சதானந்த
மகரிஷி கோத்திரம்
, இருமனேர் வம்சம் எண்ணுமகள் வரலாறு
.
பெரிய வீட்டுக்காரர்கள்(தொட்டு மனே காருறு)
பட்டம் பெற்றவர்கள் இருமனேர் வம்ச தாயாதிகள். அவர்கள்
பொதுவாக பைரவர் , வீரகவ பெருமாள் , சௌண்டம்மன்
ஆகியோரை வீட்டு தெய்வமாக வணங்கி
வருகிறார்கள். எந்த ஒரு சவுண்டம்மன்
திருவிழா ஆனாலும்
வேறு குல தெய்வ கோவில்
திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் போது
இவர்கள் முன்னின்று நடத்தி வைப்பார்கள். அவர்கள்
வீட்டு சீர் தான் முதலில்
அம்மனுக்கு சமர்பிக்கப்படும். சரி அவர்கள் குலத்தில்
தோன்றிய அரப்புக்கார அம்மன் அவர்கள் கதையை காண்போம்.
இந்த நிகழ்வு கோவை
மாவட்ட நெசவாளர் கிராமமாக விளங்க கூடிய நெகமம் . அங்கு தான் கீழே கூறப்படும் நிகழ்வு
நடந்தாக கூறுகிறார்கள். அங்கு
ஒரு சமயம் நமது ஸ்ரீ இராமலிங்க
சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவுக்கு
ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
அதற்கு அனைவரிடமும் தலைக்கட்டு வரி அல்லது மாங்கல்ய
வரி வசூலிக்க தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இருமனேர் குலத்திற்கு
வாழவந்த பெண் அரப்புகார
அம்மன் அவர் தனது வீட்டின்
வறுமை காரணமாக வரி கொடுக்க
முடியவில்லை அவர் அரப்பு வியாபாரம்
செய்து வாழ்ந்து வந்தார். அதனால் திருவிழாவிற்கு
வருகிற அனைவருக்கும் அரப்பு
வழங்குகிறேன் என்று கூறிவிட்டார். திருவிழா
கொடியேற்றப்பட்டு அனைத்தும் சிறப்பாக நடக்க தொடங்கின. இவரும்
தான் கூறியது போல் அனைவருக்கும்
அரப்பு வழங்கி கொண்டு இருந்தார்கள்.
ஆனால் அரப்பு தீர்ந்து
விடுகிறது. தான் கொடுத்த வாக்கை
காப்பாற்ற அவர் மீண்டும் ஆற்றுப்பக்கம் சென்று
அரப்பு பறித்து வர செல்கிறார்.
அதற்குள் திருவிழா அன்னதானம் ஆரம்பிகிறது .
இருமனேர்
குலதில் பிறந்த ஒரு வருக்கு
முதல் மனைவி இறந்து விடுகிறார்
. அதனால் இரண்டாம் மனைவியாக வருகிறவர் தான் இந்த அரப்புக்கார
அம்மன். முதல் மனைவிக்கு ஒரு
ஆண் பிள்ளை .அரப்புக்கார
அம்மனுக்கு இரண்டு பெண்
குழந்தைகள் . அவர்கள் தான் வீரமல்லம்மாள்
, தேவருமல்லம்மாள். தற்போது இவர்கள் தான்
இருமனேர் குல எண்ணு மக்கள்
தெய்வமாக உள்ளார்கள். அரப்பு
பறிக்க சென்ற தாய் வராததால்
அந்த இரண்டு சிறுமிகளும் சாப்பிடுவதற்கு அன்னதான
பந்தலுக்கு செல்கிறார்கள். அங்கே இருந்த நம்
முன்னோர்கள் அவர்கள் தாய் சொன்ன
சொல் காப்பாற்றவில்லை என்று கூறி அவர்கள்
இருவரை மட்டும் வெளியேற்றி விடுகிறார்கள்
உணவு கொடுக்காமல். அவர்கள் வம்சம் தழைக்க
அந்த சிறுவனை மட்டும் ஒன்றும்
கூறாமல் விட்டுவிடுகிறார்கள் அவரும் சிறு பிள்ளை
என்பதால் ஒன்றும் தெரியாமல் தனது
தங்கைகளை வெளியேற்றி விட்டார்கள் என்று எண்ணாமல் இருந்து
விட்டார். இரண்டு பெண்மக்களும் வெளியே
அழுது கொண்டு நின்றார்கள்.
இதை அறியாமல் அனைவருக்கும் அரப்பு வழங்கி விட்டு
வந்தார் அரப்புகார அம்மன். தான் பெற்ற
மக்களை இப்படி செய்து விட்டார்களே
என்று எண்ணி மனமுடைந்தார். பிறகு
அண்ணன் எங்கே என்று கேட்டார்
அதற்கு அந்த சிறுமியர் உள்ளே
சாப்பிடுகிறார் என்று கூறியதும் அவருக்கு
கோபம் வந்துவிட்டது. தான் இரண்டாம் தரமாக
வந்தாலும் அவனையும் என் பிள்ளை போலே
தானே வளர்த்தேன் என்று ஆதங்கம் கொண்டாள்.
பின் அந்த இருமனேர் குலத்தவர்
அனைவரையும் சபிக்கிறார் .
"ஏனு
மாடலில்லா நின்னு ரோஷ
எரிகண்ணு
தெகது சிவா சாப கொட்டே..!!!
மத்தேனு
மாடுவம்மா நீனு எண்ணு ஜன்ம..!!!
பூலோகபந்து
நர உட்டு உட்டி "
பின் இந்த இரண்டு சிறுமியரையும் அழைத்துக்கொண்டு
கோபத்தில் நடைபயணமாக செல்கிறார். அப்பொழுது ஒரு
நாயக்கர் ஊர் அருகே வருகிறார்கள்
. அவர் கொண்டு வந்திருந்த அரப்புக்கூடை பாரம்
தாங்காமல் அதை கீழே இறக்கி
வைக்கிறார் . பின் அங்கிருந்த ராஜ
கம்பள நாயக்கர் ஒருவர் மீண்டும் அவருக்கு
அந்த கூடையை எடுத்துச் செல்ல
உதவுகிறார்கள். அந்த இடம் தற்பொழுதும்
ஒரு நினைவுச்சின்னமாக ஒட்டன்சத்திரம் அருகில் ஒரு மரத்தடியில்
உள்ளது .
பின் அரப்புக்காரம்மாள்
தனது பெண்பிள்ளைகளை அழைத்து கொண்டு தேனி
அருகே உள்ள தேக்கம்பட்டியில் சுமார்
ஒன்றரை ஆண்டு காலம் இருந்து
விட்டு அருகில் உள்ள சீப்பாலக்கோட்டையில்
குடிபெயர்ந்துள்ளனர். அங்கு இஸ்லாமியர்களின் படையெடுப்பின்
போது அவர்களுக்கு பயந்து ஓடிய தேவரு
மல்லம்மாள் அங்குள்ள மாமரத்தின் மீது ஏறி மறைந்து
விட்டார். பின் அரப்புக்காரம்மாளும் வீருமல்லம்மாளும்,
போடி அருகே உள்ள பொட்டிபுரத்தில்
குடியேறினர்.வீருமல்லம்மாளுக்கு திருமணம் நடந்தேறியது.அப்பொழுதும் திப்பு சுல்தான் படையெடுப்பால் வீருமல்லம்மாளின் கணவர் கொல்லப்படுகிறார்.அப்பொழுது
கணவரின் உடல் எரியூட்டும் போது
தானும் உடன் கட்டை ஏறினார்.அதன் பின்னர் அரப்புக்காரம்மாளும்
போடி-ரங்கநாதபுரத்திலே குடியேறினார்.அவருடைய ஆண் வாரிசுகளின்
பின் வாரிசுகளான நான்கு தாத்தா மார்களின்
தலைமை வாரிசுக்கு தலைவர் பதவியும் மீதமுள்ள
மூவருக்கு உபதலைவர,செயலாளர், பொருளாளர்
என பதவிகள் வழங்கப்படுகின்றன.
இப்பொழுதும்
அரபுக்கார அம்மனுக்கு ஒட்டன்சத்திரம் அருகில் அவருக்கு ஒரு
மரத்தடியில் பைரவர் காட்சி கொடுத்த
இடம் உள்ளது.
அதோடு அரப்புக்கார அம்மனுக்கும் வீரமல்லம்மாள் , தேவருமல்லம்மாள் ஆகியோருக்கு சந்நிதிகள் ரங்கநாதபுரம்,போடி அருகில் அங்கு உள்ளது. பின்னர் 2010ம் ஆண்டு இவர்களுக்கு
கோவில் கட்டி மிகச்சிறப்பாக கும்பாபிஷேகம்
நடந்தேறியது.
அவற்றில்
பைரவர்,காலபைரவர்,தேவருமல்லம்மாள்,வீருமல்லம்மாள் ஆகியோருக்கு சிலை வைத்து பூஜைகள்
நடைபெறுகின்றன.அனைவரும் சென்று அம்மனார்களை வணங்கி
அருள் பெறுவோம்.
இந்த கதை முற்றிலும் செவி
வழி செய்திகளே... நிறைய மாறுதல்கள் இருக்க
வாய்ப்புக்கள் உள்ளதால். மாற்று கதை தெரிந்தால்
தெரிவிக்கவும்
ரங்கநாதபுரம் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் குண்டம் திருவிழா புகைப்படங்கள்
கீழே உள்ள படம் ஸ்ரீ
வீர மல்லம்மாள், திம்மராயம்பாளையம் கெத்திகை , சிறுமுகை
சக்தி அழைத்தோம் அம்மா வீரமல்லம்மா ...
சித்திரையில்
நோன்பிருந்து
வளர்பிறை
புதனில்
அழகிய திருவளர் திம்மராயம் பதியிலே ....
பவானி ஆற்றின் கரையிலே ...
ஒய்யாரமாய்
உனக்கு பந்தலிட்டோம் கரும்பிலே .....
வெல்லத்தில்
கோட்டைகட்டி !
வெற்றிலையில்
தோரணம் அமைத்து !!
பலவித கரகம் ஜோடித்து .....
பேழையிலே
உன்னை கொலுஅமர்த்தி ...
அலகுவீரர்கள்
தெண்டகங்கள் சொல்ல ....
பெண்மக்கள்
எல்லாம் உன்னைவேண்டி தொழ ......
வீரர்கள்
உன்னை சக்தியாய் பேழையிலேஏந்தி ...
குழந்தையாக
நீ அடம்பிடிக்க !
உதிரம்சொட்ட
கத்தி இட்டு
ஊரெல்லாம்
உன்னைசுற்றி ...
கோவில்
அடைந்து ....மகாபூசனைகள் செய்து
இருமனேர்குலம்
தழைக்க...
எண்ணுமக்கள் எல்லாம்வளம் பெற .....
மகாஜோதியை ராகுதீபமாய் எடுத்து
உனக்கு சீராகபடைத்து உன்னைவேண்ட!!!
சகலகுலங்களையும் வாழவைக்கும் சௌடேஸ்வரி நீ !
பெரியவீட்டுகாரர் பட்டம்பெற்ற ...
இருமனேர்
குலமகள் ஸ்ரீவீரமல்லம்மாள்ஆக அருள்புரிவாயே !!!
நன்றி கோவில் கமிட்டியின் செயலாளர்
Er.V.கணேசன்.Cell
no.9629353034.
நன்றிகள் பல . இக்கதை பற்றிய தகவல்கள் கூறிய செலகரசல் தேவராஜ் , வினோத் , மற்றும் மிகுந்த சிரமம் கொண்டு இக்கதை பற்றி கேட்டவுடன் அதற்காக முயற்சி எடுத்து அங்கு சென்று புகைப்படங்கள் மற்றும் இக்கதை முடிவு பெற உதவிய போடி ஜுபிட்டர் செல்வம் அவர்களுக்கு நன்றிகள் .
No comments:
Post a Comment