அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/30/13

லத்திகாரு வங்குசம் வீர எண்ணுமகள் வரலாறு .......

லத்திகாரு வங்குசம் வீர எண்ணுமகள் வரலாறு .......

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி துணை
ஸ்ரீ சென்றாய பெருமாள் துணை
ஸ்ரீ வீர அக்கம்மாள் துணை

    அகஸ்திய மகரிஷி கோத்திரம்  , லத்திகாரு வங்குசம் ஸ்ரீ வீர லக்கம்மாள் என்னும் வீர அக்கம்மாள் வரலாற்று சுருக்கம்

முன் காலத்தில் ஏனாதி திருநகரில் அகஸ்திய மகரிஷி கோத்திரம்  மனு குல தேவாங்க மரபினர் என்ற ஓசூர் லத்திகாரர்கள் என்னும் தேவாங்க செட்டியார்கள் வாழ்ந்து வந்தனர்.

      அந்த மரபில் சான்றோராய் திகழ்ந்த தேவாங்க செட்டியார் ஒருவரின் தவபுதல்விக்கு திருமணம் செய்ய வேண்டி மணப்பந்தலில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது . அப்போது மணப்பந்தலில் மலர் மலை சூடி மங்கல நாண் அணிவிக்கும் முன்பு சுல்தானின்  படைகள்  மணப்பந்தலில் உட்புகுந்து எதிர்த்தோரை வெட்டி மாய்த்து  பொன்னும் பொருளும் கொள்ளை கொண்டனர்.

   அச்சமயம் , மணமகன் பகைவரை  எதிர்த்து வீர மரணம் எய்தினான். அதுகண்ட  அக்கம்மாள்  என்ற அந்த மணப்பெண்  லத்திகாரு வீர மங்கை மணப்பந்தலில் வளர்த்த ஓமகுண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள். அதை கண்ட பெரியோர்கள் வருந்தி தங்கள் குல மகளுக்கு வீர அக்கம்மாள் என்னும் பெயரை சூட்டினர்.

     அதிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தீக்குளித்த இடத்தில் புற்று வடிவமாக பெண் தெய்வமான வீர அக்கம்மாள் திரு உருவம் வெளிப்பட்டது. அதுகண்ட தந்தை வழி தாயாதிகள் மகிழ்ந்து தங்கள் குல மகளாகிய வீர பெண்  தெய்வத்திற்கு கொவிலேடுத்து , பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் கூடும் பொழுது விழா வெடுத்து , சீரும் சிறப்பும் செய்து மகிழ பெருவிருப்பம் கொண்டு அந்த பெருவிழா வினை நடத்தி வருகின்றனர் .

நன்றி : ஸ்ரீ யுவ வருடம் தை மாதம் 2-ம் நாள் (16-01-1996) வெளியிட்ட ஸ்தல வரலாறு நூலில் இருந்து தொகுக்கப்பட்டது .



நன்றி கிரி , செம்மாண்டம்பட்டி

10/26/13

"சௌடேஸ்வரி சரணம்" - சௌண்டம்மன் பக்தி பாடல்கள்

                                                                "சௌடேஸ்வரி சரணம்"
மிகவும் பழமையான சௌண்டம்மன் பாடல்கள் . திருமூர்த்தி மலை காயத்ரி பீடத்தில் வெளியிடப்பட்ட இசை நாடா.....
இயக்கம் : திரு பாக்யராஜ் , பொள்ளாச்சி.
 

10/20/13

சக்தி கீதம் - ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி பன்மொழி பக்தி பாடல்


                                     "சக்தி கீதம் "Sakthi geetham"

சித்தையன்கோட்டையில் வெளியான ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி பன்மொழி பக்தி பாடல் "சக்தி கீதம் " - பாடியவர் சக்தி சந்திரகாந்தன்.

நமக்காக இந்த அரிய பாடல் நாடாவை இசை வட்டாக மாற்றி அனுப்பி வைத்த திரு செல்வம் (ஜுபிடர் செல்வம்) , போடிநாயக்கனூர்    அவர்களுக்கு நன்றிகள் ..

10/16/13

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப வீடியோ காட்சிகள்

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப  2013 வீடியோ காட்சிகள் 
சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறியவுடன் சிவப்ரகாசம் சாஸ்த்ரிகள் தண்டகம் கூறிய காட்சி
 
நவராத்ரியின் முக்கிய நிகழ்வான அம்பு சேவை என்னும் அம்பு போடுதல் (அசுர வதம் )
 
பொம்மை கொலு 
 
சௌண்டம்மன் காய்கறி அலங்காரம்

பொள்ளாச்சி சௌண்டம்மன் அப்ப 2013

பத்தாம் நாள் அலங்காரம் மற்றும் அம்பு சேவை உடன்  அம்மன் அனைத்து மண்டகபடிகளுகும் எழுந்தருளல்


 மகிசாசுர மர்தினி அலங்காரம்





 சம்ஹாரம் செய்ய அம்மன் பெட்டது சௌண்டம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி யாக  வில் அம்புடன் ...... சங்குநாதம் சேய..... சிம்மாவாகனம் ஏறிய காட்சி













 அம்மன் சம்ஹாரம் செய்ய உள்ள வன்னி மரம்




 சம்ஹாரம் முடிந்து பானகம் நிவேதனம் செய்த பின்பு  ஓய்வெடுக்கும்  பல்லடம் சாலை யில் அமைகப்பட்ட கிழக்கு பகுதி மண்டகப்படி



10/13/13

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் , பொள்ளாச்சி

சௌண்டம்மன் அப்ப   நவரத்திரி அலங்காரம்
முதல் நாள்






இரண்டாம் நாள்




மூன்றாம் நாள்




நான்காம் நாள்


ஐந்தாம்  நாள்



ஆறாம் நாள்



ஏழாம் நாள்



ஒன்பதாம் நாள்