விழா. இந்த வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.



நன்றி திரு. முருகானந்தம்  , பொள்ளாச்சி

No comments:

Post a Comment