அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/4/14

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

 பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா

பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் நவராத்திரி விழா
விஜயதசமி அன்று காலை அம்மன் "சக்தி அழைப்பு" மற்றும் "தண்டிலி நீரு கொம்பராது" ... பகுதி ஒன்று அம்மன் சக்தி தொட்டு விநாயகர்  கோவிலில் இருந்து அலகு சேவையுடன் புறப்பாடு....



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா--2
சக்தி , ராகு ஜோதி , மற்றும் "தண்டுலி கொம்பந்த நீரு" தண்டில் கொண்டுவரப்பட்ட நீர் கோவில் கருவறை அடைந்தவுடன் அம்மனுக்கு மஹா தீபாராதனை...

"தண்டுலி நீரு கொம்பராது " என்றால் சக்தி நிலை நிறுத்துவதை போல அதிசயமான நிகழ்வுதான்... கீழே உள்ள வீடியோவில் கோவில் கருவறையில் அம்மனுக்கு மேல் ஊஞ்சல் போல அலங்காரம் உள்ளதா? அது தான் ஒரு தண்டில் வாழைக்காயை கட்டி விடுவார்கள் பின் அதில் குறுக்காக இரண்டு கத்திகள் சொருகப்படும். பின் கீழே உள்ள கத்தியில் பல நூல்களை சுற்றி அதில் நல்ல கனமான கும்பம் (நீருடன்) வைக்கப்படும். அனால் அந்த பாரம் தங்காமல் அந்த வாழைக்காய் எதுவும் ஆகாமல் அப்படியே ஊர் சுற்றிவந்து இப்படி கோவில் கருவறையில் மாட்டி விடுவார்கள்... பின் ராகு ஜோதி வந்து கோவில் சேரும் வரை அப்படியே இருக்கும். ......
காணக்கிடைக்காத காட்சி கண்டு மகிழவும்...


பெரிய நெகமம் இராகு ஜோதி அழைப்பு
சக்தி அழைப்பு முடிந்தவுடன் மஹா ஜோதியாக அம்மன் பெரியவீட்டு இருமனேர் குலத்தாரால் ... மெரவுணை பண்டைய முறைப்படி மாத்து (அகசரு மாத்து )மீது நகர்வலம் வந்து கோவில் அடைதல்



பெரிய நெகமம் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழா - அம்பு சேவை

ஒன்பது நாள் ஓம்கார கொலுவிருந்த நம் அன்னை பத்தாம் நாள் விஜயதசமி நாளில் மாலை அம்மன் சிம்மாவாகனம் ஏறி .. அசுரவதம் செய்வதாக ஐதீகம். அதை தான் நாம் அம்பு சேவை (அம்பு ஆக்காது / வன்னிமர குச்சாது) என்று அழைக்கிறோம்.
ஒரு பொது இடத்தில் பெரிய வாழை மரம் நட்டு அதில் வன்னிமர கொத்து ஒரு துண்டில் காணிக்கையுடன் கட்டப்பட்டிருக்கும் பின் அம்மன் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து ஆக்ரோஷமாக வில் அம்புடன் வந்து அசுரவதம் செய்கிறார்.

அம்மன் அசுரவதம் முடிந்தவுடன் அந்த வன்னிமர இலையை அனைவரும் போட்டி போட்டுகொண்டு எடுத்து சென்று வீட்டில் பத்திரப் படுத்தி வைத்து கொள்வார்கள். அது கிடைத்தால் அன்னை அருள் கிடைத்தது போல் மெய் சிலிர்ப்பார்கள்.... பின் அம்மன் மண்டகபடிக்கு எழுந்தருளி பானகம் நிவேதனம் செயப்படும்.


 இவ்வாறு தான் கோவை மாவட்ட நெசவாளர் கிராமங்களில் சவுண்டம்மன் அப்ப (பண்டிகை) கோலாகலமாக அலகுவீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன்  சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த வீடியோ தொக்குக்க உதவிய பெரியநெகமம் செல்வன்.துரை  அவர்களுக்கு நன்றிகள்