அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/19/13

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்

மகர ராசிக்கு 12-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 9-ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் 2014-ஆம் வருடம் பிறக்கிறது. மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பர அத்தியாவசியப் பொருட்கள் வாங்கலாம். ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.ஸி., டைனிங் டேபிள் போன்ற ஆடம்பர அத்தியாவசியப் பொருட்கள் சேரும். சில பொருட்களை ரொக்கம் கொடுத்து வாங்கலாம். சில பொருட்களை தவணை அடிப்படையில் வாங்கலாம். வருடத் தொடக்கத்திலிருந்து ஜூன்வரை 3, 12-க்குடைய குரு 6-ல் மறைகிறார். அதனால் கடன்வாங்கும் கட்டாயம் ஏற்படும். இப்படி தவணை அடிப்படையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதே கடன்தானே!

இப்படிக் கடன் வாங்காவிட்டால், வைத்தியச் செலவு மாறிமாறி வந்துகொண்டிருக்கும். சிலருக்கு விபத்தினால் கால் எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை என்று ஏற்பட்டு, முழு குணமாகாமல் அவஸ்தையாக இருக்கும். சிலர் "டூவிலர்" தவணைக் கடன் மூலமாக வாங்கலாம். 10-ல் சனியும் ராகுவும் நிற்க குரு பார்ப்பதால், உடல்நலக் குறைவால் கிட்டத்தட்ட 18 மாதகாலமாக தொழில், வருமானத்தைக் கவனிக்கமுடியாமல் போயிற்று. கடனை வாங்கியே வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வைத்தியச் செலவையும் சந்திக்க வைக்கிறது. இந்த ஒன்றரை வருடமாக ஏற்பட்ட கடன்களையெல்லாம் எப்படி அடைக்கப்போகிறோம் என்று நினைத்தாலே பெருங்கவலை வந்துவிடும். ஆகவே எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். யாருக்கும் மனதார எந்தக் கெடுதலும்  நினைக்காத உங்கள் நல்ல மனதுக்கு எந்தக் கெடுதலும் வராது. 7-ஆம் இடத்தையும் குரு பார்ப்பதோடு 10-ஆம் இடத்தையும் குரு பார்க்கிறார்.

எனவே தொழில், வருமானம், வேலை, சம்பாத்தியம், வெளிநாட்டு யோகம் ஆகிய பலன் நடக்கும். தொழிலும் வருமானமும் "ரெகுலராக' இருந்தாலே மற்ற எல்லாப் பிரச்சினையும் சமாளித்துவிடலாம் அல்லவா?

மகர ராசிக்கு ஆங்கில வருடப்பிறப்பு 9-ஆவது கன்னி லக்னத்தில் பிறப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருக்கும். வருட லக்னாதிபதி புதனை வருட ராசிநாதன் குரு பார்க்கிறார். அதனாலும் உங்கள் பெருமை, திறமை, செல்வாக்கு போன்றவற்றுக்கு குறைவில்லை. மேலும் மகர ராசிநாதன் சனியை குரு பார்க்கிறார். ஆகவே தொழிலும் வாழ்க்கையும் தொய்வில்லாமல் செயல்படும். 10-ல் ராகு இருப்பதால், சிலநேரம் சில குழப்பங்கள் உருவாகலாம். ராகுவும்- கேதுவும் கோள் கிரகங்கள். எனவே உங்களைப் பற்றி வேலைசெய்யும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் தவிர்க்க முடியாத விமர்சனங்களும் வீண் அபவாதங்களும் எழலாம். இருந்தாலும் குரு பலத்தால் அவற்றையெல்லாம் களைந்து முன்னேறலாம்.

மகர ராசிக்கு 12-ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதால், வேண்டாத செலவுகள் உண்டானாலும்- அதற்கு குரு பார்வை கிடைப்பதால்- இப்போது அவை அவசியமாகத் தோன்றாவிட்டாலும் பின்னால் ஒருசமயம் அது முக்கியமானதாகப்படும். அதை முன்கூட்டியே "வருமுன் காப்போம்' மாதிரி செய்துவிட்டது அப்போது நல்லதாதகத் தெரியும்.

மகர ராசிக்கு 4-ல் கேது நிற்பது சுகக்கேடு, தாய்க்கு பிரச்சினை, கல்வித்தடை போன்ற பலன்களைத் தரும் என்றாலும், அந்த வீட்டுக்குடைய செவ்வாய் 9-ல் நின்று 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், விதிவிலக்காகிறது. அதாவது எந்த ஒரு பாவத்திலும் கெடுபலனை ஏற்படுத்தும் கிரகம் இருந்தாலும் அதற்கு குரு பார்வை இருக்கவேண்டும். அல்லது அந்த வீட்டுக்குடைய கிரகம் பார்த்தாலும் அந்த இடத்துக் கெடுபலன் மாறிவிடும். அல்லது ராசிநாதன், லக்னநாதன் பார்த்தாலும் தோஷம் நிவர்த்தியாகிவிடும். அந்த அடிப்படையில் 4-ஆம் இடத்துக் கேதுவால் உங்களுக்கு கெடுதல் ஏற்பட இடமில்லை.

8-க்குடைய சூரியன் 12-ல் மறைவதும் 6-க்குடைய புதனும் 12-ல் மறைவதும் விபரீத ராஜயோகம் ஆகும். எதை நல்லது என்று கருதுகிறீர்களோ அதுவே கெடுதலாக மாறும். எதைக் கெடுதல் என்று ஒதுக்குகிறீர்களோ அது நன்மையைத் தருவதாகவும் பயன் உள்ளதாகவும் மாறிவிடும்.

குருப்பெயர்ச்சி: 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி ஏற்படும். மகர ராசிக்கு 6-ல் இருக்கும் குரு 7-ஆம் இடத்துக்கு மாறுவார். அங்கு உச்சமடைவார். அதனால் குரு மிதுனத்தில் வந்தது முதல் உங்களையும் அறியாமல் கடனுக்கு மேல் கடன் ஏறிக்கொண்டே போனது! கடன் வாங்கவே தயங்கும் நீங்கள் அத்தியாவசியக் கடனாக சக்திக்கும் மீறியவகையில் கடனை வாங்கித் தள்ளி விட்டீர்கள். காய்கறிச் செலவு சாப்பாட்டுக்கு இல்லையென்றாலும் கடன் வாங்காமல்- வெறும் ரசம், துவையலை வைத்து சமாளித்துவிடலாம். ஆனால் விபத்து, சுகக் குறைவு, பேறுகாலம், ஆபரேசன் என்றால் கடன்வாங்காமல் சமாளிக்க முடியுமா? தர்ம ஆஸ்பத்திரிக்குப் போனாலும் சரிவராது என்று கடன் வாங்கித்தான் செலவு செய்யவேண்டும். அப்படி வாங்கிய கடன், வட்டி எல்லாம் தலைக்குமேல் சுமையாக அழுத்த, திகைத்துப்போன உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தமாதிரி கடன்களை அடைக்கச் செய்துவிடும்.

உச்சகுரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 11-ஆம் இடம் லாபஸ்தானத்தையும், 3-ஆம் இடம் தைரிய ஸ்தானத்தையும் பார்க்கக்கூடும். எனவே, லாபம், சேமிப்பு, வெற்றி, மனத்துணிவு ஆகிய பலன்களைத் தரக்கூடும். கடந்த ஓராண்டுக்கும்மேல் வருமானமே இல்லாமல் வைத்தியச் செலவு, குடும்பச் செலவு, வட்டிச் செலவு எல்லாவற்றுக்கும் கடன்வாங்கியே காலத்தை ஓட்டியவர்களுக்கு, புதையல் எடுத்தமாதிரி குரு பகவான் எந்த ரூபத்திலோ அள்ளித்தரப்போகிறார். நீங்களும் நல்ல வாழ்வு வந்தது என்று துள்ளிக்குதிக்கப் போகிறீர்கள்.

குரு வக்ரம்: 2014 பிறக்கும்போதே குரு வக்ரமாக இருக்கிறார். மார்ச் 12 வரை வக்ரகதியாக இருக்கிறார். 6-ஆம் இடத்தில் வக்ரமாக இருப்பதால் கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகள் எல்லாம் நீடிக்கும். ஏனென்றால், எந்த ஒரு கிரகமும் வக்ரமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அதிகரிக்கும். பலமடையச் செய்யும். அஸ்தமனமாக இருக்கும்போது அந்த இடத்துப் பலனை அழிக்கும்; நாசம் செய்துவிடும். குரு கெட்ட இடமான 6-ல் வக்ரம் என்பதால் 6-ஆம் இடத்துப் பலனை- ரோகம், ருணம், சத்ரு போன்ற பலனை அதிகப்படுத்துகிறார். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் குரு கடாட்சம் இருந்தால் குருவின் சோதனைகளை வெல்ல முடியும். சித்தர்களின் ஜீவசமாதியை வழிபடலாம். அத்துடன் கோவை கோவில்பாளையத்தில் காலகாலேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தியை வழிபடவும். அவர் நெற்றியில் சிவலிங்கம் உருவம் காணப்படும்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதகாலம் (5-8-2014 முடிய) குரு அஸ்தமனமாக இருப்பார். அக்காலம் குரு கடகத்தில் நல்ல இடத்தில் உங்கள் ராசிக்கு 7-ல் உச்சமாக இருப்பார். அஸ்தமனம் அடைவதால் அந்த இடத்து நற்பலன்களைச் செய்யாமல் மௌனமாக இருப்பார். மழையில் நனைந்த ஸ்கூட்டர்- டூவிலர் ஸ்டார்ட் ஆகாது. எவ்வளவு உதைத்தாலும் வெறும் சவுண்டோடு ஆஃப் ஆகிவிடும். "பிளக்'கை கழற்றி சுத்தம் பண்ணியதும் "ஸ்டார்ட்' ஆகிவிடும். அதுபோல இந்த ஒருமாத காலமும் நல்லது நடக்க தடை ஏற்படும்; ஆனால் கெடுக்காது. அதாவது கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்றமாதிரி- குரு மேன்மையானவர். அந்தத் தடை, தாமதங்களைத் தாங்கிக்கொள்ள மனதுக்குப் பக்குவம் ஏற்பட, பொள்ளாச்சி அருகில் புரவிபாளையம் கோடீஸ்வர சுவாமியின் ஜீவசமாதி சென்று தியானம் செய்யுங்கள். இளம்பையங்கோட்டூர் சென்று யோக தட்சிணா மூர்த்தியை வியாழனன்று வழிபடலாம்.

ராகு- கேது பெயர்ச்சி: இந்த வருடம் ஜூன் மாதத்தில் குருப்பெயர்ச்சியும் வருகிறது. ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியில் உங்கள் ராசிக்கு 10-ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 9-ல் கன்னி ராசிக்கும்- மகரத்துக்கு 4-ல் மேஷத்தில் இருந்த கேது 3-ஆம் இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள். ராகு- கேது ஏற்கெனவே இருந்த இடமும் பரவாயில்லை; இப்போது மாறப்போகும் இடமும் பரவாயில்லை. கடந்த காலத்தில் ராகு- கேதுவால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் தொல்லையும் இல்லை. இப்போது 9-ல் மாறும் ராகு ஆன்மிகம், பக்தி, இறைவழிபாடு, பிதுர்களின் ஆசி, முன்னோர் வழிபாடு போன்ற பலன்களைச் செய்வார்கள். ராகுவும் கேதுவும் உங்களுக்கு அனுகூலமாக விளங்க திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, உத்தமபாளையம், கீழ்ப்பெருபள்ளம் போன்ற இடங்களுக்குப் போய்வரலாம்.

சனிப்பெயர்ச்சி: 2014 டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. 10-ல் இருக்கும் சனி பகவான் 11-ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். பொதுவாக 11-ஆம் இடத்துச் சனிபகவான் உங்களுக்கு லாபத்தையும் வெற்றியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. விரிவான பலன்களை சனிப்பெயர்ச்சி பலனிலும் 2015-ஆம் ஆண்டு பலன் புத்தகத்திலும் பார்க்கலாம். சனிப்பெயர்ச்சிக்கு விழுப்புரம் அருகே கல்பட்டு என்ற கிராமத்தில், 21 அடி உயரத்தில் சனீஸ்வரர் பிரதிஷ்டை ஆகியிருக்கிறது. அங்குசென்று வழிபடலாம்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பல வருடங்களுக்குப் பிறகு பழைய நண்பரை அல்லது உறவினரைச் சந்திப்பதால் மன ஆறுதலும் மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்படும். மற்றவர்களால் நன்மையும் உதவியும் உண்டாகும். பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கம் இருக்கும். தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்படலாம். அது பலனும் பயனும் தரும். புதிய கோவில் தரிசனம் கிடைக்கும். சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து போகலாம்.

பிப்ரவரி 


இந்த வாரம் ஆரம்பத்தில் ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். ஒரு பெரிய முயற்சியில் இறங்கிப் போராடி ஜெயிப்பீர்கள். வி.ஐ.பி.க்களின் அறிமுகமும் தொடர்பும் உங்கள் எதிர்காலத்துக்கு அடிப்படை அஸ்திவாரமாக அமையும். உடன்பிறந்தோர் உறவு தாமரை இலை தண்ணீர்போல ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். நீங்களும் பட்டும்படாமலும் நடந்துகொள்வீர்கள்.

மார்ச் 


நடைமுறைச் செயல்களிலும் அன்றாட அலுவல்களிலும் எந்தக் குறைபாடும் இருக்காது. வழக்கம்போல எல்லாத் தேவைகளும் எப்படியோ நிறைவேறும். பையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்- கையில் காசு புரண்டாலும் புரளாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியடையும். காரியங்கள் கைகூடும். ஆனால் எதிர்காலத்துக்கான சில நல்ல திட்டங்கள் மட்டும் எட்டாத உயரத்தில் உறியடிக் கம்பு விளையாட்டுப்போல இருக்கும். கம்பை எட்டி எட்டி அடித்தாலும் பானையிலும் படாது- பரிசும் கிடைக்காது. அதற்காக சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கவும். சனி பகவான் மார்ச் 1 முதல் நான்கு மாதம் வக்ரம் என்பதால் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கும்.

ஏப்ரல்  


இந்த மாதம் சென்ற மாதத்தில் நீங்கள் பாடுபட்டதுக்கு ஏற்ற பலனை அடைவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். முன்னேற்றப் பாதையில் முயற்சிகள் பயணிப்பதால் நம்பிக்கை உதயமாகும். வியாபாரிகளுக்கு புதிய பேரம், ஒப்பந்தம் செயல்படும். தொழில் விரிவடையும். ஆரோக்கியமும் பொருளாதாரமும் தெளிவாக இருக்கும். அதற்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடமும் உங்களுக்கு அனுகூலமாக அமையும்.

மே


மார்ச் முதல் 4, 11-க்குடைய செவ்வாய் வக்ரமாக இருந்தார். இந்த மாதம் வக்ரநிவர்த்தியடைவார். செவ்வாய் கன்னியில் தொடர்ந்து இருப்பதாலும் வக்ரமாக இருப்பதாலும் சில கெடுதல்கள், சில நன்மைகள் ஏற்பட்டாலும், இம்மாதம் வக்ரநிவர்த்திக்குப் பிறகு துரிதவேகத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் எல்லாம் செயல்படும். நல்லவர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருப்பதால் எதற்கும் மயங்க வேண்டாம்; தயங்க வேண்டாம்.

ஜூன்


இம்மாதம் குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. குரு 7-ல் உச்சம் பெற்று ராசியைப் பார்க்கிறார். அற்புதம். ராகு 9 பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும், கேது 3- சகாய ஸ்தானத்திலும் மாறுவது அதைவிட அற்புதம்- ஆனந்தம்! உங்கள் முயற்சி கால் பாகம்- தெய்வ கடாட்சம் முக்கால்பாகம்! அதாவது "ஆண்டவன் நினைக்கிறான்- அருணாச்சலம் முடிக்கிறான்' என்று சூப்பர் ஸ்டார் வசனம் பேசிய மாதிரி தெய்வம் நிறைவேற்றும். தெய்வமே துணையிருக்கும்போது என்ன கவலை? பஞ்ச பாண்டவர்களுக்கு கிருஷ்ண பகவான் துணையாக இருக்கவில்லையா?

ஜூலை


ஜூலை 6-ஆம் தேதி முதல் ஒருமாத காலம் குரு அஸ்தமனம் அடைகிறார். 7-ல் உச்சம் பெற்ற குரு அஸ்தமனம் அடைவது ஒருவகையில் சங்கடம்தான். சகுனம் எல்லாம் பார்த்து பயணம் புறப்படும்போது கார் டயர் பஞ்சர் ஆனால் எப்படியிருக்கும்? அப்படி எதிர்பாராத சில தடைகள், தாமதங்கள், குறுக்கீடுகள் ஏற்படலாம். என்றாலும் இது நிரந்தர பாதிப்பு இல்லை. டயரை மாற்றிவிட்டு கிளம்புவது மாதிரி பயணத்தைத் தொடங்கிவிடலாம். இது உங்களை உஷார்படுத்துகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். திருப்பத்தூர் பட்டமங்கலம் சென்று கிழக்கு நோக்கிய அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் போதும்!

ஆகஸ்டு


இம்மாதம் எல்லாத் தடைகளும் சிக்கல்களும் நீங்கி நல்லபடியாக நடக்கும். கடன் தொல்லை குறையும். வருமானம் பெருகும். மனைவி அல்லது குழந்தைகளின் ஆரோக்கியம் தெளிவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உருவாகும். சிலருக்கு கடிதங்கள் மூலமாக நல்ல செய்திகள் தேடிவரும்.

செப்டம்பர்


வாழ்க்கையிலும் தொழில் அமைப்பிலும் நல்ல மாறுதல்கள் உண்டாகும். இதுவரை நீங்கள் செய்த பூஜைகளுக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் ஹோமங்களுக்கும் இனிமேல்தான் பலன் கிடைக்கப்போகிறது. பணியில் மனநிறைவு; தொழில்துறையில் தொடரும் லாபம்; புதியமுயற்சிகளில் வெற்றி;  வருமானப் பெருக்கம் எல்லாம் உங்களை குஷிப்படுத்தும்.

அக்டோபர்


இந்த மாதமும் உங்களுக்கு ஆதாயமான மாதம்தான். தொழில் லாபம், மேன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிக்கான நல்ல திட்டங்கள் உருவாகும். பெண் மக்களுக்கு பிரசவயோகம் அல்லது வளைகாப்பு சீமந்த விழா நடத்தலாம். இறையருளால் எல்லாம் இனிது நிறைவேறினாலும் கண்ணேறு கண் திருஷ்டியும் கொஞ்சம் ஆட்டிவைக்கும். ஆனாலும் கடவுள் காப்பாற்றுவார்.

நவம்பர்


இஷ்டதெய்வ வழிபாட்டு முறைக்கு சிலருக்கு தீட்சையும் குரு உபதேசமும் கிடைக்கும். அதனால் இதுவரை குலதெய்வ வழிபாடு முறையில்லாமல் இருந்த குறை நீங்கிவிடும். "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொருபாகனார் வந்தருளுவார்' என்பது கருத்து. போட்டி, பொறாமை, பிரச்சினைகளையெல்லாம் போராடி ஜெயிக்கலாம். தேக ஆரோக்கியம் தெளிவாகும்.

டிசம்பர்


மாத மத்தியில் சனிப்பெயர்ச்சி (16-12-2014). சனி 10-ல் இருந்து 11-ஆம் இடத்துக்கு மாறுகிறார். லாபஸ்தானம். அத்துடன் ராசியையும் 3-ஆம் பார்வை பார்க்கிறார். யோகத்துக்கு மேல் யோகம்தான். சனிப்பெயர்ச்சி விரிவான பலன்களைத் தனிப்புத்தகத்தில் அப்போது பார்க்கலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது. உங்கள் நட்சத்திரம் உத்திராடத்துக்கு அது 8-ஆவது நட்சத்திரம்- மைத்ர தாரை- நட்பு தாரை. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு அனுகூலமான ஆண்டாகவே அமையும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அரசு வேலையில் இருப்போர் சக பணியாளர்களின் ஆதரவோடு செயல்படலாம். தடைப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். உத்திராடம் சூரியன் நட்சத்திரம். சூரியன் உங்கள் மகர ராசிக்கு அட்டமாதிபதி என்பதால், அவ்வப்போது சிறுசிறு தடைகளும் குறுக்கீடுகளும் காணப்படலாம்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருப்பனந்தாள் சென்று அருணஜடேஸ்வரரை வழிபடவும். சூரியன், சந்திரன், பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், குங்கிலியக் கலய நாயனார் வழிபட்ட ஸ்தலம். அத்துடன் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத் குமார் ஜீவசமாதி சென்று வழிபடவேண்டும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்றும் வழிபடலாம்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு


திருவோணத்திலிருந்து மூல நட்சத்திரம் (2014 பிறக்கும் நட்சத்திரம்) 7-ஆவது வதை தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு பொருளாதாரத்திலும் குடும்பத்திலும் பிரச்சினைகள் காணப்படலாம். கணவன்- மனைவிக்குள் ஒத்துழைப்புக் குறைவும் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளும் இருக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடியும் பற்றாக்குறையுமே குடும்ப பூசலுக்கு அடிப்படைக் காரணமாக அமையும். ஜூன் மாதம் குரு கடகத்தில் சந்திரன் வீட்டில் உச்சம் ஆனதும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். ஆகவே பொறுமையாக நிலைமைகளைச் சமாளிக்கவும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் (திருச்சுழி மெயின்ரோட்டில் இடதுபுறம் பிரிவு, ஜெயவிலாஸ் எதிரில்- செம்பட்டி வழி; புலியூரான் சென்று சித்தர் குருநாத சுவாமியை வழிபட வேண்டும். கருவறையின் நடுவில் சித்தரும்- இருபக்கமும் மகமாயி அம்மனும் அங்காள பரமேஸ்வரியும் காட்சியளிக்கிறார்கள். உப்பும் மிளகும் காணிக்கை செலுத்தி தீர்த்தம் அருந்திவர தீராத நோய்களும் குணமடைவது கண்கூடு. பூசாரி சித்து சுந்தரம், அலைபேசி: 99657 89200-ல் தொடர்பு கொள்ளலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு :


அவிட்ட நட்சத்திரத்திலிருந்து- மூல நட்சத்திரம் (2014 வருடம் பிறக்கும் நட்சத்திரம்) 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை- அனுகூலதாரை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டு பொங்கும் சுபயோகங்களைப் பொலிவுடன் தரும் என்பது உறுதி. ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கலாம். ஜூன்வரை குரு ராசிக்கு 6-ல் மறைவதால் சில காரியங்கள் தாமதமாக நடந்தாலும் தடைப்படாது. குரு ஜூன் மாதம் கடகத்தில் உச்சம் பெற்றதும், மளமளவென எல்லாக் காரியங்களும் துரித கதியில் செயல்படும்.

பரிகாரம்: சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அருகிலுள்ள பாம்பன் சுவாமிகள் சமாதிக்கோவில் சென்று வழிபடவும். இவரது கனவில் முருகன் முதிய சிவனடியாராகத் தோன்றி பால்சோறு அளித்தார். அதன்பின் துறவு பூண்டு காவி கட்டினார். ஒருசமயம் மாட்டுவண்டியில் சென்றபோது தவறி வீழ்ந்து இரண்டு கால்கள் மேல் வண்டிச் சக்கரம் ஏறி எலும்புகள் நொறுங்கிவிட்டன. சென்னை அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் இரண்டு கால்களையும் வெட்டி எடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்றார்கள். சுவாமிகள், "என் முருகன் என்னைக் குணப்படுத்துவான்' என்று படுக்கையிலேயே கிடந்து சண்முக கவசமும் குமார ஸ்தவமும் பாடினார். எலும்புகள் படிப்படியாக ஒன்றுசேர்ந்து சில மாதத்தில் முழு குணமானார். அமரபட்சம், சண்டி திதி, அவிட்ட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.

No comments:

Post a Comment