அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/11/13












வம்சக் கணக்கு என்பது என்ன?

வம்சக் கணக்கு என்பது என்ன?

          வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.

         மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

கோவை மாவட்ட ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா .





கோவை மாவட்ட ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருவிழா .


      அன்னை அவள் அசுரனை வதைத்து நம் குலம் காத்த அற்புத நிகழ்வை மறவாமல் இருக்கவும், நம்முழ் ஒற்றுமை மேலோங்கவும் இதுபோன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. பொதுவாக சௌண்டம்மன் பண்டிகை (அப்ப)  ஊருக்கு ஊர் வேறுபட்டு இருந்தாலும் திருவிழா தாத்பரியம்
ஒன்றே ! 
       இப்பொழுது கோவை மாவட்ட நெசவாளர் பகுதிகளான பொள்ளாச்சி , உடுமலைபேட்டை , திருப்பூர் ஆகிய ஊர்களை சுற்றி உள்ள பகுதிகளில் எப்படி நமது சௌண்டம்மன் பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

      புரட்டாசி மாத அமாவசை அன்று கோயில்களை சுத்தம் செய்து மகாலையஅமாவசை பூஜை சிறப்பாக நடைபெறும் அன்று அடுத்தநாள் கொலுவைக்க தேவையான பொருட்கள் எல்லாம் தயார் செய்வார்கள் .

    அடுத்தநாள் அதாவது நவராத்திரி ஆரம்ப நாள் காலை ஊர்பெரியவர்கள் செட்டிகாரர், பெரியதனம் , பெத்தர், மற்றும் அனைவரும் அம்மன் சக்திதிருமஞ்சனம் எடுத்து வர ஒரு பொதுவான ஆற்றங்கரை அல்லது பிள்ளையார் கோவில் நந்தவனம் ஆகிய இடத்திற்கு கோவிலில் இருந்து செல்வார்கள் அப்பொழுது  சிங்குதார் கொலுவைக்கும் பொருட்களை சுமந்து அங்கு வருவார். அங்கு அனைவருக்கும் கங்கணம் கட்டிக்கொள்வார்கள். பின் தண்டகங்கள் சொல்லி கத்திஇட்டு   அங்கே இருந்து திருமஞ்சன குடங்கள் புறப்பாடாகி ஊர் சுற்றி கோவில் அடையும். அப்பொழுது "கள்ளசக்கர" என்னும் அவல்,வெல்லம்,பொட்டுகடலை கலந்த பிரசாதம் அனைவருக்கும் வழங்குவார்கள்.
     அன்று மாலை அம்மனை  அசுரசம்ஹாரம் செய்ய கொலு இருக்க செய்ய அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடத்தி கலசத்தில் அவாஹனம் செய்து கொலுமேடையில் உற்சவர் சிலையுடன் அம்மன் தண்டகங்கள் முழங்க கொலுஅமர்த்துவார்கள். அன்றுமுதல் அம்மனுக்கு வித வித அலங்காரங்கள் தொடர்ந்து நடைபெறும். முதல் நாள் தொடங்கி பத்து நாட்கள் அம்மனுக்கு கலையில் திருமஞ்சனம் கொண்டுவந்து மலையில் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்வார்கள். தினமும் மாலையில் சிறப்பு ஹோமங்கள் ஆன சண்டிஹோமம், துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஹோமங்கள் நடைபெறும் . அத்துடன் இரவு மஹா பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
        முதல் நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை அன்னை வெவ்வேறு அவதாரம் கொண்டு கொலுவில் அமர்ந்திருப்பாள். அன்னையின் அலங்காரம் காண கண்கோடி வேண்டுமன்றோ!! இரவு நாடகங்கள், பட்டிமன்றம், கலைநிகழ்சிகள் நடைபெறும். கோவிலில் பொம்மைக்கொலுவும் வைக்கப்படும்.
      ஒன்பது நாள் கொலுவிருந்த அன்னை பத்தாம் நாள் "விஜயதசமி" அன்று  காலை ஸ்ரீ மஹா சக்தி சாமுண்டியாக அவதாரம் எடுப்பாள். அன்று காலை அனைவரும் கூடி அன்னையை சக்தி அழைக்க செல்லுவார்கள் அங்கே " ஜந்த்தது கோல் " எனும் கோல் நெய்வதற்கு பயன் படுத்துவார்கள் அதில் பூணூல் ஒன்றில் அம்மன் சக்தி கும்பத்தை வைப்பார்கள். பின் அந்த கும்பம் பூணூலில் ஊஞ்சல் போல ஆடும் இருபுறமும் இருவர் அந்த கோலை தங்கள் தோளில் வைத்துக்கொள்வார்கள்.அந்த கும்பம் மிகவும் கணமாக இருக்கும் ஆனால் அந்த பூணூல் அதை தாங்கி பிடித்து இருக்கும். பின் அதற்கு அலங்காரம் செய்து சக்தி அழைப்பார்கள். அப்பொழுது அலகு வீரர்கள் தங்கள் உடலை வருத்தி கொண்டு ரத்தம் சொட்ட  கத்தியிட்டு தெண்டகங்கள் சொல்லி அம்மனை ஊர்முழுவதும் சுற்றி கோவில் அடைவார்கள்.
பின் எண்ணுமக்கள் "தீப்பதிட்டு" மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு படைப்பார்கள்.  அன்று மாலை அம்மன் சம்ஹாரம் செய்ய வில் அம்புடன்  சிம்ஹவாகனம் ஏறுவாள். அப்பொழுது அனைவரும் ஒன்று கூடி அம்மன் சப்பரம் எடுத்து போர்க்களம் செல்லுவார்கள். போர்க்களம் என்றல் அங்கு அம்மன் சம்ஹாரம் செய்யுள்ள அரக்கனாக பாவித்து ஒரு வாழைமரம் நட்டு அதில் வன்னி மர இலையை ஒரு கொத்தாக அந்த மரத்தில் துண்டில் கட்டி வைத்து இருப்பார்கள்.
பின் மேளவாத்தியங்கள் முழங்க சங்கு நாதம் சேய அம்மன் ஒய்யாரமாக சிங்கவாகனத்தில் மகிசாசுரமர்தினியாக, மகா சாமுண்டியாக அந்த இடத்திற்கு எடுத்துவருவார்கள். அங்கு அம்மனும் அந்த அசுரனாக இருக்கும் மரமும் நேர் எதிரே இருக்குமாறு நிறுத்துவார்கள். பின் ஒருவர் அம்மன் வில்லம்புடன் அம்மன் பிரதிநிதியாக இருப்பார் அவர் முதல் முறை அந்த மரத்திற்கு செல்வார் அனால் திரும்ப வந்துவிடுவார் பின் மறுமுறையும் அதேபோல் நடக்கும் மூன்றாவது முறை அன்னை சௌடேஸ்வரி யை வணங்கி சென்று அந்த அசுரனை சம்ஹாரம் செய்வார் அப்போது பின் இருந்து அந்த மரத்தை அம்மன் வாள் கொண்டு வெட்டிவிடுவார்கள்.இந்த நிகழ்ச்சியை   "அம்பு ஆக்காது" ("அம்புசேவை") என்பார்கள். பின் அந்த துண்டையும் வன்னிமர இலையையும் எடுக்க ஒரு போரே நிகழும் அதை எடுத்துவந்து வீட்டில் வைத்தால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த இலையை குழந்தைகளுக்கு நலக்கம் ஏற்பட்டிருக்கும் பொழுது உபயோகித்தால் குணமடையும்.
   பின் அன்னை கோபம் தணிய மண்டகப்படிக்கு வருவார் அங்கு அம்மனுக்கு பானகம் நைவேத்யம் செய்யப்பட்டு அம்மனுக்கு மஹா பூஜை செய்யப்படும் பின் அம்மன் கோபம் தணிந்து அன்னை சௌடேஸ்வரியாய் காட்சி கொடுப்பார்கள். பின் அம்மன் நம் சமூக மக்கள் கட்டிய அனைத்து மண்டகப்படிகளுக்கும்  எழுந்தருளி அருள்பாவித்து கோவில் சேர்வார்கள் அதிகாலையில். அடுத்த நாள் மாலையில் புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்து கோவில் அடைவார்கள் பெண்மக்கள். அன்று மாலை அம்மனுக்கு சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறும். பின் அடுத்த நாள் காலை அம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்து அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி ஆக அருள் புரிவாள்.
     நமக்காக நம் குல அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி கொலுவிருந்து அசுரர்களை அழித்து, தேவலரை காத்து ஆடை நெய்ய உதவினாள்   என்பதை நினைவுகூறும் வகையில் இந்த  அன்னையை தேவாங்க குல மக்கள் மிகவும் சிறப்பாக இன்றும் கொண்டாடுகிறார்கள்.
அம்பு சேவைக்கு  பின் மண்டகப்படியில் அம்மன்  சாந்தசொரூபமாக !!!!!!!!
இந்த நடைமுறையில் காலமாற்றத்தால் சில நிகழ்சிகள் மாற்றம் செய்துள்ளார்கள் என்பது நிதர்சனம்.