அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/23/14

இரண்யன் நாடகமும் பகத்தூரும்

இரண்யன் நாடகமும் பகத்தூரும்
......கொங்கு நாடு என்ற பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அருகே உள்ள சிறப்பு பெற்ற ஊரான பக்தியில் சிறந்த பகத்தூர். இந்த ஊர் மக்கள் 600 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்திலிருந்து முகமதியர் கொடுமை கண்டு கொங்கு நாட்டுக்கு தன் குலதெய்வத்தை எடுத்துக் கொண்டு சத்தியமங்கலம் டணாய்க்கன் கோட்டை வழியாக மாயாறு தாண்டி வந்து குடியேரினார்கள்.

ஆதியில் மாயாறு அருகே குலக்கோயிலையும், ஊரையும் கட்டி வாழ்ந்து வந்தார்கள். அதற்கு பின்பு தீவட்டி கொள்ளைகார்களால் அவ்வூர் அழிக்கப்பட்டு, தற்போது உள்ள ஊருக்கு அருகே ஒபுலட்டி என்ற ஊரை அமைத்து குடியிருந்தார்கள். அந்த இடத்திலும் தொல்லைகள் பல ஏற்படவே ஐதர்அலியின் படைத்தலவைன் பகதூர் என்பவன் துணையோடு தற்போது உள்ள ஊர் உருவாகியது. இப்பகுதியில் கன்னட மொழி பேசும் தேவாங்க சமூக மக்களும் ஒக்கலிக சமூக மக்களும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த ஊர் பவானி நதியின் கிளை நதியான கமலாநதியின் கிழக்கு கரையில் உள்ள ஊராகும். இம்மக்கள் நெசவுத் தொழிலை முழுமையாக செய்து வருகிறார்கள். இந்த ஊரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலும், மடமனைக்குச் சேர்ந்த பர்வத மகரிஷி கோத்திரம் கஞ்சள குலதாரின் குலதெய்வம் ஸ்ரீ அகோர வீரபத்திர ஸ்வாமி திருக்கோயிலும் மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில் சூழ்ந்த புண்ணிய பூமியாகும்.

இவ்வூரானது பஜனை, கோலாட்டம், கும்மி, இரண்யன் நாடகம் என பல கலைஞர்கள் வாழும் ஊராகும். ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் சீரும்சிறப்புமாக நடத்தி வருகிறார்கள். புரட்டாசி மாதம் விஜயதசமி அன்று திருவீதி உலாவும், நவராத்திரி அம்பாள் அலங்காரமும் ஒன்பது நாள் பூஜையும் சிறப்பாக இருக்கும். இன்னும் மார்கழி மாதம் திருப்பாவை, திருவெண்பாவை பாடி பஜனைகள் நடத்துவார்கள். தை இரண்டாம் நாள் திருவிழாவில் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்திலும், ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா வரும் காட்சி காண கண்கோடி வேண்டும்.

இந்த ஊரில் நரசிம்ம பெருமாளின் இரண்யன் நாடகம் மிகவும் புகழ் பெற்றது. காலம்காலமாக இம்மக்கள் நடித்து வருகிறார்கள். இந்நாடகத்தை தை மாதம் நடத்துவார்கள். இதில் நடிக்கும் நடிகர்கள் பாடி ஆடி மிகவும் தத்ரரூபமாக நடிப்பார்கள். இந்த நாடகத்தை பார்க்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். இன்றுவரை இந்நாடக கலையை காப்பாற்றி காத்துவரும் கலைஞர்கள் பலர் உள்ள இவ்வூரானது கொங்கு நாட்டின் பக்தியில் சிறந்த பகத்தூராகும்.

No comments:

Post a Comment